மணல் பறக்கும் பாலைவனத்தில் அதிசயத்தக்க ஒன்று பிரமிடுகள். சரித்திரச் சுவடுகளை அறிய பேருதவியாக இருந்தவற்றுள் ஒன்று. பிரமிடுகளை பற்றி சொல்லும் போது அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த அரசர்களையும் உயர்குடியினரையும் தவிர்க இயலாது. பிரமிடுகள் முக்கியமாக அமைக்கப்பட்டதே இந்த அரச குடியினர்களின் பிணங்களை பதப்படுத்தி 'மாற்று உலகத்துக்கு' அனுப்ப தான் என்பது பொதுவாக அறிந்த ஒன்றே.
'மம்மி'கள் பற்றிய ஆராய்ச்சிக்களும் ஆய்வுகளும் வியகதக்கவை. மம்மிகள் மற்றும் பிரமிடுகள் சம்பந்தமான எனது தகவல் சேமிப்புகளுக்கு என்னை கட்டி இழுத்தது தூத்தன்கமன் எனும் பாரோ மன்னனின் ஆய்வுகள் தாம். இது சம்பந்தமான கட்டுரை போதுமான விளக்கங்களுடன் முன்னமே எழுதியிருக்கிறேன்.
இன்றய திரையுலகம் மம்மிகளை பேய்களாகவே காட்ட முற்படுகின்றன. மம்மிகள் என்றாலே வெறுக்கத்தக்க ஒன்றாகவும், அகோரமான மர்ம பொருள் எனவும் மக்கள் கருதுகிறார்கள். மம்மிகள் புதைக்கப்பட்ட கல்லறைகள் திறக்கப்படும் போது பல வருடங்கள் அழுத்தத்தில் இருந்த மைக்ரோஸ்போராக்கள் அதீத செயல்பாடுகளோடு இயங்கச் செய்கின்றன. இதன் காரணமாக குறைவான நோய் எதிர்ப்புச் சத்தியைக் கொண்டவர்கள் மம்மிகள் அறையப்பட்ட கல்லறையை அணுகிய சில காலத்தில் இறக்க நேரிடுகிறது. இது மம்மிகளின் பழி வாங்கள் என மேலும் மக்களிடம் பீதியை கிளப்பிவிடுகிறார்கள்.
பிரமீடு திருட்டு வெள்ளையன் ஆரம்பித்து வைத்த ஒன்றல்ல. அரசன் வேற்றுலகில் மிகுந்த சுகத்துடன் வாழ வேண்டுமென பிரமிடுகள் சொல்வம் கொழிக்க நிறப்பப்படுகிறது. துத்தன்கமன் அரசனின் கல்லறயில் கண்டெடுத்த அவனது செருப்பு கூட தங்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது. எகிப்தியர்களின் நம்பிக்கைபடி கடவுளர்களாகிய அரசர்கள் பூமியில் தமது ஆட்சியை முடித்து வேற்றுலகிற்கு செல்கிறார்கள். அரசரை நன்முறையில் வழி அனுப்ப தங்கத்தால் ஆன பொருட்கள் கல்லறையில் நிறப்பப்படுன்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் தைரியம் கொண்ட சில எகிப்திய திருடர்களாலும் பிரமீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் ஆராய்ச்சி எனும் பெயரில் கால் பதித்த வெள்ளையன் இவ்வேலைகளில் கொஞ்சம் தீவிரம் செலுத்தி கொள்ளையடித்திருக்கிறான். இப்படிபட்ட திருட்டுக்களை தவிர்க்கவும் பிரமிடுகள் மற்றும் மம்மிகள் சம்பந்தமான பீதியான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கலாம்.
எகிப்திய அரசன் ஃபாரோ என அறியப்படுவான். துத்தன்கமன் ஃபாரோவின் மம்மி கண்டெடுக்கப்பட்டது 'தி வேளி ஆப் கிங்' எனப்படும் பகுதியாகும். துத் சரித்திரத்தில் சொல்லப்படுபவர்களுள் ஹைதித் எனப்படும் அரசகுமாரனும் ஒருவன். துத் அரசனின் மரணத்தைப் போலவே இவனது மரணமும் சில மர்மங்களுக்குறியது.
