Saturday, June 13, 2009

செவ்வாய் கிரகத்தில் MLM சிஸ்டத்தை அறிமுகப்படுத்துவீர்களா?

பதிவு போட மேட்டர் கிடைக்காமல் குவாட்டர் அடித்துவிட்டுக் குப்புற படுத்துக் கிடந்த சமயத்தில் MAIL BOXல் கிடக்கும் கடிதத்தை வெளியிடலாமே எனும் சமயோசிதம் என் சிற்றறிவுக்குள் சட்டென வெட்டிச் சென்றது. இதனால் மடல்களுக்கு பதில் கொடுக்காமல் தலைக்கனம் பிடித்தவனாக இருக்கிறேன் எனும் அவப் பெயரை நான் அகற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் என்னையும் ஒரு டெரர் என நினைத்து மெனக்கெட்டு மடல் போடுபவர்களுக்கும் பதில் சொல்ல வாய்ப்புக் கிடைத்தபடியும் இருக்குமென உணர்கிறேன்.

கடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள் எனும் தலைப்பில் வட்டி முதலைகள் பற்றி நான் எழுதியக் கட்டுரைக்கு அன்பர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். ஒட்டு மொத்த இந்தியச் சமுதாயத்தையும் தூக்கி நிறுத்த ஒரு திட்டம் வைத்திருப்பதாக தமது மடலில் குறிப்பிட்டுள்ளார். அவர் கடிதத்தைப் படிக்க மேலும் தொடருங்கள். அவர் எழுதியதைக் கீழே கொடுத்துள்ளேன்.

///////////////////////////////////////////////////////
தங்களின் பிளாக் ஃபாலோ செய்யும் ஃபாலோவர்ஸ்களில் அடியேனும் ஒருவன்.
நல்ல பல விசயங்களை அலசி ஆரய்ந்து வருகிறீர்கள்.
கடைசியாக 'வட்டி முதலைகளின்' மேல் கொண்ட தங்களின் அலசல் நன்று.

நான் கோவின் @ ரகு @ ராகவன், சிலாங்கூர், ரவாங்கை சேர்ந்தவன், வணக்கம்.

நான் தங்களைத் தொடர்பு கொள்வதன் நோக்கம், ஒரு விசயம் பற்றி தங்களிடம் பேசவே.

உங்கள் அனுமதியோடு (தந்துவிட்டீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்) :) பேச விரும்புகிறேன்.

என் கருத்தின்படி, நம் இந்திய சமுதாயம், பொருளாதார பிரச்சனையின் காரணமாகத் தான், இந்நாட்டிலே மிகவும் தாழ்வான நிலையில் அல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது என்பது என் திடமான கருத்து.

சமீப காலத்தின் முன், நான் இணைந்த ஒரு பொருளாதார திட்டம், நம் இன (மட்டுமன்றி அனைவரின்) பொருளாதார பிரச்சனையும், மிகக் குறைந்த முயற்சி மற்றும் மிகக் குறைந்த மூல தானத்துடனும், தீர்த்து வைக்க முடியும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்த திட்டத்தில் நமக்கு தேவை எல்லாம் ஒன்றுபட்ட செயல் முறையே

தயை செய்து கீழ் கண்ட வெப்சைட்டை பாருங்கள், தங்களின் கருத்தைக் கூறுங்கள்.

(one-time-out-pocket of rm230 and bring in two friends, and ONCE one's team gathers 30 downlines, it will start create
rm45,000 monthly OR each cycle) NOT BUT AGAIN AND AGAIN there after.) www.g1g4lite.net (guest code 71184)
this is a three-year-old univesal programme based from Canada.
Not a business but a PEER-TO-PEER HELPING, GIFTING SYSTEM. migavum arumaiyaaga poikittu iruku. $$$$$ neradiyaaga nam bank account-ku vantidum.

தேவை எனின் உங்களை நேரிடையாக சந்திக்க தயாராக உள்ளேன்.

நம் மக்களின் நலம் பொருட்டு, தங்களின் கூட்டுறவு நாடும்

தங்களின் புதிய நண்பன்

Govind
//////////////////////////////////////////////////////////

என் நலன் கருதியும் இந்நியச் சமுதாயத்தின் நலன் கருதியும் நேரம் ஒதுக்கி பாடுபட்டு இம்மடல் அனுப்பியதற்கு நன்றிகள் பல.

