Thursday, June 12, 2008

நூல் நயம்: கடல் புறாதலைப்பு: கடல் புறா
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி

ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.

தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்குள் அதிகமாய் இருந்தது. ஆனால் தற்சமயம் ‘கெடா’ என அழைக்கப்படும் கடாரத்தின் வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு நடந்த வரலாற்றுக் குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றன.

இப்புத்தகத்தை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தேடிய இடங்களில் 140 ரிங்கிட்டிற்கும் குறையாமல் சொன்னார்கள். அப்படி இப்படியென்று கோலாலம்பூரில் சற்று குறைந்த விலைக்குக் கிடைத்தது. தடித்த அட்டை கொண்ட மூன்று பாகங்கள். புத்தகத்தின் வாசனையே தனிதான்.

ஆடி 18-ம் நாளில் பொன்னியின் செல்வன் தொடங்குவது போல், கடல் புறா ஒரு சித்திரா பௌர்ணமியன்று தொடங்குகிறது. கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள்.

ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.

இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது.

இதன் மமதையில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் கடல் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கிறான் கலிங்கத்து மன்னன். முக்கியமாக கடலோடிகளாக சிறந்து விளங்கிய தமிழர்களின் ஆதிகத்தை. கலிங்கத்தில் வசிக்கும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறான்.

கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள்.
கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான். இம்முயற்ச்சிக்கு துணையாக உருவாவதே கடல் புறா எனும் போர் கப்பல்.

பொன்னியின் செல்வனைப் போல் கதை சுற்றி வலைத்துக் கொண்டுச் செல்லப்படவில்லை. கதாபத்திரங்களும் குறைவாக இருப்பதால் கதை சரலமாகப் போகிறது. இரண்டாம் பாகத்தில் அளவு கடந்த சிருங்கார ரசமும் வர்ணனைகளும் சற்று எரிச்சலூட்டுகிறது. பாதிக்கு மேல் கதை சூடுபிடித்து ஆர்வமூட்டுகிறது.

இக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்:

கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாளியும் புத்திசாளியும் கூட. ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மஞ்சளழகியையும் மணம் முடித்து வைக்கிறார். (ஒரே கல்லில் மூன்று மாங்காய்). வண்டை மாநில அரசானான பிறகு தொண்டைமான் என அழைக்கப்படுகிறான்.

காஞ்சனா தேவி: கட்டழகி காஞ்சனா கடாரத்தின் இளவரசி. இவளின் துணிச்சல் கருணாகரனுக்கு இவள் மீது காதல் கொள்ளச் செய்கிறது.

மஞ்சலழகி: ஸ்ரீவிஜய பேரரசின் இளவரசி. ஆக்ஷய முனையின் தலைவி.
அநாபய சோழர்: பிற்காலத்தில் குழோதுங்கன் என பெயர் பெற்று விளங்குகிறார். கருணாகரனின் நண்பன்.

அகூதா: சீனக் கடல் கொள்ளைக்காரன். கருணாகரன் மற்றும் அமீர் என பலருக்கு பயிற்சியளிக்கிறார். பிற்காலத்தில் சீன தேசத்து அரசனாக திகந்தவர்.

அமீர்: இரக்க மனம் கொண்ட அரபு நாட்டு முரடன். கருணாகரனின் உப தலைவனாக பணியாற்றுகிறான்.

கண்டியதேவன்: கருணாகரனின் உபதலைவன். கப்பல் விடுவதில் திறமைசாளி.

அமுதன்: வணிகன். செல்வத்தை பாதுகாப்பதில் சிறந்தவன்.

அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம்.

கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும். மஞ்சலழகியின் உண்மையான பெயரும் கடைசி வரையில் தெரியாமல் போகிறது.

ஸ்ரீவிஜய வெற்றியோடு கதை நிறைவை அடைகிறது. அதற்கடுதாற்போல் கலிங்கத்தின் படையெடுப்பு போன்றவை வேறு நாவல்களில் உள்ளனவா என தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களின் கண்டிருப்போம். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.

