பணத்தை கட்டிவிட்டு எண்ணெய் குழாய் அருகில் சென்றதும் குழப்பம். விலை மாறுபட்டிருந்தது. ஒரு வேளை தரக்குறைவான (பொதுவாக பயன்படுத்தாத) பெட்ரோலாகஇருக்குமே என்று நினைத்தேன். கூர்ந்து கவனித்தால் சரியான எண்ணெய்யே என தெரிந்தது. சிங்கை சென்று வந்த இரண்டு நாட்களில் மீண்டும் 0.15 காசு குறைத்திருந்தார்கள். ஆனால் அது பெரிய பரபரப்பாகவோ, முக்கிய செய்தியாகவோ, மக்களுக்கு மகிழ்ச்சியளித்த விடயமாகவோ தெரியவில்லை.
காரணம் என்ன? சில மாதங்களுக்கு முன் மக்களிடைய அழுத்தமாக பேசப்பட்டு வந்த அரசியல் விவகாரங்கள் குறைந்து போய் இருக்கிறது.மாறாக பொருளாதார பிரச்சனையே இப்போது வசைபாடபட்டு வருகிறது. நகரங்களிலும், பேரங்காடிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. பொதுவாகவே பலரிடமிருந்து நாம் கேட்கும் வார்த்தை 'எல்லாம் விலை ஏத்திட்டானுங்க' என்றே இருக்கிறது.
கடந்த சில நாட்களாக காலையில் வேலைக்கு கிளம்பும் போது "விக்கி ரொம்ப செலவு பண்ணதே" என்றே அம்மா சொல்கிறார். ஒரு மந்தகரமான பொருளாதார சூழ்நிலையில் மக்களிடம் பயம் காணப்படுவதை போல் எண்ணம் எழுகிறது. சில பல அரசியல் விவகாரங்களை மக்களிடமிருந்து கலைவதற்கு கையாளப்படும் அரசியல் சூழ்ச்சியா என்றும் புரியவில்லை.
எரிபொருள் விலை குறைப்பு வரவேற்கக் கூடிய விடயமாக இருப்பினும் அது உலகளாவிய நிலையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவே இருக்கிறது. எரிபொருள் விலை குறைந்தது சரி, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததா என காண்கையில் அங்கும் கேள்வி குறியாகவே இருக்கிறது. எரிபொருள் விலையேற்றத்தின் போது பொருட்களின் விலையும் அதிகரித்தது. அது விலை குறைந்திருக்கும் இச்சமயத்தில் பொருட்களின் விலை குறையாததன் காரணம் என்ன?
எரிபொருள் விலையேற்றம் காணும் சமயங்களில் சாப்பாட்டு பொருட்களின் விலையையும் பேசுவது வாடிக்கை. முக்கியமாக 'நாசி கண்டார்', 'ரொட்டி சானய்', 'மில்லோ ஐஸ்' விலையில் எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது என்பதையும் அலசுவர்.இதற்கான விளக்கம் மிக எளிமையானதே. பலரும் அறிந்ததே. எரி பொருள் விலையாது பொருட்களின் தயாரிப்பு செலவையும் கூட்டிவிடுகிறது.விலை இறங்கும் சமயத்தில் ஏனைய பொருட்களின் விலையும் குறைவதே உத்தமம்.
தற்சமயம் விலை குறைப்பு ஏதும் காணாதிருப்பதும். அரசாங்கம் அதை கவனியாதிருப்பதும் எதனால்? அரசியல் பேச்சுகள் பிரச்சனையை ஏற்படுத்துவதாலும், அரசியல்வாதிகளுக்கு அது நிம்மதியின்மையைக் கொடுப்பதாலும், இப்பொழுது பொருளாதார யுக்தியா?
பொருளாதார விளையாட்டு மைதானத்தின் நடுவில் நின்று கொண்டு இரண்டு பக்கமும் அடி வாங்கும் வர்க்கமாக இருப்பது பயனீட்டாளர்களே. மேல் மட்டத்தில் இருக்கும் விலை கட்டுபாட்டாளர்கள், தயாரிப்பாளர்கள், மொத்த வியாபரிகள் என சில தரப்பினர் இதில் பாதிப்படைகிறார்களா? இப்பிரச்சனையில் இவர்களின் பாராமுகம் சரியான ஒன்றா? அல்லது விற்பனையாளர்களுக்கும் பயனீட்டாளர்களுக்குமிடையே புகைச்சலை உண்டு செய்து குளிர்காயும் போக்கா?
