Tuesday, August 18, 2009

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... :-(

இது எனது 150வது பதிவு. இது வரை எதையும் உறுப்படியாக எழுதி கிழிக்கவில்லை. கீ போர்ட் பனிஷசார இருக்க விருப்பம் இல்லாமல் இல்லை. உண்மையில் எழுதுவதற்கு சட்டியில் (சமஸ்கிருத எழுத்து போட்டு படித்தால் கம்பேனி பொறுப்பாகாது) ஏதும் இல்லை.

சரி சொல்லவந்த மேட்டர் என்னனு சொல்லிடுறேன். 150வது பதிவ டாம் டூம்னு சூப்பரா பண்ணலானு இருந்தேன். ஆனால் இன்னும் ஏதும் எழுதவில்லை. இன்னிக்கு வெட்டியாதான் இருக்கோமேனு நமது கூகிலாண்டவரை நலம் விசாரிக்க போனா நீ மறுபடியும் டெரர் ஆகிட்ட மச்சினு சொல்றாரு.முரண்டு பிடிக்கும் மரணம் - இந்த தலைப்பில் நான் எனது 100வது பதிவை எழுதினேன். கீற்று இணைய தளத்திலும் இந்த கவிதையை காணலாம்.

அங்கு மட்டும் இல்லை, தமிழன் தனது வலைதளத்தில் அதே மாதிரி கவிதை எழுதி இருக்காரு. அத பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஒரு வார்த்தை கூட பிசகாம அவரு என்னை மாதிரியே யோசிச்சி இருக்காரு. வாவ்... இட்ஸ் அ மிராக்கல்...

சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் நான் கடந்த வருடம் எழுதிய கட்டுரைகளில் ஒன்று. ஈகரை தளத்தில் அதே மாதிரி அதே படங்களோடு ஒரு கட்டுரை எழுதி இருக்காங்க. அத பார்த்த அதிர்ச்சியில் என்னால் இரண்டு நாட்களாக சோறு சாப்பிட முடியவில்லை. படங்களும் நான் போட்ட படங்கள் மாதிரியே இருக்கு. அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தையும் கவனிக்கவும்.என் கட்டுரைக்கும் கவிதைக்கும் வெளம்பரம் போடுவதற்கு நன்றி... ஆனால் என் பெயரை குறிப்பிட மறந்துவிட்டீர்கள்...

கடைசியா ஒரு கேள்வி: எப்படி அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெக்கம் இல்லாமல் குளிர்காய்கிறீர்கள்?

25 comments:

Unknown said...

ரொம்ப மோசம்... என்னத்தைச் சொல்ல!?

அப்பாவி முரு said...

விக்கியை இன்னும் கொஞச் காலத்தில் பெரிய டெர்ரர் ஆக்கிடுவாங்க போலிருக்கே...


வாழ்க தமிழ் வலையுலகம்

RAHAWAJ said...

வாழ்க்கையிலே இதுவெல்லாம் சகஜம்பா இதுக்கு போய் சோர்ந்திடலாமா,இனி வரும் உங்கள் பதிவுகளை காப்பியடிக்க முடியாதபடி இன்னும் நால்லா எழுத இலச்சியம்மன் ஆத்தா துணை புரிய வேண்டுகிறேன்

பரிசல்காரன் said...

இதுக்கு எதற்கு வருத்தம் விக்கி? இது உன் உயரம் கூடியிருப்பதைத்தான் காட்டுகிறது.

நீங்களும் ரௌடிதான்!

வாழ்த்துகள்!

கார்க்கிபவா said...

ஃப்ரீயா விடு சகா..

வாழ்த்துகள்...

Tamilvanan said...

150க்கு வாழ்த்துக்கள்

//எப்படி அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெக்கம் இல்லாமல் குளிர்காய்கிறீர்கள்?//

சுய சிந்தனையற்ற என்கிற செம குளிர்ல படுத்தால்,அடுத்தவனோட உள்ளாடை கூட போர்வையாய் தெரியும்.

மனோவியம் said...

வருத்தம் வேண்டாம் விக்கி....இனனும் நீங்கள் நடை போட வேண்டிய தூரம் அதிகம்.உங்கள் எழுத்து நடை அவர்களை கவர்ந்து இழுத்தான போலும்......நீங்கள் பாக்கியசாலி.....ஆHஆHஆHஆHஆHHஆ
இனிப்பு உள்ள இடத்தில்தானே ஈ வந்து சேரும்..இஈஈஈஈஈஈஈஈஈஈ

Unknown said...

அப்போ நீங்க காப்பி அடிக்கலியா?

Anonymous said...

விக்கி,

இதுக்கே சோர்ந்துபோனா எப்படி?

வெட்டிப்பயல், கார்க்கி போன்றோரின் பதிவுகள் அன்றாடம் களவாடப்படுகின்றன.

