Monday, April 13, 2009

இலங்கையைச் சாம்பலாக்கு

தமிழினம் அழுகிறது அனுமனே
உன்
வால் சுமந்த தீயினாலல்ல
இலங்கையை எரியூட்டாததால்

நிழல் கூட
தலைதெரிக்க ஓடுகிறது
அகதியாக அல்ல
மரணத்தில் விடுதலை தேடி


முக்கால அழுகுரல் இன்னும்
முழுதாய் ஓயவில்லை
சமுத்திர திட்டமாம்
பாலத்தில் பிரச்சனையாம்
சாகிற மக்களுக்காய்
உண்ணாமல் போராட்டமாம்
யாரை நம்ப
?

எங்கே
உன் வாலைக் கொடு
தீயிட்டனுப்புகிறேன்
இம்முறேயேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு


கருத்துப்படம்: நன்றி வினவு.காம்

27 comments:

அப்பாவி முரு said...

//எங்கே
உன் வாலைக் கொடு
தீயிட்டனுப்புகிறேன்
இம்முறேயேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு//

வழிமொழிகிறேன்...

ஆயில்யன் said...

//எங்கே
உன் வாலைக் கொடு
தீயிட்டனுப்புகிறேன்
இம்முறேயேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு//


ஆதங்கம் வடித்த வரிகள் அருமை!

மலர்விழி said...

ஆதங்கம்...
தமிழினப்பற்று...
உணர்வு பொங்க செய்கிறது
//இம்முறையேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு//

நன்று விக்னேஷ் :)உறைய செய்யும் வரி

கிருஷ்ணா said...

முதலில், இலங்கைக்கு கை கொடுக்கும் இந்தியத் தலைவர்களையும்.. அவர்களைக் கண்டும் காணாமல் இருக்கும் கூஜாக்களையும் எரிக்க வேண்டும்!

தராசு said...

//முக்கால அழுகுரல் இன்னும்
முழுதாய் ஓயவில்லை
சமுத்திர திட்டமாம்
பாலத்தில் பிரச்சனையாம்
சாகிற மக்களுக்காய்
உண்ணாமல் போராட்டமாம்
யாரை நம்ப?//

கலக்கல் வரிகள்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அப்பாவி முரு

வருகைக்கு நன்றி நண்பரே.

@ ஆயில்யன்

நன்றி...

@ மலர்விழி

நன்றி..

@ கிருஷ்ணா

:) அனுமனை முதலில் அங்க அனுப்பலாம்னு சொல்றிங்களா கிருஷ்ணா?

@ தராசு

வருகைக்கு நன்றி...

குசும்பன் said...

அருமை! மறைமுகமாக அங்கிருப்பது ராவணன் ஆட்சி என்று சொல்லியிருப்பது அருமை!

ஹேமா said...

//வால் சுமந்த தீயினாலல்ல//

விக்கி இந்த வசனம் சரியா?தீயினால் என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்.

விக்கி,கவிதையில் இன அழிப்பின் வேதனை முழுதுமாகத் தெரிகிறது.
இலங்கையை முழுதுமாக அனுமன் எரித்தால் எஞ்சியிருக்கும் எம் இனமும் இல்லாமல் போய்விடுமே.
உயிர் குடிக்கும் ஓநாயகளை மட்டும் அனுமன் எரித்து வரட்டும்.யாரினது உயிரோ-தொடர் போரோ எங்களுக்கு வேண்டாதது.எங்களுக்கு உண்டான தேவைகள் மட்டும் கிடைத்தால் போதும்.நன்றி விக்கி உங்கள் மன உணர்வுக்கு.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ குசும்பன்

நன்றிங்க...

@ ஹேமா

தீபட்டதனால் அழவில்லை. இலங்கையை எரிக்காமல் விட்டதால் தான் என அர்த்தம் கொள்ள வேண்டும் ஹேமா. அனுமன் இலங்கைக்கு போன போது அவன் இராவணனுக்கு தானே கொடுதல் செய்தான். இதுவும் அப்படி தான். :) வருகைக்கு நன்றி ஹேமா.

ஆதவன் said...

இலங்கைச் சாம்பலாகக் கூடாது. அந்த மண்ணில் தமிழன் சுவடுகள் மிக ஆழமாக.. அழுத்தமாக இன்றும் இருக்கின்றன.

வரலாற்றில் தமிழன் இழந்தவை நிறைய.. நிறைய...!

