கண்ணீர் விட்டது போதும்
தேசம் நீரில் மிதப்பதை பாரும்
வெண்ணிற மலர்கள் தேடும்
பாசம் தேனினும் உயர்வது கேளும்
தாயிடம் பெற்ற பாலினில் பாசம்
தந்தை தந்திட்ட அறிவினில் பாசம்
சேயாய் உன்னை அனைத்து
செர்க்கம் புவியினில் தந்தது பாசம்
அண்ணன் தம்பியாய் வாழ்வில்
அழியா நட்பைக் கொண்டே
பண்பாய் பாரினில் வளர
பழியா உணர்வும் பாசம்
புதியதோர் உலகம் செய்ய
பாயும் நதியாய் நேசம் பிறக்க
புவி மாந்தர்க்கு வேண்டும் பாசம்
தேயும் நிலவாய் பண்பிருப்பின் நாசம்.
5 comments:
புகைப்படம் அருமை..!
@ சென்ஷி
வருகைக்கு நன்றி... இனி படம் போட மாட்டேன் :ப்
கவிதையும் அருமையா இருக்குதுண்ணே...
கொஞ்சம் டைம் விட மாட்டேங்குறியே :))
கவிதை நல்லா இருக்கு
அருமை
@ சென்ஷி
:))
@நசரேயன்
நன்றி. மீண்டும் வருக...
Post a Comment