ஒரு நாட்டின் மக்களின் நலன் மேம்பட இது தான் தீர்வு என்றால் இத்திட்டம் என்றோ பிரபலமாகி இருக்கக் கூடும். 'பிரமிட் சிஸ்டம்', 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' இன்னும் பிற என எவ்வளவோ திட்டங்கள் இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

யாராவது 'சார் ஒரு முக்கியமான விசயமா பேசனும், வாங்க ஒரு காப்பி சாப்பிட போகலாம்', என்றோ 'சார் ஒரு 10 மினிட்ஸ் உங்க கூட ஒரு முக்கியமான விசயம் பேசனும்' என்று சொன்னால் கூட எனக்கு பீதியாகி பேதி வந்துவிடுகிறது.

10 நிமிடம் என்றுச் சொன்ன ஆசாமிகள் உரிய நேரத்தில் தமது விளக்க உரையை முடித்துக் கொண்டார்களா? இது வரை ஒருவரையும் கண்டதில்லை. 10 நிமிடம் எனக் கூறியவர் எனது சில மணி நேரத்தை நாசம் பண்ணிய அட்டூழியங்களையும் கண்டிருக்கிறேன். சரி போதும் என நாசுக்காக அடிக்கடி கடிக்காரத்தை பார்த்து தெரிவித்தாலும் நமது உடலசைவு மொழிகளை அவர்கள் புரிந்துக் கொள்வதாக தெரிவதில்லை. 'யோவ் _____________ கிளம்பு' எனச் சொல்வது பண்பன்று என்பதால் எனது அரக்க உணர்சிகளை பல முறைக் கட்டிப் போட்டிருக்கிறேன்.

மிக எளிமையான விடயத்தைக் காண்போம். ஆரம்பத்தில் சொன்ன 10 நிமிடம் எனும் வார்த்தையில் தம்மைக் கட்டிக் காத்துக் கொள்ளாமல் பொய்யுரைக்கும் ஒரு ஆசாமியை எவ்வகையில் நம்புவது என்பது பெரிய வினாக் குறியாகும். இப்பொழுதெல்லாம் MLM ஆசாமிகளைக் கண்டால் காத தூரம் கண்ணுக்கு தெரியாமல் ஓடி ஒளிந்துக் கொள்கிறேன். நம்மை தாவு தீர்க்கும் இவர்களின் கழுத்தருக்கும் 'பிளேடுகளை' எவ்வளவு நாள் தான் கதறாமல் தாங்கிக் கொண்டிருப்பது.

தீர்வு ஒன்று: நீங்கள் கருத்துரைக்க நினைப்பதை ஒரு சிறு கையேடாக அச்சிட்டு கொடுத்துவிடுங்கள். முன்னேற நினைக்கும் சமுதாயம் படித்துக் கொள்ளட்டும்.

தீர்வு இரண்டு: நீங்கள் பேச நினைப்பதை 'சிடி'யில் பதிவு செய்து மக்களுக்கு விநியோகித்துவிடுங்கள். நேரம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கும் வார்த்தைகளை சேமித்த புண்ணியம் கிடைக்கும்.

சரி அடுத்த விடயத்துக்கு வருவோம். நான் MLM திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்துக் கொண்டேன். எனக்கு கீழ் இரண்டு பேரை சேர்த்துவிட்டேன். பிறகு அவர்கள் ஆளுக்கு இரண்டு இப்படியே போய்க் கொண்டிருக்கிறாது என வைத்துக் கொள்ளுங்கள் கடைசியில் உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் முடிந்து போய் சேர்க்க ஆள் இல்லத நிலை வந்துவிட்டால் என்ன செய்வார்கள்.

தீர்வு 3: செவ்வாய் மண்டலத்தில் MLM சிஸ்டத்தை அமலாக்கப்படுத்தும் சீரிய முயற்சியில் இப்போதே இறங்கலாம்.