முன்பு ஹித்தித்தின் உடல் என கூறப்பட்ட மம்மியும் பின்னாட்களில் அதுவல்ல என அறியப்பட்டது. கஹேராவில் இருந்து சுமார் 460 கிலோமீட்டர் தூரத்தில் Deir El Bahri எனப்படும் பள்ளத்தாக்கு இருக்கிறது. கால்கள் இருக்கக்கட்டப்பட்டு, இதயத்தை இருகைகளில் பற்றியபடியும், கடுமையான முகத்தோடு கத்திக் கதற வாய் திறந்த தோற்றத்தில் ஒரு மம்மி கண்டெடுக்கப்பட்டது. 'கதறும் மம்மி' என அடையாளப்படுத்தப்பட்ட அவ்வுடல் பலமான ஆராய்ச்சிகளுக்குட்பட்டது. ஆரம்ப நிலை ஆராய்ச்சிகள் அந்த மம்மியிடன் உடல் துத்தன்கமன் காலத்தில் வாழ்ந்த ஹித்தித் எனும் அரசகுமாரனுடையது என குறிப்பிட்டன.
1881-ஆம் ஆண்டு கதறும் மம்மி கண்டெடுக்கப்பட்டது. தற்சமயம் கஹேராவில் அமைந்துள்ள எகிப்திய தொல்பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த மம்மியில் செய்யப்பட்ட மேலாதிக்க ஆராய்ச்சிகள் எகிப்திய நாகரீகத்தில் திட்டமிட்ட ஒரு கொலை முயற்சியை வெளிக்கொனர்ந்தது.
எகிப்திய நாகரீகத்தில் குறிப்பிட தக்க அரசருள் ஒருவர் 3-ஆம் ரம்சேஸ் ஃபாரோவாகும். அவரின் மகனான Pentewere எனும் அரசகுமாரன் ஆட்சியைப் பிடிக்க தந்தையை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறான். ஆராய்ச்சியில் கி.மு 12-ஆம் நூற்றாண்டின் பைப்ரஸ் படிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3-ஆம் ரம்சேசின் மனைவி அவரைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் சம்பந்தப்பட்ட விசாரனை குறிப்பு அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.சதி திட்டம் விரைவாக குட்டுடைக்கப்பட்டது இளவரசனின் போராத காலம். சதிகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அரச துரோகம் செய்பவர்களை மம்மியாக்க்கி கல்லறையில் வைக்கப்படுவதில்லை. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் அவ்வுடல் அழிக்கப்பட்டுவிடும். அது ராஜ வம்சத்தவராக இருப்பினும் விதி விளக்கு கொடுக்கப்படவில்லை. 3-ஆம் ரம்ஸேசின் ஆட்சியை ஆதரித்தவர்களைப் போலவும் Pentewere அரசகுமாரனை ஆதரித்தோரும் இருந்திருக்கிறார்கள்.
Pentewere அரசகுமாரனுக்கு இரண்டு தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அரசனை கொல்ல திட்டமிட்டது. இரண்டு தந்தையை கொல்ல திட்டமிட்டது. முதல் குற்றத்திற்கு விஷத்தை அருந்த தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாம் குற்றத்திற்கு அவனது உடல் கல்லறையில் வைக்க தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் வைக்கப்படாத உடலுக்கு மறுபிறப்பு இல்லை என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை.
அரசகுமாரனின் ஆதரவாளர்கள் அவன் உடலை கைப்பற்றி அவசர அவசரமாக பதப்படுத்தி இருக்கிறார்கள். மம்மியாக்கப்படுவதற்கான வேலைபாடுகள் முழுமையடையவில்லை என்றே சொல்ல வேண்டும். கதறும் மம்மியின் உடல் முழுமையாக உலர்வடையவில்லை. மூலை மற்றும் உள்ளுறுப்புகள் அகற்றப்படாமல் ஒன்றும் பாதியுமாக செய்திருக்கிறார்கள்.
அது போக அவ்வுடல் ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கைபடி ஆட்டுத் தோலில் சுற்றப்பட்டது புனிதமற்றது எனப் பொருள்படும். தீயவர்களின் உடலை இப்படி ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.
Pentewere-யின் உடல் ஏன் தூக்கியெறியப்படமால் பதப்படுத்தப்பட்டது எனும் கேள்ளி எழும் சாத்தியங்கள் உண்டு. பிரபுக்களின் சபையினரில் யாரேனும் இதை விரும்பாமல் இருந்திருக்கலாம். அவர்கள் அரசகுமாரனின் பக்கம் இருந்தவர்களாக இருந்திருக்கலாம்.
