வாசகர்கள் நம் எழுத்தை தேடி வரனும் என நினைப்பது நெகட்டிவ் அப்ரோச், நம் எழுத்து வாசகரை சென்றடைய வேண்டும் என நினைப்பது பாசிட்டிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
*****
அண்மையில் சேலத்தில் ஜோதிடர்கள் மாநாடு நடந்ததாம். அதில் சில தீர்மானங்கள். ஜோதிடர்களை தொழிலாளர் வாரியத்தில் சேர்க்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் வழங்க வேண்டும். பஸ் பாஸ், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். கலைமாமணி விருது வழங்க வேண்டும். இவ்வளவையும் கேட்கும் ஜோதிடர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:
ஜோதிடர்களே, நீங்கள் ஏன் ஜோதிடத்தை நம்பாமல் அரசை நம்ப வேண்டும்?
******
எதிர் காலத்தில் டிஜிட்டல் முறைப்படி தானாகவே இயங்கும் வீடுகள், சதுர அடிக்கு... இந்த விலைக்குக் கிடைக்கும் என்ற விளம்பரங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும்.
படுத்தவுடன் தூங்க வைக்கும் படுக்கை, மசாஜ் செய்யும் குளியல் அறைகள், ரிமோட் மூலம் வீட்டின் அனைத்து இயக்கங்களையும் கண்ட்ரோல் செய்யும் கருவி என அணைத்தும் ஆட்டோமெட்டிக் அரங்கமாக மாறிவிடும். சுவரில் எங்கு திரும்பினாலும் 'எ 4' சைசில் கம்ப்பியூட்டர்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டிருக்கும்.
இது ஜோசியம் இல்லை. யூகம் தான்.
*****
ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர், 1940-ஆம் ஆண்டு, 12 ஆயிரம் பேரை தனி அறையினுள் அடைத்து வைத்து விஷ வாயு செலுத்தி கொலை செய்தபோது உடன் இருந்த முக்கியக் குற்றவளியான ஜோஹான் என்பவரை கடந்த வருடம் கர்நாடக மாநிலம், பெல்காம் அருகில் காவல் துறை கைது செய்து ஜெர்மனி காவல் துறை வசம் ஒப்படைத்தது. இவர் கடந்த 56 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்.
****
"நம்ம வீட்டு அம்மா காச கொடுத்துட்டு அழுவும், அந்த அம்மா காச வாங்கிகிட்டு அழும்"
இது சினிமா மோகத்தைப் பற்றி புலவர் கீரன் சொன்ன வரிகள். சமீபத்தில் நான் படித்த ஒரு விடயம். ஒரு பெண் தனியாக இருந்தால் போதும் ஆண் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்துவிடுவான் என அவர் சொல்லி இருந்தார். அவரும் பெண் பதிவர் தான். ஒரு திரைப்படத்திற்கான விமர்சனத்தில் அப்படி குறிப்பிட்டிருந்தார்.
சினிமாவில் பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகை நடிகன் செய்வதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறாள். நிஜத்தில் அப்படி ஒரு சூழ்நிலை உண்டானால் அவள் செருப்பால் அடிக்கமாட்டாளா? அப்படி அடிக்கவில்லை என்றால் அந்த பெண்ணுக்கும் அதில் விருப்பம் என்றே கொள்ள வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் இழிவு படுத்திக் கூறும் செயல் தகாத ஒன்று என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
*****
எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் எனும் கட்டுரைத் தொகுப்பை படித்து வருகிறேன். இணையத்தில் அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். அவருடைய புத்தக வரிசையில் இது தான் முதல் முறை வாசிக்கிறேன். மிக அருமையாக இருக்கிறது. வாழ்வியல் விடயங்களை பொட்டில் அடித்தாற் போல் சொல்லி இருப்பது படிப்பவருக்கு ஒருவித தாக்கத்தைக் கொடுக்கிறது.