23 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

innum irukkira puththakanggalaiye padichu mudikkalai.. ponniyin selvane innum padichu mudikkaamal irukkiren viknesh. :-)

கோவி.கண்ணன் said...

விக்னேஷ்,

உங்களது பிர பதிவுகளையும் படித்தேன். சின்ன சின்ன நிகழ்வுகள், கதைகள் ஆகியவற்றை அழகாக கொடுத்து இருக்கிறீர்கள், அவை பயனுள்ளவை.

சரித்திர கதைகளில் முதன் முதலில் வாசித்தது சாண்டில்யணின் கடல் புறா தான். படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கவே மனது வராது அவ்வளவு விறுவிறுப்பாகவும், சுவையாக இருக்கும்.

உங்கள் பார்வையில் சுறுக்கமாக கதையை எழுதி இருக்கிறீர்கள், எனக்கு கதை நினைவு இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் அதைப் படித்த உணர்வு இன்றும் இருக்கிறது

ஆகாய நதி said...

கடல்புறா... ஆஹா... பிரமாதம்... சாண்டில்யன் போல யாராலயும் வரலாற்று நாவல் எழுத முடியாதுன்றது என் கருத்து... உங்க நூலந‌யம் சூப்பர்... :) அப்டியே அவரோட‌ யவனராணியையும் படிங்க அவ்ளோதான்.... மயங்கிடுவீங்க.... :)

VIKNESHWARAN said...

//innum irukkira puththakanggalaiye padichu mudikkalai.. ponniyin selvane innum padichu mudikkaamal irukkiren viknesh. :-)//

வாங்க.. கும்மி அடிச்சதுக்கு நன்றி.

.:: மை ஃபிரண்ட் ::. said...

ithukku peru kumminnaa, ippo panna porathukku enna pErunnu sollungga paarpom. :-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

innaikku oru dialog solla maranthudden...

.:: மை ஃபிரண்ட் ::. said...

ME THE FIRSTUU... :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

vanthathume solliyiukkanum.. paravaalle.. late-aa vanthaalum latestaathaan irukku. :-)

VIKNESHWARAN said...

//உங்களது பிர பதிவுகளையும் படித்தேன். சின்ன சின்ன நிகழ்வுகள், கதைகள் ஆகியவற்றை அழகாக கொடுத்து இருக்கிறீர்கள், அவை பயனுள்ளவை.

சரித்திர கதைகளில் முதன் முதலில் வாசித்தது சாண்டில்யணின் கடல் புறா தான். படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கவே மனது வராது அவ்வளவு விறுவிறுப்பாகவும், சுவையாக இருக்கும்.

உங்கள் பார்வையில் சுறுக்கமாக கதையை எழுதி இருக்கிறீர்கள், எனக்கு கதை நினைவு இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் அதைப் படித்த உணர்வு இன்றும் இருக்கிறது//

நன்றி நண்பரே.. மீண்டும் வருக...

.:: மை ஃபிரண்ட் ::. said...

hmm.. unggalai pole ilakkiyavaathy pagele kummiyadichaa ennai thuvaichu edukka oru group varum..

.:: மை ஃபிரண்ட் ::. said...

avangga ellaarum varrathukkulle me the escape-uu... :-)))))

VIKNESHWARAN said...

//கடல்புறா... ஆஹா... பிரமாதம்... சாண்டில்யன் போல யாராலயும் வரலாற்று நாவல் எழுத முடியாதுன்றது என் கருத்து... உங்க நூலந‌யம் சூப்பர்... :) அப்டியே அவரோட‌ யவனராணியையும் படிங்க அவ்ளோதான்.... மயங்கிடுவீங்க.... :)//

மன்னிச்சுடுங்க நண்பரே.. அடுத்து படிக்க இருப்பது மன்னன் மகள். யவன ராணியை வாங்கி வைத்திருக்கேன். மன்னன் மகளை முடிச்சிட்டு படிக்கிறேன்.. யவன ராணியை படித்தவர்கள் அந்த கதாபாத்திரத்திற்காக அழுதிருக்கிறார்களாமே... நீங்க எப்படி... கண்டிப்பாக படிக்கனும்.

ஆ.கோகுலன் said...

