இப்படியாக அடித்துக் கொண்டும் வியாக்கியானங்கள் பேசிக் கொண்டும் இருப்பதனால் என்ன பயன். உலக வளர்ச்சியில் நாம் சந்திக்க வேண்டிய விடயங்கள் பல பல. மூன்றாம் உலகப் போர் நீரின் காரணமாக ஏற்படக் கூடியதென நாஸ்ட்ராடமசின் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லிக் கொள்கிறார்கள். அதை நம்புவதும் நம்பாததும் நமது நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்கவும் வைக்கிறது. இது ஏற்படாது என்பது எந்த அளவுக்கு சாத்தியமான ஒன்று.
இந்த நீர், நிலம் எனும் இயற்கை வளங்கள் அனைத்தும் தன் பாட்டுக்கு இருந்தவையே. வளர்ச்சி எனும் பெயரில் இயற்கை மீது மனித இனம் மேற்கொண்ட வன்முறைகள் அளவிடமுடியாதவையே. துர்நாற்றம் கொண்ட ஆற்றைக் கடக்கும் சமயங்களில் மூக்கை மூடிக் கொள்ளும் நாம் தான் அதன் பாழடைவிற்கும் காரணமாகி இருக்கிறோம் என்பதினை உணர மறுக்கிறோம்.
தன்னிடம் இல்லாத ஒன்றிற்காக உரிமை கோரும் போது அது போராட்டமாகவும், போராகவும் வெடித்தெழச் செய்கிறது. என்றோ ஒரு நாள் உணவுக்காகவும், நீருக்காகவும் போராட்டங்கள் நடக்கக் கூடும். இதில் எந்த வகையிலான போராட்டம் முன்னதாக அமையும் என்பது சற்றே சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
நீரின்றி அமையாது உலகு எனும் சொல் வழக்கு தமிழில் உண்டு. சிலேடையான சொல் வழக்காக அதைக் கூறலாம். ஒரு காதலன் தன் காதலியிடம் நீ இல்லாமல் எனக்கு இவ்வுலக வாழ்க்கை அர்த்தமற்றது எனச் செல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடும். அதே போல் நீர் இல்லாமல் உலக உயிர்கள் வாழாது என்றும் சொல்ல முடியும். ''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர் கரையில் கரைகிறோம் எனும் வரிகள் தமிழர் மரபினை அழகாக விவரிக்கிறது. அந்த நீரின் தேடலுக்காக உலக நாடுகள் போர்ரிட்டு அழிந்து போகக்கூடுமா? இருக்கலாம்.
கடந்த ஆண்டு முதல் கிடுகிடுவென எகிரிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு நாம் அறிந்ததே. இன்றளவிலும் உணவு பொருட்களின் விலை கேட்பாறற்று தான் கிடக்கிறது. உற்பத்திக் குறைவினால் தான் விலை அதிகர்க்கச் செய்கிறதா? முன் சமயம் ஆண்டிற்கு இரு முறையென இருந்த பயிர் செய்யும் முறையானது இப்பொதெல்லாம் மூன்று அல்லது நான்கு முறை என்றாகிவிட்டது. எல்லாம் இரசாயனத்தில் மகிமை. உணவின் தரத்தை விடவும் அதன் அளவின் அதிகரிப்பே நமக்கு தற்காலத்தில் அத்யாவசியமாகப்படுகிறது. உணவுகளின் தேவை இப்படி இருக்க சில விவசாயிகள் ஏழ்மையின் காரணமாக உயிரை விடுவதும் விந்தையாகத் தான் இருக்கிறது.
சாப்பிட்டாக வேண்டும் எனும் கடமைக்காக மட்டுமே இன்றைய நிலையில் பலரும் உணவருந்துகிறார்கள். ஏழைகள் முதற்கொண்டு மத்திய வர்க்கத்தினர் வரையினும் சாப்பாடு என்பதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இயந்திர தனமான வாழ்க்கையில் உணவு என்பது உடலை வளர்க்கும் ஒரு வஸ்துவாக மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். புனைக் கதைகளிலும், அறிவியர் சார்ந்த திரைப்படங்களிலும் வருவது போல் எதிர்கால சந்ததியினர் பசி மறக்க மாத்திரைகளை மட்டும் உண்டு வாழும் காலம் அமையலாம்.