ஓகே. இப்போது அடுத்த மேட்டருக்கு போகலாம். நமது சமுதாயம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது என்கிறீர்கள். அப்படி என்றால் பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்கிறீர்களா? மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துணிக் கடை முதலாளி யாகம் வளர்க்கிறேன் பேர்வழி எனச் சொல்லிக் கொண்டு 10000ரிங்கிட் பெருமானமுள்ள துணிகளை நெருப்பில் போட்டு பொசுக்கிய மேன்மை குணங்களை கண்டிருக்கிறேன். அவருக்கு பணம் பிரச்சனையல்ல, பின் எதற்காக இப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? பணம் ஒன்று தான் வாழ்க்கை என்றாகிவிடுவதில்லை. பணத்தோடு நெறிக் கெட்டு வாழ்வதைவிட, பணம் இல்லாமல் நெறிக் கொண்டு வாழ்வது எவ்வளவோ மேல்.

ஒரு மனிதனின் தாழ்வுக்கு காரணம் ஒழுக்க நெறிகளின்மையே அன்றி பொருளாதார பிரச்சனை அல்ல... அல்ல... அல்ல... . உங்கள் திடமான கருத்தில் இடி விழ.

தீர்வு 4: பொருளாதார பிரச்சனையை தீர்க்க MLM சிஸ்டத்தில் பணம் அச்சடிக்கும் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தலாம்.

தீர்வு 5: மனிதனின் தாழ்வுக்கு காரணம் பொருளாதார பிரச்சனையா அல்லது ஒழுக்க நெறி முறைகளின்மையா என ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்க்கலாம்.

முகக் குறைந்த முயற்சி அல்லது முயற்சின்மையில் கிடைக்கும் பெருஞ்செல்வம் திருட்டுக்கு சமம் என்று நபிகள் நாயகம் செல்லியுள்ளதாக படித்த ஞாபகம். இது உண்மையிலேயே குறைந்த முயற்சியா அல்லது கவர்ச்சி விளம்பரத்துக்காக சொல்கிறீர்களா என்பதும் இப்போது வரையினும் என் சிந்தையை பலமாக(உங்கள் வார்த்தை தான்) இடிக்கிறது.

தீர்வு 6: லக்கிலுக் எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் எனும் புத்தகத்தை வாங்கி படித்து உங்கள் மார்கெட்டிங் ஸ்ட்ரெட்டஜியை மாற்றி அமைக்கவும். பழய யுக்தி முறைகளை கேட்டுக் கேட்டு புளித்துப் போகிறது.

நீங்கள் சொல்லியது போல் ஒன்றுபட்ட செயல் முறை மட்டும் போதும் என்றால் சயாமில் இறந்து போன நிகழ்வுகளும், தற்சமயம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் இறந்து போன அவலங்களும் சரித்திரத்தில் இடம் பெறாமல் தகர்த்திருக்கலாம். தமிழன் தான் இந்தியன் என்பதை விடவும் தமிழன் என்பதை விடவும், தான் இன்ன சாதியன் என்பதில் தான் பெருமைக் கொள்கிறான். நம்பவில்லை என்றால் தமிழனைக் கூறினால் சிரித்துக் கொண்டு ஆமோதிக்கும் ஒருவன் அவன் சாதியை பற்றிக் குறைச் சொன்னால் என்ன செய்வான் என்று பாருங்கள்.

அது போக ஒன்றுபட்டு செயல் படுவோம் வாருங்கள் எனக் கூறினால். முதலில் நம்மை கவனித்துவிட்டுதான் அடுத்த காரியத்தில் இறங்குவார்கள் போங்க.

நான் ஒருவன் மட்டும் இக்கூட்டுறவில் சேர்வதனால் நம் மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமென்றால் எச்சமயமும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறும் இவ்வரிகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை முதலில் புரிந்துக் கொண்டு பேசுங்கள். கிஞ்சித்தும் புரிந்துணர்வு கொள்ளத நம்மிடையே இருப்பது நட்பென கூறுவது அபத்தம்.

தீர்வு 7: வியாபர நட்பு முறையை வளப்படுத்துவது எப்படியென ஒரு செயல்திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு மேல் தொடரலாம்.

