Wednesday, February 11, 2009

இந்த இறைச்சியையும் சாப்பிடலாமாம்!


இறைச்சி உணவு பிரியர்களுக்கு ஒரு கருத்து சொல்லி இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள். அப்படி என்ன கருத்து என்கிறீர்களா? ஒட்டகம் மற்றும் கங்காரு இறைச்சி வகை உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்கச் சொல்லி இருக்கிறார்கள் இவர்கள். காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற வளர்ப்புப் பிராணிகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க இத்தகைய கருத்துகளை முன்னிருத்தி இருக்கிறார்கள்.

அளவுக்கதிகமான இனப் பெருக்கம் கொண்ட வளர்ப்பு பிராணிகள் இயற்கைக்குப் பாதுகாப்பு அற்றது என அறிவியளாலர்கள் கூறுகிறார்கள். இவ்விலங்குகளின் கழிவுகளால் வெளியேற்றப்படும் நச்சு வாயு பாதிப்பை உண்டாக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய வரலாறு கூறுவது. ஏறத்தாழ 60ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கங்காரு அந்நாட்டின் முக்கிய உணவாக இருந்திருக்கிறது. அக்காலகட்டத்தின் தட்பவெப்ப நிலை அதற்கு ஏதுவாக அமைந்திருந்ததாக சேதிகள் கூறுகின்றன. இன்னும் சில காலங்களில் கங்காரு மீண்டும் ஆஸ்திரோலிய மக்களின் முக்கிய உணவாக அமையலாம் என கருத்துரைக்கிறார்கள்.

இப்போது செம்மறி ஆட்டிறைச்சியும், மாட்டிறைச்சியும் ஆஸ்திரேலிய நாட்டு மக்களின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு மாற்று உணவாக கங்காருவின் இறைச்சி அமையும் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

இனப் பெருக்கத்தில் அதிகரித்துவரும் ஓட்டகங்களால் இயற்கைக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது. அதனை ஒடுக்கும் பொருட்டு அதனை உணவு பொருளாக உற்பத்தி செய்து வழங்க திட்டமிட்டுள்ளது அந்நாட்டு அரசு. கங்காரு மற்றும் ஒட்டக இறைச்சியினை மாற்று உணவாக மாற்றியமைப்பதில் கடந்த மூன்றாண்டு காலமாகத் திட்டமிட்டு வருகிறது ஆஸ்திரேலிய அரசு.

அங்கு நீண்ட கால திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்குள் மாட்டிறைச்சி மற்றும் செம்மரியாட்டு இறைச்சிகளின் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்துள்ளார்கள். தற்சமயம் 34கோடி கங்காருகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை 240 கோடிகளாக்க முயற்சிகள் நடைபெருகின்றன.

இவற்றில் சில சிக்கல்கள் உண்டென்பதை அவர்கள் அறியாமல் இல்லை. இதனால் கால்நடைகள் பேணல் சிக்கல் உண்டாகும். மக்கள் சுவைத்து பழக்கப்பட்டுவிட்டதை எளிதில் விட்டுவிட மறுக்கக் கூடும்.

காங்காரு இறைச்சி உடல் நலத்திற்கு சிறந்தது எனக் கருதப்படுகிறது. சிலர் கங்காரு இறைச்சியை உண்பதில் ஆர்வம் கொண்டும் இருக்கிறார்கள். கங்காரு இறைச்சி கொழுப்புச் சத்து குறைந்த மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவாகும். அது சுத்தமான இறைச்சி வகையாகவும் கருதப்படுகிறது.

ஒட்டகங்களால் பாலைவனத்தில் வாழும் சில உயிரினங்கள் உட்பட சில அறிய வகை தாவரங்களும் பாதிப்படைவதாகக் கூறப்படுகிறது. ஒட்டகங்களின் இனப் பெருகத்தைக் கட்டுப்படுத்த அவற்றை உண்பதே சிறந்த வழியனெ கண்டறிந்துள்ளார்கள். மாட்டிறைச்சிக்கு மாற்றாக ஒட்டக இறைச்சியை உபயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கங்காரு அஸ்திரேலிய மண்ணில் இயற்கையாக தோன்றிய உயிரனமாக கருதப்படுகிறது. ஆனால் ஒட்டகம் அப்படி இல்லை. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுமை தூக்க ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்கப்பட்டன. புதுவகை சரக்கு ஊர்திகளின் அறிமுகத்திற்கு பின்னால் அவை பேணப்படாமல் விடப்பட்டன.

