நான் முன்பு கூறியதைப் போல சரித்திர நாவல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தான். பொன்னியின் செல்வனைப் படிப்பவர்கள் தொடர்ந்து சரித்திர நாவல்களைப் படிக்க விருப்பப்படுவார்கள் என ஐயம் இல்லாமல் கூறலாம்.
முன்பு இந்நாவலை படித்துக் கொண்டிருந்த சமயம், இதை முடித்து விட்டு பாலகுமாரனின் ‘உடையார்’ நாவலை படியுங்கள் என சீ.வீ.ஆர் அண்ணாச்சி சிபாரிசு செய்தார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி தான் உடையார் என்று கூறினார். முன்பு இதைக் கூறும் போது அவர் அமேரிக்காவில் இருந்தார். தற்சமயம் இந்தியா திரும்பியதில் இருந்து அவரை ஜி-டாக்கில் பார்ப்பது அரிதாகிவிட்டது.
இந்நாவலைப் படிப்பதற்கு முன்பாகவே பல விடயங்களை தெரிந்து கொண்டாகிவிட்டது. பொன்னியின் செல்வனைப் போல் இதில் சுவாரசியம் குறைவு எனவும் கூறக் கேள்விப்பட்டேன். இரு ஆசிரியர்களும் அவர்கள் பாணியில், அவர்களுக்கே உரிய நடையில் எழுதி இருப்பார்கள். கல்கியின் எழுத்து நடையை ஏற்றுக் கொண்ட நான் பாலகுமாரனின் பாணியையும் ஏற்றுக் கொள்வேன் என நினைகிறேன்.
ஈப்போ மற்றும் கோலாலம்பூரிலும் பல புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைத்தபாடில்லை. கடைசியாகப் பார்த்த கடையில் 6 பாகம் 440 ரிங்கிட் என சொன்னார்கள். பொதுவாக மற்ற கடைகளில் 1 ரூபாய்க்கு 0.25 சென் என கணக்கிடுவார்கள். இந்தக் கடையில் மட்டும் ரூபாய்க்கு 0.37 சென் என கணக்கு போட்டார்கள்.
பிறகு நான் வாடிக்கையாக தமிழ் புத்தகம் வாங்கும் கடைக்காரர் , இந்தியாவில் இருந்து புத்தகம் தருவித்துக் கொடுப்பதாக கூறினார். மொத்த விலை 350 ரிங்கிட் வந்தது. (ஆர்டர் கொடுத்து பிறகு ரத்து செய்துவிட்டேன்).
அன்று நண்பர் வெங்கட்ராமனுடன் ஜீ-டாக்கில் அரட்டை அடிக்கும் போது உடையார் புத்தகத்தை பற்றிக் கேட்டேன். தற்சமயம் அவர் உடையார் படித்துக் கொண்டிருப்பதாகவும், வேண்டும் என்றால் வாங்கி அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன் மூன்று பாகங்களை முதலில் அனுப்பி வைத்துவிட்டார். இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும். வந்ததும் ஆரம்பிக்க வேண்டும். நண்பர் வெங்கட்ராமனுக்கு எனது நன்றி.
பொன்னியின் செல்வன் படித்த போது கிடைத்த இன்பத் தாக்கம் கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கும் போது கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான். இந்நாவலில் எனக்கு விளங்காத ஐயப்பாடுகள் இன்னமும் உண்டு.
17 comments:
தல படிசிட்டு அப்டியே நமக்கும் புத்தகத்த இரவல் கொடுத்தா நல்லா இருக்கும்... :)
Udayar 2nd part half way padikkaradhukkulla neenga nondhu poyiduveenga. Naan 2nd part padhiyil vittadhu innom complete seyyum mood varavillai.
Ayyo therindirundal naan half pricekku ungalidam thalli iruppen. :(
Shobha
//Udayar 2nd part half way padikkaradhukkulla neenga nondhu poyiduveenga. Naan 2nd part padhiyil vittadhu innom complete seyyum mood varavillai. //
Same blood !!!!
I thought Balakumaran might try coming somewhere nearing Kalki..
Alas!
//சதீசு குமார் said...
தல படிசிட்டு அப்டியே நமக்கும் புத்தகத்த இரவல் கொடுத்தா நல்லா இருக்கும்... :)//
ஓகே வாத்தியார்... நோ ஃப்ரோபலம்...
//Shobha said...
Udayar 2nd part half way padikkaradhukkulla neenga nondhu poyiduveenga. Naan 2nd part padhiyil vittadhu innom complete seyyum mood varavillai.
