Wednesday, June 18, 2008

பொன்னியின் செல்வன்-யாருடைய காதல் உயர்ந்தது ? (2)


(வந்தியத்தேவன்)

முதல் பாகம் இங்கே சுட்டவும்

குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்

ஆனால் விதி யாரை விட்டது … எந்த நொடியில் அவள் வந்தியத்தேவனைச் சந்தித்தாளோ குடந்தை ஜோதிடர் வீட்டில்… அப்போது தான் அவள் “பெண்மை” பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால் அகன்று விரிந்த தன் பெரிய கண்களால் அப்படியே வந்தியதேவனை விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும் தன்னையே இழக்கிறாள் … தன்னையும் அறியாமல் மெல்லிய இளம் காதல் துளிர் விடுவதை உணர்கிறாள் …

ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே ? அது என்ன ?… பாராளும் மன்னன் மகள் தான், அவனோ ஒரு வழிப்போக்கன் அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று மனதுக்கும் , புத்திக்கும் ஒரு பெரும் போராட்டம் அவளுக்குள் தொடங்குகிறது ….

ஆனாலும் மனமே வெல்கிறது … தன்னுடைய நிலையில் இருந்து அவள் ஒரு போதும் இறங்கி வர இயலாது … தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா சாதரண பெண்களையும் போல காதலனே உலகம்… என்று அவனை நினைப்பதையே முழு நேர தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள் செய்ய முடியாது … அதனால் அவள் காதலை மறைத்து வைக்க முயல்கிறாள் … அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறாள் … காதல் வயப்பட்ட தன் மனதை வந்தியத்தேவனிடம் பெரும்பாலும் அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை அவள் வெளியிட தயங்கவும் இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை கொடுத்து அனுப்பும் போது , சின்னப்பழுவேட்டரயரை தேடிச்சென்று திரும்பி வந்து வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )




(குந்தவை)


தான் சோழ நாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவள் வந்தியத்தேவனைப்போல் ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன் தனக்கு அடிமை போல் இருப்பான் என்று அவனை மணம் செய்து கொள்ள விரும்பவில்லை … அவ்வளவு சுயநலம் பிடித்தவளும் இல்லை அவள் … ஆனால் சோழ நாட்டின் மீது கொண்ட அன்பால் அவள் கட்டுண்டு கிடந்தாள் … அது அவளே அவளுக்கு இட்டுக்கொண்ட விலங்கு …

பெரிதாக பிரஸ்தாபித்தால்தான் காதல் உயர்ந்ததா என்ன ? இது இரு ஜோடி கண்களின் மௌன கீதம் … ஒரே எண்ணம் உடைய இரு மனங்களினின்று எழும் இனிய ராகம் … அவர்கள் பேசிக்கொள்ளத்தேவை இல்லை … அவர்களின் மனங்கள் இணைந்து விட்டதை அவர்கள் இருவருமே நன்கு அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….




தொடரும்…

9 comments:

Unknown said...

ஏற்கனவே சொல்லிட்டனே. கந்தமாறன் தங்கை காதல் தான் அது

VIKNESHWARAN ADAKKALAM said...

//jaisankar jaganathan said...
ஏற்கனவே சொல்லிட்டனே. கந்தமாறன் தங்கை காதல் தான் அது//

ஓகே பாஸ்.. தெங்ஸ்...

ஜி said...

sameebaththilthaan naanum ponniyin selvan vaasiththen.... ungaludaiya aduththa pathivirkaaga kaathukitturukken... :)))

சின்னப் பையன் said...

நாந்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே....

VIKNESHWARAN ADAKKALAM said...

//sameebaththilthaan naanum ponniyin selvan vaasiththen.... ungaludaiya aduththa pathivirkaaga kaathukitturukken... :)))//

மிக்க நன்றி நண்பரே.. நானும் உங்கள் பக்கம் வந்தேன்.. சிறுகதை சூப்பர்.. மீண்டும் வருக...

VIKNESHWARAN ADAKKALAM said...

//நாந்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே....//

சரி அதுக்கு ஏங்க ஏசரிங்க...

Thamiz Priyan said...

மீள் பதிவுகளோ.... :)

Thamiz Priyan said...

குந்தவை - வந்தியத்தேவன் காதல் ரசிக்கும் படியானது... ஆனால் உயர்ந்த அங்கீகாரம் கிடையாது...
உயர்ந்தது... அடுத்தடுத்த பதிவுகளைப் பார்த்து விட்டு சொல்கிறேன்... :)

VIKNESHWARAN ADAKKALAM said...

//மீள் பதிவுகளோ.... :)//

ஆம் நண்பரே..


//குந்தவை - வந்தியத்தேவன் காதல் ரசிக்கும் படியானது... ஆனால் உயர்ந்த அங்கீகாரம் கிடையாது...
உயர்ந்தது... அடுத்தடுத்த பதிவுகளைப் பார்த்து விட்டு சொல்கிறேன்... :)//

கண்டிப்பாக மறக்காமல் சொல்ல வேண்டும்...