இறுதியாக ஒரு சம்பவம். முன்பு இப்படி தான் அறிமுகமே இல்லாத ஒரு பண்பு கெட்ட மனிதர் 'எம்வே' எனும் MLM சிஸ்டத்தில் என்னைச் சேர்க்க கழுத்தறுத்துக் கொண்டிருந்தார். நான் வேண்டாம் என எவ்வளவுக் கூறியும் கேட்டபாடில்லை. அவர் நோக்கம் என்னிடம் பணம் கறப்பது மட்டுமே. முடியாது என்றாகிவிட்டபட்சத்தில் பலமாக மிரட்டிவிட்டு 'எந்த தமிழனாக இருந்தாலும் இதுல வந்து சேர்ந்து தான் ஆகனும்' என்று இன்னும் சில வார்த்தைகளில் கடுமையாக பேசிவிட்டு சென்றார். நம் நிலை எங்கு போய்க் கொண்டிருக்கிறது?

நான் கொஞ்சமாக சம்பாதித்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என் குடும்பத்தை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்கிறேன். பிறருக்கு சிரமம் கொடுக்க முனைந்ததில்லை. சமுதாயம் என்பது ஒரு தனி மனிதனில் தான் ஆரம்பமாகிறது. நல்ல சிந்தனைகள் நமக்கும் நம் சுற்றத்தாருக்கும் இருந்துவிடின் சமூக பிரச்சனைகள் எவ்வளவோ குறைந்துவிடும். இப்படிபட்ட திட்டத்தால் தான் நான் உயர வேண்டும் எனும் அவசியம் எனக்கில்லை. நட்பெனும் பெயரில் உங்களில் அணுகுதல் வருந்த தக்க ஒன்று
.

29 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அது என்னா விக்கி,
குவாட்டர் அடிச்சிட்டு குப்புறப் படுத்துக்கிட்டு?
இன்னும் நீங்க கண்ணாலம் ஆகாத கன்னிப் பையன்!
பாத்து சூதனமா இருந்துக்குங்கப்பு! :P
இருந்தாலும் பதிவு நன்று!

சென்ஷி said...

உங்க பதிவை படிச்சு ஒரு மெயில் அனுப்பினது தப்புன்னா இந்த பதிவை அவனுக்கு திருப்பி ரிப்ளையில அனுப்பியிருக்கணும். இதுக்காகல்லாம் எங்களை இந்த மாதிரி பதிவெழுதி நோகடிச்சா அப்புறம் நாங்களும் தினம் 10 மெயில் ஃபார்வர்டு செய்ய வேண்டி வரும். ஜாக்கிரதை! :-))))

RAHAWAJ said...

நல்ல பதிவு விக்கி

goma said...

அருமையான விழிப்புணர்ச்சி பதிவு.நானும் தோழியின் வற்புறுத்தலின் பேரில் சேர்ந்து ,விடுபட்டவள்தான்.
சமயங்களில் மனம் நிலை தடுமாறத்தான் செய்கிறது.

Subash said...

:) :) :)
nala pathil.

வெண்பூ said...

செருப்பால அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க விக்கி.. பாராட்டுகள்..

தராசு said...

//என்னையும் ஒரு டெரர் என நினைத்து //

சும்மா இப்படியெல்லாம் நீங்களே உங்களுக்கு பில்டப் குடுத்துக்காதீங்க, நாங்கெல்லாம் உங்களை என்னைக்குமே டெரர் என நினைக்கவில்லை.

ஹா,,ஹா,,ஹா,,

நல்ல பதிவு விக்கி, MLM பேர்வழிகளைக் கண்டாலே ஒன்று நான் கலாய்க்க ஆரம்பித்து விடுவேன், இல்லையேல் செல் போனில் அலாரம் வைத்து, அது அடித்தவுடன், யாரோ அழைத்தது போல் அரை மணி நேரம் பேசுவது மாதிரி அறுத்து விடுவேன்.

sivanes said...

விக்கினேக்ஷ்வரன், சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது உங்கள் படைப்பு, இதுபோன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு, நல்ல நண்பர்கள் கூட இதுபோன்ற வியாபார விடயங்களுக்காக நட்பை முறித்துக்கொள்கிறார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

செஞ்சிட்டாப் போச்சு

ஸ்வாமி ஓம்கார் said...

விக்கி தம்பி...

