Sunday, June 22, 2008

வலைப்பதிவும் ஒரு வருட நிறைவும்

கடந்த 15.06.2008 உடன் நான் வலையுலகத்திற்கு பிரவேசித்து ஒரு வருடம் நிறைவை அடைகிறது. 2007-ஆம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலம் தேன்கூடு திரட்டி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆறு மாத காலமாக கண்டகண்ட இடுகைகளைப் படித்து வந்தேன். யாருடைய பதிவு, யார் எழுதுகிறார்கள் என்றேல்லாம் தெரியாது. பின்னூட்டங்களும் இடத் தெரியாது.

1) ஆரம்ப காலத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது திரு. சேவியர் அவர்களின் பதிவு. ஆரம்பத்தில் தெரியாவிட்டலும் பின்னாட்களில் அது சேவியர் அவர்களால் எழுதப்படுகிறது என அறிந்து கொண்டேன். இவருடைய “கவிதைச் சாலை” மற்றும் “அலசல்” என இரு பதிவுகளுமே கலக்கலாக தான் இருக்கும்.

2) அடுத்ததாக திரு. சுப்பையா அவர்களின் பதிவும் என்னை அதிகம் கவர்ந்தது. அவரது பல்சுவைப் பதிவின் சிறுகதைகள் அனைத்தும் படித்திருக்கிறேன். ஆஹா, நாமும் இப்படி எழுதினால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததும் உண்டு. அவர் பதிவுகளின் சிறப்பே வாசகர்களைச் சற்றும் சலிப்புத் தட்டாமல் பதிவின் இறுதி வரைக் கொண்டுச் செல்வது தான்.

3) திரு. மோகன்தாஸ் அவர்களின் பதிவும் மிக ஜனரஞ்சகமாக இருக்கும். இவரது சோழர் பதிவு மற்றும் சிறுகதைகள் அருமை. நட்சத்திரம் எனும் தலைப்பில் இவர் எழுதிய சோழர்கால சிறுகதை என்றும் மறக்க முடியாதது.

4) மற்றபடி ஆரம்பத்தில் நான் அதிகம் சொன்றுவருவது திரு. வெங்கட்ராமன், திரு. ஹரி மற்றும் மைபிரண்ட் போன்றவர்களின் பதிவும் அடங்கும். லக்கி லுக் மற்றும் இட்டிலி வடை பதிவுகள் அனைவரும் வாசிக்கும் ஒன்று என்பதால் அதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.

இந்த ஒரு வருட காலத்தில் நான் எழுதிய பதிவுகள் மிகக் குறைவானவையே. பதிவு எழுத ஆரம்பித்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு தட்டுத்தடுமாறி எழுதினேன். நான் சரிவர கற்றது அடிப்படை ஆரம்பத் தமிழ்க் கல்வி மட்டுமே. அதன் பிறகு எழு எட்டு வருடத்திற்குத் தமிழ் வாசிப்பும் எழுத்தும் அறவே இல்லாமல் போனது.

இதற்கு காரணம் நான் படித்தது இஸ்லாமிய இடைநிலைப் பள்ளியில். ஞாயிற்று கிழமை நாளிதழில் வரும் சினிமா துணுக்குகளை புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். அச்சமயத்தில் அது மட்டும்தான் என் தமிழை வளர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சி. என் பள்ளியில் 100 மலாய் மணவர்களுக்கு 2 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். 15 பேர் இருந்தால் தான் தமிழ் கல்வி பயிலும் வாய்ப்பு கொடுக்கப்படும். நாங்கள் இருந்ததே 4 பேர். அவர்களில் இருவர் ‘பீட்டர் கேஸ்’ . நாங்கள் தமிழ் வகுப்பு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது.

என்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான். எழுத்தும், வாசிப்பும் என் தமிழ் எழுத்து, இலக்கண, இலக்கிய பிழை, யாவற்றையும் திருத்திக் கொள்ளப் பெரிதும் வழி புரியும் என நம்புகிறேன்.

நான் இது வரை எழுதியது நூற்றுக்கும் குறைவான பதிவுகள் தான். சில முறை பதிவேற்றம் செய்யத் தெரியாமலும் சிரமப்பட்டிருக்கிறேன். முக்கியமாக படம் மற்றும் வீடியோ காட்சிகளை ஆரம்பத்தில் எனக்கு வலையேற்றத் தெரியாது.

