இன்றய தினம் ஆழிப் பேரலையில் (சுனாமியில்) இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சாணியடி சித்தர் 'பிசி'யாக இருப்பதால் இவ்வார சித்தர் தத்துவத்திற்கு சிறப்பு விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. சுனாமியில் இறந்தவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி.
************************
நேற்றய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை இனிதே கொண்டாடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சேவியர் அண்ணுக்கும் ஜோசப் அண்ணனுக்கும் சிறப்பு வாழ்த்துகள். சிறப்பு வாழ்த்து சொல்பவர்களுக்குச் சிறப்பு பரிசு கொடுப்பதாக இருவரும் சொல்லி இருக்காங்க.
*******
டைரி எழுதுவதை ஓர் அருங்கலையாகக் கருதுகிறார்கள். இப்பழக்கம் வெள்ளையர்களிடம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. நமது அரசர்களின் கல் வெட்டுகள் கூட அவர்களின் டைரி என்பதாகவே எனக்குக் கருத தோன்றுகிறது. ஆரம்பக் காலங்களில் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் போன்றோர் டைரி குறிப்பு எழுதுவதை பழக்கமாக்கி வைத்திருந்தார்கள். பின்னாட்களில் அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், சிறைக் கைதிகள் போன்றோர் எழுதிய நாட்குறிப்புகள் பிரசித்தி பெற்றும் இருக்கிறது. இந்நாட்களில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் மக்களிடையேக் குறைந்து காணப்படுகிறது.
பள்ளி காலத்தில் என் நண்பனொருவன் நாட்குறிப்பு எழுதி வந்தான். ஒரு நாள் அக்குறிப்பு அவன் அப்பா கையில் கிடைக்கவும், பையன் மறுநாள் பள்ளிக்கு சின்னாபின்னமாகி வந்தான். ஏன் எனக் கேட்கிறீர்களா? அவனது நாட்குறிப்பில் நாள் ஒன்றுக்கு எத்தனை சிகரெட் பிடித்தான், எங்கே யாருடன் பிடித்தான் என்பதை தெளிவாக எழுதியது தான் காரணம்.
வருட ஆரம்பத்தில் பலருக்கும் டைரி பரிசாக கிடைத்திருக்கும். எனக்கு இது வரை 5 டைரிகள் கிடைத்திருக்கின்றன. நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை. இந்நாள் வரை டைரிகளில் கவிதைகளை மட்டுமே நிரப்பி வருகிறேன்.
**********
தமிழ்மணத்தின் விருதுகள் 2008 ஆரம்பமாகியுள்ளது. பதிவர்கள் பலரும் தங்களின் படைப்புகளில் சிறந்த பதிவினை பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். மின்னூடகத்தை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திட அவர்களின் இம்முயற்சி பாரட்டதக்கது. நானும் எனது பதிவுகள் சிலவற்றை பரிந்துரை செய்துள்ளேன். மறவாமல் ஓட்டு போடவும்.
*********
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் உலகில் ஆங்கங்கு பிரச்சனைகள் துளிர்ப்பதை தினமும் பார்க்க முடிகிறது. இந்தியா பாக்கிஸ்தான் போர் இப்போதோ இல்லை அப்போதோ என வெடிக்கும் தருவாயில் இருக்கிறது.
இந்நிலையில் ஏ.எஃப்.பி தளத்தில் சமீபத்தில் படித்த தகவல் ஒன்று. அரசியல் பிரச்சனையால் பாங்காக்கில் பாலியல் தொழில் படு மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளதாம். 50% கழிவு கொடுத்திருப்பினும் மக்கள் ஆர்வம் காட்டாததால் பல பாலியல் வியாபார மையங்கள் பலவும் பாயை சுருட்ட ஆரம்பித்துவிட்டனவாம். தாய்லாந்துக்கு சுற்றுபயணிகளின் வருகையும் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
*****
திரைப்படம் பார்த்து வெகு நாட்களாகிறது. சமீப காலமாக ஈப்போ பக்கம் எந்தத் தமிழ்ப் படமும் திரைக் காண்பதில்லை. பொம்மலாட்டம் படம் இரசிக்கும்படி இருப்பதாக கேள்விப்பட்டேன். திரையரங்கில் காண முடியவில்லை என்றாலும் இணையத்தில் பார்க்கலாம் என நினைத்தேன். 'ப்ஃபர்' செய்து வருவதற்குள் தாவு தீர்ந்ததால் அதை பார்க்காமல் இருப்பதே மேல் என நினைத்து அடைத்துப் போட்டேன்.
