ஒரு மலேசிய திட்டம்:
இனத்தாலும் மதத்தாலும் மாறுபட்டு இருக்கும் மக்கள் ஒருமித்த சிந்தனையுடன் மலேசியன் அல்லது மலேசிய ஒருமைபாட்டு திட்டத்துக்கு வழி செய்தல் இதன் முக்கி அம்சங்களுள் ஒன்று.
இதைப் பற்றிய மேலாதிக்க தகவலுக்கு கீழ்காணும் வலைத்தளங்களைக் காணவும்:
http://www.1malaysia.com.my/index.php?lang=en
http://www.themalaysianinsider.com/index.php/malaysia/32325-najib-denies-1-malaysia-concept-is-alien-to-muslims-
http://thestar.com.my/news/story.asp?file=/2009/4/15/nation/3697685&sec=nation
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்
நன்றி: http://www.1malaysia.com.my/
அப்படி இருக்க இதன் வலைதளத்தின் முகப்பில் மாலாய், ஆங்கிலம், சீன மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியதுவம் தமிழுக்கு கொடுக்கப்படாதது வருத்தத்துக்குறிய ஒன்று. தமிழ் நல காப்பாளர்களும், அரசியல் தலைவர்களும் இதை கருத்தில் கொள்ளவில்லையா?
மொத்தமாக ஆங்கிலத்தில் இருந்துவிட்டால் சிறப்பு, அல்லது அனைத்து மொழிகளிலும் இருக்குமானால் இன்னும் சிறப்பு. ஒரு மலேசிய திட்டத்தின் நோக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே இப்படி ஓரக்கண் பார்வையோடு இருக்குமானால் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
ஓங்குக ஒரு மலேசிய திட்டத்தின் புகழ்!
16 comments:
//அப்படி இருக்க இதன் வலைதளத்தின் முகப்பில் மாலாய், ஆங்கிலம், சீன மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியதுவம் தமிழுக்கு கொடுக்கப்படாதது வருத்தத்துக்குறிய ஒன்று. தமிழ் நல காப்பாளர்களும், அரசியல் தலைவர்களும் இதை கருத்தில் கொள்ளவில்லையா?//
சொல்ல வேண்டிய இடத்துல சொல்லுங்க விக்கி.
வருத்தத்திற்கு உரிய விஷயம்தான்.....!!!!
அங்க தமிழர்களுக்கு கஷ்டமா?
அங்க எல்லாம் பற்றுணர்வுக்கு திட்டம் போடறாங்க. இங்க பஞ்சத்துக்கே அறுபது வருஷமா திட்டம் போட்டாலும், சாப்பாட்டுக்கு வழியில்லாமதான இருக்காங்க! அது சரி இங்க எது செஞ்சாலும் 120 கோடி பேருக்கு செய்யுறாங்க!
தகவல் அறியச் செய்தமைக்கு நன்றி விக்னேஷ்.
இதற்கான உடனடி நடவடிக்கை தக்காரைக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது.
விரைவில் '1மலேசியா' வில் தமிழுக்கும் இடம் கிடைக்க ஆவன செய்வோம்.
என்ன செய்வது, தமிழுக்கும் தமிழனுக்கும் எது வேண்டுமானாலும் போராடிப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.
@ சுபா
தெரிய வேண்டியவங்க ஏன் இவ்வளவு நாளும் கவனக் குறைவாகவோ அல்லது தெரிந்துக் கொள்ளாமலும் இருந்திருக்கிறார்கள்? தமிழ் பத்திரிக்கைகள் இதை சுட்டிகாட்டி இருக்கலாம், பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டார்களோ?
@ லவ்டேல் மெடி
:(
@ பப்பு
கஷ்டம் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் இரண்டாம் விடயம். எனக்கு சரியென படவில்லை. பலருக்கும் அப்படி தான் என அறிகிறேன். சொல்லியாகிவிட்டது. இனி பொறுத்துப் பார்க்க வேண்டும்.