அச்சமயத்தில் ‘பிளாகரின்’ உபயோகம் எனக்குச் சரியாக தட்டுப்படவில்லை. மலேசிய வலைபதிவர்களின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமாக இருந்ததால் உதவி கிட்டுவதும் சிரமமாக இருந்தது. ‘வெர்ட்பிரஸ்’ தளத்தின் உபயோகம் சற்று சுலபமாக தொன்றியதால் அதில் எழுத ஆரம்பித்தேன். நீண்ட இடைவேளிக்கு பிறகு மறுபடியும் பிளகருக்கு தாவி எழுதி வருகிறேன்.

இச்சமயத்தில் என் வலைப்பதிவு மேம்பாட்டிற்கு உதவிய மைபிரண்டு, சதீஸ்குமார் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். முக்கியமாக, வலைப்பதிவுலக கருத்து பரிமாற்றத்திற்கு பெரிதும் பங்காற்றும் “தமிழ்மணம்” திரட்டிக்கும் என் மனமார்ந்த நன்றி.

41 comments:

VIKNESHWARAN said...

பின்னூட்டமிட்டு உற்சாகம் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..

அதிஷா said...

அப்பாடா நான்தான் பஸ்ட்டு

வாழ்த்துக்கள் விக்கி

மேலும் தொடருங்கள்

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள் விக்னேஷ்வரன்.


( அதெல்லாம் 'டாண்'னு வந்துருவொம்லெ:-))))

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பதிவு எழுத ஆரம்பித்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு தட்டுத்தடுமாறி எழுதினேன். நான் சரிவர கற்றது அடிப்படை ஆரம்பத் தமிழ்க் கல்வி மட்டுமே. அதன் பிறகு எழு எட்டு வருடத்திற்குத் தமிழ் வாசிப்பும் எழுத்தும் அறவே இல்லாமல் போனது.//

same blood. :-)) but எனக்கு 10 வருடம். :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//15 பேர் இருந்தால் தான் தமிழ் கல்வி பயிலும் வாய்ப்பு கொடுக்கப்படும். நாங்கள் இருந்ததே 4 பேர். அவர்களில் இருவர் ‘பீட்டர் கேஸ்’ .//

அட.. எல்லாமே ஒரே மாதிரியே இருக்கே? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான். //

ரைக்க்டூ. எனக்கும்தான் :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

விக்னேஷ், இந்த பதிவு படிக்கும்போது என்னோட சூழ்நிலையை திரும்ப படித்த மாதிரி இருக்கு. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஓறாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க. :-)

கானா பிரபா said...

ஒரு வருஷப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள் நண்பா, பிளாக்கர் இருக்கும் காலம் வரை இருங்க ;-)

கோவி.கண்ணன் said...

விக்கி, ஒர் ஆண்டு நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

Udhayakumar said...

வாழ்த்துக்கள்~

கிரி said...

விக்னேஸ்வரன் நீங்கள் மேலும் பதிவுகள் எழுத என் அன்பான வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்க.

ராமலக்ஷ்மி said...

இன்னும் பல்லாண்டு தமிழ் மணத்தில் தமிழை மணக்க விட என் நல்வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.

//என்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான்.//

பலருக்கும் இது பொருந்தும்.

முகுந்தன் said...

விக்னேஷ்,

நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.
முகுந்தன்

லக்கிலுக் said...

ஒரு வருட நிறைவுக்கும், தொடர்ந்து பயணிக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சேவியர் said...

தம்பி உன்னை நெனச்சா பெருமையா இருக்கு. நீ என்னைப் பத்தியும் நினைச்சிருக்கேன்னு நினைக்கும்போ இன்னும் பெருமையா இருக்கு :)

வாழ்த்துக்கள், இன்னும் நிறைய வருடங்கள் தொடர்ந்து எழுது.

எழுத்தாளர் கலை இலக்கிய விமர்சகர் அவர்களிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது "எழுத்தாளனின் தகுதி என்ன?" என்று கேட்டேன்.

"எழுதிக் கொண்டே இருப்பது" என்றார் பட்டென்று. அதையே பின்பற்றுங்கள்.

SP.VR. SUBBIAH said...

////அச்சமயத்தில் ‘பிளாகரின்’ உபயோகம் எனக்குச் சரியாக தட்டுப்படவில்லை. மலேசிய வலைபதிவர்களின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமாக இருந்ததால் உதவி கிட்டுவதும் சிரமமாக இருந்தது. ‘வெர்ட்பிரஸ்’ தளத்தின் உபயோகம் சற்று சுலபமாக தொன்றியதால் அதில் எழுத ஆரம்பித்தேன். நீண்ட இடைவேளிக்கு பிறகு மறுபடியும் பிளகருக்கு தாவி எழுதி வருகிறேன்.////

தொடர்ந்து எழுதுங்கள் எழுத்து உங்கள் வசப்படும்.
அதேபோல நிறையப் படியுங்கள். அடிப்படையில் இன்றுவரை முதலில்
நான் ஒரு வாசகன். அதுதான் எனது தகுதி. எழுத வந்ததெல்லாம் விபத்து!