இன்றய நிலையில் ஏறத்தாழ 50லட்சம் ஒட்டகங்கள் அங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஒன்பது ஆண்டும் அவை 2 மடங்காக பெருகிவருகின்றன.

ஒட்டகங்களின் இனப் பெருகத்தைக் குறைக்க அவற்றை உணவாக்கும் திட்டம் நிச்சயமாக தாவர மற்றும் மற்ற உயிரினங்களின் பாதிப்பைத் தடுக்குமா என்பது வினாக் குறியான விடயம். அது போக உள்நாட்டு சந்தையை விட வெளிநாட்டு சந்தைகளில் தான் அவற்றுக்கு மவுசு அதிகம். ஏற்றுமதிக்கான செலவீனங்களும் அதிகம் என கருதப்படுகிறது. இம்முயற்சிகளுக்காக மேலும் ஆய்வுகள் தொடர்ந்தபடி உள்ளன.

(பி.கு: 01.02.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)

32 comments:

Angok said...

Very nice article... well written

pudugaithendral said...

அருமையான கருத்துக்கள்.

பாராட்டுக்கள்

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு!

கங்காரு பிரியாணி ஒரு பிளேட் பார்சல்!

வால்பையன் said...

//அளவுக்கதிகமான இன பெருக்கம் கொண்ட வளர்ப்பு பிராணிகள் இயற்கைக்கு பாதுகாப்பு அற்றது என அறிவியளாலர்கள் கூறுகிறார்கள். //

அளவுக்கு அதிகமான மக்கள் தொகை பெருக்கம் மட்டும் நல்லாதாமா?

வால்பையன் said...

//கங்காரு பிரியாணி ஒரு பிளேட் பார்சல்!//

எனக்கு ஒட்டககறி வருவலோட!

ஸ்வாமி ஓம்கார் said...

கங்காரு மற்றும் ஒட்டக இனம் போல் மனித இனமும் பெருகி வருகிறது. இனி மேல் நரமாமிசத்திற்கும் நல்ல கிராக்கி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுதுதான் பிற உயிர்களை மதிக்கதுவங்குவார்களோ?

RAHAWAJ said...

நமக்கு ஒரு 10 கிலோ கங்காரு இறைச்சி ஹி ஹி ஹி

Subha said...

புதுகைத் தென்றல் //கங்காரு பிரியாணி ஒரு பிளேட் பார்சல்!//

இங்கேயுமா? :)

நல்ல கட்டுரை விக்னேஷ். நிறைய படிக்கிறீர்கள் என தெரிகிறது.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ Angok

உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... மீண்டும் வருக...

@ புதுகைத் தென்றல்

நன்றி...

@ நாமக்கல் சிபி

அட்ரெஸ் பிலிஸ்... நயந்தாராவுக்கும் சேர்த்தா? :))

@ வால்பையன்

அட அட அட... உங்களுக்கும் சுவாமி அவர்களுக்கும் ஒத்த சிந்தனை.. வளர்க வாழ்க... ஒட்டக வருவல் போதுமாண்ணே... கூடவே ஒரு குவாட்டர் வேண்டாமா?

@ ஸ்வாமி ஓம்கார்

உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. மனிதர்கள் தான் முக்தி சக்தி என சொல்லிக் கொள்கிறார்கள். விலங்கினங்கள் அப்படி ஏதும் சொல்வதில்லை. அதனால் தான் அதற்கு பாதிப்பும் அதிகமாய் இருக்கிறது போலும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜவஹர்

10 கிலோ போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

@ சுபாஷினி

நன்றி...

நட்புடன் ஜமால் said...

ஒட்ட்க இறைச்சி இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை.

கங்காரு வேண்டாம்.

pudugaithendral said...

புதுகைத் தென்றல் //கங்காரு பிரியாணி ஒரு பிளேட் பார்சல்!//

இங்கேயுமா? :)//

பார்சல் கேட்டது சிபி.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

ரைட்டு!

சி தயாளன் said...

உவ்வே....

Pot"tea" kadai said...

