வெள்ளை மனதை வெளியே காட்டி
உள்ளம் திறந்து உண்மையாய் வழிபடு!
என்ற நெறியை எடுத்துச் சொல்ல
எங்கள் முன்னோர் தேங்காய் உடைத்தனர்!
இறைமை பணிகள் சிறப்பாய் நடக்க
அர்ச்சனை தட்டில் தட்சணை வைத்தனர்!
உண்மைப் பசியால் வாடும் மக்கள்
உண்டி கொடுக்க உண்டியல் வைத்தனர்!
உண்மை உணரா சப்பாணித் தமிழர்
உள்ளதை மறைக்க லஞ்சம் வைத்தனர்!
மக்களின் எண்ணம் இறைவனறிந்தான்
மனதை மாற்றி கல்லாய்ப் போனான்!
கல்லாய் போன கடவுள் பெயரால்
கயவர் செய்திடும் காரியம் கொஞ்சமோ?
11 comments:
//கல்லாய் போன கடவுள் பெயரால்
கயவர் செய்திடும் காரியம் கொஞ்சமோ?//
இந்த கயவர்களுக்கு தோதாக காணிக்கை என்ற பெயரில் பெரும் ஆதரவாக இருக்கும் நம்மயும் நொந்துக்கொள்ளதான் வேண்டும்..
@ உஷா
நம்மை என சொல்லாதீர்கள். நான் கோவிலுக்கு சொன்று நெடு நாட்களாகிறது... உள்ளத்துள் இருக்கும் கருணைக் கடவுளை அறியாதவனே கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கிறான். கடவுள் பெயரால் பிச்சையும் எடுக்கிறான். இந்த அறிவு கெட்ட ஜென்மங்கள் திருந்தாத வரையில் விடிவு காலம் இல்லை...
//உள்ளத்துள் இருக்கும் கருணைக் கடவுளை அறியாதவனே கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கிறான். கடவுள் பெயரால் பிச்சையும் எடுக்கிறான். //
வாஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
நன்றாகச் சொன்னாய் தம்பி!
கடவுள் கல்லாகவில்லை...
கல், கடவுளாக்கப்பட்டது.
உங்கள் சிந்தனை அருமை சகோ...
விக்கி,என்ன சாமிகிட்ட இவ்வளவு வெறுப்பு.நீங்க சொல்கிற அத்தனையும் உண்மை.ஆனாலும் கோயிலுக்குப் போகலாம்.மனுஷர் கிட்ட சொல்ல முடியாத சந்தோஷத்தையோ துக்கத்தையோ ஆண்டில ஒரு நாளைக்கு கல்லாய் இருக்கிற சாமிக்கிட்ட சொல்லிட்டு வரலாம்.ஆனால் லஞ்சம் குடுக்காம!
பதிவு நல்லாருக்குங்க!
அருமை.
சில நாட்களாக வேலைப்பளுவினால் பதிவுலகம் பக்கம் அதிக நேரம் செலவிட முடியவில்லை.
கல்லையும் கடவுளையும் பிரித்தரியும் சரியான சொற்கள்.
பாராட்டுக்கள்.
@ பரிசல்
அப்பாடா நீண்ட நாட்களுக்கு பிறகு விக்கியின் தளத்தில் பரிசலின் பின்னூட்டம்..வருகைக்கு நன்றி பாஸூ... அது என்னா வாஆஆஅவ்... நீங்க கூட அடிக்கடி கோவில் குளம்னு சுத்தரதா தகவல் வட்டாரம் தெரிவிக்கிறது...
@ அருள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே...
@ ஹேமா
முதலில் ஒருவன் தன்னை நேசிக்க வேண்டும்... அப்படி நேசிபவனுக்கே தன்னுடைய பிரச்சனைகளையும் நேசிக்கும் பக்குவம் கிடைக்கும்... பிரச்சனையை எதுக்கு சாமியிடம் சொல்கிறீர்கள்... உங்களுக்குள் இருக்கும் திடமான மனதிடம் அல்லவா சொல்ல வேண்டும்...
@ சென்ஷி
வருகைக்கு நன்றி...
@ பெஞ்சமின்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அருமையான கவிதை வரிகள் விக்கி. படமும் அருமை..
@ வெண்பூ
நன்றி..
Post a Comment