கிழித்தெறிந்த
காகிதமும்
கடித்தெறிந்த
நகச் சில்லும்
வெடித்தெழுந்து சொல்கிறது
வெப்பம் கெண்ட-உன்
சிறு கோபத்தினை!
பல் கடிக்கிறாய்!
விழி முறைக்கிறாய்!
நெற்றி சுருக்கி
நெட்டி முறிக்கிறாய்!
ஊடலை
உப்பென சேர்ப்பதே
உகந்ததாய்
உரைக்கிறான் வள்ளுவன்!
உதிராத
உன் இதழை
உரிமை கொண்டால்
உணர்வு தெளிவாயா?
கட்டி அணை!
கவிதை கேள்!
காதல் கொள்!
காலம் இனிக்கட்டும்!
23 comments:
ந்ல்லாயிருக்கு
//ஊடலை
உப்பென சேர்ப்பதே
உகந்ததாய்
உரைக்கிறான் வள்ளுவன்!//
அப்படியா..? அந்தக் குறளைத் தந்துதவவும்...
kobama irukkum kataliyai samatanam seiyum kavitaiyooo.... ?
yenna oru karpanai vicky.. :)
உம் இக் கவிதையைப் படிக்கிறபோது உம் கவிதையின் மீது காதல் பிறக்கிறது நண்பரே.!
காதல் கவிதை எழுதும் வாலிபரே....அனுபவித்து எழுதிய கவிதைபோல் இருக்கிறது.....வாழ்க காதல் கவிதை
குறள்: கற்பியல்
அதிகாரம்: 133
குறள்: 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நூதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.
//கட்டி அணை!
கவிதை கேள்!
காதல் கொள்!
காலம் இனிக்கட்டும்//
அட இதுவும் நல்லா இருக்கே!
@ டொன் லீ
வருகைக்கு நன்றி... குறளை கொடுத்திட்டேன்... உப்பு அளவு மீறினா சாப்பாடு நாசமா போய்டும்.. அது மாறிதான் ஊடலும்...
@ விஜி
வருகைக்கு நன்றி... சும்மா எழுதியது தான்... வாழ்த்துக்கு நன்றி...
@ அகரம் அமுதா
வருகைக்கு நன்றி... வெண்பா வேந்தன் எம்மை அதிகம் புகழ்கிறீரே? உமக்கு ஈடகுமா அன்பரே?
@ அகத்தியர்
ஆஹா... நல்லா கிளப்புறிங்களே வதந்திய... வருகைக்கு நன்றி நண்பரே...
@ ஆயில்யன்
நன்றி...
:-)))...
எளிமையான வரிகளில் அழகான கவிதைகள்
தொடருங்கள் கவிப் பயணத்தை
அன்புடன்
புகழன்
நல்லாருக்குங்க கவுதை
@ விஜய் ஆனந்த்
நன்றி. நானும் :)
@ புகழான்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
@ சென்ஷி
நன்றி...
உயர்ந்து கொண்டே வருகிறீர்கள்...
எழுத்திலும், காதலி மனதிலும்!
@ பரிசல்காரன்
எழுத்தாளர் பரிசலுக்கு நக்கல் ஜாத்தியாகி போச்சு...
கவிதை கவர்ந்தது, கவர்ந்த கவிதையில் மிக கவர்ந்த வரி இதுவாகத்தான் இருக்க வேண்டும்
//உதிராத
உன் இதழை
உரிமை கொண்டால்
உணர்வு தெளிவாயா?//
முடிந்தால், அடியேனுக்கு எளிய முறையில் சொல்லவும் கெக்கபுக்க கெக்கபுக்க
//முடிந்தால், அடியேனுக்கு எளிய முறையில் சொல்லவும் கெக்கபுக்க கெக்கபுக்க//
தம்பீபீபீபீ ஏதோ ஒன்னு சொல்லி தெரிவதில்லைனு பெரியவா சொல்லுவா தெரியுமா?
//கட்டி அணை!
கவிதை கேள்!
காதல் கொள்!
காலம் இனிக்கட்டும்!//
நல்லா இருக்கு விக்கி வரிகள்..
எழுத்துலகத்தில் உங்கள் புகழை ஓங்க வைக்கின்றன உங்கள் எழுத்து திறமை...
விக்கி அற்புதம்.சேவியர் அண்ணாவைக் காணவில்லை.அவர் இடத்தை நிரப்புகிற மாதிரி இருக்கு உங்கள் கவிதை...எழுத்து.
ரசனையோடு பூத்திருக்கிறது ஊடலாய்.
@ உஷா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
@ ஹேமா
சேவியர் அண்ணன் தற்சமயம் அமேரிக்காவில் வேலை நிமித்தமாக இருக்கிறார். எப்போது தமிழகம் திரும்புவார் என தெரியவில்லை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
2 வரியில் நச்சுனு நீங்க சொல்லி இருக்கும் கவிதை நல்லா இருக்கு.
அப்பவே சொன்னேன், கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு, சொன்னா கேட்கறீங்களா?
இப்ப பாருங்க ஊடல், கூடல்னுட்டு
விக்கி,
பார், எத்தனை பாராட்டுக்கள்! அழகிய கவிதை. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
@ பெனஞசமின் பொன்னையா
ஹா ஹா ஹா... என்ன இது இப்படி சொல்லிட்டிங்க...
@ அனுஜன்யா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
"ஊடலை
உப்பென சேர்ப்பதே
உகந்ததாய்
உரைக்கிறான் வள்ளுவன்"
வள்ளுவன் கூற்று என்று பொய்யானது? அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா? "ஊடல் காதற்கின்பம்"...உண்மைதான்...அளவோடு இருக்கும் வரை... கவிதை அருமை...வாழ்க, வளர்க...நீங்களும் உங்கள் கவிதையும்...
Post a Comment