செந்தோசா செல்லும் வழியில் தேன் கூட்டைத் தலையில் கொண்ட மனிதனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நின்று கொண்டிருந்த என்னை படம் எடுப்பது போல் 'விக்கி விளகு' என சொல்லி அந்த தேன் கூட்டை அம்மனிதனுக்குத் தெரியாமல் தன் புகைப்படக் கருவிக்குள் கொண்டு வந்து சாதனை செய்தார் கோவியார். அசாத்தியமும் அதிசயமும் மிக்க அப்புகைபடத்தைக் காண திரு கோவியாரை அனுகவும்.
சந்திப்பு இடைத்திற்குப் போய் கொண்டிருந்த வழியில் திரு.பாரி அரசு ஜோதியில் கலந்துக் கொண்டார். அவர் தம் நண்பருடன் வந்திருந்தார். முகத்தில் கல்யாணக் க(வ)லையோடு. திருமணப் பந்தல் காணவிருக்கும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல விளையும் இவ்வேளையில் தூய தமிழில் அச்சிடப்பட்டிருந்த அவரது திருமண அழைப்பிதழ் முயற்சி மதிக்க தக்கது. பத்திரிக்கைக் கொடுக்கப்பட்டது பதிவர் சந்திப்பில் என்பதால் மீண்டும் விடுபட்ட இடத்திற்கு திரும்புவோம்.
அவரும் ஜோதியில் இணைந்த பிறகு சந்திப்பு இடத்திற்கு நடையைக் கட்டினோம். போகும் வழியில் கண்ணுக்கினிய காட்சிகள். இயற்கை காட்சிகளைச் சொன்னேன். நண்பர் கிஷோர் சொன்னதை வைத்து தப்பாக எடைபோட வேண்டாம். இவ்வியற்கைக் காட்சியை காண இரு கண்கள் போதவில்லை. என்னை அழைத்து வந்ததிற்கும் பதிவர் சந்திப்பை அங்கு ஏற்பாடு செய்ததிற்கும் நன்றி. கடல் சூழ்ந்த அழகிய இடம் அது. வாய்ப்புக் கிடைப்பின் மீண்டும் அங்கே செல்ல விரும்புகிறேன். சந்திப்பு இடைத்தை அடைந்த போது துக்ளக் பதிவர் மகேஷ், நானும் பதிவிடுகிறேன் பதிவர் கிஷோர், என இன்னும் சிலர் வந்தடைந்தனர்.
குளிர்பானங்களின் திறப்பு விழாவோடு பதிவர் சந்திப்பு ஆரம்பமானது. அதற்கு முன் நான் கொண்டு வந்திருந்த சில நினைவு பரிசுகளை அன்பளித்தேன். பின் மீண்டும் குளிர்பான திருவிழா ஆரம்பமானது. சற்று நேரத்தில் ஜோசப் அண்ணன் குளிர் பானங்களை விரைவாக குடித்து முடிக்கச் சொன்னார். அப்படி இல்லாதாவர்கள் முதலில் அவற்றை ஓரமாய் வைக்கச் சொன்னார். கவனச் சிதறலுக்கு இடம் கோடாமல் இருக்கும் பொருட்டு அப்படி சொன்னதாக அறிகிறேன். குளிர்பானம் குடிப்பதில் மட்டும் கவனம் சொன்றுவிடாமல் இருக்க ஜோசப் அண்ணன் செய்த சேவை அளப்பறியது.
அவ்வேளையில் திண்டுக்கல் சர்தார், சிங்கை நாதன் என இன்னும் சிலர் வந்தடைந்தனர். கோவியார் இடைவிடாமல் தனது புகைப்பட கருவிக்கும் வேலைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது காலணி அவரை கவிழ்க நினைத்தை முயற்சிகளை முறியடித்து புகைபடங்களை சுட்டுத் தள்ளினார். கோவி அண்ணா, உங்கள் புகைபடக் கருவிக்கும் காலணிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது அடுத்த முறை சரி செய்யவும்.