மனிதனின் ஆயுள் காலம் 120 வருடங்களென கணக்கிடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் இதில் பாதியை கடப்பதற்குள் உறுப்புகள் அடங்கி, உடல் சுருங்கி, மண்டை மளுங்கி, மதி கலங்கிவிடுகிறது. இதற்குக் காரணம் வாழ்க்கை முறை எனும் ரெட்டை வார்த்தைக்குள் நாம் தூக்கி எரிந்துவிடக் கூடும். அந்த வாழ்வியல் முறையில் உடல் கேடுக்கு உணவு கேடும் வித்திடுகிறது.
நமக்கு நினைவிருக்கலாம், உணவு தட்டுபாட்டு இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமாக சாப்பிடுவதால் தான் ஏற்படுகிறதென முன்னால் அமெரிக்க அதிபர் சொல்லி வைத்தார். மக்கள் தொகை அதிகமாகவும் பொருளாதார வளர்ச்சி பெருக்கமும் அதிகமிருப்பதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் இவ்விரு நாடுகள் மட்டும் தான் எனச் சொல்வது மிக அபத்தம்.
மலேசியாவின் இயற்கை வளங்கள் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. முறையான பயன்பாடு என்பது இங்கு கேள்விக் குறியாகிறது. உணவு இறக்குமதி இக்காலத்திலும் சிறந்த ஒன்றென அமைந்துவிடாது. ஆசிய நாடுகளில் மலேசியா நீர் வளம் அதிகம் கொண்டிருக்கிறது. அதே சமயம் சகட்டு மேனிகு அதன் நாசமும் அதிகரித்து வருகிறது.
20 comments:
இருக்கலாம்...
பசங்க பார்த்தாச்சா, வெரிகுட் கையை கொடுங்க. நல்ல பட்ம்ல.
பாராட்டுக்கள் விக்னேக்ஷ்வரன் உங்கள் கூற்று மிக மிக உண்மை, நம் நாட்டிலும் எண்ணெய் விலை ஏறிவிட்டது என்ற ஒரு சொல் போதும், அந்த நிமிடமே பல முக்கியப்பொருட்களின் விலை கிடுகிடுவென விலையேற்றம் கண்டுவிடும், ஆனால் இந்த விலையேற்றம் ஒருவழிப்பாதையாக மாறிவிட்டது, ஏறமட்டும்தான் தெரியும், இறங்கத்தெரியவே தெரியாது, நமது பாட்டி தாத்தா காலத்தில் அரிசி படி 20 காசு எனவும், சீனி படி 5 காசு எனவும் கேட்டிருக்கிறேன், இன்றைய விலையைக்கேட்டால் சாப்பிடும் ஆசை கூட போய்விடும் போல.இந்தக்கோலத்தில் கடை நிலை மனிதர்கள் என்ன செய்வார்? பிறகு ஏன் குற்றச்செயல்கள் அதிகரிக்காது? பெரும்பாலான பிரச்சனைகளின் ஆரம்பமும் முடிவும் வயிற்றுப்பாட்டில்தான் அடங்கியிருக்கிறது!
மனிதன் மனிதனாவதற்கு சண்டை பிடித்தால் முடிந்து விடும்.
அநியாயத்துக்கு சிந்திக்கிறீங்க விக்கி!
வருங்காலத்தில் நீர் பற்றாக்குறை சிக்கல் மிகக் கடுமையானதாக உருவெடுக்கும். இது நடக்குமேயானால்..
1.உலக மக்கள் தொகையில் 1.1பில்லியன் பேர் மிகக் கடுமையான நீர் பற்றாக்குறைச் சிக்கலை எதிர்கொள்வர்.
2.நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சி எடுக்கப்படுவதால் வேளாண்மைத் துறை நீரின்றி பெரும் தவிப்புக்கு உள்ளாகும்.
3.அதிகமான நீர் பயன்பாடு ஒரு பக்கமும் பேரளவிலான நீர் தூய்மைக்கேடு மறுபக்கமும் மாந்த வாழ்வை இறுக்கத்திற்குத் தள்ளிவிடும்.
4.குறைவான நீர் வளம் மட்டுமே இருப்பதால், அதற்கான போராட்டம் வெடித்து பின்னர் போராக மாறக்கூடும்.