அனுபவம்தான் சிறந்த ஆசான்.
உங்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தாத எழுத்து வசப்படும்!
வாழ்க! வளர்க!

டி.பி.ஆர் said...

வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன்.

நான் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. நானும் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை.

பலருடைய பதிவுகளையும் படித்து தமிழில் சிறிதளவு எழுத பயின்றுள்ளேன் என்பதுதான் உண்மை.

தொடர்ந்து எழுதுங்க, சுப்பையா சார் சொன்னா மாதிரி நிறைய படிங்க.

Thamizhmaangani said...

வாழ்த்துகள்!! :)) இன்னும் நிறைய தொடரட்டும்.

சதீசு குமார் said...

வாழ்த்துகள் தல...

VIKNESHWARAN said...

//அதிஷா said...
அப்பாடா நான்தான் பஸ்ட்டு
மேலும் தொடருங்கள்//

நன்றி அதிஷா... நீங்கதான் முதலாவது.


//துளசி கோபால் said...
வாழ்த்து(க்)கள் விக்னேஷ்வரன்.
( அதெல்லாம் 'டாண்'னு வந்துருவொம்லெ:-))))//

டீச்சர் நிங்க 'Gun' மாறி. நன்றி டீச்சர்.

//வெட்டிப்பயல் said...
வாழ்த்துகள் :-)//

நன்றி சார்...

VIKNESHWARAN said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஓறாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க. :-)//

நன்றி மைபிரண்டு... நீங்கள் ஒரு பின்னூட்ட சூராவழி...

//கானா பிரபா said...
ஒரு வருஷப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள் நண்பா, பிளாக்கர் இருக்கும் காலம் வரை இருங்க ;-)//

பிளாகர் இருக்கும் காலம் வரையா? சரி இருப்போம்.. நீங்களும் தானே..

//கோவி.கண்ணன் said...
விக்கி, ஒர் ஆண்டு நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.//

நன்றி கண்ணன் சார்...

//Udhayakumar said...
வாழ்த்துக்கள்~//

நன்றி உதயக்குமார்... மீண்டும் வருக..

//கிரி said...
விக்னேஸ்வரன் நீங்கள் மேலும் பதிவுகள் எழுத என் அன்பான வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்க.//

நன்றி கிரி சார்.. நான் எழுதுகிறேன். உங்கள் பதிவில் 'ஆப்டேட்' எதையும் காணோமே..

VIKNESHWARAN said...

// ராமலக்ஷ்மி said...
இன்னும் பல்லாண்டு தமிழ் மணத்தில் தமிழை மணக்க விட என் நல்வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.//

நன்றி... உங்கள் வாழ்த்தே கவிதையை போல் இருக்கிறது :)))

//முகுந்தன் said...
விக்னேஷ்,
நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
முகுந்தன்//

நன்றி முகுந்தன்...

//லக்கிலுக் said...
ஒரு வருட நிறைவுக்கும், தொடர்ந்து பயணிக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி லக்கி..

VIKNESHWARAN said...

//சேவியர் said...
தம்பி உன்னை நெனச்சா பெருமையா இருக்கு. நீ என்னைப் பத்தியும் நினைச்சிருக்கேன்னு நினைக்கும்போ இன்னும் பெருமையா இருக்கு :)

வாழ்த்துக்கள், இன்னும் நிறைய வருடங்கள் தொடர்ந்து எழுது.

எழுத்தாளர் கலை இலக்கிய விமர்சகர் அவர்களிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது "எழுத்தாளனின் தகுதி என்ன?" என்று கேட்டேன்.

"எழுதிக் கொண்டே இருப்பது" என்றார் பட்டென்று. அதையே பின்பற்றுங்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சேவியர் சார்... உங்கள் பதிவுகள் எல்லாம் டாப்பாக இருக்கிறது... படிக்கவும் சூப்பராக இருக்கிறது..

VIKNESHWARAN said...

//தொடர்ந்து எழுதுங்கள் எழுத்து உங்கள் வசப்படும்.
அதேபோல நிறையப் படியுங்கள். அடிப்படையில் இன்றுவரை முதலில்
நான் ஒரு வாசகன். அதுதான் எனது தகுதி. எழுத வந்ததெல்லாம் விபத்து!

அனுபவம்தான் சிறந்த ஆசான்.
உங்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தாத எழுத்து வசப்படும்!
வாழ்க! வளர்க!//

நன்றி வாத்தியார் ஐயா... உங்கள் பதிவுகள் தான் எங்களுக்கு டானிக்..