நல்ல கட்டுரை ஆனால் முழுதும் நம்புமளவு இல்லை. இங்கு கங்காருக்கறி டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் ஆனால் இதுவரை ஒட்டகக்கறி பார்த்ததுமில்லை. ஒட்டகங்கள் வெகுசிலவே இங்குள்ளதாக நான் அறிகிறேன் அதுவும் வடக்கு மாகாணத்தில் தான். அது தவிர்த்து அவுட்பேக்கில் சில இடங்களில் சுற்றுலாவிற்காக பயன்படுத்துகிறார்கள்.

கங்காருவைப் பொறுத்தமட்டில் அது இந்நாட்டு வனவிலங்கு அபரிதமான அளவில் காணப்படும். அதிலே பலவிதமான உட்பிரிவுகளும் உண்டு. வாலாபிஸ், பேடி மெலான்ஸ் போன்றவை வெகு சில. ஆனால் இறைச்சியாக விற்பனை செய்வதற்கு அனுமதி தேவை. மான், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவது போல் கங்காரு இனங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கங்காரு ஆடு மாடுகளைப் போல் அசை போடுவதில்லை என்பதனால் மீதேன் வாயு உருவாவதில்லை அதனால் க்ளோபல் வார்மிங்கிற்கு உறுதுணையாவதில்லை. மேலும் கங்காரு கறி மாட்டிறைச்சியைப் போல் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் உடலுக்கும் நல்லது. கங்காருவை வளர்ப்பதற்கு பெருமளவில் செலவும் இல்லை. இளங்கங்காருவின் இறைச்சி மான் கறியைப் போன்று மிருதுவாக இருக்கும். சுவையும் நன்று. பெரிய கங்காருவின் இறைச்சி செம்மறியாடு அல்லது மாட்டு இறைச்சியைப் போன்று கடினமாக இருக்கும். பார்பிக்க்யூ அல்லது ஸ்டேக் வகையில் நன்று. குழம்பு வைத்ததில்லை அதனால் அதன் சுவை தெரியாது. பூண்டு, இஞ்சி, கடுகை நன்றாக அறைத்து மரினேட் செய்து ஸ்டேக் சமைத்தால் சூப்பரோ ச்சூப்பர்

குமரன் மாரிமுத்து said...

அய்யே... நான் உங்கள் வீட்டுக்கு வரவேமாட்டேன் அய்யா.

அனந்தன் பாம்பு ஜூசு காச்சராருன்னா.. பதிலுக்கு நீங்க கால்நடைகளை எல்லாம் கூறுபோட்டு விக்க ஆரம்பிச்சுட்டிங்க....

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜமால்

டேஸ்ட் பண்ணி பார்க்க வேண்டிதானே :P

@ முரளி கண்ணன்

நன்றி

@ மங்களூர் சிவா

எதுக்கு ரைட்டு சொன்னிங்கனு ரைட்டா சொல்லிலன எல்லாமே ராங்கா போய்டும்... :))

@ டொன் லீ

நைட் அடிச்ச மப்பு தெளியாம இங்க வந்து வாந்தி எடுத்துட்டிங்களே :((

@ பொட்டிக் கடை

தலைவரே அனுபவத்தை அருமையாக பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி...

@ குமரன் மாரிமுத்து

எங்க இப்படி பயப்படுறிங்க... மலேசியாவில் எல்லோரும் உங்களை அஞ்சா நெஞ்சம் வருங்கால தலைவர்னுலாம் பேசிக்கிறாங்க...நீங்க பயப்படலாமா?

வெண்பூ said...

ஒரு ப்ளேட் கங்காரு பிரியாணி வித் ஒட்டக கிரேவி பார்சல்...

வெண்பூ said...

//
Namakkal Shibi said...
நல்ல பதிவு!

கங்காரு பிரியாணி ஒரு பிளேட் பார்சல்!
//

ஹி..ஹி.. நான் பின்னூட்டம் போட்டப்புறம்தான் இதை பார்த்தேன்.. சேம் பின்ச்..

சின்னப் பையன் said...

நல்ல பதிவு!

cheena (சீனா) said...

நல்ல ஆய்வுக் கட்டுரை - நல்வாழ்த்துகள் விக்கி

கார்க்கிபவா said...

