Tuesday, December 16, 2008

இறைவனுக்கு ஒரு கடிதம்!!

இறைவனுக்கு வணக்கம்,

நீ எதையும் கண்டு கொள்ளாமல் இருமாப்புடன்தான் இருக்கிறாய். இந்த ஆறறிவு அறிவு ஜீவிகளை நினைக்கையில் தான் பெருமிதமாக இருக்கிறது. உன் பெயரைச் சொல்லிக்கொண்டு அடிதடியில் இறங்கிவிடுகிறார்கள். என்னைக் கேட்டால் உலகில் மிகப்பெரிய வன்முறைக் கும்பல் தலைவன் நீ தான் என்பேன். ஏன் என்று கேட்கிறாயா? மௌனத்தை துணை கொண்டு சாதனை செய்பவன் அல்லவா நீ! அதுதான் காரணம்.

ஒரு கிழவனைக் கண்டேன். அவனுக்கு 80 வயதுக்குமேல் இருக்க வேண்டும். நினைவு தெரிந்த நாளில் இருந்து உன்னை வழிபடுகிறானாம். ஏன் என்றேன். நீ நல்லது செய்வாய் என்ற நம்பிக்கை என்றான். பார், தன் மேல் இருக்கும்
நம்பிக்கையைவிட உன் மேல் தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளது மனித குலம். அந்த மனிதனின் விசுவாசத்திற்கு நீ பதில் சொல்வாயா? இங்குள்ள சிலர் அவனுக்கு பதில் சொன்னார்கள். அவன் மடையன் என்று. ஆனால் அவனுக்கோ இன்னமும் அந்த பதிலில் திருப்திதான் இல்லை.

உனது பக்தர்கள் தன் சக மனிதனுக்கு உதவுவதைவிட உன்னிடத்தில்தான் கொட்டிக் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளையும், சம்பாதிக்கும் செல்வங்களையும் சமபங்கில். மடிந்து போகும் மனிதனுக்கு மண்டையில் மயிர் இருக்கும் அளவிற்கு மதி நுட்பம் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் தானம் செய்து உனக்கு கோவில் கட்டுகிறான். தெருக்கோடியில் நிற்கும் அனாதையை மறந்துவிடுகிறான்.

"அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு"
குறள் எண்: 80
அன்புடமை (இல்லறவியல்)

என்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால் இங்கோ நிலைமை அப்படி இருக்கவில்லை. நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் சவரம் செய்த தாடியைப் போல் சடசடவென வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்று போனால் இன்னொன்று என்பது போல் புதிது புதிதாக குற்றச் செயல்கள்.

''பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்''
-அருள் பிரார்த்தனை

என வள்ளலார் தமது அருள் பிரார்த்தனையில் சொல்கிறார். இங்கோ உனக்கு ஏகப்பட்ட மதங்கள். மனிதனுக்கு தொண்டு செய்ய மதம் இருப்பின் பழுதில்லை. இங்கோ உனக்கு தொண்டு செய்ய மதங்கள் இருக்கிறது. உனக்கு நகை அணிவிக்க வேண்டும் என்கிறான், சட்டை போட வேண்டும் என்கிறான், தூக்கி வைத்துக் கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்கிறான். நீயே சொல் இறைவா, நீ என்ன முடமா? முடமாய் கிடப்பவனுக்கு கூட இந்த மனிதர்கள் இவ்வளவு சேவை செய்வதில்லை போ.

என் இறைவனே,

உயரிய இடத்தில் இருக்க வேண்டிய உன் உணர்வு சந்தைக் கடை, சாக்கடை என படி இறக்கம் கொண்டே போகிறது. இதற்கு காரணம் நீயா இல்லை இந்த மனிதர்கள் தானா என்பது தெரியவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்றும் சொல்கிறார்கள், சில வேளைகளில் மனிதனின் அறியாமை என்றும் சொல்கிறார்கள். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறார்கள். அப்படிப்பட்ட இறை தன்னுள்ளும் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.

