யூனான் 'Yunnan' சீன தேசத்தில் அறியப்பட்ட ஓர் இடம். நாளுக்கு நாள் இங்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணம் யாது? முடிச்சுகளை அவிழ்த்துக் காண்கையில் இப்போது இக்கட்டுரையை படிக்கும் நீங்களும் நானும் கூட அதில் சம்பந்தப்பட்டிருப்போம்.
யூனான் பகுதியில் தாழ்ந்த நிலபரப்பில் அமைந்திருந்த காடுகள் பரவலாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது காணுமிடமெங்கும் ரப்பர் மரங்கள் நடப்பட்டுள்ளன. இடங்கள் போதாமல் மேடான பகுதிகளும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. அவ்விடங்களிலும் இரப்பர் மரங்களை நடுவதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருக்கிறது.
சீன தேசத்தில் உந்துகளின் வட்டை(Tyre) உற்பத்தி அதிகரித்து வருகிறது. சீன தேசத்துப் பொருட்களுக்கு செல்வாக்கு அதிகம். அதற்கு காரணம் மலிவான முறையில் விற்பனை காணும் பொருட்கள். வெளிநாட்டிளும் உள்நாட்டிளும் வட்டைக்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. போதாமையின் காரணமாக யூனான் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு இரப்பர் மரங்கள் நடப்பட்டு வருகிறது.
சிசுவாங் பன்னா 'Xishuang-banna', யூனானில் அமைந்துள்ள ஒரு வட்டாரமாகும். இவ்வட்டாரத்தின் காட்டுப்பகுதிகளில் பலதரபட்ட விலங்குகளும் தாவரங்களும் உள்ளன. ரப்பர் வேளான்மையின் அதீத வேகத்தால் இவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.முப்பது ஆண்டுகளுக்கு முன் 'சிசுவாங் பன்னா' பகுதியில் 70 விழுக்காடு காடுகளும், மலைகளும் நிறைந்திருந்தது. சிசுவாங் பன்னா சீனா மற்றும் மியன்மார் தேசத்தின் எல்லையில் உள்ளது. இன்றைய நிலையில் 50 விழுக்காடு காடுகள் அப்பகுதியில் அழிக்கப்பட்டுவிட்டன.
ஒர் அதிகாரப்படி செய்தியில் யூனான் பகுதியில் மட்டும் 334,000 எக்டர் பரப்பளவில் ரப்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இது சீனவில் இருக்கும் மொத்த ரப்பர் வேளான் பகுதிகளில் 43 விழுக்காடாகும்.
2007-ஆம் ஆண்டு மட்டுமே சீன தேசத்தில் 2.35 டன் இரப்பர் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து சுமார் 70 விழுக்காடு இரப்பர் சீனாவால் வாங்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டு வட்டை தயாரிப்பிற்காகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் அதிகமான கோரிக்கைகள் ஏற்பட்டது. இது ஒரு புரம் அவர்களுக்கு மகிழ்ச்சியான விசயமாக அமைந்தாலும் ரப்பர் உற்பத்திக்காக மெற்கொண்டுள்ள முயற்சிகள் அவர்கள் நாட்டின் இயற்கைக்கு பாதகமாகவே அமைந்துள்ளது.
2007-ஆம் ஆண்டு 330கோடி வட்டைகள் சீனாவில் உருவாக்கப்பட்டது. அதில் 50 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. குட் இயர் (GoodYear), கண்டினென்டல் ஏ.ஜி மைக்ஹெலின் (Continental AG Michelin), பிரிட்ஜ் ஸ்டோன் (Bridgestone) போன்ற உலகப் புகழ் பெற்ற வட்டை நிருவனங்களும் கூட தங்களது உற்பத்தியை சீனாவில் தொடங்க திட்டமிட்டுள்ளன. இதற்கு காரணம் மலிவான உற்பத்தி மட்டுமல்ல. அதிகமாக லாபம் ஈட்டும் நோக்கமும் தான்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் சீனா தனது இரப்பர் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தமது உற்பத்தியை 30 விழுக்காடாக அதாவது 780 000 டன் அதிகரிக்க முயற்சிப்பதாக சீன இரப்பர் உற்பத்தி இயக்கம்(China Rubber Industry Association) தெரிவித்துள்ளது.