பிறகு மீண்டும் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, இனிப்பு பலகாரம் என பதிவர் சந்திப்பு தொடர்ந்தது. நானும் மிச்சம் இருந்த எனது சிறு நினைவு பரிசுகளைக் கொடுத்து முடித்தேன். வந்திருந்தவர்கள் 21 பேர், நான் கொண்டு வந்த பரிசுகள் 16 மட்டுமே. நான் கொடுக்கத் தவறியவர்கள் மன்னிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
துக்ளக் மகேஷ் பரிசல்காரனின் அறிமுகத்திற்கு பின் தான் எழுத வந்ததையும், வலையுலக அனுபவங்களையும் கூறினார். அதன் பின் பதிவர் கிஷோர் பேசினார். பிறகு நான் என்னால் முடிந்த வரை உளறினேன்.
சர்தார் ஐயாவின் பேச்சு நினைவில் என்றும் நீங்காதது. மிகவும் ஆழமான, அழுத்தமான எல்லோருக்கும் தகவல் மிக்க பேச்சு. இதைத் தொடுத்து கோவியார் எழுதியுள்ளார். அவர் உரையின் முடிவில் பதிவர்களின் கருத்தையும் கேட்டு வியப்பில் ஆழ்த்தினார். அவர் இன்னும் சில காலம் சிங்கையில் இருக்க வேண்டும் எனவும், அனுராதா அம்மாவின் பதிவையும், அதை தொடுத்து அவர் திரட்டிய தகவல்களையும் புத்தகம் வடித்தாரானால் மிகச் சிறப்பாகவும் பலருக்கு பயனுள்ளதாகவும் அமையும் என தாழ்மையோடு கூற விளைகிறேன்.
அதன் பின் தன் பெயர் கூற விரும்பாத, பதிவர்களுக்கு மட்டும் தன் பெயர் சொல்லிய சாம்பார் மாஃப்பியா பேசினார். இவர் மூத்த பதிவர். தமிழுக்கு தொண்டு செய்த தன் குடும்ப பின்னனியும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்பைப் பற்றியும் சொன்னார். தற்சமயம் ஆங்கிலத்தில் எழுதிவரும் அவர் தமிழிலும் எழுத வேண்டும் என்பது என் அவா.
பதிவு வாசகர் மீனாட்ச்சி சுந்தரம் தன்னை பற்றியும், தமிழகத்தில் அவரது அரசியல் அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்துக் கொண்டார். தற்சமயம் சிங்கையில் படித்து வரும் அவர் அடுத்த வருடம் ஆரம்பத்தில் பதிவு எழுத ஆரம்பிக்கப் போவதாகக் கூறினார். நேரம் காலம் பார்த்து ஆரம்பிக்கிறார் என தவறாக என்ன வேண்டாம். அப்போது தான் தொழில் பயிற்சிக்குப் போகிராறாம். அப்போதிருந்து ஆரம்பித்தால் தான் சரி வரும் எனச் சொன்னார். பலரை சந்தித்ததில் மகிழ்ச்சிக் கொண்டதாகக் கூறினார்.
நண்பர் கிஷார் மற்றும் மகேஷ் ஆகியோர் சொல்லிய, பதிவிடத்தில் விவாதித்த, சில பல விடயங்கள் போக அந்தி சாய்ந்த இரவை வரவேற்று பதிவர் சந்திப்பு இனிதாய் முடிந்தது. சந்திப்பு முடிவதற்கு முன் ராம் சம்பவ இடத்தை வந்தடைந்தார்.
அதன் பின் அகரம் அமுதா வந்தார். ஆம் சொல்ல மறந்தேன். அகரம் அமுதா தாமதமாக சந்திப்புக்கு வர காரணம் அறிய நாம் மீண்டும் மதிய உணவு ஊட்கொண்ட இடத்திற்கு போக வேண்டும்.
மதிய உணவின் போது என் எதிரில் வந்து அமர்ந்தார் அமுதா. அவ்வினிமையான மனிதரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சிக் கொண்டேன். உணவு வேளை முடிந்ததும் தன் ஆசிரியரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போக இருப்பதாகவும் விழா முடிந்து வாய்ப்பு இருப்பின் சந்திப்பில் கலந்துக் கொள்வதாகவும் கூறினார். அதே போல விழா முடிந்ததும் சந்திப்பு இடத்தை வந்தைடந்தார்.
