ஆண்:
இருள் பொங்கும் வேளைதனில்
முகம் காட்டும் வெண்ணிலவே
விளையாடவா! இன்ப சுகம் காணவா!
முகம் காட்டும் வெண்ணிலவே
விளையாடவா! இன்ப சுகம் காணவா!
பெண்:
தோள்வலி கொண்ட தூயவனே!
பூஞ்சிரிப்பு பூத்தவனே!
முத்தப்போர் செய்யவா!என்னைத்தோள் சேரவா!
ஆண்:
இடைகாணாப் பெண்ணகே!
இசைபாடும் குரலமுதே!
உன் இதழ் சுவை காணவா!
உயிர்வரை சுகம் தேடவா!பெண்:
ரசமான சொல்பாடி
ரகலைகள் செய்தவனேரசமான சொல்பாடி
உன் மடி சாய்கிறேன்
என் உடை போக்கிடு!
என் உடை போக்கிடு!
ஆண்:
நிலவில்லா வேளைதனில்
உயிர் தோய்கிறேன்
சொர்கம் உனில் காண்கிறேன்!
சொர்கம் உனில் காண்கிறேன்!
பெண்:
எனை ஆள வந்த இந்திரனே
என்னைக் கடைந்தாடிடு
உயிர் பிளந்தோடிடு!
உயிர் பிளந்தோடிடு!
ஆண்:
ஆசை கொண்ட பெண் மயிலே -குயில்
மோகம் காண்கிறேன்!
என் தாகம் தீர்க்கிறேன்!
என் தாகம் தீர்க்கிறேன்!
பெண்:
என்னை பந்தாடி வீழ்ந்தவனே!
உனை கட்டியாழ்கிறேன்!
உன் முதுகை தொட்டுப் பார்க்கிறேன்!
வேல்பட்டு வீழ்ந்தாயோ
உடல் பிளந்து போனாயோ என
தேய்த்து காண்கிறேன்!
17 comments:
தம்பிக்கு கல்யாண ஆசை வந்துட்டு !
:)
அண்ணன் கண்ணன் சொல்வது உன்மைதான்....கவிதை புனையும் பெண்களே வாருங்கள் நல்லவர்,கவியில் வல்லவர்,பண்பில் சிறந்தவர்.....தகுதியான திறமயான பிரம்மசாரி இங்கே உள்ளார்
என்ன சொல்ல வறீங்க?
இதுக்குத்தான் கல்யாணமானவங்கக்கூட கூட்டணி வைக்கக் கூடாதுன்னு சொல்றது...பாருங்க இப்ப...:-))
@ கோவி.கண்ணன்
வீட்டில் பாப்பாவுக்கு பயப்படுகிறீர்கள்... பின்பு எப்படி எனக்கு ஆசை வரும்... நன்றி
@ துர்கா
நானும் :) வருகைக்கு நன்றி..
@மூர்த்தி
அண்ணே இது நல்லா இல்லை..
@ இனியவள் புனிதா
வருகைக்கு நன்றி...
விக்கி.....கவி....தை நல்லாயிருக்கு.கொஞ்சம் வெக்கமாயிருக்கு.
விக்கி.. கவி.. தை ரொம்ப நல்லாயிருக்குது.. ரொம்ப வெக்கமா இருக்குது :))
//இனியவள் புனிதா said...
இதுக்குத்தான் கல்யாணமானவங்கக்கூட கூட்டணி வைக்கக் கூடாதுன்னு சொல்றது...பாருங்க இப்ப...:-))
//
ஆமாம். பார்த்தீங்களா இப்ப. உடனே லைன் கட்டி எல்லோரும் கல்யாணத்துக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க :))
கோவி.கண்ணன் said...
\\
தம்பிக்கு கல்யாண ஆசை வந்துட்டு !
\\
ரிப்பீட்டு...;)
விக்கி, கொஞ்சம் காதல் தூக்கலா இருக்கே பாட்டில :)
//இது கொஞ்சம் ஓவராத்தான் எழுதிட்டோம் :)))//
இதுக்கு அர்த்தம் விளங்கலையே
//இடைகாணாப் பெண்ணகே!//
பெண்ணழகே???
//ரகலைகள் செய்தவனே//
ரகளை??
//கட்டியாழ்கிறேன்!//
ஆள்கிறேன்??
இதுக்குத்தான் காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்றாங்களோ? ;)
@ ஹேமா..
மிக்க நன்றி...
@ சென்ஷி
ஆமாம் நண்பா... நான் ரொம்ப பாவம்..
@ தமிழன் கருப்பி
நன்றி... மீண்டும் வருக...
@ பிரேம்குமார்
பிழைகளை சுட்டியமைக்கு நன்றிகள்... மாற்றிடுறேன் நண்பா... மீண்டும் வருக...
வணக்கம்,
பாடலில் காமம் காதலை மூழ்கடித்து விட்டது போல் உணர்கிறேன். தங்களால் இதை விட சிறப்பான பாடலை உருவாக்க முடியும். மோகத்தையும் காமத்தையும் விட்டுவிட்டு தூய்மையான காதலைப் பாடலாமே?
@ து.பவனேஸ்வரி
இந்த பாடலின் கடைசி வரிகளில் ஒரு சூட்சமம் உண்டு... அதை அறிவார் இல்லை... சிங்கையில் இருக்கும் அகரம் அமுதா மட்டுமே அதை உணர்ந்தார். எல்லோரும் சொன்னதை போலவே உங்கள் கருத்தும்... அதாவது காமத்தை பிழிந்துவிட்டேனென... என் எழுத்துக்கு நானே பொறுப்பு என்பதால் உங்கள் கருத்தை ஏற்கிறேன்.. நன்றி... மீண்டும் வருக...
வணக்கம்,
கடைசி வரிகளின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்துக்கொள்ள முடியவில்லை. விளக்கம் தர இயலுமா?
ரசனை மிகுந்த கவி. ஆனால் அந்தரங்கத்தை இப்படி வலைவில் தத்தளிக்க விட்டு விட்டீரே!!!
@ செவ்வந்தி
ஹா ஹா ஹா... அப்படி எல்லாம் ஏதும் இல்லைங்க... வருகைக்கு நன்ரி...
saavadi kavithai... nice..very nice... :)
Post a Comment