இருப்பினும் ரப்பரின் உற்பத்திக்கு உகந்த நிலப் பகுதி தென் சீனாவில் அமைந்திரிக்கும் யூனான் போன்ற இடத்தில் மட்டுமே இருக்கிறது. இது அவர்களுக்கு பெறுத்த ஏமாற்றமே. கிடைத்த சிறு பகுதி நிலத்தையும் முடிந்த அளவு பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.
1967-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை 67 விழுக்காடு மழைக் காடக வனப்பகுதிகள் ரப்பர் உற்பத்திக்காக அழிக்கப்பட்டிருக்கின்றன. யூனான் பகுதிகளில் இயங்கிவரும் ரப்பர் உற்பத்தியாளர்களே காடுகளின் அழிவிற்கு பொறுப்பாளிகள் என்பதனை ஒரு ஆய்வு நிருவணம் வெளியிட்டது.
யூனான் நேச்சுரல் ரப்பர் இண்டாஸ்டிரியல் (Yunnan Natural Rubber Industrial) அப்பகுதியில் இயங்கி வரும் மிகப் பெரிய இரப்பர் உற்பத்தியாளர்கள். ஆய்வு நிருவனத்தின் அறிக்கையை மறுக்கும் இவர்கள் ரப்பர் உற்பத்தியை வேளான் நிலத்திலும் மற்றும் அரசு இசைவுப் பெற்ற நிலப்பகுதிகளில் மட்டுமே மேற்கொள்வதாக அறிவிக்கிறார்கள்.
சீனாவில் வளர்ந்து வரும் பல ரப்பர் நிருவணங்கள் வெளிநாடுகளிலும் ரப்பர் தோட்டங்களை உருவாக்கி தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வழி கண்டு வருகின்றன.சமீபத்தில் மியன்மாரில் 1333 எக்டர் பரப்பளவில் இரப்பர் தோட்டம் ஒன்றை சீன நிருவணம் நிருவியுள்ளது. இதன் பயன்பாட்டை இன்னும் ஆறு அல்லது ஏழு வருடங்களில் அவர்கள் அனுபவிக்க முடியும்.
தற்சமயம் அப்பகுதிகளில் பரவலான முறையில் போப்பி மரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில காலங்களில் அவற்றுக்கு மாற்று பயிராக ரப்பரை பயிர் செய்யவும், 1333 எக்டர் பகுதியை 33,333 எக்டராக விரிவுபடுத்தவும் அந்நிருவணம் திட்டமிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ரப்பரின் விலை உயர்வு யாவரும் அறிந்ததே. அதைக் காரணமாகக் கொண்டு இயற்கையை பாழ்படுத்துவது வருந்ததக்க மற்றும் கண்டிக்கதக்கச் செயலாகும். இன்றைய பொருளாதார பாதிப்பில் ரப்பரின் விலை சுனக்கம் கண்டுள்ளது. இதனை சீனா மேற்கொள்ளப் போகும் யுக்தியை பொருத்திருந்து காண்போமாக.
(பி.கு: 21.12.2008 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)
22 comments:
:(
மனுசன் சொகுசுக்கு பழகியதற்கு கொடுக்க வேண்டிய விலை இயற்கை அழிப்புதான்.
இன்னும் 100 ஆண்டுகளுக்கு பெட்ரோல் வருமாம், அப்பறம் என்ன செய்வாங்களோ
தலைப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிட்டிங்க. அழிக்கும் ரப்பர் கவித்துவமான தலைப்பு
athu rappar illai. irapar enru waranum.