இத்தனையும் அன்றே உணர்ந்த தமிழ்ப்பாட்டன் வள்ளுவனார் நீரின்றி அமையாது உலகு என்று முன்னறிந்து சொல்லியுள்ளார்.
பசும்புல்லின் தலைகாணாமல் போகும் நிலைக்கு நாம் சிறுகச் சிறுகத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
நல்ல பதிவுக்குப் பாராட்டுகள் விக்கினேசு.
@ டொன் லீ
வருகைக்கு நன்றி...
@ புதுகைத் தென்றல்
பசங்க பார்த்தாச்சு... ஆனா பசங்க நடிப்பு கொஞ்சம் ஓவரா தான் இருக்கு... வருகைக்கு நன்றி அக்கா...
@ சிவனேசு
பசிக்காக திருடுபவர்களும் உண்டு பேராசையால் திருடுபவர்களும் இருக்கவேச் செய்கிறார்கள்...
@ புகழினி
நீங்க 10 பின்னூட்டம் போட்ட அதுல 9 1/2 எனக்கு புரிய மாட்டுது பாஸ்... என்ன சொல்லவரிங்க எல்லோரும் ஒன்னா போய்ச் சேரலாம்னு சொல்றிங்களா...
@ நாமக்கல் சிபி
ஹி ஹி ஹி... நான் ஒரு சிந்தனைச் சிற்பி... :)
@ சுப.நற்குணன்
சிறப்பான கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள் ஐயா. விழுதுகள் நிகழ்ச்சியில் உங்கள் வலைப்பதிவினைப் பற்றிய செய்தி இடம் பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள். உங்கள் வலைப்பதிவு சேவை தொடரட்டும். :) நன்றி...
// நாமக்கல் சிபி said...
அநியாயத்துக்கு சிந்திக்கிறீங்க விக்கி//
அவரு நியாமாத்தான் சிந்திக்கிறாருங்க. :))
நல்ல பதிவு சகா
ரொம்ப யோசிக்கிறிங்க!
உடம்புக்கு நல்லதல்ல!
@ கார்க்கி
இதுல உள்குத்து ஏதும் இல்லையே :)
@ வால்பையன்
அண்ணே, பீரடிச்சிட்டு தான் எழுதுறேன் இல்லைனா எழுதிட்டு பீரடிக்கிறேன்... சோ நோ பிராபலம் :))
அருமையான பதிவு
நன்றி
//தன்னிடம் இல்லாத ஒன்றிற்காக உரிமை கேறும் போது அது போராட்டமாகவும், போராகவும் வெடித்தெழச் செய்கிறது.//
சரியான விளக்கம்.
வாழ்துகள் விக்கி.
நீர் மற்றும் உணவுக்காக மனிதன் சண்டையை எப்பொழுதொ ஆரம்பித்து விட்டான். ஆனால் அது பெரிதளவில் உருவாகவில்லை. இயற்கை + அறிவியல் இவற்றை மனித குலத்தின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு முறையாக பயன்படுத்தினால் உலகும் மனிதமும் பாதுகாக்கப்படும். இல்லையென்றால் தூய்மையான காற்றை கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வந்துவிடும்
@ என் பக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ அப்பாவி முரு
நன்றி நண்பரே...
@ தமிழ்வாணன்
மெய்தான்... உங்கள் தொடர் வருகைக்கு நன்றி...
//பசி மறக்க மாத்திரைகளை மட்டும் உண்டு வாழும் காலம் அமையலாம்//
கண்டிப்பாக!!!!
அடேங்கப்பா...அருமையான பதிவு...
எல்லோரையும் சிந்திக்க வச்சுட்டீங்க...
வாழ்த்துக்கள்!
நல்ல பதிவுக்குப் பாராட்டுகள்
நன்றி.நன்றி..நன்றி...
நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கீங்க தல... வாழ்த்துக்கள்!
@ சுபு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... பிழையை திருத்துவிட்டேன் :)
@ கபிலன்
கருத்துக்கு நன்றி நண்பரே... :) மீண்டும் வருக.
@ தோமஸ் ரூபன்
வருகைக்கு நன்றி...
@ தமிழ் பிரியன்
பாஸ் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப இரணகளமாக்கிடுறிங்க :))) சிந்தனையில் வந்ததை கொட்டி வச்சிருக்கேன். அவ்வளோ தான்.
Post a Comment