கடந்த சில காலமாக உலகளாவிய நிலையில் தேனின் விலை மலையென உயர்ந்து கொண்டே போவது நாம் கண் கூடாகக் காணும் உண்மை. இதற்கு முக்கிய காரணம் பற்றாக்குறை. கடந்த வருடத்தில் மட்டும் அர்ஜெண்டினாவின் தேன் ஏற்றுமதி 20 விழுக்காடு குறைந்துள்ளது.
ஒரு காலத்தில் அர்ஜெண்டினா மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்தார்கள். பூக்கள் நிறைந்து காணும் அர்ஜேண்டினாவின் பெம்பஸ் திடல்வெளியை மாடுகள் கடந்துப் போகினும் கவலையற்று இருந்தார்கள். ஆனால் இன்றோ நிலை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் முகங்களிலும் சோகத்தின் ரேகைகள் படர்ந்துவிட்டிருக்கிறது. இதற்கு காரணம் தான் என்ன?
எல்லாவற்றுக்கும் பதில் சோயாவை பயிர் செய்ய முனைப்புக் கொண்டிருப்பதே என்றாகிறது. பூக்கள் பூத்துக் குழுங்கிய பகுதிகளில் மாற்றம். பார்க்குமிடமெல்லாம் சோயாச் செடிகள். இதனால் தேன் உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்கிய அர்ஜெண்டினாவிற்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விற்பனையாளர்களும் உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்தியிடங்களை வேறு இடங்களுக்கு மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஏற்றுமதியும் உற்பத்தியும் பாதிப்படைந்ததால் வருமானமும் குறைந்துள்ளது.
தேனிக்களும் சரி மாடுகளும் சரி தாவர உற்பத்தியில் இருந்தே உணவுகளை தேடிக் கொள்கின்றன. இதனால் மாடு வளர்க்கும் இடங்களில் தேனி வளர்ப்பும் இலகுவாக அமைந்து வந்தது. ஆனால் இப்போதோ இந்நிலையில் அதீத மாற்றம் ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் குறிப்பிடுவது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரி பொருளின் விலையேற்றம். இதனையடுத்து உணவு பற்றக்குறையைத் தீர்க்கும் பொருட்டு விவசாய பொருட்களை அதிகரிக்கும் முயற்சியாகவும் கடந்த சில வருடங்களாக இம்மாற்றங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திடீர் மாற்றங்களினால் முன்னூறுக்கும் மேற்பட்ட தேன் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இப்போது இருக்கும் திடல் பரப்பு இடமோ தேன் உற்பத்திக்கு போதுமானதாக அமையவில்லை. பூக்கள் குறைவாகவும் வகை குறைந்தும் இருக்கிறது. எதிர் வரும் காலத்தில் காலியான திடல் பரப்பு நிலங்களில் 13 விழுக்காட்டு இடங்களை பயிர் உற்பத்திற்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதால் இந்நிலமை மேலும் பாதிப்படையலாம் என கருத்து தெரிவிக்கிறார்கள்.
மரபணு மாற்றத்தின் வழி சோயாவின் உற்பத்தி பெருகியுள்ளது. இதனால் சீன தேசத்தின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அதன் உற்பத்தியும் அதிகரிகப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தைவிட இரு மடங்கு அதிகமான சோயா உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தாக்கம் ஏனைய விவசாயிகளையும் விட்டு வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். சோயாவின் உற்பத்திக்கு கிடைக்கும் வரவேற்பினால் அது மற்ற விவசாயத் துறைகளை வெகுவாக பாதித்துள்ளது. பலரும் தங்களது நிலங்களை சோயா உற்பத்திக்கு பயன்படுத்த முனைப்புக் கொண்டுள்ளார்கள்.
சோயா ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டையடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது அர்ஜண்டினா. 2001 மற்றும் 2002களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிவர்த்தியாக அமைந்துள்ளது சோயா ஏற்றுமதி. இதனால் பெம்பஸ் நகரில் செல்வச் செழிப்பும் அதிகரிக்கச் செய்கிறது என்றே சொல்லலாம். ஆனால் கால் நடை மற்றும் தேன் உற்பத்தியாளர்களுக்கோ இந்நிலை பெரும் சவாலாக அமைந்துவிட்டிருக்கிறது.
பெம்பஸ் பகுதிகளில் உள்ள நிலமானது விவசாயத்திற்கு ஏதுவாக இருப்பதினால் சோய உற்பத்திக்கு விவசாயிகள் அதிகமான முதலீட்டை வெளியாக்க அவசியமில்லாமல் இருக்கிறது. ஆனால் தேன் மற்றும் கால் நடை உற்பத்திக்கு இந்நிலை மாறுபட்டு அமைவது இப்பாதிப்புக்கு மற்றுமொரு காரணமென கூறுகிறார்கள் அர்ஜண்டினா தேன் வளர்ப்பு இயக்கத்தினர்.
ஆரம்ப காலங்களில் சராசரியாக ஒரு தேன் கூட்டில் வருடத்திற்கு 60கிலோ தேன் உற்பத்தி செய்து வந்துள்ளனர். ஆனால் இப்போது அந்நிலையை அடைய அதிகமான தேனிக்களும், தேன் கூடுகளும் தேவைப்படுகிறது. இது வேலைப் பளுவையும் செலவையும் கூட்டிவிடுகிறது.