சந்திப்பு முடிந்ததும் எல்லோருமாக கிளம்பினோம். இடையே சிலர் அவரவர் இல்லம் திரும்ப பிறிந்துப் போனார்கள். இரவாகிவிட்டதால், இராத்திரி உணவுக்காக ஒரு உணவகத்தை வந்தடைந்தோம். சில பதிவர்கள் இல்லாமல் போக மீண்டும் 'மினி' சந்திப்பு தொடந்தது. எல்லோரும் விரதத்தில் இருந்ததால் சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள் என்பதைக் குறிப்பிட விளைகிறேன்.
பாரி அரசு சமூகம் சார்ந்த பல விடயங்களை பிய்த்து மேய்ந்துக் கொண்டிருந்தார். மீண்டும் அகரம் அமுதாவோடு பேசும் வாய்பைப் பெற்றேன். ஆழ்ந்த வாசிப்பனுபவம் கொண்ட அவர் பலவற்றை சுவைபட கூறினார். சமீப காலமாக தேக்க நிலைக் கொண்டிருக்கும் அவர் பதிவுகள் மீண்டும் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் டொன் லீயின் வேண்டுகோளுக்கினங்க சந்திப்பு இடத்தில் விடுபட்டு போன அரசியல் விவகாரங்கள் இரவு வேளை சாப்பாட்டு மேசையில் தொடர்ந்தது. சில பல கருத்து பரிமாற்றங்களுக்குப் பிறகு எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள். நானும் அன்புடன் கைகுழுக்கி விடைபெற்றுக் கொண்டேன்.
சிங்கையில் இருந்த மூன்று நாட்களும் மிக இனிமையாகவே போனது. இதற்கு வழி வகுத்த அனைத்து நல்ளுள்ளங்களுக்கும் நன்றிகள் பல பல. முக்கியமாக எனக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த விஜய் ஆனந்த், ஜோசப் அண்ணன் மற்றும் கோவி அண்ணனுக்கு அன்பு கலந்த நன்றிகளை மீண்டும் கூற விளைக்கிறேன்.
மூன்றாம் நாள் விஜய் ஆனந்த் அவர்களின் தயவால் இனிமையாய் கழிந்தது. கோவி அண்ணனின் உயபத்தில் சட்டையும், விஜய் ஆனந்த் அவர்களின் தயவில் காற்சட்டையும் பரிசாகப் பெற்றேன். இது போக கேவியார் ஒரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தார். மீண்டும் அடுத்த சந்திப்பிற்காக மனம் ஏங்குகிறேன். அதற்கான காலமும் நேரமும் வாய்க்கும் என எதிர்ப் பார்க்கிறேன்.
என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துர்கா அவர்களுக்கு நன்றி. நான் சந்திக்க நினைத்த பதிவர்களுள் ஒருவர் நிஜமா நல்லவன். முதல் நாளே அரை விசாரித்தேன். ஆனால் அவருடைய தொடர்பு எண் யாரிடமும் இல்லாது போகவே அவரை காணவும் பேசவும் முடியாமல் போனது. அன்பு நண்பர் ஜெகதீசனும் தமிழகம் திரும்பிவிட்டதால் சந்திக்க முடியாமல் போனது. இனிய நினைவுகளுடன் திங்கள் காலை 4 மணிக்கு ஈப்போ வந்தடைந்தேன்.
சந்திப்பு இனிதே நடந்தேற உதவிய அனைவருக்கும் நன்றிகளையும், பெயர் குறிப்பிடாமலும் விடுபட்டும் போனவரிடையே மன்னிப்பும் கோறுகிறேன்.
முற்றும்.
பி.கு: செந்தோசாவில் சந்திப்பு முடிந்ததும் ஜோசப் அண்ணன் ராஜ பார்வை கமல் வேடத்தில் இருந்தார். அந்தக் குடையும், கண்ணாடியும் காணாமல் போனதாக புகார் கிடைத்துள்ளது வேறு விடயம்.