************
அமைச்சர்: மன்னா கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அரசை நிர்வாகிக்க நீங்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, உங்கள் மீது மக்களுக்கு மனக் கசப்பு உண்டாகாதா?
புலிகேசி: மங்குனி அமைச்சரே, இப்போது இருக்கும் லகுட பாண்டிகளை இப்படியே விட்டால் நமது கஜானாவில் கரப்பான் பூச்சிகள் காரித் துப்பி வைத்துவிடும். இந்த கேடு கெட்ட முட்டா பய மக்களின் நலன் முக்கியமா இல்லை எனது கஜானா முக்கியமா? எங்கே சொல்?
அமைச்சர்: கஜானா காலியானால் நம் கதி என்ன ஆவது. உங்கள் முடிவு சரிதான் மன்னா. ஆனால் மக்கள் தேர்வு செய்த அதிகாரிகளை நாம் நிராகரித்தோம் என்பதற்காக பிரச்சனைகள் வராதா? அதை அவர்கள் மறப்பதற்கு வசதியாக இரண்டு நாட்கள் விடுமுறை விட்டுவிடலாமா?
புலிகேசி: க.க.க.கௌ.
(புரிந்ததா இல்லையா? புரியாதவர்கள் தனிமடலில் அனுகவும்.)
இதையும் படித்துப் பாருங்கள்.
******
இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் பலருக்கும் பல வித டென்ஷன். இப்போதுதான் சில நிறுவனங்கள் அங்கங்கு காதலர் தின ஃப்ரோமோசன்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு பெருநாளை உருவாக்கிக் கொண்டு சமூக சீர்கேடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
லங்காவி, கெந்திங் போன்ற சுற்றுலா தளங்களில் காதலர் தினத்தின் போது அதிக அளவில் தங்கும் விடுதிகள் பதிவு செய்யப்படுகிறதாம்.
ரூம் போட்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்களோ?
*****
மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய உலக மாந்தர்கள் 100 பேர் (ஆங்கில புத்தகம்) என்ற புத்தகத்தில் காந்தியடிகளின் பெயர் இடம் பெறவில்லை. காந்தியடிகள் போன்றோரின் தாக்கங்கள் அவர்கள் இறந்த பிறகு முடக்கம் கண்டுள்ளன என்பது அப்புத்தக ஆசிரியரின் கருத்தாகும்.
*****
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு - கவிஞர் அறிவுமதி.
26 comments:
//ஜோதிடர்களே, நீங்கள் ஏன் ஜோதிடத்தை நம்பாமல் அரசை நம்ப வேண்டும்?//
ரிப்பீட்டுடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!
கொசுறு, பிசுறு கிளப்புது!
\\வாசகர்கள் நம் எழுத்தை தேடி வரனும் என நினைப்பது நெகட்டிவ் அப்ரோச், நம் எழுத்து வாசகரை சென்றடைய வேண்டும் என நினைப்பது பாசிட்டிவ் அப்ரோச்\\
டாப்புங்க
இது மட்டுமில்லை ...
\\ஜோதிடர்களே, நீங்கள் ஏன் ஜோதிடத்தை நம்பாமல் அரசை நம்ப வேண்டும்?\\
அவர்கள் ஜோதிடத்தில் அரசனை நம்பனும்ன்னு போட்டிறுக்காம்.
\\இது ஜோசியம் இல்லை. யூகம் தான்.\\
நானும் ஏதோ
எந்திரன் படம்
என்று
நினைத்து விட்டனன்.
”கொல்லைக்” - கொள்ளை - சரி செய்யவும்.
எஸ்.ரா வின் துணையெழுத்து அவரது எழுத்து பற்றிய எளிய அறிமுகத்திற்கும் தொடர்ந்த வாசிப்புக்கும் உதவும்.