*****
அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்!
****
இனி இவ்வாண்டு கொசுறு எழுதுவதில்லை எனும் முடிவோடு விடைபெறுகிறேன். நன்றி.
35 comments:
am i me the first?
கொசுறு நல்லாதான் இருக்கு வாழ்த்துக்கள் விக்கியடி சத்தரே(சித்தரே)
/
அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்!/
சூப்பர்!
\\அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்! \\
தம்பி உடம்பு எப்படி இருக்கு
எனக்கும் டைரி எழுதும் பழக்கம் இருக்கு.. உண்மையாக தான் பலருக்கு வருட ஆரம்பத்தில் கிடைக்கும் பரிசு டைரி..டைரி எழுதுவது ஒரு நல்ல பழக்கம் என்பது எனது கருத்து..
சித்தருக்கே விடுமுறையா.....
:-)))
//அதிஷா said...
\\அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்! \\
தம்பி உடம்பு எப்படி இருக்கு
//
ரிப்பிட்ட்ட்டேய்ய்ய்ய்ய்:))
கொசுரு நல்லாத்தான் இருக்கு
எங்க நம்ம ஸ்பரிசம் தொடர்கதை
அப்புறம் ரசிகர் மன்றம் சார்பா உண்ணாவிரதம் இருப்போம்.
விக்கி ரசிகர் மன்றம்
சென்னை கிளை
//இனி இவ்வாண்டு கொசுறு எழுதுவதில்லை எனும் முடிவோடு விடைபெறுகிறேன். நன்றி.
//
வெரிகுட்!
வெரிகுட்!
/ஆயில்யன் said...
//அதிஷா said...
\\அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்! \\
தம்பி உடம்பு எப்படி இருக்கு
//
ரிப்பிட்ட்ட்டேய்ய்ய்ய்ய்:))/
அண்ணே...நிருபிச்சிட்டீங்க...:)
//அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்!//
ஐயா! இதுக்கு பயந்து தான் நான் ஜோகூர் பாருவுக்கே இப்பல்லாம் வர்றதில்லை. ரொம்ப பயமூட்டினா இதை ஒரு பிரச்சார இயக்கமாக இட்டுச் செல்வேன் என்பதை அறியவும். நண்பர்களிடம் சொல்லி பதிவிடச் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும் ஆமா! :P( நன்றி: சேகு)
~~எனக்கு இது வரை 5 டைரிகள் கிடைத்திருக்கின்றன~~
enakku ondru anupi vaikavum...
~~'ப்ஃபர்' செய்து வருவதற்குள் தாவு தீர்ந்ததால் அதை பார்க்காமல் இருப்பதே மேல் என நினைத்து அடைத்துப் போட்டேன்.~~
throw ur pc away.. :P
last but not least. tsunami naalai ninaivu padutiyatarku nandri. pala tension-galil maranthu poi vitten. ENNAIYUM INDRU TSUNAMI taakiyathu thaan. :(
:-)
:)
கொசுறு improve ஆகிக்கிட்டே வருது....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
எழுதாம அந்த டைரிய வச்சிகிட்டு என்ன பண்ணுவிங்க!
ஒரு நாளைக்கு எத்தனை பீர் குடிச்சேன்னு எழுதுங்க!
அப்ப தான் பின்னாடி பூசை கிடைக்கும்
//இனி இவ்வாண்டு கொசுறு எழுதுவதில்லை எனும் முடிவோடு விடைபெறுகிறேன். நன்றி.//
ஏன் விக்கி?குட்டு எல்லாம் உடையும் என்று பயமாக்கும்.என்றாலும் வாழ்த்துக்கள்.