ராஜ பார்வை படத்தில் அந்தி மழை பொழிகிறது ஏனும் பாடலில் இந்திரன் தோட்டத்து முந்திரியே எனும் அழகான வரி ஒன்று உண்டு. இந்திரனை போல இந்திரன் தோட்டத்து முந்திரிக்கும் காமம் அதிகமா எனும் ஒரு அருமையான ஆராய்ச்சி பதிவை இங்கே சுட்டி படிக்கவும்.
29 comments:
இனிய அனுபவம், வாழ்த்துகள்.. :)
//பாரி அரசு சமூகம் சார்ந்த பல விடயங்களை பிய்த்து மேய்ந்துக் கொண்டிருந்தார்.//
கல்யாணம் ஆகப் போகும் புதுமாப்பிள்ளையை மாடு என்று மறைமுகமாகச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :)
@ சதீசு குமார்
நன்றி...
@கோவி.கண்ணன்
திட்டனும்னு நினைச்சி திட்டிபுட்டு என் மேல பழி போடுவது நியாயமா?
உங்கள் வலைக்கு இன்று தான் வருகிறேன்.சிறப்பாக எழுதி வருகிறீர்கள்.வாழ்த்துகள்.
@திண்டுக்கல் சர்தார்
நன்றி ஐயா, உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
:-)))...
கோவி.கண்ணன் said...
//பாரி அரசு சமூகம் சார்ந்த பல விடயங்களை பிய்த்து மேய்ந்துக் கொண்டிருந்தார்.//
கல்யாணம் ஆகப் போகும் புதுமாப்பிள்ளையை மாடு என்று மறைமுகமாகச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :)//
ரீப்பிட்டேய்.... :)
//திட்டனும்னு நினைச்சி திட்டிபுட்டு என் மேல பழி போடுவது நியாயமா?//
இதுக்கும் டபுள் ரீப்பிட்டேய்... :)
//குளிர்பானங்களின் திறப்பு விழாவோடு //
இவற்றை விலாவாரியாக விளக்கவும் ;)
//நண்பர் டொன் லீயின் வேண்டுகோளுக்கினங்க சந்திப்பு இடத்தில் விடுபட்டு போன அரசியல் விவகாரங்கள் இரவு வேளை சாப்பாட்டு மேசையில் தொடர்ந்தது. சில பல கருத்து பரிமாற்றங்களுக்குப் பிறகு எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள்.//
பரவாயில்லையே...
:)
koduthu vaichavanga neega..ellarukum unga mela embuttu paasam paarunga..
குளிர்பானங்களின் திறப்பு விழாவோடு //
இவற்றை விலாவாரியாக விளக்கவும்
ரிப்பீட்டு
கண்ணாடி, குடையெல்லாம் காணப் போணதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைப்பா. என் தலைய போட்டு உருட்டாதீங்க.
நானும் கூட என் தம்பி விக்கியுடன் இருநாட்கள் அப்டின்னு ஒரு பதிவு எழுத எண்ணியிருந்தேன். ஆனால் நேரமின்மையால் எழுத இயலவில்லை. என்னைவிட சிறப்பாக கோவி.க அண்ணண் எழுதிட்டாரு.
உருவத்தில் மிகப் பெரியவனாய் தோற்றமளித்தாலும், மழலைத் தமிழும், குழந்தை மனமும் கொண்ட அன்புத் தம்பி என்பது தான் விக்கியை குறித்து எனது கருத்து. நல்லா எழுதியிருக்கீங்க தம்பி.
தம்பி நல்ல மினிட்ஸ் எடுப்பாப்ல போல.... நிஜமாவே மினிட் பை மினிட் அப்டேட்டா இருக்கே...
நல்ல விரிவான விமர்சனம் விக்கி.. பாராட்டுக்கள்...
@விஜய் ஆனந்த்
நானும் :). வருகைக்கு நன்றி தலைவா..
@இராம்
அண்ணாச்சி என்னா இது இங்குட்டும் ரிப்பீட்டு அங்கிட்டும் ரிப்பீட்டு... அது உங்க கண்ணாடியா ஹா ஹா ஹா...
@கானா பிரபா...
நீங்க எப்போது இந்த பக்கம் வரிங்க சொல்லுங்க எப்படினு ரிஹசல் செய்திடலாம்.