Ayyo therindirundal naan half pricekku ungalidam thalli iruppen. :(//
அவ்வ்வ்வ்.... என்ன சோபா இப்படி மனச உடைக்கிறீங்க... எல்லோரும் இப்படி சொல்வதால் நான் படிக்காம விட்டுடுவனா என்ன... நான் நொந்து நூல் ஆனாலும் பரவாயில்லை... படிச்சிட்டுதான் மறுவேலை...
ponniyin selvan padithu vitu vanthal appadi than irrukum. ponniyin selvan oru sila kurippitta character-l mattume suttri varum. athe neraththil avvalave periya kovil katta ethanai perin ulaippu, maththa prichchanaikal enna elaththaim solli irrupar. compare pannamal padithal nandra irrukum 4-vathu book varai padithu vitten. En vittu arukil irrukum library-l 5,6 illai. vera library poganum. aani pudungum velai vera niraiya. intha weekendl library poga time kidaikutha endru..
கலக்குங்க தல!!! படிச்சிட்டு சீக்கிரம் 'உடையார்' கதைய பத்தி பல பதிவுகள் போடுங்க...
//ச்சின்னப் பையன் said...
கலக்குங்க தல!!! படிச்சிட்டு சீக்கிரம் 'உடையார்' கதைய பத்தி பல பதிவுகள் போடுங்க...//
பல பதிவா... ஆஹா... என்ன வச்சி காமடி பன்னலயே...
//Same blood !!!!
I thought Balakumaran might try coming somewhere nearing Kalki..//
அறிவன் ஐயா... நீங்களுமா?? அனானி என்ன சொல்லிருக்காங்க பாருங்க... 4 பாகம் முடிச்சிடாங்களாம்
//Anonymous said...
ponniyin selvan padithu vitu vanthal appadi than irrukum. ponniyin selvan oru sila kurippitta character-l mattume suttri varum. athe neraththil avvalave periya kovil katta ethanai perin ulaippu, maththa prichchanaikal enna elaththaim solli irrupar. compare pannamal padithal nandra irrukum 4-vathu book varai padithu vitten. En vittu arukil irrukum library-l 5,6 illai. vera library poganum. aani pudungum velai vera niraiya. intha weekendl library poga time kidaikutha endru..//
அப்பாட நீங்களாவது சாதகமா ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிங்களே... நன்றி...
வணக்கம்
பொன்னியின் செல்வன் ஒரு கற்பனைப் புதினம். ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன் போன்றவை கற்பனைப் பாத்திரங்கள். இதில் சேந்தன் அமுதன் அரியணை ஏறும்வரையிலான சம்பவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன, சில பல கற்பனைச் சம்வங்களோடு. இவ்வாறு கூறுவதால் கல்கியைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். எள்முனையளவும் எனக்கு அத்தகைய நோக்கம் கிடையாது.
உடையார், ராஜராஜ சோழனின் வாழ்வை வேறு தளத்தில் அலசுகிறது. ராஜராஜரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களான தேவார மீட்பு, பெரிய கோயிலைக் கட்டுவித்தல், அதிமுக்கியமாக அவருடைய அந்திமக் காலம் ஆகியவை பொன்னியின் செல்வனில் கூறப்படவில்லை. அந்தக் குறையை உடையார் போக்குகிறது. மேலும் ராஜராஜர் நிகழ்த்திய முக்கியமான யுத்தங்களைப் பற்றியும், அவருடைய காலத்தில் இருந்த சமூகத்தின் அமைப்பையும் பற்றி உடையார் அலசுகிறது. பொன்னியின் செல்வன் நூல் ராஜராஜரை ஒரு காதல் இளைஞனாக (சாக்லேட் பாய்), பிள்ளைக் குறும்புகள் மாறாத ஒரு இளைஞனாக மட்டுமே காட்டுகிறது. முதிர்ந்த அறிவுடன் ஒரு மகத்தான தியாகத்தைச் செய்யும் மகோன்னதத்துடன் அந்த பாத்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது.
மேலும் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகன் வல்லவரையர் வந்தியத்தேவர். ஆனால் உடையார் முழுக்க முழுக்க ராஜராஜரை மட்டுமே கதை நாயகராகக் கொண்டது.
உடையாரில் அவருடைய காதல் வாழ்வு மட்டுமல்லாது அவருடைய மணவாழ்வும் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதிர் பருவத்தில் பஞ்சவன் மாதேவிக்கும் அவருக்கும் இடையே நிலவிய அனுக்கமான காதல் வாழ்வு பொன்னியின் செல்வனில் விவரிக்கப்பட்ட அருண்மொழிக்கும் வானதிக்கும் இடையிலான காதல் வாழ்வைப் போன்றே சுவைபடக் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ்த்த இயலாத மகோன்னதங்களை நிகழ்த்திக் காட்டிய ராஜராஜரின் வாழ்வை கல்வெட்டு மற்றும் தாமிரப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம் உடையார்.
ராஜராஜரைத் தவிரவும், பெரிய கோயில் என்ற கலை அதிசயத்தின் கட்டுமானக் காலத்தில் அதற்கு உறுதுணையாக இருந்த பலருடைய வாழ்வையும் விவரிக்கிற நூலாகவும் உடையார் விளங்குகிறது.