தமிழன் வீர மரபை உலகுக்குப் பறைசாற்றிய ஈழ மண் விடுதலை பெற வேண்டும்.

ஒட்டுமொத்த உலகமே அந்த விடுதலையை மதிக்க வேண்டும்.

இறையாண்மை பொருந்திய தமிழன் நாடு இதுவென அந்த மண்ணில் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்திட வேண்டும்.

இதற்கெல்லாம் காலம் கனிகிறது..!

அதனால், இலங்கை அதற்குள் சாம்பலாகிவிடக் கூடாது..!!

Anonymous said...

முதலில் வட நாட்டுகாரனுக்கும் ஆரியன் ராமனுக்கும் கை கூப்பி சோரம் போய் தமி்ழனை தமி்ழ் மன்னனை எதிர்த்த அனுமனையும் அனுமன் ( தென்னாட்டில் வாழ்ந்த மரத்துக்கு மரம் தாவும் குரங்கு கூட்டம் )வாலையும் ஒட்ட நறுக்கியிருக்க வேண்டும்.

தென்னாட்டிற்கு வந்த வந்தேரிகள் அனுமனை கடவுளாக்கினர் நாமும் எற்று கொண்டோம்.

இன்று இலங்கை தமி்ழ் மக்களைஅழிக்க, வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விரட்டி அடிக்கப்பட்ட ( சிங்களவர்களுக்காக) வட நாட்டு அரசியல் வாதிகள் கை கொடுக்கின்றனர். சோரம் போய் தமி்ழ் நாட்டு அரசியல் வாதிகள் ( அணிக்கு அணி தாவும் கட்சி தலைவர்கள் ) வடக்கு அரசியலுக்கு ஆதரவு தருகின்றனர். தமி்ழ் நாட்டு மக்கள் இனியாவது இவர்களது வாலை ஒட்ட நறுக்கியிட வேண்டும்.

இல்லையென்றால் எதிர்காலத்தில் இந்த கூட்டமும் நமக்கு கடவுளாகிவிடும்.

சி தயாளன் said...

:-(

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆய்தன்

வருகைக்கு நன்றி... சாம்பலாக்க வேண்டுமென சொல்வது அராஜக அரசை எனக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த நாட்டையும் அல்ல.

@ அனானி

முதலில் உங்களை நீங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது வெட்கக் கேடு. கோலைத் தனம்.இதில் ஊருக்கு உபதேசமா... போயா... போய் வேலையப் பாரு.

சென்ஷி said...

//மலர்விழி said...

ஆதங்கம்...
தமிழினப்பற்று...
உணர்வு பொங்க செய்கிறது
//இம்முறையேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு//

நன்று விக்னேஷ் :)உறைய செய்யும் வரி//

மறுமொழிந்து செல்கிறேன் :((

Athisha said...

:-(

அருமையான நிதர்சனக் கவிதை .

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

வருகைக்கு நன்றி.

@ சென்ஷி

நன்றி

@ அதிஷா

நன்றி...

ஆளவந்தான் said...

//
யாரை நம்ப?
//
ஒரு நாதாரியையும் நம்ப கூடாது :(

வேற ஒன்னும் சொல்றதுக்கில்லை விக்கி :((

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆளவந்தான்

வருகைக்கு நன்றி நண்பரே...

Tamilvanan said...

முதலில் வட நாட்டுகாரனுக்கும் ஆரியன் ராமனுக்கும் கை கூப்பி சோரம் போய் தமி்ழனை தமி்ழ் மன்னனை எதிர்த்த அனுமனையும் அனுமன் ( தென்னாட்டில் வாழ்ந்த மரத்துக்கு மரம் தாவும் குரங்கு கூட்டம் )வாலையும் ஒட்ட நறுக்கியிருக்க வேண்டும்.

தென்னாட்டிற்கு வந்த வந்தேரிகள் அனுமனை கடவுளாக்கினர் நாமும் எற்று கொண்டோம்.

இன்று இலங்கை தமி்ழ் மக்களைஅழிக்க, வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விரட்டி அடிக்கப்பட்ட ( சிங்களவர்களுக்காக) வட நாட்டு அரசியல் வாதிகள் கை கொடுக்கின்றனர். சோரம் போய் தமி்ழ் நாட்டு அரசியல் வாதிகள் ( அணிக்கு அணி தாவும் கட்சி தலைவர்கள் ) வடக்கு அரசியலுக்கு ஆதரவு தருகின்றனர். தமி்ழ் நாட்டு மக்கள் இனியாவது இவர்களது வாலை ஒட்ட நறுக்கியிட வேண்டும்.

