Wednesday, October 08, 2008

எண்ணிய எண்ணியாங்கு எய்துப....


JOHN WAYNE

நெப்போலியன் ஹில்ஸ் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய 'பிப்லியோகிரஃப்பி' நூலில் ஒரு முக்கிய நபரைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார். அக்கதை சுவாரசியமாக இருக்கும்.

அந்தக் கதை மெரியன் மைக்கல் மொரீசன் எனும் இளைஞனை பற்றியது. மெரியன் 1907-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆன் திகதி அமெரிக்காவில் பிறந்தார். மெரியனின் ஆறாம் பிராயத்தின் போது அவரது குடும்பம் கலிபோர்னியாவில் இருக்கும் 'மிட்வெஸ்ட்' எனும் இடத்திற்கு புலம்பெயர்ந்தது. சில வருடங்களுக்கு பின் அவர்கள் 'கிளன்டேல்' எனும் ஊருக்கு மீண்டும் மாற்றலாகிச் செல்கிறார்கள். பள்ளிப்படிப்பை முடித்த மெரியன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு தனது நேரத்தை விளையாடுவதிலேயே செலவுச் செய்கிறார்.

அவர் பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். எதிலும் பிடிமானமற்றுப் போகிறது. மெரியன் வாழ்க்கையில் வேலை மாற்றம் என்பது இயல்பாகிப் போகிறது. ஒரு சமயம் சமையல் சாதன பொருட்களை விற்பனைச் செய்யும் தொழிலில் ஈடுபடுகிறார்.

மெரியன் காலையில் எழுந்தவுடன் விற்பனைப் பொருட்களை எடுத்துக் கொண்டு புறப்படுவார். வீடு வீடாகச் சென்று பொருளை விளம்பரப்படுத்தி விற்பனைச் செய்ய முனைப்புக் கொள்வார்.

வாழ்க்கையின் மீது அவருக்கு ஏதோ ஒரு வித வெறுப்பு இருந்தே வந்தது. நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை என்பது அவரது ஆதங்கம். எடுக்கும் சன்மானம் வாயிக்கும் வயிற்றுக்குமே போதுமானதாய் இருந்தது. ஒரு சாதாரண விற்பனை முகவர் எனும் பட்சத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை அவரால் கவர முடியவில்லை. விற்பனையும் மிக மந்தமாக இருந்தது.
NEPOLEON HILL

ஒரு சமயம் மெரியன் ஓர் இல்லத்தரசியிடம் அவரது விற்பனைப் பொருளையும் அதன் உபயோகம் மற்றும் சமைக்கும் முறையையும் விளக்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் அவ்வில்லத்தரசியின் கணவன் வீட்டிற்குள் நுழைகிறார்.

"மன்னிக்கனும் சார், நான் சமையல் தளவாட பொருட்களின் விற்பனை முகவர், உங்கள் மனைவியிடம் இதன் உபயோகத்தை விளக்கிக் கூறிக் கொண்டிருக்கிறேன்", என்றார்.

"நல்லது, தொடருங்கள்", என அப்பெண்ணின் கணவனும் கூறுகிறார். பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து மெரியனின் பேசுவதை ஆர்வமாகக் கேட்கிறார்.

மெரியனின் விற்பனை வேலை முடிந்ததும் அப்பெண்மணியின் கணவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவள் கணவனின் பேச்சு மெரியனை மிகவும் கவர்வதாய் அமைகிறது.

சற்று நேர உரையாடலுக்கு பிறகு மெரியன் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு அடுத்த வீட்டை நோக்கி நகர்கிறார். அவர் கிளம்பும் முன் மெரியன் தனது வியாபார யுக்தியை அதிகரித்துக் கொள்ள சில அணுகு முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார் அப்பெண்ணின் கணவன். முக்கியமாக எண்ணங்களும் நமது நடவடிக்கைகளும் நல்ல விதமாய் அமைந்தால் அதுவே வாழ்க்கைக்கு நல்ல விதை என்கிறார்.

"உனது இலட்சியம் என்ன? உனது இலட்சியத்தை நீ முடிவு செய்துவிட்டால், உன் முழு கவனமும் அதில் இருக்கட்டும், அதன் இலக்கை அடைய முழு மூச்சாக அதில் ஈடுபடு. நீ என்ன செய்வதாக இருந்தாலும் சரி, ஒரு விற்பனை முகவராகவோ அல்லது வேறு எதுவாக இருப்பினும் பிரச்சனையல்ல, இலட்சியம் ஒன்றே முக்கியம். உனது இலட்சியத்தை அடையும் வரை முயற்சி செய்து கொண்டிரு. அது மட்டுமே வெற்றியின் திறவு கோல்", என அப்பெண்ணின் கணவன் சொல்கிறார்.

மெரியன் நன்றி கூறி அங்கிருந்து கிளம்புகிறார். விற்பனை முகவராக சில காலம் இருக்கிறார். விற்பனையாளராக தனது இலக்கை அடைய முடியாமல் அவ்வேலையை விட்டுவிடுகிறார்.