தயாரிப்பாளர்கள் விலை நிர்ணயத்தின் பிறகே மொத்த வியாபாரிகளும், விற்பனையாளர்களும் தங்களுடைய இலாபத்தை உறுதிபடுத்துகிறார்கள். ஆரம்ப நிலையிலேயே விலை அதிகமாக இருப்பின் இறுதி விலை எவ்வாராக அமையும்? அதை கவனியாது கடை கடையாக விலைகட்டுபாட்டாளர்கள் ஏரி இறங்குவதும், விற்பனையாளர்களை சாடுவதும் வேடிக்கையாக இருக்கிறது.
தயாரிப்பாளர்களின் விலை நிர்ணயிப்பு யுக்தியை இவர்கள் கவனிக்கிறார்களா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. விலை குறைப்பை முன்னிட்டு அரசாங்கம் அறிக்கை வெளியாக்கும் என மக்கள் காத்திருப்பதும் பரிதாபத்திற்குறியதாக இருக்கிறது.
ஆரம்பக் கேள்விக்கே திரும்புவோம். எரிபொருளின் விலை ஏற்றம் மட்டும் தான் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமா? பொருளாதார விதியின் படி பதில் இல்லையென்றாகிறது. ஒரு பொருளின் விலை மாறுபடுவதற்கு வேலைக் கூலி, கணிம விலை, மின்சாரம், நீர் என இன்னும் பல செலவுகளும் காரணமாகிறது.
அப்படி என்றால் எரிபொருளின் விலை குறைப்பைக் காரணம் காட்டி இதர பொருட்களின் விலையை குறைக்கச் சொல்வது முறை தானா? சரி வேறு கோணத்தில் நோக்கினால் பயனீட்டாளர்களின் தேவையும் தயாரிப்பாளர்களின் வெளியீடும் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கிறது என்கிறார்கள். அதாவது பயனீட்டாளர்களின் தேவை அதிகரிக்க பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதே விதி. தற்போதைய நிலையில் மக்களின் வாங்கும் சக்தி குறைவாக இருக்கிறது. அப்படி இருக்க ஏன் விலை அதிகரிப்பு?தற்போதைய மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் பொருட்டு சம்பந்தபட்டவர்கள் சரியான முடிவை எடுப்பார்களா?
அக்கரையில்லா அரசாங்கம் + கேள்வி கேட்காத மக்கள் = நாடு நாசம்.
(பி.கு: நேற்றய தினம் எண்ணெய் நிலைய வேலையாள் ஒருவர் சொன்னார் மீண்டும் எண்ணெய் விலை குறையுமாம்)
19 comments:
இங்கும் அதே கதை தான்...
கடந்த இரண்டுவாரமாக கொஞ்சம் குறைந்திருக்கு..
அக்கரை இல்ல அரசாங்கம்+கேட்காத மக்கள்=நாடு நாசம் அருமை ஆனால் கேள்வி கேட்டால் ISA மறந்து விட்டீரே நன்பனே
காலத்திற்கேற்றப் பதிவு!
நிலபிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ மாற்றத்தைக் கண்ட இவ்வுலகம், பணவீக்கத்தின் தாக்கத்தினால் இன்று கதிகலங்கிப் போய் நிற்கிறது. எங்கு பார்த்தாலும் விலையேற்றம், ஆட்குறைப்பு, திவால் என இப்படியே ஓராண்டுக்கும் மேலாக இதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன்.
அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மலேசியப் பங்கு வணிகமும் இதற்கு விதிவிலக்கல்ல! அமெரிக்காவின் பங்கு சந்தை 50% வீழ்ச்சியை எட்டலாம் என்று கணிக்கப்படுகிறது.
மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். ஊதாரித்தனத்தை விட்டு சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
ஏற்றுவதற்கு காரணம் தேடிக் காத்திருந்து ஏற்றுபவர்கள் குறைப்பார்களா ?
:) எல்லா நாட்டிலும் இதே நிலமைதான்.
இங்கும் அதே கதைதான் விக்கி.காலத்தோடு ஓட்டிக்கொண்டு ஓடத்தானே வேண்டியிருக்கு.
இந்திய பிரதமர் கூட குறைக்கத்தான் நினைத்தார்...
ஆனால் அவர் வீட்டு நாய் நான்கு நாட்களாக குரைக்கவில்லை...
அதனால் இந்தியாவில் பெட்ரோல் விலையை குறைப்பது கஷ்டம் தான் என்று பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில் சொல்லியிருக்கிறார்...