இல்லையென்றால் எதிர்காலத்தில் இந்த கூட்டமும் நமக்கு கடவுளாகிவிடும்.

@ அனானி

முதலில் உங்களை நீங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது வெட்கக் கேடு. கோலைத் தனம்.இதில் ஊருக்கு உபதேசமா... போயா... போய் வேலையப் பாரு.

கோழையும் அல்ல , ஊருக்கு மட்டும் உபதேசமும் அல்ல எனது உண்மை என்று உணர்வை மட்டுமே பதிக்கிறேன்.உங்கள் அகப்பக்கதில் எனது தொடர்பு முகவரி வராததிற்கு நான் காரணமல்ல. எனினும் எனது தொடர்பு முகவரி :tamil1307@gmail.com

ஜெகதீசன் said...

mmmm
:((

குமரன் மாரிமுத்து said...

அருமை... சாதாரண மக்களுக்கு இருக்கும் உணர்வுகளில் 10% விழுக்காடுகூட தமிழகத்து அரசியல் தலைவர்களிடம் இல்லாதது வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில்தான் அவ்வாரென்றால் மலேசியாவிலும் ரத்தக்காட்டேரி ஒன்று இலங்கைத் தமிழர்களுகென ஒதுக்கிய சுனாமி நிதியையும் முற்றாக தானே குடித்துவிட்டு இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறது.

இதுபோன்ற ஜந்துக்கள் ஒழிந்தால் ஈழம் விரைவில் மலரும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

அதிகபடியான வார்த்தைகளுக்கு வருந்துகிறேன். பொருத்தருள வேண்டும். மீண்டும் வருக.

@ ஜகதீசன்

வருகைக்கு நன்றி...

@ குமரன்

//
தமிழகத்தில்தான் அவ்வாரென்றால் மலேசியாவிலும் ரத்தக்காட்டேரி ஒன்று இலங்கைத் தமிழர்களுகென ஒதுக்கிய சுனாமி நிதியையும் முற்றாக தானே குடித்துவிட்டு இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறது.//

அட இந்தக் கதை தெரியாதுங்களே... வருகைக்கு நன்றி குமரன்.

VG said...

அப்பாவி முரு said...
//எங்கே
உன் வாலைக் கொடு
தீயிட்டனுப்புகிறேன்
இம்முறேயேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு//

வழிமொழிகிறேன்...


---> me3


p/s: arumai! =)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

வருகைக்கு நன்றி...

Anonymous said...

1.எழுதக் கிளம்பினால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும்.
2. பெயரிலிகள் யார்? பயப்படும் அப்பிராணிகள்.
3. அனுமன் யாரு?
4. தமிழர்கள் தான் கேவலமான் பிறப்புக்கள். அந்தக் காலத்திலேயே சூரியகுலத் தோன்றல்கள் என்றூ சொல்வதில் பெருமைப் பட்ட மடச் சாம்பிராணிகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ புகழினி

வருகைக்கு நன்றி. எனக்கு இராமாயணத்தில் உடன்பாடு கிடையாது. ஆரியத்தை வலுபடுத்த கையாண்ட கதை சொல்லும் யுக்தி என்பதை நான் அறிவேன்.

இது நினைவுக்கு வந்த ஒரு விசயத்தை வைத்து எழுதிய வரிகள். அவ்வளவே. நீங்கள் நினைப்பது போல் நான் அனுமனை கடவுளாக பாவித்து எழுதவில்லை.

சில அனானிகள் சகட்டு மேனிக்கு என் குடும்பத்தையே திட்டி பின்னூட்டம் போட்டுவிடுகிறார்கள். அதனால் தான் அனானி பின்னூட்டங்களில் எல்லாவற்றையும் வெளியிடுவதில்லை. அந்த வகையில் இங்குள்ள ஒரு பின்னூட்டத்திற்கு பதிப்படையச் செய்துவிட்டேன். :( மிக வருந்துகிறேன்.

A N A N T H E N said...

//சாகிற மக்களுக்காய்
உண்ணாமல் போராட்டமாம்
யாரை நம்ப?//

hahahahaha! நெத்தியடி!