அதிலும் வெட்டிப்பயலின் பதிவு ஒன்றை ஒருவர் திருடி சாருவிற்கு அனுப்பி சாருவும் அதை சிலாகிச்சுப் பதிவும் போட்டுவிட்டார். பிறகு எல்லோருமாக முறையிட்டு அதை நீக்கம் செய்தோம்.

இன்னொரு வன்முறை பிறர் பதிவை தானே எழுதியது போல மெயிலாக அனுப்புவது. அப்படிப் பட்ட மெயில்கள் வெட்டிக்கும், கார்க்கிக்கும் வரும்; அவர்கள் எழுதியவை வேறு ஒருத்தர் பெயரில்.

எனக்கு உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பிறர் காப்பியடிக்கும் அளவுக்கு தகுதியுள்ள நல்ல பதிவுகளை எழுதுகிறாய் என அர்த்தம்.

காய்க்கும் மரம்தான் கல்லடி படும்.

Athisha said...

மச்சி 150க்கு வாழ்த்துக்கள

வால்பையன் said...

வலையுலக பிரபலங்களின் பதிவுகள் இம்மாதிரி திருடு போவதை உடனே தடுக்க வேண்டும்!

sivanes said...

:-) - உங்கள் 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

:-( - உங்களுக்கு நேர்ந்த சோகத்திற்கு!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கிருஷ்ண பிரபு

ஒன்றும் சொல்வதற்கில்லை... :)

@ அப்பாவி முரு

அஹா.....

@ ஜவஹர்

சரி சந்திக்கும் போது பேசிக்கலாம்...

@ பரிசல்காரன்

என் உயரத்தை பத்தி இப்படியா பப்லிக்ல பேசுறது... :)) நானும் ரௌடி தான்... ஜீப்ல ஏறிகிட்டேன்...

@ கார்க்கி

விட்டுட்டேன் சகா...

@ மனோகரேன் கிருஷ்ணன்

அட அட அட தத்துவம் தத்துவம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜய்சங்கர் ஜெகநாதன்

மாப்பிள்ளை.... இது சரியா இல்லை... கல்யாணத்துக்கு ஷாப்பிங் போயாச்சா?

@ வடகரை வேலன்

சோர்வாகவில்லை அண்ணா... இது ஏற்கனவே நடந்திருக்கிறது... இன்னமும் நடந்துக் கொண்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்... உங்கள் பாராட்டுக்கு நன்றி...

@ அதிஷா

நன்றி மச்சி

@ வால்பையன்

கலைஞர் மாதிரியே பேசுறிங்க... :)

@ சிவனேசு

பகிர்வுக்கு நன்றி :)

Thamiz Priyan said...

////எனக்கு உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பிறர் காப்பியடிக்கும் அளவுக்கு தகுதியுள்ள நல்ல பதிவுகளை எழுதுகிறாய் என அர்த்தம்.

காய்க்கும் மரம்தான் கல்லடி படும்.////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

Thamiz Priyan said...

150 க்கு சிறப்பு வாழ்த்து(க்)கள் விக்கி!

Vinitha said...

150 :-)

Vinitha said...

How did you do you blog Title? photoshop? does that font come there?

கே.பாலமுருகன் said...

படைப்பைத் திருடுபவன், அதைத் திருடி வக்கனையாக தன் பெயரிட்டுப் போட்டுக் கொள்பவன அறிவு சுரண்டலைச் செய்பவன். இவன் மகா சோம்பேறி மேலும் அடுத்தவன் உழைப்பில் வயிறு வளர்க்க நினைப்பவன்.

உங்கள் படைப்பைத் திருடியவனுக்கு, . . அவனும் அவன். . . ஏதாவது வந்துரே போது. .

Sanjai Gandhi said...

தொர ரவுடி ஆய்டிச்சிடோய்.. 150க்கு வாழ்த்துகள் விக்கி.. :)

Unknown said...

ரொம்ப கொடும விக்கி..... !! இதை எந்த ஒரு நிலையிலும் ஆதரிக்க கூடாது.... !!

Unknown said...

150 அடுச்துக்கு வாழ்த்துக்கள்....

நட்புடன் ஜமால் said...

நூற்றைம்பதுக்கு வாழ்த்துகள்!

----------

திருடர்களை என்ன செய்ய - அவங்களாகத்திருந்தட்டும்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ் பிரியன்

ரிப்பீடு போட்ட தமிழ் பிரியனுக்கு நன்ரி.

@ வினிதா

நன்றி... இதை ஏற்கனவே வேறொரு நண்பர் கேட்டிருந்தார். அதை நான் செய்யவில்லை. நண்பர் கார்த்திக் செய்து கொடுத்தார். கோரல் டிராவில் வடிவமைக்கப்பட்டது.

@ பாலமுருகன்

வருகைக்கு நன்றி...

@ சஞ்சை காந்தி

நன்றி :)

@ லவ்டேல் மேடி

நன்றி...

@ ஜமால்

நன்றி பாஸ்...

கிரி said...

விக்னேஸ்வரன் இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க...இது உங்கள் திறமைக்கான சான்று

உங்க 150 க்கு வாழ்த்துக்கள்