பலவருடங்களுக்கு முன்னர் படித்த கதை. இறுதிப்போரில் பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார் என நினைக்கிறேன். சிக்னலுக்காக எரியம்புகள் விடுவது த்ரில் ஆனது. ஞாபகமூட்டியதற்கு நன்றிகள்.

Nithya A.C.Palayam said...

\\ தந்திரசாளியும், புத்திசாளியும் கூட,சரலமாகப், மஞ்சலழகி,திறமைசாளி \\.

தந்திரசாலி,புத்திசாலி,
எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்

RAMASUBRAMANIA SHARMA said...

"KADAL PURA" IS THE MASTER PIECE OF THE GREAT HISTORICAL AUTHOR..."CHANDILYAN"...I UNDERSTAND, HE HAS WRITTEN ALL THESE SUPER HIT STORIES AT THE AGE APP. BETWEEN 60-70.HIS IMAGINATIONS ALONG WITH THE HISTORICAL EVIDENCES ARE SOME THING WONDERFUL....SOME MORE MASTER PIECES FROM THE GREAT AUTHOR "CHANDILYAN"...."JALA THEEBAM", "VIJAYA MAHADEVI", "YAVANA RANI","MANNAN MAGAL" "MANJAL ARU", "KADAL RANI" ....WE MAY FIND ALL THESE BOOKS AT "VANATHI PATHIPPAKAM"...DEFINETELY YOUR ARTICLE IS A "TRIBUTE" TO THE GREAT AUTHOR.

RAMASUBRAMANIA SHARMA said...

YES PLEASE....

ஆட்காட்டி said...

கல்கி எழுத நிறைய ஆதாரம் தேடுவார். சாண்டில்யனுக்கு அது தேவையில்லை. அவருடையதில் காதல் இருக்கும். எங்க எங்க எண்டு தேடுறதுக்கு இடையில் கதை முடிந்திரும். இவரு பூந்து விளையாடிருவாரு. கல்கி எழுதியது ஒற்றை இலக்கத்தில. சாண்டில்யன் எழுதினது 30க்கு மேல. நான் எல்லாமே படித்திருக்கன். அப்புறமா கடல்புறாவுக்கு ஒரு சிறப்பு உண்டு. சொன்னால் அதிர்ந்து போவீர்கள். வேண்டுமானால் தனிமடல் அனுப்புங்கள்.

குகன் said...

Good one :)

pls visit my blog http://guhankatturai.blogspot.com/2009/04/blog-post_17.html about 'kadal putra'

இளைய பல்லவன் said...

விக்னேஷ்,

அருமையான விளக்கம்.

சாண்டில்யனின் கடல் புறா அவரது படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என்று அனைவராலும் போற்றப்படுகிறது. யவன ராணியும் அப்படித்தான். அவரது இந்த இரு படைப்புகள்தான் டாப் 2. இவற்றை ஒப்பிட்டு ஒரு பதிவிட்டிருக்கிறேன். உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

http://ilayapallavan.blogspot.com/2009/06/vs.html

Dr L Kailasam said...

எனது மலர்ச்சோலை மங்கையையும் படியுங்களேன். உங்கள் விமர்சனங்கள் அருமையாக உள்ளன
அன்புடன்
டாக்டர் எல். கைலாசம்
ஆசிரியர் மலர்ச்சோலை மங்கை, கயல், மணிமகுடம், முத்துசிப்பி

Dr L Kailasam said...

எனது மலர்ச்சோலை மங்கையையும் படித்து தங்களின் கருத்துகளை சொல்லுங்களேன்
அன்புடன்
டாக்டர் எல். கைலாசம்
ஆசிரியர்: மலர்ச்சோலை மங்கை, கயல், முத்துசிப்பி, மணிமகுடம்

Dr L Kailasam said...

எனது மலர்ச்சோலை மங்கையையும் படியுங்களேன். உங்கள் விமர்சனங்கள் அருமையாக உள்ளன
அன்புடன்
டாக்டர் எல். கைலாசம்
ஆசிரியர் மலர்ச்சோலை மங்கை, கயல், மணிமகுடம், முத்துசிப்பி

VIKNESHWARAN said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...