சில ஆராய்ச்சியாளர்கள் அது Pentewere-யின் மம்மிதான் என்பதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். 3-ஆம் ரம்சேஸ் அரசனின் மம்மிக்கும் கதறும் மம்மிக்கும் இருக்கும் ஒறுமைபாடுகளை பற்றிய மரபணு சோதனைகள் பல கட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
18 comments:
அப்படியே பிரமிடுக்குள் நுழைந்து வெளிவந்தாற்போல் மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்.
சிறந்த ஆய்வாளர் விருது வழக்கத்துக்கு வந்தால் அது உங்களுக்குத்தான்.
அருமையான எகிப்து ஆய்வு.
மேல்நாட்டு ஆய்வாளர்களின் தன்மையை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.
ஆனால்..
//பிரமீடு திருட்டு வெள்ளையன் ஆரம்பித்து வைத்த ஒன்றல்ல//
வெள்ளையன் என்ற சொல்லாடலை தவிர்க்கவும்.மேற்கத்திய நாட்டினர் என சொல்லுங்கள். எழுத்தில் ஏன் நிறப்பாகுபாடு?
நல்ல முயற்சி, தொடருங்கள்.
சிறந்த ஆய்வாளர் விருது வழக்கத்துக்கு வந்தால் அது உங்களுக்குத்தான்.//
ரிப்பீட்டு
ஒரு பழம்பெரும் பிரமீடுகளின் சரித்திரத்தின் மீது இன்று பல மேலாதிக்க ஆராய்ச்சிகள் வணிக நோக்கத்துடன் பாய்ந்துகொண்டே இருக்கின்றன.
அதைத் திரைப்படமாகவும் எடுத்தார்களே.
முழுக்க முழ்க்க மம்மிகளை கேலி செய்யும் ஒரு படம், "மம்மி ரிட்டன்ஸ்" என்று அவைகளை ஒரு பேயாக வடிவமைத்து பயம் காட்டி, மேலாதிக்க ஆராய்ச்சியாளர்களைக் கதாநாயகனாக காட்டி, பாலைவன பிரதேசத்தையும் பிரமீடுகளையும் காட்சிகளில் சிதைத்துக் காட்டி பணம் பண்ணிய "மம்மி ரிட்டன்ஸை" ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இந்தத் திரைப்படம் குறித்து ஒரு விமர்சனம் போடுவது சிரப்பாக இருக்கும் விக்கி.
-வாழ்த்துகள் விக்கி
அருமையான வரலாற்று பதிவு தோழரே..... !! நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்...!! மேழும் தொடர வாழ்த்துக்கள்..!!
அடுத்த தொடர் எதிர்பார்ப்புடன்,
லவ்டேல் மேடி.....
மம்மி படம் அடுத்த பாகத்திற்கு கதை ரெடி!
@ கோமா
ஆஹா... காமிடி ஒன்னும் இல்லையே :)))
@ ஸ்வாமி ஓம்கார்
கருத்துக்கு நன்றி ஸ்வாமி, அவன் மேல் நாட்டினன் என்றால் நாம் கீழ் நாட்டினனா? கருப்பு என்பதை தாழ்வாக நினைப்பவர்களுக்கு நிறப்பாகுபாடு தெரியலாம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி அடுத்த முறை இந்த வார்த்தையை தவிர்க்க முயல்கிறேன்.
@ அப்பாவி முரு
நன்றி தலைவரே... :)
@ புதுகை தென்றால்
நீங்களுமா? அவ்வ்வ்வ்...
@ பாலமுருகன்
The mystery of Egypt போன்ற சில நல்ல படங்களும் வெளிவந்துள்ளன. கமர்சியல் ரீதியாக எடுக்கப்படும் படங்கள் தான் மக்களிடையே வெகுவாக சென்றடைகின்றன. அதனால் தான் மம்மி ரிட்டன் போன்ற படங்கள் அமோக வரெவேற்பை பெற்றன.
ஆராய்ச்சிகள் வணிக ரீதியாகவே எப்போதும் இருந்து வருகின்றன. தனது பக்கம் வேறோரு ஆராய்ச்சியாளன் வந்து பணம் பண்ணிவிடுவானோ, வெற்றிபெற்றுவிடுவானோ, தனது முயற்சிகள் வீணாகிவிடுமோ என்ற பயமும் இவர்களிடையே இருக்கச் செய்வதனாலும் இருக்கலாம்.
@ லவ்லி மேடி
நன்றி பாஸ்... எழுத நிறையவே இருக்கிறது... தொடர்ந்து ஒரு விசயத்தையே எழுதிக் கொண்டிருந்தால் போர் அடித்திடுமே :) கொஞ்ச நாளுக்கப்புறம் எழுதுறேன்.