இப்போது தயாரிப்பில் இருக்கும் உளியின் ஓசை என்ற திரைப்படம் கூட பெரிய கோயிலின் கட்டுமாத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிற்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையே.
பொன்னியின் செல்வனில் சற்றேறக் குறைய என்பத்திமூண்றாண்டுகள் வாழ்ந்த ராஜராஜரின் வாழ்வில் முதல் முப்பது ஆண்டுகள் கூட விவரிக்கப் படவில்லை என்பது எனக்குள் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. உடையார் அந்தக் குறையை நிவர்த்திக்கிறது.
பொன்னியின் செல்வனைப் போலவே உடையாரும் வாசிப்பிற்குகந்த ஒரு நல்ல நூல் என்பதே இதன் வாயிலாக நான் கூற விழைவது.
நன்றி.
விக்னேஷ்,
உடையார் எல்லோரும் பயமுறுத்துவது போல் கிடையாது. விஜய் கோபால்சாமி சொல்வது தான் சரி.
//வெயிலான் said...
விக்னேஷ்,
உடையார் எல்லோரும் பயமுறுத்துவது போல் கிடையாது. விஜய் கோபால்சாமி சொல்வது தான் சரி.//
நன்றி வெயிலான். மீண்டும் வருக...
பார்த்திபன் கனவை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனாலும் கல்கியின் நாவல்களை வரிசைக்கிரமமாக வாசித்திருந்தீர்கள் என்றால் இந்த வருத்தம் தேவையிருக்காது. சோழனை வாசிப்பதற்கு முன்பு பல்லவனையும் வாசித்திருக்க வேண்டும். சிவகாமியின் சபதத்தில் தொடங்கிய பார்த்திபன் கனவை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்கிறார்.
உடையார் புத்தகத்தை வாங்க நீங்கள் பட்ட சிரமத்தை உணர முடிகிறது. எனக்கும் இது மாதிரி பல தடவை நடந்திருக்கிறது. தலைநகரில் ஒரு பெரிய புத்தக கடையில் பொன்னியின் செல்வனை வாங்கச் சென்று அதன் விலையில் தலை சுற்றி புதுவையிலிருந்து தருவித்து படித்தேன். தற்கால எழுத்தாளர் தமிழ்செல்வியின் புதினங்களை இங்குள்ள சில கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. :)
ஆமாம். பொன்னியின் செல்வன் படித்தால் அந்த ஆசை வரத்தான் செய்யும். சாண்டில்யனின் புத்தகங்களை படித்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.ஆனாலும் இருவரது எழுத்துகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றன. இருவரது படைப்புகளையும் தேடிப் பிடித்து வாசித்திருக்கிறேன். முழுவதுமாக. ஆனால் உடையார் பற்றி நான் இதுவரை அறியவில்லை. காரணம் பாலகுமாரன் சும்மா வள வள என்று எழுதியிருப்பார். நான் படித்தது எனது15ம் வயதில். இப்பொழுது என்ன மாதிரி இருக்கும் என்று தெரியவில்லை. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கோவி மணிசேகரன், கண்ணதாசன், மேத்தா,கருணாநிதி இவர்கள் கூட சரித்திர நாவலகள் எழுதியுள்ளார்கள். விடுதலைப் புலிகளின் கடற்படை சாண்டில்யனின் 'கடல்புறா'வைப் படித்த பின்னர் தான் பிரபாகரனால் உருவாக்கப் பட்டது. அதனது ஆரம்ப கால பெயரும் அது தான்.
ஆமாம். பொன்னியின் செல்வன் படித்தால் அந்த ஆசை வரத்தான் செய்யும். சாண்டில்யனின் புத்தகங்களை படித்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.ஆனாலும் இருவரது எழுத்துகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றன. இருவரது படைப்புகளையும் தேடிப் பிடித்து வாசித்திருக்கிறேன். முழுவதுமாக. ஆனால் உடையார் பற்றி நான் இதுவரை அறியவில்லை. காரணம் பாலகுமாரன் சும்மா வள வள என்று எழுதியிருப்பார். நான் படித்தது எனது15ம் வயதில். இப்பொழுது என்ன மாதிரி இருக்கும் என்று தெரியவில்லை. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கோவி மணிசேகரன், கண்ணதாசன், மேத்தா,கருணாநிதி இவர்கள் கூட சரித்திர நாவலகள் எழுதியுள்ளார்கள். விடுதலைப் புலிகளின் கடற்படை சாண்டில்யனின் 'கடல்புறா'வைப் படித்த பின்னர் தான் பிரபாகரனால் உருவாக்கப் பட்டது. அதனது ஆரம்ப கால பெயரும் அது தான்.
hi vikki,
nan udaiyar novelai kittathatta 2 varathukulla mudichen romba supera irunthathu thanks to bala sir
Post a Comment