மனம் நொந்துப் போன மெரியன் வேறு வேலைத் தேடி அழைகிறார். இம்முறை நடிப்புத் துறையைத் தேர்வு செய்கிறார். நடிப்புத் துறையில் தான் வெற்றி கொள்ள முடியும் என முழு மூச்சாக இறங்குகிறார்.

ஆரம்பக் காலத்தில் சிறுச் சிறு கொசுறான வேடங்கள் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. நாளுக்கு நாள் அவரின் திறன் மெருகேற்றம் காண்கிறது. துணை நடிகராகவும் அதன் பின் முக்கிய கதாப்பாத்திரமாகவும் பொறுப்பேற்று நடிக்கலானார்.

பின்னாளில் அந்த இளைஞன் உலக பிரசித்திப் பெற்ற முக்கிய நடிகர்களின் வரிசையில் இருப்பதை உலகம் காண்கிறது.

நடிப்புத் துறையில் ஓய்வு பெறும் தருணத்தில் 200 படங்களை நடித்திருந்தார் மெரியன். மெரியன் எனும் விற்பனை முகவராக இருந்தவர் நடிப்புலகில் கொடி நாட்டி 'JOHN WAYNE' எனும் பெயரில் அனைவராலும் அறியப்பட்டு வந்தார். நண்பர்கள் மத்தியில் இவரது பெயர் 'THE DUKE'.

தான் கோடிஸ்வரனாக ஆக வேண்டும் என்ற அவரது எண்ணம் சாதனைப் பெற்றிருந்தது. ஆனால் அவருக்கு மேலும் ஒரு ஆசை சிறகடித்துக் கொண்டு இருந்தது. சிறந்த நடிகராக வேண்டும் என்ற ஆசை அது. 1970-ஆம் ஆண்டு 'TRUE GRIT' எனும் படத்தின் வழி அவ்வாசை நிறைவேறியது. அச்சமயம் அவருக்கு 64 வயது.

ஆஸ்கார் எனும் திரையுலகத்தாரின் இலட்சிய விருதை அவர் வாங்கிய போது ஒரு செய்தியாளர் அவரிடம் கேட்டார்,

"உங்கள் வெற்றிக்கு தூண்டு கோளாக இருந்தவர் யார்?"

40 வருடங்களுக்கு முன் விற்பனை முகவராக இருந்த சமயம் தானக்கு நடந்த, தனது இலட்சியங்களின் தூண்டு கோளாக இருந்த அம்மனிதனை சந்தித்த சம்பவத்தினைக் குறிப்பிட்டார்.

"பிறகு அவரை நீங்கள் சந்தித்தீர்களா? அவர் யார் என தெரியுமா?"

"ஆம், நிச்சயமாக தெரியும், அவர் பெயர் NEPOLEON HILL, THINK AND GROW RICH ஏனும் புத்தகத்தை எழுதியவர்" என்றார் மெரியன்.

நெப்போலியன் 1970-ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் மரணமடைந்தார். அவர் இறக்கும் தருவாயில் மெரியனை சந்திக்க நினைத்தார்.

"டாக் நாம் நினைத்ததை சாதித்துவிட்டோம்மல்லவா" என மரணப் படுக்கையில் இருந்த நெப்போலியன் மெரியனிடம் கேட்டார்.

"ஆம் நெப்போலியன், ஒருவன் வாழ்வில் சாதித்த இலட்சியங்களைவிட அவன் சுக துக்கங்களிலும் முன்னேற்றத்திலும் பங்குக் கொள்ளும் நண்பனே சிறந்தவன், நான் உன்னை என் நண்பன் எனச் சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன்" என அவரது கைகளைப் பற்றி கண் கலங்கினார்.

நமது வாழ்க்கையில் சில நேரங்களில் பணம் மதிப்பற்றுப் போகிறது. செல்வத்தை சம்பாதிக்கிறோம், ஆனால் அதன் நிலையற்ற தன்மையை நமக்கு பல வேளைகளில் உணர்த்தத் தவறுவதில்லை. உண்மையான நட்பு என்றுமே நிலையானது. அவர்கள் பிரிந்தாலும் அவர்களது நினைவுகள் நிலைத்து நிற்கும்.

பதிவின் நோக்கம் எங்கோ சென்றுவிட்டது. மேற்கண்ட சம்பவத்தை எதற்காக எழுதினேன். THINK AND GROW RICH புத்தகத்தை குறிப்பிடவே. அப்புத்தகத்தை தொடுத்து ஏதோ ஒரு வகையில் லேசாக ஒட்டி இருக்கும் சம்பவம் தான் மேற்கண்டவை எனும் எண்ணத்தில் எழுதிவிட்டேன்.