\\அப்படி அடிக்கவில்லை என்றால் அந்த பெண்ணுக்கும் அதில் விருப்பம் என்றே கொள்ள வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் இழிவு படுத்திக் கூறும் செயல் தகாத ஒன்று என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்\\
ஆமா ஆமா ஆமா...
\\புலிகேசி: க.க.க.கௌ.\\
க க க கொள
\\என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு - கவிஞர் அறிவுமதி.\\
தூள்
//ஜோதிடர்களே, நீங்கள் ஏன் ஜோதிடத்தை நம்பாமல் அரசை நம்ப வேண்டும்?//
இதற்கு பதில்
//புலிகேசி: க.க.க.கௌ.//
புது புது செய்திகள் நிறைய இருக்கு....
சாணியடி சித்தர் முதன் முதலா ஒரு பெரிய கருத்த சின்னதா சொல்லிருக்காரு.... சித்தா உன்னைப் பாராட்டாமல் போக மாட்டேன்
நல்லா இருக்கு
பல நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறேன்..
சுவாரஸ்யமா இருக்கு விக்னேஷ்..
நிறைய வாசிக்கிறது தெரிகிறது...
கொசுறு - விசிறி அடிக்கின்றது :-)
hey i want to knw the pulikesi meaning. Reply in SMS / E-Mail / CHAT. TQ.
## ரூம் போட்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்களோ? ##
Kettaka, 'akkam pakkam yaarum illa boologam vendum' nu solluvage, ethuku vambu. pesame irunthiduvom.
## எதிர் காலத்தில் டிஜிட்டல் முறைப்படி தானாகவே இயங்கும் வீடுகள் ##
Wish to have one. :)
p/s: the last poem superb. kettatha sollidunga.. aaw. nambe arivumathiye thaan. :D
@ வால்பையன்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ரிப்பீட்டு கிடைச்சிருக்கு... நன்றி தலைவா.
பிசுறு கிளப்ப உதவியதற்கு நன்றி.
@ ஜமால்
வாங்க வாங்க... பகவதி படத்துல வர புயல் காற்று வடிவேலு மாதிரி பின்னூட்டத்தை அடிச்சி தள்ளிட்டிங்களே... உங்கள் இனிப்பான கருத்துகளுக்கு நன்றி...
@ வடகரை வேலன்
நன்றி அண்ணாச்சி. திருத்தம் செய்துவிட்டேன். துணை எழுத்து புத்தகம் ஆர்டர் செய்துள்ளேன். கிடைத்ததும் படிக்கிறேன்.
@ அனந்தன்
சித்தர் தரிசனம் வேணுமா? அடுத்த பதிவர் சந்திப்பின் போது கிடைக்கும். :)
@ முரளி கண்ணன்
நன்றிங்க...
@ தமிழன் கருப்பி
நெடு நாட்களுக்கு பிறகு வருகை தந்ததிற்கு நன்றி. மீண்டும் வருக நண்பரே.
@ டொன் லீ
நன்றி தலைவா.
@ விஜி
நன்றி... அதன் கீழ் உள்ள சுட்டியை பார்த்தீர்களா?
கொசுறு நல்லா இருந்தது விக்கி..
மாமஸ் கொசுறு கொசுறா இருந்தாலும் தின்சு தின்சா இருக்கு..
i'm asking abt this la wey.
புலிகேசி: க.க.க.கௌ.
மற்றவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கிறது உங்கள் கொசுறு...
@ வெண்பூ
நன்றி. உங்க அன்(பூ)க்கு :))
@ அதிஷா
நன்றி
@ பரிசல்காரன்
நன்றிங்க தலைவரே...
சாணியடி சித்தருக்கு ஒரு கூடை சாணி பரிசாக அறிவிக்கப் படுகிறது.
@ அகரம் அமுதா
அவர் தான் சாணி கொடுப்பார் மக்களுக்கு... நீங்கள் அவருக்கே கொடுக்கிறீர்களா? அருமை அருமை...
@ ஜெகதீசன்
நானும் :)
Post a Comment