மனிதனுக்கு சொகுசும்,
முதலாளிகளுக்கு பணமும் இயற்கை அழிவிலிருந்து கிடைக்கின்றன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கை நம்மை இதனால் தான் அடிக்கடி திருப்பி தாக்குகின்றது போல...
நல்ல பதிவு தோழர்..
பணத்திற்காகப் பறக்கும் உலகில் மனிதன் பத்தும்....அதைவிட அதைவிட இன்னமும் செய்வான் விக்கி.யார் தடுக்க?அதற்கும் மனிதம் நிறைந்த மனிதன் தானே வேணும்.
புள்ளிக் கணக்குகளை மிக அழகாகத் தொகுத்து ஆணித்தனமாக நிருவியுள்ளீர்கள். வாழ்த்துகள். நெகிழியின் தேவை நிறைவதால் வரு விளைவுகளே இவைகள்.
ரப்பர் உற்பத்தியில் சீனா முந்துவது பற்றி உங்கள் கட்டுரை படித்த பின்னே தெரிந்துக் கொண்டேன். வனம் அழிக்கப்படுவது இருக்கட்டும், அதற்கு ஈடாக, மாற்று இடத்தில் அவ்விலங்குகளைக் குடியேற்றுவது அவசியம். நல்ல கட்டுரை; பல கணக்கியல் கூற்றுகளோடு அலசப்பட்டுள்ளது.
//(பி.கு: 21.12.2008 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)//
மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள்
//இன்னும் 100 ஆண்டுகளுக்கு பெட்ரோல் வருமாம், அப்பறம் என்ன செய்வாங்களோ//
அதுக்கு அப்புறமும் மனித இனம் வாழ்ந்தா, இதப்பத்தி யோசிக்கலாம்... என்ன நான் சொல்றது? :D
கச்சா எண்ணெய் தீருமானால், அதற்குள் அதற்கான மாற்று எரிபொருளை அறிவியல் உலகம் கண்டு பிடித்துவிடும். ஒரு கதவு மூடப்படுமானால், இன்னொரு கதவு திறக்கப்படும். என்ன... மலேசியா, புருணை போன்ற கச்சா எண்ணெயைப் பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகளுக்கு இது பெரிய அடியாகத்தான் இருக்கும்.
நல்ல கட்டுரை,
செயற்கை இயற்கையை அழித்து கொண்டிருக்கிறது!
:-((
நல்ல கட்டுரை விக்கி...
இயற்கை வளம் பல காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தெரிய வரும். அடுத்த தலைமுறைக்கு அதிக தீமைகளை அளித்துக் கொண்டிருக்க்கிறோம். என்ன செய்வது ...... ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இயலாமல் இயற்கையை அழிக்கிறோம்.
மனிதனின் தேவை வளர வளர... நாம் அதற்கு கொடுக்கும் விலையும் அதிகம்.
பி.கு.
எங்கே ஆளை காணோம். சந்தித்து நாட்கள் ஆகிறதே.............
ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னரும் ஒரு பேரழிவு இருப்பதை உங்கள் பதிவு சொல்கிறது.
வரும் நாட்களில் மனிதர்களுக்கிடையேயான சண்டைகளுக்கு அப்பால் இயற்கையின் சீற்றத்துக்கெதிராக நிறைய போராட வேண்டி இருக்கும்....
நல்லதொரு பதிவு நண்பரே
விக்நேஸ்வரன்!
ரப்பர் மரங்களும், காடுகளைப்போல் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஃபோட்டோ சிந்தசிஸ் செய்பவைதானே?
மேலும் ர்ப்பர் என்பது "பயோ டிக்ரேடபிள் பாலிமெர்" தானே?
சாதாரண காடுகள், பயனுள்ள ரப்பர் காடுகளாவதில் என்ன பெரிய தவறு?