@ டொன் லீ
எல்லோருக்கும் உங்க மேல தனி பாச மிக்க மரியாதை.. நீங்கள் சொல்லிய ஒரு காரணத்திற்காக தான் அரசியல் விடயம் பேசப்படவில்லை.
@ துர்கா
மிக்க நன்றி... சுத்தி போடனும்... கண்ணாரு படுது...
@ விலேகா
ஆஹா... நீங்களுமா? வருகைக்கு நன்ரி..
@ ஜோசப் பால்ராஜ்
இல்லையே... அந்த கண்ணாடியை உங்கள் வீட்டில் தான் வைத்தேன். ஐயர்ன் பாக்ஸ் பக்கத்தில் இருக்கும் பாருங்க... என் பேக்கில் வைத்து வீட்டில் வைக்கச் சொன்னீர்களே மறந்துட்டிங்களா? இல்லை ஷார்ச் டெட்ம் மெமாரி லாஸ் ஆ?
@ மஹேஸ்
ஹா ஹா ஹா... என்ன வச்சி காமிடி கீமிடி பண்ணலையே... முன்னுக்கு பின்னா மாற்றி2 எழுதி இருக்கேனுங்க... சரியா பார்க்கலையா?
@ வெண்பூ
பாராட்டுக்கு நன்றி வெண்பூ... நீங்க எப்ப சிங்கை வராப்புல...
அன்பின் தம்பி விக்னேசுவரன்,
சிங்கைக்கு, தங்களின் முதல் வருகையே, ஒரு சிறந்த சந்திப்பாக அமைந்து விட்டது.
அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
பாரி.அரசை தாங்கள் மாடு என்று குறிப்பிட்டதாக கோவியார் சொன்னது சரிதான்.
மாடு என்றால் செல்வம் என்று பொருளல்லவா?
என்னைப் பொருத்த வரையில் அவர் தமிழ்ச் செல்வம்.
அதனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாகத் தான் வருகிறது.
தாங்கள் வஞ்சப் புகழ்ச்சி அணியில் சொல்லி இருப்பதாக கோவியார் கருதினால், அவருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.
@ஜோதிபாரதி
ஆகா ஆகா.. அருமை அண்ணா... சிறப்பான கண்ணோட்டம் உங்களுக்கு... பாரி.அரசு மற்றும் அகரம் அமுதா பேசிய தமிழில் வியந்தேன்... உங்கள் பின்னூட்ட தமிழில் வியக்கிறேன்... வருகைக்கும் தருகைக்கும் நன்றி...
// VIKNESHWARAN said...
@ துர்கா
மிக்க நன்றி... சுத்தி போடனும்... கண்ணாரு படுது...//
adapaavi..
கொடுத்து வைத்தவர் நீங்க...அழகான அனுபவம்!!
//இவ்வியற்கைக் காட்சியை காண இரு கண்கள் போதவில்லை//
:-))))
அடுத்த முறை கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் :-)
@ துர்கா
மீண்டும் நன்றி
@ இனியவள் புனிதா
மிக்க நன்றி... ஆம் நிச்சயமாக நல்ல அனுபவம்... நல்லவர்களை சந்திக்கும் போது மனதுக்கு இன்பம்..
@ கிரி
நிச்சயம் வருகிறேன்...
பதிவர் கூடுகையில் (சந்திப்பில்) கடைசி ஆளாகக் கலந்து கொண்டது போலவே பின்னூட்டிலும் கடைசி ஆளாகக் கலந்து கொள்கிறேன். அழகிய துய்ப்புணர்வை அருமையான சொன்னடையில் வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
அகரம்.அமுதா
@அகரம் அமுதா
மிக்க நன்றி... உங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சியடைந்தேன்...
ஆஹா நான் கொஞ்சம் கடைசியா வந்துட்டேன் போலிருக்கே
//பிறகு நான் என்னால் முடிந்த வரை உளறினேன்.//
உளறல் அல்ல தோழா. சொற்பொழிவு. மிகவும் அருமையான தமிழில் அழகாக பேசினீர்கள். பாராட்டுக்கள்
@கிஷோர்
முதல் வருகைக்கு நன்றி... நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்... :P
Post a Comment