Friday, June 13, 2008

உடல் அசைவு மொழி (body language) என்றால் என்ன?



ஒருவருடன் பேசும் போது நமது உடல் அசைவு மூலம் நமது எண்ணங்களையும், செயல்களையும் தெரிவிக்க முடியும்.

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவரது பேச்சு சுவாரஸ்யமாக இருந்தால் தான் அவரது பேச்சை தொடர்ந்து கவனிப்போம். நண்பனின் பேச்சு போரடிக்க ஆரம்பித்தால் நமது கவனம் வேறு பக்கம் திரும்பும். உடலை நெளித்து, கை கால்களை ஆட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விட தொடங்கிவிடுவோம்.

நண்பரின் பேச்சு போரடிக்கிறது என வார்த்தையாக சொல்லாமல் உடல் அசைவு மூலம் சொல்லும் இத்தகைய செயல்திறன், ‘சொல்சார தகவல் பரப்பு’ என்பதாகும். உடல் அசைவு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள் இருப்பதாக கணித்துள்ளனர். உடல் அசைவு மொழிகளின் முக்கியதுவத்தை விளக்கும் ஒரு சீன நாடோடி கதை உண்டு.

பண்டைய சீனவில் நீதிபதி ஒருவர் பணிமாற்றமாகி சீன தலைநகருக்கு வந்தார். அவர் திறன்மிக்க தையல்காரன் ஒருவனை அழைத்து தனக்கு, நீதிபதிகள் அணியும் நீண்ட அங்கி தைக்குமாறு கூறினார்.

அங்கி தைப்பதற்கு ஒப்பு கொண்ட தையல்காரர் நீதிபதியிடம், “ஐயா, நிங்கள் புதிதாக பதவி நியமனம் பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்களா? அல்லது பதவி உயர்வு பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்களா? இல்லை பதவி உயர்வை எதிர்பார்த்து தலை நகருக்கு வந்துள்ளீர்களா? என்று பணிவுடன் கேட்டார். தையல்காரனின் கேள்வி நீதிபதியை வியப்படைய செய்தது. அனைத்து நீதிபதிகளும் ஒரே விதமான அங்கியைதானே அணிவார்கள். நீ எதற்காக தேவையற்ற கேள்விகளை கேட்கிறாய்? என தையல்காரனை கடிந்து கொண்டார்.

“ஐயா எனது கூற்றை தயவு செய்து கோளுங்கள்” என்று பதிலளித்த தையல்காரர், தனது விளக்கத்தை பின்வருமாறு கூறினார். கனம் நீதிபதி அவர்களே! நீங்கள் புதிதாக நியமனம் பெற்றவரெனில் உங்களது உயர் அதிகாரிகளின் முன்பு அடிக்கடி விரைப்புடன் நிற்க வேண்டும். எனவே உங்களது அங்கி முன்பகுதியிலும், பின் பகுதியிலும் சமநீளம் கொண்டதாக அமைதல் வேண்டும்

நீங்கள் பதவி உயர்வு பெற்று தலைநகருக்கு வந்துள்ளீர்கள் எனில் நெஞ்சை நிமிர்த்தி கர்வமுடன் தேற்றமளிக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் அங்கியின் முன் பகுதி நீளம் மிக்கதாக அமைதல் வேண்டும்.


மாறாக பதவி உயர்வு எதிர்பார்த்து தலைநகருக்கு வந்துள்ளீர்கள் எனில் உங்கள் உயர் அதிகாரிகள் முன்பு தோள்கள் குவிந்த வண்ணம் பணிவுடன் நிற்க வேண்டும். அவ்வகை தருணங்களில் உங்களது அங்கி பின்பகுதியில் நீளம் மிக்கதாக அமைதல் வேண்டும், ஐயா இப்பொழுது கூறுங்கள் உங்கள் அங்கி எப்படி இருக்க வேண்டும்?

தையல்காரனின் விளக்கம் நீதிபதிக்கு பெரும் திருப்தியை அளித்தது. தனது ஆயுட்காலத்தில் பல தருணங்களில் நீதிபதிதையல்காரனின் விளக்கத்தை பற்றி எண்ணி எண்ணி வியந்தார்.


உடல் அசைவு மொழிகள் சமீப காலமாக நிர்வாக கல்வி இயலில் முக்கியதுவம் பெற்றுவருகிறது. இருப்பினும் பண்டைய காலத்திலேயே மக்கள் உடல் அசைவு மொழி பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்பதை இந்த கதை மூலம் அறியலாம்.

13 comments:

Anonymous said...

அடேங்கப்பா.....

VIKNESHWARAN ADAKKALAM said...

//சேவியர் said...
அடேங்கப்பா.....//

என்ன அப்பாவ மரியாத இல்லாம கூப்புடுறீங்க...

சின்னப் பையன் said...

உடல் அசைவு மொழி அப்படின்னுட்டு, இந்தியன் தாத்தா பண்றா மாதிரி கையைப் போட்டுருக்கீங்களே!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

//ச்சின்னப் பையன் said...
உடல் அசைவு மொழி அப்படின்னுட்டு, இந்தியன் தாத்தா பண்றா மாதிரி கையைப் போட்டுருக்கீங்களே!!!//

ச்சின்னப் பையனுக்கு புரியனும்முனு போட்டேன்... கை அசைவிலும் கமல் தான் நினைவிற்கு வராருனா... நான் என்னத்த சொல்ல...

Athisha said...

இதப்பத்தி இன்னும் நெறய எழுதுங்க, ரொம்ப நல்லாருக்கு

கோவி.கண்ணன் said...

இந்த துணுக்கும் நல்லா இருக்கிறது

VIKNESHWARAN ADAKKALAM said...

//அதிஷா said...
இதப்பத்தி இன்னும் நெறய எழுதுங்க, ரொம்ப நல்லாருக்கு//

எதபத்தி

VIKNESHWARAN ADAKKALAM said...

//இந்த துணுக்கும் நல்லா இருக்கிறது//

நன்றி ஜோசியரே...

பரிசல்காரன் said...

மிக ஆழமான பதிவு! நீதிபதி-தையல்காரன் கதை எனக்குப் புதியது! நன்றி!

VIKNESHWARAN ADAKKALAM said...

//பரிசல்காரன் said...
மிக ஆழமான பதிவு! நீதிபதி-தையல்காரன் கதை எனக்குப் புதியது! நன்றி!//

வாங்க பரிசல்காரன்... வருகைக்கு நன்றி மீண்டும் வருக.

நிஜமா நல்லவன் said...

//இந்த வலைப்பதிவின் மேன்பாட்டிற்கு உதவிய பில் கேட்ஸின் உதவியாளர் மை ஃபிரண்ட்டிற்கு நன்றிக் கூறி கொள்கிறேன்.//

நிச்சயமாக நல்ல மேம்பாடு. சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

அட நல்ல பதிவா இருக்கே. கதை ஏற்கனவே படிச்சிருக்கேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//நிச்சயமாக நல்ல மேம்பாடு. சூப்பர்!//

இந்த வாழ்த்து தேன் கின்னத்தில் 500வது பாடலை எட்டிபிடித்துக் கொண்டிருக்கும் பில் கேட்ஸ்சின் உதவியாளரை போய் சேரும்.

//அட நல்ல பதிவா இருக்கே. கதை ஏற்கனவே படிச்சிருக்கேன்.//

வாங்க.. வாங்க...