@ கோவி கண்ணன்
பெட்ரோலுக்கு மாற்று கண்டு பிடிச்சிடுவாங்க, ஆனா இயற்கைக்கு? வருகைக்கு நன்றி அண்ணே...
@ வெற்றி செல்வன்
நன்றி
@ ஆட்காட்டி
சுட்டி காட்டியமைக்கு நன்றி. ஆனால் வாக்கியத்தின் ஆரம்பத்தில் வரும் போது தாமே ரகரத்திற்கு ‘இ’ போடனும். மீண்டும் வருக.
@ வெங்கட்ராமன்
அருமையான கருத்து... வருகைக்கு நன்றி...
@ தூயா
வருகைக்கு நன்றி...
@ அதிஷா
நன்றி..
@ ஹேமா
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹேமா..
@ அகரம் அமுதா
முத்தான தமிழில் உங்கள் கருத்து அருமை... நன்றி...
@ அனந்தன்
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா...
@ வால்பையன்
வருகைக்கு நன்றி..
@ ச்சின்ன பையன்
வருகைக்கு நன்றி...
@ சீனா
உண்மைதான் ஐயா.. எல்லாமும் மனிதனின் சுயநலமே காரணம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா ஐயா...
@ தமிழ் ஊசி
வருகைக்கு நன்றி... ஆமாம் சந்தித்து நாளாகிறதே...
@ தமிழ் நெஞ்சம்
அட என் பதிவின் சுருக்கத்தை சிறப்பாக சொல்லிட்டிங்களே... வருகைக்கு நன்றி அன்பரே...
@ தங்கராசா ஜீவராஜ்
உண்மைதான் இயற்கையின் சீற்றத்தால் மனிதனுக்கு பேரழிவு ஏற்பட்டாலும் வியப்படைவதற்கில்லை...
@ வருண்
முதல் வருகைக்கு நன்றி... என் பெயரை தவறாக எழுதும் அளவுக்கு என் மேல் என்ன கடுப்பு...
ரப்பர் காடுகள் நடப்படுவதால் அங்குள்ள ஜீவ ராசிகள் பலவும் அழிந்து போகின்றன. இன்றய தேதியின் பாண்டா கரடி சீனாவில் மட்டுமே உள்ளது... அதுவும் 100க்கும் குறைவான எண்ணிக்கையில். அது மட்டுமில்லை நிலத்தின் தன்மை ஒவ்வோரு இடத்திற்கும் மாறுபடும். ஒரு இடத்திற்கான தன்மை ஒரு குறிப்பிட்ட உயிரினம் அங்கு வாழ்வதற்கு ஏற்புடையதாக இருக்கும். அப்படி இருக்கையில் வெரும் ரப்பர் காடுகள் மட்டும் என்றால் இப்படிபட்ட flora& fauna பலமாக பதிப்படையும்.
இந்த ரப்பர் நடவுக்கு நிலபரப்பு செய்யப்பட்டது. அதனால் மழை பெய்யும் போது சேற்று நீர் பெறுக்கம் கொண்டு பல நதிகள் பதிப்படைந்துள்ளன. மழை காலங்களில் நிலத்தன்மை சீராக இல்லாமல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
vikneshwaran!
என் பெயரை உங்க அண்ணா, வரூண் என்கிறார். சில "மேதை"களே இப்படி தவறு செய்யும்போது, நானெல்லாம் என்ன கற்றுக்குட்டி? எழுத்துப்பிழை என் கூடப்பிறந்தது :) :) :).
உங்கள் மேல் கோபம்னா உங்க "ஆத்துக்கு" வரமாட்டேன்! :)
ரப்பர் பற்றி உங்கள் விளக்கத்துக்கு நன்றி!
ர மொழிக்கு முதலில் வராது. அதாவது எந்தச் சொல்லுமே தொடங்காது. அதனால் தான் இரபர். இல்லாவிட்டால் இரப்பர், இறப்பர். நல்லாவே இருக்காது.
Post a Comment