VIKNESHWARAN said...

// டி.பி.ஆர் said...
வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன்.
நான் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. நானும் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை.
பலருடைய பதிவுகளையும் படித்து தமிழில் சிறிதளவு எழுத பயின்றுள்ளேன் என்பதுதான் உண்மை.
தொடர்ந்து எழுதுங்க, சுப்பையா சார் சொன்னா மாதிரி நிறைய படிங்க.//

மிக்க நன்றி ஐயா... கண்டிப்பாக... வாசிப்பு தானே எழுத்தின் வசிய மருந்து..

VIKNESHWARAN said...

//Thamizhmaangani said...
வாழ்த்துகள்!! :)) இன்னும் நிறைய தொடரட்டும்.//

நன்றி..

//சதீசு குமார் said... வாழ்த்துகள் தல...//

பாஸ் நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிங்க... ரொம்ப தேங்ஸ் பாஸ்.. இந்த தலைக்காக ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிப்பிங்களா பாஸ்...

மோகன்தாஸ் said...

விக்னேஷ்வரன்,

வாழ்த்துக்கள்.

நிறைய படிங்க - நிறைய எழுதுங்க

ச்சின்னப் பையன் said...

ஆஹா.. ஒரு வருடம் ஆயிடுச்சா.... சீனியரே... வாழ்த்த வயதில்லை.... வணங்கிறேன்...

ச்சின்னப் பையன் said...

ஆமா. நேத்திக்கே தினத்தந்தியிலே போட்டிருந்தான்...

PPattian : புபட்டியன் said...

வாழ்த்துகள் விக்னேஷ்.. பள்ளியிலே தமிழ் கற்க முடியாத நிலையிலும் உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது..

VIKNESHWARAN said...

//மோகன்தாஸ் said...
விக்னேஷ்வரன்,
வாழ்த்துக்கள்.
நிறைய படிங்க - நிறைய எழுதுங்க//

மிக்க நன்றி தாஸ் அவர்களே... நீங்களும் கலக்கல் நாயகன் தானே...


//ச்சின்னப் பையன் said...
ஆஹா.. ஒரு வருடம் ஆயிடுச்சா.... சீனியரே... வாழ்த்த வயதில்லை.... வணங்கிறேன்...//

ச்சே ச்சே... என்ன இது சின்ன புள்ள தனமா...

VIKNESHWARAN said...

//PPattian : புபட்டியன் said...
வாழ்த்துகள் விக்னேஷ்.. பள்ளியிலே தமிழ் கற்க முடியாத நிலையிலும் உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது..//

நன்றி நண்பரே...

ஆமாம்.. தமிழ் கற்க முடியாத நிலைதான்...


பிறந்த மண்ணாக இருந்தாலும் வரம்புக்குள்தானே வாழ்க்கை..
ம்ம்ம்ம்....

கிரி said...

//உங்கள் பதிவில் 'ஆப்டேட்' எதையும் காணோமே..//

என்னையும் மதித்து இப்படி கேள்வி கேட்டுட்டீங்க? ஒரு வேளை கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கேன்னு சொல்றீங்களா..:-)

ஒரு வாரமா என்னை IBM ட்ரைனிங் ல போட்டுட்டாங்க... அதுனால ரொம்ப நாளைக்கு பிறகு மூளைக்கு வேளை கொடுத்ததால (அதெல்லாம் இருக்கறவங்க யோசிக்கணும் னு எதிர் கேள்வி எல்லாம் கேட்கப்படாது) கொஞ்சம் மந்தம் ஆகி விட்டேன்.

Aruna said...

keep going...Best wishes for more years in blog world
anbudan aruna

வெண்பூ said...

வாழ்த்துக்கள் விக்கி...

VIKNESHWARAN said...

//Aruna said...
keep going...Best wishes for more years in blog world
anbudan aruna//

மிக்க நன்றி அருணா.. மீண்டும் வருக...


//வெண்பூ said...
வாழ்த்துக்கள் விக்கி...//

நன்றி பூ

ஜி said...

vaazththukkal... menmelum pathivezuthavum vaazththukkal :)))

கு.உஷாதேவி said...

இப்படி பட்ட ஆரம்ப நிலையில் இருந்து வந்திருஇந்தாலும் இன்று பெரிதளவில் கலக்குகிறீர்கள்! உங்கள் தமிழ் ஆர்வம் மற்றவர்களையும் எழுத தூண்டுகிறதே...அது மிக பெரிய சாதனை தானே? வாழ்த்துக்கள் விக்னேஷ்!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்!