ஆராய்ச்சி பன்றதுல உங்கள அடிச்சிக்க ஆளே இல்லைங்க

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வெண்பூ

நன்றி :))

@ சின்னப் பையன்

நன்றி...

@ சீனா

நன்றி ஐயா...

@ கார்க்கி

நான் எங்கங்க ஆராய்சி பண்றேன். ஆராய்சி விடயங்களை படிக்கிறேன், எழுதுறேன். அவ்வளோதான். வருகைக்கு நன்றி தலைவரே...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒரு விபரணப் படத்தில்; ஆவுஸ்ரேலியாவில் கங்காரு; முதலை போன்றவற்றை ஒருசிலர் வேட்டையாடிச்
உண்கிறார்கள். ஆதிவாசிகளும் உண்கிறார்கள்.
அத்துடன் இவற்றுடன் ஒட்டக இறைச்சி ,வீட்டு வளர்ப்புப் பிராணிகள் உணவில் பெருமளவு கலக்கப் படுகிறது.
அத்துடன் அரபு நாடுகளுக்கு செம்மறி ஆட்டிறைச்சியுடன்; ஒட்டக இறைச்சியும் ஏற்றுமதியாகிறது. அதாவது இந்தியாவில் சாப்பிடாத தவளை பிரான்சுக்கு இறைச்சியாக வருவது போல்.
//நரமாமிசத்திற்கும் நல்ல கிராக்கி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை//
ஒரு காலத்தில் உலகில் வழக்கத்தில் இருந்துள்ளது. வந்தாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
சிலியில் சுமார் 25 வருடங்களுக்கு முன் பனி மலை உச்சியில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பியோர்
3 வாரங்களுக்கு மேல் வாழ உண்டது. அந்த விமானத்தை ஓட்டிய இறந்த விமானியை.
வேறு பலரும் இறந்த போது, ஏன் விமானியின் உடலைத் தேர்ந்தீர்கள் என்ற வினாவுக்கு அவர்கள் கூறிய பதில் ;"இறந்தவர்களில் விமானி தான் நண்பரோ;உறவினரோ இல்லை" அவர் ஒரு அன்னியர்
பனிமலையில் அந்த உடல் கெடாமல் இருந்ததால் பல நாட்கள் அதை வைத்து சிறிது;சிறிதாகப் புசித்துள்ளார்கள்.
பின் தப்பி வந்தவர்கள் மேல் விமானியின் உறவினர்கள் வழக்கு போட்டபோது. வழக்காடி குற்றமற்றவர்களென விடுவிக்கப்பட்டு அதில் சிலர் இன்னும் வாழ்கிறார்கள்.
ஆகவே இது தேவைக்கு உட்பட்ட விடயம்.உயிர் வாழ இதுதான் வழி என்று ஆனால்...வேதாந்தம்
எவருமே பேசமாட்டார்கள்.
என் சீன நண்பர் கூறுவார்.."நாம் ஊர்வனவற்றில் ரெயினை விட்டு;பறப்பனவற்றில் பிளேனை விட்டு யாவும் புசிப்போம்" ஒலிம்பிக் விழாவில் அவர்கள் சாதனை உலகே அண்ணாந்தது.
நமது நாடுகளுக்குக் கிடைத்த சாபம் "இந்த சாமிமார்"....
ஒன்றுக்குமே பயனற்ற இந்தக் கூட்டம் தின்று விட்டுக் கழிந்து உலகைக் குப்பையாக்கிறார்கள்.
காசியில் ஒரு சாமி...சுமார் 35- 40 வயதிருக்கும்...பிச்சையெடுத்துச் சாப்பிட்டு விட்டு கச்சா அடித்துக் கொண்டு வெள்ளைக்காரன் கமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு கூறியது. தான் உலக சேமத்துக்காக பிராத்திக்கிறாராம்.
இவர் வாழ்வதால் உலகம் சேமமாகாது. பயனற்று வாழும் இவர் இறந்தால் தான் அந்த சாப்பாடு
அயாராவது உழைப்போருக்குக் கிடைப்பதால் இந்த உலகம் சேமமாகும்.

