மண்ணும் தான் கலங்கிடுமே
மலர் பாதம் பட்டவுடன்!
மதியும் தான் மயங்கிடுமே
மங்கை முகம் பார்த்தவுடன்!
பவள இதழ் ஓரம்தனில்
பழங்கள் தான் கனிந்திடுமோ!
பாவை உனை நான் காண
பால் மனதில் பைத்தியம் தான்!
காதாடும் குழையும் தான்
கச்சிதமாய் மின்னுதடி!
காற்றினிலே தேர் கொண்டு
காதல் மனு எடுத்து வந்தேன்!
ஊற்றெடுக்கும் உள்ளம் தனில்
உணர்ச்சிகள் தான் சில நூறு!
உடலெல்லாம் முத்தமிட்டு
உறக்கம் தான் மறந்தேனோ!
இரவெல்லாம் உன் நினைவு
இன்ப நாதம் மீட்டுதடி!
இறைவனிடம் வேண்டி நின்றேன்
இறக்கை பெற்று உனைக் காண!
சிறு இடையில் சேலை கட்டி
சிரித்து வந்து நின்றாயே!
சின்னவளே சீக்கிரமாய் நானறிந்தேன்
சிந்தையிலும் சொப்பனமாய் நீதானே!
9 comments:
நடத்துங்க நடத்துங்க :-)கவிதை நல்லாயிருக்கு கவிஞரே :-))
கனவு எப்போது நிஜமாகும்? சரி யார் அந்த தேவதை...?க.மு க.தே.. க.பி என்ன?
கவிதை கலக்கல் அண்ணே... இதையெல்லாம் படிக்கறப்ப நாமளும் கவிதை எழுதணும்னுதான் தோணுது.. ஆனா பின்விளைவுகளை நினைச்சாத்தான் ப்பயம்ம்ம்ம்மா இருக்குது :))
//இனியவள் புனிதா said...
கனவு எப்போது நிஜமாகும்? சரி யார் அந்த தேவதை...?க.மு க.தே.. க.பி என்ன?
//
அப்பவும் க.தே.. தான்... :))
பட் அப்ப கல்யாண தேவதையா மாறியிருப்பாங்க..
(யாரோடன்னு கேட்டு விக்கி மனச கஷ்டப்படுத்தப்படாது. அப்புறம் அவரு விக்கி..விக்கி.. அழுவாரு)
கண்மனி உன்னோட காதலன், கெளப்புங்க விக்கி, என்ன ஓரே கவிதை மழையா இருக்கு, படிக்க நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்- ஜவகர்
சரியாப்போச்சு விக்கி.காதலில் விழுந்தாச்சா!இனி எழும்பின மாதிரித்தான்.காதலுக்குள் படுத்துக்கொண்டே இனி பதிவுகள் வரப்போகுது.அருமையான் கவிதை.அதென்ன க.மு க.தே.. க.பி?
@ இனியவள் புனிதா
கவிஞரா? இதை கவிதைனு சொல்ல முடியுமா? வருகைக்கு நன்றி... இது கற்பனைதான்...
@ சென்ஷி
வருகைக்கு நன்றி... கண்டிப்பாக எழுதுங்கள்... அப்படி என்ன பின்விளைவு??
@ ஜவகர்
வருகைக்கு நன்றி... மழையை நிறுத்திடலாம்... :)
@ ஹேமா
வருகைக்கு நன்றி.. ஒரு கற்பனை கவிதை தான்...
கால்யாணத்துக்கு முன் கனவு தேவதை என்றால் கல்யாணத்துக்கு பின் என்ன என கேட்கிறார்கள்... புரிகிறதா?
கனவு தேவதைகே... இப்படி போடுரிகலே... நிஜத்துல தேவதைய கண்ட... கம்பன மிஞ்சிடுவிக போல...
அருமை சகோ.
@ அருள்
வருகைக்கு நன்றி :))
Post a Comment