கொசூறு நல்லாத்தானிருக்கு - டைரி எழுதுவது நல்ல பழக்கமா இல்லையா எனப் பட்டி மன்றமே வைக்கலாம். ரகசியங்கள் எழுதப்பட்டு பிறருக்குத் தெரிய வரும் போது பிரச்னைதான். ம்ம்ம்ம்ம்ம்
//மறவாமல் ஓட்டு போடவும்.//
போட்டுட்டா பொச்சு!
அடுத்த வருசத்திலேந்து கொசுறு எழுத ஆரம்பிச்சுடுவீங்கத்தானே?
வணக்கம்.
//இனி இவ்வாண்டு கொசுறு எழுதுவதில்லை எனும் முடிவோடு விடைபெறுகிறேன். நன்றி.//
நான்கு நாள்களுக்காக ஒரு தீர்மானமா ?
தம்பி, நீ தேறிவிட்டாய் !
:)))))))))))))))
நன்றாக இருக்கிறது உங்கள் கொசுறு..
பொம்மலாட்டம்.
அடுத்தது டயரி எழுதுறது எவ்வளவோ நல்ல பழக்கம். நான் டயரியில எழுதுறத இங்கு எழுதினா சண்டைக்கு வாறாங்கள். மனிதர்கள் பலவிதம்?
/இனி இவ்வாண்டு கொசுறு எழுதுவதில்லை எனும் முடிவோடு விடைபெறுகிறேன். நன்றி.//
எவ்ளோ நல்லவன்பா நீயி :))))
இந்தாண்டுக்கு இப்போ தான் ஆரம்பிக்கிதோ? :))
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவனே! -இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அகரம்.அமுதா
வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை
வளம் பெருக.. துயர் மறைய..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சூர்யா
butterflysurya.blogspot.com
அருமையான எழுது படிவம்.. மேலும் சிறந்த படைப்புகளை வெளியிட எங்களின் வாழ்த்துக்கள்.
@ jeeves
நன்றி
@ ஜவஹர்
நன்றி. மீண்டும் வருக...
@ நிஜமா நல்லவன்
நன்றி
@ அதிஷா
உடம்புக்கு எந்த குறையும் இல்லை...
@ வியா
எங்க உங்களை ஆளயே காணுமே? வருகைக்கு நன்றி... நல்ல பழக்கம்...
@ மூர்த்தி
நன்றி
@ சென்ஷி
நன்றி
@ ஆயில்யன்
நன்றி
@ வெங்கட்ராமன்
வருகைக்கு நன்றி... போட்டாச்சு... போராட்டம் வேண்டாம்.
@ஜோதிபாரதி
வருகைக்கு நன்றி அண்ணா...
@ விஜி
வருகைக்கு நன்றி... அனுப்பிட்டா போச்சு...
@ டொன் லீ
நன்றி
@ தூயா
நன்றி...
@ ச்சின்ன பையன்
நன்றி
@ வால்பையன்
ஹா ஹா ஆப்பு வக்க பாக்குறிங்களே...
@ ஹேமா
அது போன வருஷம் எழுத மாட்டேனு சொன்னேன்... ஆனா இந்த வருஷம் எழுதுவேன் :P
@ சீனா
வருகைக்கு நன்றி ஐயா...
@ ஆனந்தன்
ஆமா. சரியா சொல்லிட்டிங்களே...
@ மது
வருகைக்கு நன்றி...
@ கோவி கண்ணன்
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்
@ ராம்சுரேஷ்
நன்றி
@ ஆட்காட்டி
அடுத்தவங்கள பற்றி கவலைப்படாம எழுதுங்க... வருகைக்கு நன்றி...
@ சஞ்சய்
நன்றி தல...
@ கூட்ஸ் வண்டி
வாழ்த்துகள்
@ அகரம் அமுதா
உங்களுக்கும் வாழ்த்துகள் அன்பரே...
@ வண்ணத்துப்பூச்சியார்
உங்களுக்கும் வாழ்த்துகள்...
Post a Comment