நீங்க ரொம்ப பழைய சிஸ்டத்தை சொல்லறீங்க.

இந்தியாவில ஆன்மீக மையம் எல்லாம் MLM பின்பற்ற ஆரம்பிச்சு ரொம்ப வருஷம் ஆச்சி.

நீங்க யோக வகுப்புக்கு சேர்ந்து தீட்ச வாங்க 5000 ரூபாய். உங்களுக்கு பணம் கொடுக்க முடியலைனா.. ஐந்து பேர்த்த சேர்த்துவிட்டா போதும். உங்களுக்கு இலவசம்.

உங்களுக்கு இலவசம் அப்புறம் ஐந்து பேர்த்த தீட்ச வாங்க வச்ச புண்ணியம். எல்லாம் சேர்ந்து ஒன்னஸ் ஆயிடம். ஒன்னாயிடும்னு சொன்னேன்.

உங்களுக்கு பிடிக்கலைனா போங்க தம்பீ.. நாங்க யாரு எல்லா எடத்திலயும் வருவம்லா.. :))))

Anonymous said...

நிஜத்தில் இந்த எம்.எல்.எம். தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது
சென்னையில் இருந்தவரை. யாராவது ஒருவர் தனது முகவரி அட்டையை நீட்டியபடி நம் இசைவைக் கூட எதிர்பார்க்காமல் திட்டத்தை விவரிக்கத் தொடங்குவார்கள். எரிச்சலாக வரும்.

மோசடியான வழிமுறை என்று முற்றிலுமாக சொல்வதற்கில்லை. ஆனால் விருப்பமில்லாதோரையும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் சேர்ப்பது போல் பிடித்து உள்ளே இழுத்து விடுகின்றனர்.
அப்படியே அவர்கள் இணைந்துவிட்டால் “நீங்க ஆள மட்டும் கூட்டிட்டு வாங்க. நாங்க சேர வெச்சிடுறோம்” என்று தட்டிக் கழிப்பதும் நடக்கும்.

மகனே, ராவா சொல்வதென்றால் “நாலு அப்பு அப்பலாம் போல இருக்கும்”

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

வருகைக்கு நன்றி...

@ ஜாதிபாரதி

அது எல்லாம் ஒரு ஃப்லோல எழுதுறது... சீரியசா எடுத்துக்காதிங்க அண்ணா...நான் பச்ச தண்ணிய கூட பத்து தடவ யோசிச்சிட்டு தான் குடிப்பேன்....

@ சென்ஷி

பத்து மெயிலுக்கும் பதில் போட்டு படிக்கிறவங்க கண்ணுல இரத்தம் வர வச்சிடுவேன் பரவாலியா பாஸ் :)) அவர் தான் கருத்து கேட்டார். அந்தக் கருத்த நாலு பேரு தெரிஞ்சுக்க எழுதி இருக்கேன்...

@ ஜவஹர்

நன்றி...

@ ஞானசேகரன்

நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோமா

நீங்கள் சொல்வது உண்மை தான். சிரமப்ப்பட்டுக் கொண்டிருப்பவனிடம், நீ இதில் சேர்ந்தால் பணம், வீடு, கார் கிடைக்கும் என சொன்னால் ஆசையில் அமிழ்ந்து போகும் நெஞ்சம் கொண்டவர்கள் என்ன செய்ய முடியும்.

@ சுபாஷ்

வருகைக்கு நன்றி...

@ வெண்பூ

ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிங்க போல... வருகைக்கு நன்றி...

@ தராசு

யாருமே சொல்லலைனு என்ன நானே சொல்லிக்கிட்டா கூட விட மாட்றிங்களே... என்ன ஒரு வில்லத்தனம்... நீங்க அலாரம் வச்சி பேசுற டெக்னிக் எனக்கு பிடிச்சிருக்கு... இத வச்சி ஒரு மொக்கை பதிவு போலம் போல இருக்கு...

Unknown said...

/--தமிழனைக் கூறினால் சிரித்துக் கொண்டு ஆமோதிக்கும் ஒருவன் அவன் சாதியை பற்றிக் குறைச் சொன்னால் என்ன செய்வான் என்று பாருங்கள்.--/

நல்லா சொன்னீங்க போங்க....