THINK AND GROW RICH புத்தகத்தை நம்மில் பலரும் படித்துவிட்டிருப்போம். சமீபத்தில் டாக்டர் ஜேபியின் நம்பிக்கை எனும் தலைப்பிலான ஒலி வடிவ புத்தகத்தில் கூட இப்புத்தகத்தை குறிப்பிட்டிருப்பார். இது ஒரு முறை வாசித்து வைத்துவிடும் புத்தகம் இல்லை. மீண்டும் மீண்டும் படிக்க ஒரு புது அனுபவத்தையும் உற்சாகத்தையும் தூண்டும் புத்தகம்.

THINK AND GROW RICH இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இங்கே தறவிரக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பன். இப்புத்தகம் பலரது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த புத்தகமாக கருதப்படுகிறது.

Definiteness of Purpose

Definiteness of Purpose
is the starting point of all achievement.

Don't be like a ship at sea without a rudder,
powerless and direcionless.

Decide what you want, find out how to get it,
and then take daily action toward achieving your goal.
You will get exactly and only
what you ask and work for.
Make up your mind today to go after it! Do it now!

Successful people move on their own initiative,
but they know where they are going before they start. -NEPOLEON HILL

12 comments:

Sathis Kumar said...

சிறப்பானக் கட்டுரை, ஞாயிறு நண்பனில் தங்களுடைய சிறுகதை வெளிவந்திருந்தது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

அருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Anonymous said...

மீ த ஃபர்ஸ்ட் :-))

Anonymous said...

அருமையான நூல் அறிமுகம்.. கூடவே வேய்ன் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு... ஒவ்வொரு வலியிலும் சாதனையுள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார்... நமக்கும் சில சமயங்களில் இதுப் போல் யாராவது அமைவதுண்டு. இன்னொரு விசயம் 'பிசிராந்தையார்' பற்றி கேள்விப்பட்டதுண்டா?

Anonymous said...

//இனியவள் புனிதா said...
மீ த ஃபர்ஸ்ட் :-))//

ஜஸ்ட் மிஸ்... மீ த செகண்டு
:-P ஓகேவா!!!

Anonymous said...

நட்புக்கு இலக்காணமாக பிசிராந்தையாரை குறிப்பிடுவதுண்டு.. கோப்பெருஞ்சோழனின் ஆத்ம நண்பர். ஒருவர் நினைப்பதைப் போல் மற்றொருவரும் நினைப்பார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடைசி வரை இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டதேயில்லை. “புணர்ச்சிதான் நட்பாங் கிழமைத்தரும்” வள்ளுவமும் உரைக்கின்றதே.

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் said...

நல்ல பயனான கட்டுரை,அன்பரெ.

தன்னம்பிக்கையுடன் உற்சாகமூட்டும் வாழ்வியல் முன்னேற்ற நூல்கள் தற்போது நிறைய விற்பனையாகின்றது.

ஜோசப் பால்ராஜ் said...

எனக்கு மிகவும் பிடித்த புத்தகத்தைக் குறித்து மிக அருமையா எழுதியிருக்க தம்பி. நீ சொல்லியிருக்க இந்த விசயம் எனக்கு இதுவரை தெரியாத ஒன்று. நல்ல தகவல்களுடன் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

Anonymous said...

வெளிவந்து எழுபது ஆண்டுகள் ஆனாலும் என்றும் புதியதாகவே இருக்கும் நூல். கட்டுரை நன்று.

Thamiz Priyan said...

ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள முடியாது... ஆனால் அதை ஊர்ந்து கவனித்து எழுதிய விதம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் விக்கி!

raja said...

அருமையான கட்டுறை ! சூப்ப்ர் ...
நல்லா எழுதி இருக்கிங்க !

பரிசல்காரன் said...

//அருமையான நூல் அறிமுகம்.. கூடவே வேய்ன் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு... ஒவ்வொரு வலியிலும் சாதனையுள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார்... நமக்கும் சில சமயங்களில் இதுப் போல் யாராவது அமைவதுண்டு///

ரிப்பீட்டேய்!

VIKNESHWARAN ADAKKALAM said...

@சத்தீஸ் குமார்

மிக்க நன்றி நண்பா. மறுவாரம் வந்த விமர்சனத்தையும் படிச்சிங்களா? :P

@ புனிதா

இல்லை நீங்க இரண்டாவது. நல்ல தகவல் சொல்லி இருக்கிங்க மிக்க நன்றி..

@வாசுதேவன்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

@ ஜோசப் பால்ராஜ்

மிக்க நன்றி.

@நம்பி

நன்றி நம்பி ஐயா, நீங்களும் படித்திருக்கிறீர்கள் என அறிகிரேன். அனுபவத்தை பகரலாமே?

@தமிழ் பிரியன்

நன்றி தலை

@ராஜா முகமது
நன்றி

@பரிசல்காரன்

நன்றி பரிசல். எழுத்தாளர் ஆகிடிங்க. வாழ்த்துக்கள். இந்த பக்கம் வர மறந்திடாதிங்க... என்ன உங்க பேரு போடலையாமே... பிரச்சனை பண்ணலாமா?