@ தூயா
பதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தானே... முதலைகள் குளிர் காய்கின்றனவே...
@ ஜவஹர்
ஆமால... இத எழுதுன எனக்கு ஏதும் ஆப்பு வராம இருந்தா சரி...
@ சதீசு குமார்
சரியாக சொன்னீர்கள் நண்பரே... இதனால் குற்றச் செயல்களூம் அதிகரிக்கின்றன...
@ கோவி.கண்ணன்
அதானே... வருகைக்கும் வல்லிய கருத்துக்கும் நன்றி அண்ணே..
@ ஹேமா...
ஆமாம் செம்மரி ஆட்டுக் கூட்டத்தை போல ஒருவர் பின்னால் ஒருவர்... எதிர்தால் தலையில் தட்டி ஓட சொல்கிறார்கள்.
@ செந்தழல் ரவி
வங்கண்ணே... எண்ணெய் விலையை குறைக்க வேணா ஆனா மக்களின் சம்பளத்தை அதிகரிக்க ஏதாவது வழி செய்யலாமே...
அதானே பார்த்தேன் .யாரோ விக்கி விக்கி அழும் சத்தம் கேட்டதே,அது நம்ம விக்கிதான் என்று அறிந்ததும் விக்கித்துப் போனேன்.
விக்கி!
விலை ஏறினால், இறங்கும் .dont worry
///தற்போதைய மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் பொருட்டு சம்பந்தபட்டவர்கள் சரியான முடிவை எடுப்பார்களா?//
யார் அந்த சம்பந்தபட்டவர்கள்,விக்கி?சரியான முடிவு எடுத்தால் இந்த சம்பந்தபட்டவர்களின் வருமானம் குறைந்துவிடுமே...நம் வயிற்றில் அடித்து வாழ பழகி விட்ட இவர்கள் "சரியான முடிவு எடுக்க தயங்கத்தானே செய்வார்கள்....
@ கோமா
ஹா ஹா ஹா... என்ன ஒரு அருமையான பதில்... மிக்க நன்றி... உங்கள் சொல் நிஜமாகட்டும்...
@ உஷா
அது தான் உண்மை நிலவரம்... சுகம் கண்ட பூனை சும்மா இருக்குமா என்ன?
இரண்டு திருத்தம் அக்கறை, நேற்றைய./
ஹி ஹி
இதெல்லாம் இப்ப சகஜமப்பா. யாரு கேக்குறான்? கேட்டாலும் குறையவா போகுது?
@ ஆட்காட்டி
வருகைக்கு நன்றி...
அருமையான பதிவு விக்னேஷ்
//அக்கரையில்லா அரசாங்கம் + கேள்வி கேட்காத மக்கள் = நாடு நாசம்.//
எப்படி உங்களால மட்டும் இப்படி எழுத முடிது விக்கி?
வணக்கம்,
சிறப்பான கட்டுரை. விலையேற்றத்தின் விளைவுகளை அரசாங்கம் இன்னும் சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லை போலும். மக்கள் கொதித்தெழுந்தால்தான் சரியானத் தீர்வு கிடைக்கும் போலும்.
நல்ல analysis.
மலேசியத தமிழ் இளைஞர்கள் உரிய பாதைகளில் தக்க, தீர்க்கமான நோக்கைச் செலுத்தவேண்டும்.
சமயம், சமுதாயம், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மற்ற வாய்ப்புகள், சமுதாய நீதி........
இதே போன்ற பார்வைகள் அலசல்களைப் போடப்பா.
@ ஜவஹர்
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி..
@ உஷா
வருகைக்கு நன்றி...
@ து.பவனேஸ்வரி
வருகைக்கு நன்றி... கொதித்தெழாமல் இருக்கத்தான் ஐ.எஸ்.ஏ இருக்கிறதே...
@ கடாரம்
வருகைக்கு நன்றி ஐயா... நீங்கள் சொல்லிய விடயங்களை பற்றி பேசுகிறேன்...
/
அக்கரையில்லா அரசாங்கம் + கேள்வி கேட்காத மக்கள் = நாடு நாசம்.
/
இந்தியாவும் அப்படித்தான் எல்லாவிலையும் ஏறியிருக்கு. பெட்ரோல் விலை கூட குறையலை :(((
@ மங்களூர் சிவா
வருகைக்கு நன்றி... நீங்க இன்னும் பாவம்...
Post a Comment