Thursday, November 13, 2008

கதை மட்டும் போதுமாடா தமிழா?


பேச்சன்றி மூச்சன்றி
போகும் திசை அறிவதன்றி!

கரை சேர்ந்த பொழுதினிலே
கதறி அழும் அலைகடலே!

யார் செய்தி கொண்டு வந்தாய்?
யாண்டு மிங்கே சொல்லிடுவாய்!

அடிபட்டும் மிதிபட்டும்
ஆத்திரம் தான் அடங்காமல்!

இடிபட்டும் குடிகெட்டும்
இதய வலி ஆறாமல்!

சீர் குலைந்த தமிழினத்தின்
சீழ் கண்ணீர் சொல்லாயோ!

ஒடிபட்ட தமிழர் தன்
ஓலங்கள் ஆயிரம் தான்!

காதறுந்த கரையோரம்
கதை பேசி போவாயோ!


12 comments:

Anonymous said...

:(

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தூயா

ஏன் இந்த கவலை சிரிப்பான்... கவிதை பிடிக்கலையா?

Anonymous said...

முதலில் படத்தை பார்த்து போட்டேன்.

இப்போதும் அதே :( .
கவிதையின் கரு அப்படி..


எழுதியது நன்றாகவுள்ளது.

வால்பையன் said...

தமிழனின் துயரம் கடலுக்கு கூட தெரிந்திருக்கிறது

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தூயா

நன்றி

@ வால் பையன்

ஆமாம் பாருங்களேன்... கடல் அலையை பற்றி எழுத நினைத்தேன் அது இப்படி வந்து விழுந்துவிட்டது.

சென்ஷி said...

Nalla irukkuthunga :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சென்ஷி

நன்றி சென்ஷி அண்ணே...

Anonymous said...

நன்கு உள்ளது...

Anonymous said...

தமிழரின் வாழ்வு தன்னை இந்த கடல்கள் அறியும்

ஹேமா said...

விக்கி,கடல் அலையை நினைக்கும் போதும் ...பாருங்கள் தமிழரின் நிலையைத்தானே கருவாக்கும் அளவிற்கு மனதளவில் எவ்வளவு வேதனைப்படுகிறோம்!

Kavinaya said...

கடலின் கொந்தளிப்பைக் கவிதை நன்றாகச் சொல்கிறது.

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
அருமையான கவிதை...

"இடிபட்டும் குடிகெட்டும்
இதய வலி ஆறாமல்!"

இடிபட்டான் குடிகெட்டான்
இனமானம் மறந்துவிட்டான்
இதயமொன்று இருப்பதையே
என் தமிழன் மறந்துவிட்டான்!