அனால் வியாபார பிரதி நிதிகளைக் குறைப்படும் ஒன்றும் செய்வதற்கில்லை. பொருள் செய்வது கடினம் தானே இக்காலத்தில்.

ஸ்வாமி ஓம்காரின் குறும்பு பதிலை மிகவும் ரசித்தேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சிவனேசு

நிஜம் தான்... ஒரு சமயம் என் நண்பன் என்னிடம் பொய் சொல்லி ஒரு எம்.எல்.எம் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று அமர வைத்துவிட்டான். காதில் இரத்தம் வராத குறை தான்... :( அதோடு அவன் நட்பையும் முறித்துக் கொண்டேன்...

@ சுரேஷ்

என்னத்த....

@ சுவாமி ஓம்கார்

நீங்கள் சொல்லிய பிறகு என்னால் நினைவு கூற முடிகிறது. இங்கேயும் அம்மாதிரியான நிலை உண்டு... 700 வெள்ளி வாங்கிக் கொண்டு செய்கிறார்கள்... சொல்ல நிறைய இருக்கு எதுக்கு வம்பு...

@ விஜய்கோபால்சாமி

ஹா ஹா ஹா... உண்மை தான்... சிலர் எரிச்சல் தாங்காமல் பணம் கொடுத்து தப்பித்த கதைகளும் உண்டு...

ஆளவந்தான் said...

//
நீங்கள் பேச நினைப்பதை 'சிடி'யில் பதிவு செய்து மக்களுக்கு விநியோகித்துவிடுங்கள். நேரம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கும் வார்த்தைகளை சேமித்த புண்ணியம் கிடைக்கும்.
//

இங்க எல்லாம் டிவிடி லெவலுக்கு முன்னேறிட்டாங்க பாஸ்.. மால்’ல பாத்து ஒரு 10நிமிசம் பேசின கொடுமைக்காக.. கூப்பிட்டு வச்சு, ஒரு டிவிடியை குடுத்து .. பாத்துட்டீங்களா.. பாத்துட்டீங்களானு ஒரு ஜீவன் என்னை பாடாய் படுத்துது.. எவ்ளோ நாசூக்காக எடுத்து சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க பா :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆளவந்தான்

அமேரிகால இத வச்சி தொந்தரவு பண்ணினார்கள் என ஏதும் கேஸ் போட முடியாதா? அந்த டீவிடிய பின்னால கிறுக்கி நாசம்பண்ணி அனுப்பி வச்சிருங்க புரிஞ்சிப்பாங்க... :)

@ கிருஷ்ண பிரபு

விருப்பம் உள்ளவர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள். விருப்பமற்றவர்களூக்கு தொந்தரவு கொடுப்பது தகாதது....

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆளவந்தான்

அமேரிகால இத வச்சி தொந்தரவு பண்ணினார்கள் என ஏதும் கேஸ் போட முடியாதா? அந்த டீவிடிய பின்னால கிறுக்கி நாசம்பண்ணி அனுப்பி வச்சிருங்க புரிஞ்சிப்பாங்க... :)

@ கிருஷ்ண பிரபு

விருப்பம் உள்ளவர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள். விருப்பமற்றவர்களூக்கு தொந்தரவு கொடுப்பது தகாதது....

ஜோசப் பால்ராஜ் said...

என் நெருங்கிய நண்பரின் உறவினர் ஒருவர் தஞ்சையில் நான் இருந்த காலத்தில் இருந்து பலவகையில் என்னை துரத்திக்கொண்டிருந்தார். எல்லாத்துலயும் தப்பிச்சுட்டேன்.
போனவாரம் ஆன்லைன்ல வந்து சிங்கப்பூர்ல அருமையா செய்யலாம். எங்க டீம் லீடர், பிளாட்டினம் மெம்பர் சிங்கப்பூர் வர்றாரு, அவரப் போயி பாருங்கன்னு சொல்லி, அந்த ப்ளாட்டினம் மெம்பர்கிட்ட என் போன் நம்பர குடுத்துட்டாரு.
நெம்ப கஷ்டப்பட்டு சமாளிச்சேன் தம்பி.
அதுலயும் அவரு ஒன்னு சொன்னாரு பாரு,ஏன்பா இப்டி கஷ்டப்பட்டு சோறு தண்ணி எடுத்துக்க கூட நேரம் இல்லாம ஓடி ஓடி உழைக்கணும்? இந்த தொழில செஞ்சா நீயே முதலாளி, கஷ்டப்பட வேண்டியதே இல்லை. உக்காந்துகிட்டே சம்பாதிக்கலாம்.
ஒரு கும்பலே அலையுது இப்டி. என்ன செய்யிறது?