@ சுப.நற்குணன்
தமிழ் நெறி கழகத்தின் சார்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் மகிழ்சி அடைகிறேன் ஐயா. இது பற்றிய தவல்கள் தெரியப்படுத்துவீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும்.
என்ன செய்வது நமக்குள் ஒற்றுமை இல்லை. பதவி ஆசையும் சுயநலமும் மண்டி கிடக்கிறது.
வலைப்பதிவுகளில் கூட உங்க ஆத்தா எங்க ஆத்தா என மரியாதையோடும் ஆரோக்கியத்தோடும் பேசிக் கொள்வதை காண முடிகிறதே.
வருத்தமா இருக்கு விக்கி...!
நாம் சுயத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.
கட்சியில் ஆட்சியில் பதவியில் பொறுப்பில் இருந்து சுகம் காணுபவர்கள் செய்ய வேண்டியதை ஒரு வலைப்பதிவாளரான நீங்கள், ஒரு அரசாங்கத்தின் கவனக் குறைவை அல்லது அலட்சியத்தை சுட்டிக் காட்டியிருப்பது போற்றுதல்குறியது.
//என்ன செய்வது, தமிழுக்கும் தமிழனுக்கும் எது வேண்டுமானாலும் போராடிப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.//
நன்கு கூறியுள்ளார் திரு சுப.நற்குணன் அவர்கள்!
நமது நாட்டில் தமிழர்கள் மக்கள் தொகையில் குறைவு, அதிலும் அவர்கள் இதுபோன்ற வலைப்பதிவுகளை காண்பது குறைவு, அதைவிட படித்த தமிழர்கள் பலர் ஆங்கிலத்துக்கு அளிக்கும் முன்னுரிமை(இங்கே நான் தலைவணங்கும் தமிழுக்காக வாதாடும் நல்லுள்ளங்கள் பலர் இதற்கு விதிவிலக்கு) எனும் எண்ணம் இந்த ஆதிக்க வர்க்கத்திற்கு, முதலில் நமது இக்ஷ்டப்படி செய்வோம், தமிழர்கள் முட்டி மோதி போராடட்டும் பிறகு பார்க்கலாம் எனும் துர்பாக்கிய நிலைதான் என்றும் இங்கே! மிக முக்கியமான செய்தி விக்னேக்ஷ், தகவலுக்கு நன்றி!
@ ஜோதிபாரதி
உணர்ந்தே செய்கிறோமா?
@ தமிழ்வாணன்
நன்றி
@ சிவனேசு
உங்கள் கருத்துக்கு நன்றி...
வருத்தத்திற்கு உரிய விஷயம்தான்.இதனை நாம் வருந்தி பயன் இல்லை.
வருத்த பட வேண்டியவர்கள் ஏதும் செய்யவில்லையே..
@ வியா
:) என்ன சொல்றிங்க??? வருத்தப்பட கூட நமக்கு உரிமை இல்லையா? இப்படி பொதுவில் சொன்னால் தான் நாலு பேரை சென்றடையும்.
அப்போ மலேசியா தான் அடுத்த இலங்கையா!?
@ வால்பையன்
நோ கமெண்ட்... :)
Hi anna! yup i read it so sad la thinking about it! Why cant our Leaders are behave such way and dont want Build our empire through Language!
Viknesvary.
ஹ்ம்ம் இதுவும் ஒரு அரசியல் நாடகம்தானே ஒரே மலேசிய திட்டத்திற்கு எதற்கு மும்மொழி ஒரே மொழி போதாதா? மலேசியர்கள் என்ற உணர்வைவிட நம் அனைவருக்கும் தமிழர்...மலாய்க்காரர்...சீனர் என்ற உணர்வுதான் அதிகம்.
@ விக்கி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ புனிதா
திட்டத்தில் உள் குத்துகள் அதிகமாக இருக்கிறதா தோணுது :))
Post a Comment