ஆகவே சாமிமாரே...மனிதனில் உடை உணவுப் பழக்கத்தில் மாற்றம் கொண்டுவர முயலதீர்கள். அவர்களை அவர்களில் வழியில் வாழவிடுங்கள்.
உலகமே..நாளை சைவ உணவு சாப்பிடத் தலைப்பட்டால்...நிலமை என்னாகும் யோசியுங்கள்.அப்போ கூட இந்தியாவிலில் தான் ஒருவன் காவிகட்டிக் கொண்டு புறப்படுவான்...அசைவ உணவே ...உலக சேமத்துக்கு நன்று...எல்லோரும் அசைவம் சாப்பிடுங்கள்.
அமேசன் ஆதிக்குடிகளும்; எஸ்கிமோவர் பற்றியும் சிந்தியுங்கள்....அவர்களும் மனிதர்கள்.
கொல்லானைப் புலாலை மறுத்தானை...அவர்களிடம் செல்லாது.
உலக சேமத்துக்கு உயிர்ச் சமநிலை பேணப்பட வேண்டும். அதற்கு ஒன்றை ஒன்று உண்ணவே வேண்டும்.
ஆனால் உடலை நல்ல நிலையில் பேண சமச்சீர் உணவை நாடுங்கள். எதிலும் அளவை மிஞ்சாதீர்கள்.
அரை வயிறு உணவு;கால் வயிறு நீர்;மிகுதியைக் காற்றால் அடையுங்கள்.
உலகம் சேமமுறும்.
அத்துடன் அசைவம் சாப்பிடுவது கேவலம்; சைவம் சாப்பிடுவது உயர்வு எனும் பைத்தியக்காரத் தனத்தைப் பரப்பவேண்டாம்.
நேரத்துக்கு நேரம் சுண்டக்காச்சிய பாலில் பாதாம் பருப்புப் போட்டு குடித்து விட்டு; குளிரூட்டிய
அறையில் இருந்து; வேதப் புத்தகத்தையே என்னுமொருவர் தூக்கிக் கொடுக்க படித்து விட்டுப் படுக்கும்; மடவாசிகள் கூறுவதை மனதில் கொள்ளாதீர்கள். பரப்பாதீர்கள்.
உலக மக்கள் வாழ்வைப் பரந்து பாருங்கள்.


இரை போடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடு...இது தான் நியதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு விக்கி!
தைப்பூசமும் அதுவுமா, எப்படி கண்ட கண்ட கறியெல்லாம் திங்கிறது!
அதனால கொஞ்ச நாள் தள்ளி போடுவோம் :P

Senthil Alagu Perumal said...

தலைவா நான் சௌதியில் ஒட்டக கறி வருவல், குழம்பு மற்றும் ஒட்டகப் பால் சாப்பிட்டிருக்கிறேன். நன்றாகத் தான் இருக்கும். உங்கள் கருத்து மிகவும் பாராட்டத்தக்கது. மிகவும் அருமையான பதிவு. பாராட்டுக்கள்!!

Anonymous said...

எங்க கங்காரு மேல ஏன் இந்த கொலைவெறி?

Athisha said...

மிக நல்ல கட்டுரை நண்பா

@பொட்டீக்கடை

கங்காரு 65 , கங்காரு பிரைட்ரைஸ், கங்காரு கொத்துக்கறிலாம் கிடைக்குதா

A N A N T H E N said...

:)

VG said...

hmm good..
nan solli kudutathu ellam correct aah eluti irukkinga.. good job.

LOL

butterfly Surya said...

அருமை..

வாழ்த்துகள்.

உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்..

Don't forget to leave your comments.

Cheers

VIKNESHWARAN ADAKKALAM said...

@ யோகன் பாரிஸ்

நன்றிங்க... மிக நீண்ட கருத்து... மீண்டும் வருக...

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா... தைபூசத்தை தவிற மற்ற நாட்களில் சாப்பிடலாமோ? நல்ல லாஜிக் :))

@ தூயா

கங்காரு சமையல் குறிப்புகள் தூயாவின் சமையல்கட்டில் இடம்பெருமா?

@ செந்தில் அழகு பெருமாள்

நன்றி நண்பரே...

@ அதிஷா

நன்றி...

@ அனந்தன்

நன்றி...

@விஜி

நன்றி... லூசு...

@ வண்ணத்து பூச்சியார்

தெங்ஸ் பாஸ்... நல்லா விளம்பரம் பண்றிங்க...