இந்தியால இருக்கப்பா பலபேரு ஆம்வேல சேரச்சொல்லி இம்சை பண்ணுவாய்ங்க. ஒருத்தன் தொடர்ந்து டார்ச்சர் செஞ்சான், தொடர்ந்து நானும் டபாய்ச்சுக்கிட்டேயிருந்தேன். கடைசியா ஒரு மீட்டிங் இருக்கு வாங்கன்னு கூட்டிட்டு போனாய்ங்க. அங்க போன 25 ரூவா நுழைவுக்கட்டணம் குடுங்கன்னு சொன்னாய்ங்க, நான் எதுக்குயா நுழைவுக் கட்டணம்னு கேட்டதுக்கு, நீங்க இதுல கலந்துகிட்டு இந்த திட்டத்துல சேர்ந்துட்டிங்கன்னா, கோடி கோடியா சம்பாதிக்க போறிங்க, அதுக்கு ஒரு டோக்கன் கட்டணம் தான் இது அப்டின்னாங்க. ஆணியே புடுங்க வேணாம் ஆளை விடுன்னு சொல்லிட்டு ஒடியாந்துட்டேன்.
சற்றும் மனம் தளராத அந்த விக்ரமாதித்யன், என்கிட்ட வந்து நீ சேரலன்னா பரவால்ல, என்கிட்ட பொருள் எல்லாம் வாங்குன்னான். அவன் சொல்ற விலையெல்லாம் ஆணை விலை குதிர விலை. ஒரு 100கிராம் டூத் பேஸ்ட் 75 ரூவா. அதே 100கிராம் கோல்கேட், க்ளோசப் பேஸ்ட் எல்லாம் 12 - 15 ரூவா தான். ஏன்யா இப்டி விலைன்னு கேட்டா எங்க பேஸ்ட் கொஞ்சூண்டு எடுத்து விளக்குனாப் போதும் நல்லா நுரை வரும்கிறான்.
சொல்லி சொல்லிப் பார்த்தேன் கேட்கல. கடைசியா , அண்ணா காலையில எழுந்திரிச்சு எனக்கு 5 கிராம் க்ளோசப் பேஸ்ட் சாப்புட்டா தான் அந்த நாள் விடிஞ்சமாதிரி இருக்கும் ஆளை விடுண்ணு சொல்லி எஸ்கேப் ஆனேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சின்னப் பையன்

:) நன்றி

@ ஜோசப் பால்ராஜ்

அண்ணே உங்க முக ராசி அப்படி :))

Anonymous said...

நல்லதே நடக்கும்.

Prabhu said...

நீங்க ரொம்ப அடிபட்டிருப்பீங்க போல! இந்த மாதிரி மேட்டர உணர்ச்சிபூர்வமா எழுதுறீங்களே!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ புகழினி

போயாங்ங்ங்....


@ பப்பு

ஆமா பப்பு எப்படியாச்சும் சுத்தி வலைச்சு பிடிச்சுடுறாங்க.... முடியல போங்க....

கே.பாலமுருகன் said...

some diologs from my story

“நீங்க இப்பொழுதே ஒரு ஏஜெண்டு தம்பி! இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. நம்பளே கடக்கறே ஒவ்வொரு ஆளும் நம்பளோட கிளைண்ட்”