நவீன தொழில்நுட்ப முறை விவசாயத் துறையையும் விட்டு வைக்கவில்லை. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இராசாயனக் கலவைகளால் தேனிக்களின் இனப்பெருக்கம் பதிப்பிற்குள்ளாகியுள்ளதையும் யாராலும் மறுக்க முடியாத விடயமாகவே அமைகிறது. அதுமட்டுமின்றி தேனீக்களின் இனப்பெருக்கத்திற்கு போதுமான உணவும் குறைந்து உள்ளதாக இவர்கள் சாடியுள்ளார்கள்.
அர்ஜண்டினாவின் தேன் உற்பத்திக்குண்டான பாதிப்பு மிக குறுகிய காலத்திலும் ஆனால் அதி வேகமாகவும் ஏற்பட்டுள்ளதாக பெட்ரிஸ் எனும் அர்ஜெண்டினா தேன் ஏற்றுமதியாளர் கூறுகிறார்.
தேன் ஏற்றுமதியால் 2007ஆம் ஆண்டு அர்ஜண்டினாவிற்கு கிடைத்த வருமானம் 134கோடி அமெரிக்க டாலர்கள். ஆனால் தானிய ஏற்றுமதிக்கோ இதைவிட பல கோடி அதிகமான வருமானம் கிடைக்கிறது. அதனோடு ஒப்பிடுகையில் தேன் ஏற்றுமதி மிகவும் குறைந்த வருமானத்தை அளிக்கும் துறையாகவே கருதுகிறார்கள்.
இதற்கு நிவாரனம் காண அர்ஜெண்டினா தேன் உற்பத்தியாளர்கள் சங்கம் பெறிதும் முயன்று வருகிறது. "உலகின் விலை மதிப்பில்லா உணவு வகைகளில் தேனுக்கு எப்போதும் நன்மதிப்புள்ளது அதனால் தேன் உற்பத்தியின் வளர்ச்சிக்கு நாங்கள் எப்போதும் நல்ல திட்டங்களையும் அணுகுமுறைகளையும் வழிவகுத்துக் கொண்டிருப்போம்" என்கிறார்கள் இச்சங்கத்தினர்.
12 comments:
தலைவரே, மிகவும் அற்ப்புதமான பதிப்பு, தேன்,இனி வரும் காலங்களில் யாருக்கும் தெரியாமல் போனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை,என்ன செய்வது?
வித்தியாசமான பதிவு:)
தேன் தேன்
உனை தேடி அலைந்தேன்...
நல்ல பதிவு.
உங்கள் பதிவுகளில் உள்ள தகவல்களுக்காகவும், தரவுகளுக்காகவும் அருமை.
//அவர்கள் முகங்களிலும் சோகத்தின் ரேகைகள் படர்ந்துவிட்டிருக்கிறது. இதற்கு காரணம் தான் என்ன?//
ரொம்ப நேரம் கைய முகத்தில் வெச்சு இருப்பாங்க, அதான் கையில் இருக்கும் ரேகை அச்சு முகத்திலும் விழுந்து இருக்கும். அந்த நேரம் அவுங்க முகம் சோகமாக இருந்தால் அது சோக ரேகையாக தெரியும்.
விளக்கம் போதுமா?
//மாடுகள் கடந்துப் போகினும் கவலையற்று இருந்தார்கள். ஆனால் இன்றோ நிலை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது.//
தலைகீழா என்றால் எப்படி மனுசன் கடந்துபோனா மாடுகள் கவலையடைகின்றனவா?
//தேனீக்களின் இனப்பெருக்கத்திற்கு போதுமான உணவும் குறைந்து உள்ளதாக இவர்கள் சாடியுள்ளார்கள்.//
இது ஸ்டாட்டிங் பிராபிளம், தக்க மருத்துவரிடம் கூட்டி செல்லவேண்டும்.
தேனீ நல்ல அற்புதமான மருந்து. திருக்குர்ஆனில் இது குறித்து வந்துள்ளது. நல்ல பதிவு விக்கி!
وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
உம் இறைவன் தேனீக்கு உள்ளுணர்வை அளித்தான். ‘நீ மலைகளிலும் மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள். (என்றும்) 16:68.
ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
‘பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலி ருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (என்றும் உள்ளுணர்வை உண்டாக் கினான்.) அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்க ளுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது.அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிட்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(16:69)
@jawahar
நன்றி திரு ஜவஹர் அவர்களே. தெரியாமல் போகும் அளவிற்கு நம் மக்கள் ஆகிவிடுவார்கள் என்கிறீர்களா?
@மலர்விழி
பாடல் பாடுவது என்றால் மேடையில் பாடலாமே இங்கே எதற்கு...
@ தூயா
மிக்க நன்றி
@குசும்பன்
1) குசும்பா வியக்க வைக்கும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறீர்கள்... :P
2) ஹா ஹா ஹா... ஒரு காலத்தில் அப்படி கூட நிகழலாம்.
3) நீங்கள் தான் டாக்டரா?
@ தமிழ் பிரியன்
நல்ல தகவல். மிக்க நன்றி...
ஆஹா..
பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
இனிப்பான் தேனைப் பற்றி இப்படி ஒரு கசப்பான உண்மையை அழகா சொல்லியிருக்க தம்பி.
@பரிசல்காரன்
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி...
@ஜோசப் பால்ராஜ்
தேன் இனிக்குமா? அப்படினா தித்திக்காதா அண்ணே :P
\\Thooya said...
நல்ல பதிவு.
உங்கள் பதிவுகளில் உள்ள தகவல்களுக்காகவும், தரவுகளுக்காகவும் அருமை.
\\
வழிமொழிகிறேன் ;)
Post a Comment