@ வால்ப்பையன்
நீங்க கதா நாயகனா இருக்க தயாரா? :)
நல்ல பதிவு இன்னும் இது போன்ற விசயக் கட்டுரைகள் எதிர்ப்பார்க்கிறேன்
//
பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கைபடி ஆட்டுத் தோலில் சுற்றப்பட்டது புனிதமற்றது எனப் பொருள்படும். தீயவர்களின் உடலை இப்படி ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.
///
அரசகுமாரனின் ஆதரவாளர்கள் அவன் உடலை கைப்பற்றி அவசர அவசரமாக பதப்படுத்தி இருக்கிறார்கள்.
//
அரசகுமாரனின் ஆதரவாளர்கள் இப்படி புனிதமற்றது என நம்புவார்களா..?
@ தமிழ்வாணன்
நன்றி...
@ மின்னுது மின்னல்
நம்புவதற்கான சாத்தியம் இல்லை. அதனால் தான் அவர்களால் அந்த உடலை சரியான முறையில் பதப்படுத்த இயலாமல் போயிருக்கக்கூடும். சில பல இடர்பாடுகளுக்கிடையே இது நடந்திருக்க வேண்டும்.
அருமையான பதிவு... தொடருங்கள் விக்கி...
எகிப்தில் சுற்றுப்பயணம் சென்ற போது, பிரமிட்கள் மற்றும் "வலி ஒப் தி கிங்க்ஸ்" எல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பத்தில் பிரமிட்களிலும் பின்னர் 'வலி ஒப் தி கிங்க்ஸ்' பகுதியிலும் மம்மிகளை பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார்கள். தற்போது எந்த இடத்திலும் மம்மிகள் இல்லை. எல்லாவற்றையும் ஆராய்ச்சிக்காக கொண்டு சென்று விட்டார்கள். பொது மக்கள் பார்வைக்காக ஒரு மம்மி மட்டும் கைய்ரோ மியூசியத்தில் உள்ளது. அதை பார்ப்பதற்கு மட்டும் ஸ்பெஷல் கட்டணம். "வலி ஒப் தி கிங்க்ஸ்" பார்க்கத் தவறக் கூடாத இடம். பிரமிட் போல இல்லாமல், சுரங்கம் கிண்டி அங்கே மம்மி வைத்திருந்திருக்கிறார்கள். மம்மி அடக்கம் செய்த பகுதி சுவர்களில் அழகான ஓவியங்கள் காணப்படுகின்றன. மன்னனின் ஆவி மறு உலகம் செல்லும் வழியை குறிப்பிடும் படங்களாம் அவை. எகிப்திய அரசர்கள் காலத்தில் மம்மி புதைத்த இடத்தில் இருக்கும் தங்க நகைகளை மட்டும் தான் திருடுவது வழக்கம். ஆனால் எகிப்தில் வெள்ளையன் கால் பதித்த பிறகு தான், அரிய கலைப்பொருட்கள் எல்லாமே திருட்டு போக ஆரம்பித்தன. முதலில் பிரஞ்சுக்காரர்கள். பிறகு பிரிட்டிஷ்காரர்கள். கொள்ளையடிப்பதில் போட்டி ஏற்பட்டு இவர்களுக்குள் கோஷ்டி மோதல்கள் நடந்திருக்கின்றன.
நல்ல படைப்பு விக்கி, "கதறும் தோற்றத்திலான மம்மி பற்றிய தகவல்கள்" ருசிகரமானவையாக அமைந்திருந்தன, சரி உப பாண்டவம் பற்றிய விமர்சனம் எழுதும் எண்ணமே இல்லையா உங்களுக்கு?
@ கிருஷ்ண பிரபு
நன்றி நண்பா
@ கலையரசன்
மிகவும் பயனான தகவல்களை இங்கு சேர்க்க உதவியமைக்கு நன்றி. இதற்கு வெள்ளையன் சொல்லிக் கொண்டது வைட் மேன் பர்டன் எனும் வெள்ளையனின் சுமை. நம்மை முன்னகர்த்திச் செல்கிறார்களாம்.
@ சிவனேசு
வாங்க... :) இல்லைங்க படிக்கும் எல்லா புத்தகங்களுக்கும் விமர்சனம் எழுதுவதில்லை.நேரம் கிட்டும் போது நிச்சயம் எழுதுகிறேன்.
விக்னேஸ்வரன் சுவாராசியமா எழுதி இருக்கிறீர்கள்..
புதிதாக பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
@ கிரி
நன்றி...
Post a Comment