“நீங்க என்னா போன் பாயிக்கிறிங்க? ஓகே டீஜீ. நீங்க வாரத்துக்கு 2 தடவே போன்லே காசு போடறிங்கனு வச்சிக்குவோம். . அதுலே ஒங்களுக்கு ஏதாவது இலாபம் இருக்கா? இல்லெ. எந்தக் கடையிலே காசு போடறிங்களோ அவனுக்குத்தான் இலாபம். . அதையே நீங்க யேன் சொந்தமா செய்யக்கூடாது? நீங்க ஒரு நாளு பேருக்கு காசு போட்டு விடுங்க போன்லே. . மோபைல் சேர்வீஸ் தம்பி. . நடமாடும் மோபைல் கம்பெனி நீங்க. . எப்படி? ஒங்களுக்கு 10 வெள்ளிலெ 0.50 காசு இலாபம். . ஒரு நாளைக்கு 10 பேருக்குப் போட்டு விட்டிங்கனா அதுலேந்து 5வெள்ளி இலாபம் உங்களுக்கு. . பிறகென்ன? அந்தக் காசுலே நீங்க போன்லெ காசு போட்டு காதலிகூட பேசலாம். . காசுக்கு காசு ஆச்சி செலவுக்கு செலவு ஆச்சி”

“நீங்க இப்பொழுதே ஒரு ஏஜெண்டு தம்பி! இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. அங்க பாருங்க ஒருத்தன் தனியா வரான். . அவன்கிட்ட போய் போலிசி எடுத்துட்டிங்களானு கேளுங்க. . செத்துட்டா குடும்பத்துக்கு ஒன்னுமே இல்லாம போகனுமா. . ஒரு 2 லட்சத்துக்கு போலிசி எடுக்கச் சொல்லுங்க. . ஆஸ்பித்தல்ல அடிபட்டு போனா எல்லாம் சலுகையும் கிடைக்கும்னு சொல்லுங்க. நீங்க சொல்றெ ஒவ்வொரு வார்த்தையும் அவனோட மரணத்தெ பத்தியதாகவே இருக்கனும். . அவன பயமுறுத்துங்க. . உலகத்தோட நடப்பெ பத்தி சொல்லுங்க. . போலிசியோட நன்மையைப் பத்திச் சொல்லுங்க. . நான் இன்னும் ஆழமா சொல்லித் தரேன். . போங்க தம்பி போங்க! அவனே விடாதிங்க. . நம்பளே கடக்கறே ஒவ்வொரு ஆளும் நம்பளோட கிளைண்ட். . நம்பளோட மோடல். . நம்பளோட எதிர்க்காலம். . சொத்துடமை. . பிடிங்க அவனே. . விடாதிங்க”

Mr.Rawang "koyyaale" avanai vidaate.

cheena (சீனா) said...

விக்கி - சமாளிக்கத் திறமை வேணும் - இந்த எம் எல் எம் சும்மா இல்ல - மாட்னோம் செத்தோம் - ஆமா

நல்லாருக்கு இடுகை

VIKNESHWARAN ADAKKALAM said...

@ பாலமுருகன்

அருமையா எழுதி இருக்கிங்க... படிச்சிட்டு சிரிச்சுகிட்டே இருக்கேன்... இது தான் அவுங்க மூளை சலவை டெக்னிக்கா? அதே போலதான் இவரு சமுதாய போர்வையில் முயற்சித்திருக்கிறார்...

@ சீனா

சீனா ஐயா நெடு நாளைக்கு பிறகு இங்கு உங்களைக் காண்கிறேன். கருத்துக்கு நன்றி...

Joe said...

நானும் இரண்டு வருடத்துக்கு முன்பு, இது மாதிரி ஆம்வே பெண்மணியிடம் மாட்டிகிட்டு முழிச்சேன்.

தப்பிக்கிரதுக்குள்ள பெரும்பாடு பட வேண்டியதா போச்சு.

வால்பையன் said...

//பொருளாதார பிரச்சனையை தீர்க்க MLM சிஸ்டத்தில் பணம் அச்சடிக்கும் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தலாம்.//

முதல் ஆளாக என் பெயரை சேர்த்து கொள்ளவும்!
(எங்க ஊர் பணம்)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ joe

அப்படியா... இது எல்லோரும் கடந்தாக வேண்டிய சிரமங்களில் ஒன்று தான் போல.... :)

@ வால்பையான்

அண்ணே அப்ப ஐடியா கொடுத்த நான் ரெண்டாவதா... முடியாது முடியாது அமெரிக்க டாலர், யுரோ, பவுண்ட் ஸ்டெர்லிங் எல்லாம் நான் தான்...