உன்னை கோவிலில் சிலையாக வைத்து வழிபடுகிறார்கள். நீ தூரத்தில் இருக்க வேண்டியவன் தானா? அப்படி உன்னை சிலையாக வழிபடுபவர்கள் கூட அந்த சிலையை அணுக பல தடைகள். இதற்கு யாரை நீ குறை சொல்ல போகிறாய்? நான் கேட்பது ஒன்று தான் என் நண்பனாக எனக்குள்ளே என்னோடு இரு என் மனசாட்சியாக, நன்நெறி போதகனாக, சூது அறியச் செய்பவனாக. நீ உச்சத்தில் இருக்கவும் வேண்டாம், தாழ்ந்திருக்கவும் வேண்டாம்.

''ஆதித் தமிழன் ஆண்டவனானான் மீதி தமிழன் அடிமைகளானான்'' என்கிறார்கள். பக்தர் எனும் பேரில் நான் உன் அடிமையாய் இருக்க விருப்பம் கொள்ளவில்லை. எதற்கு இந்த உயர்வு தாழ்வு நிலை. அதை உருவாக்கியவனும் நீதானா?

மனிதன் தவறு செய்கிறான். தவறுக்கு தண்டனை பெறுகிறான். தெய்வம் தண்டித்தது என்கிறார்கள். தண்டித்தது நீயானால் தவறு செய்ததும் நீயே. எதனால் இந்த கபட நாடகம்.

நீ இன்று கவிஞர்களின் விளையாட்டுப் பொருளாகிவிட்டாய்.

இல்லாத
இறைவன் போல்
இடைகொண்ட பெண்னே!

என்கிறான் ஒரு கவிஞன். பாடலில் தான் இப்படி என்றால் திரைபடங்களிலும் அப்படி தான். உன் பெயரால் மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது. மாற்றான் மதம் பிடிக்காமல் போய்விட்டது. மதமில்லாமல் உன்னைக் காண இங்கு பலருக்கும் விருப்பமில்லை.

பிரச்சனைகள் இருந்தால் தான் கடவுளை நினைப்பார்கள் என்கிறான் ஒருவன். நினைப்பது நீதியாக இருந்தாலும் பரவாயில்லை. பிரச்சனைகளை தீர்க்கும் பேரில் உனக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் தான் நீ உதவுவாய் என்று கூறி பஞ்சம் பிழைக்கிறது ஒரு கூட்டம். இப்படிபட்ட பார்வையில் நீ இந்த பூமியில் அவசியம் தானா என்று சொல்?

பேச எவ்வளவோ தோன்றுகிறது. இப்போதைக்கு இது போதும். தவறுகள் நேரும் போது இன்னும் கடிதங்கள் எழுதுவேன். உன்பேரில் என்னை நான் கேள்விகள் கேட்டுக் கொள்ள.

20 comments:

கோவி.கண்ணன் said...

நேற்று தான் தமிழ் ஓவியா இதுபற்றி ஒரு பதிவு போட்டார்.

:)

blakdljds said...

kadavulukku oru kaditham
-vikneshku appadi enna kadavulidam kobam,kelvikanaigalai toduthirukkirir?...
-kadavulum manithanum oruvare;avar namakkul irukkum oru maaperum sakti enbathu emathu karuttu.naam seyyum seyalukku naame poruppu.ithil kadavulai kutram solvatarkillai.
-nanmagal puriyum varai naam anaivarum ingu kadavultan...
todaruven

RAHAWAJ said...

சூப்பர், இறைவன் வெகு விரைவில் பதில் போட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுங்கள் விக்கி

Anonymous said...

//உன் பெயரால் மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது. மாற்றான் மதம் பிடிக்காமல் போய்விட்டது. //

மிகச்சரி

து. பவனேஸ்வரி said...

நல்ல பதிவு...கடவுள் பதில் போட்டாரா?? :)

A N A N T H E N said...

//நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் சவரம் செய்த தாடியைப் போல் சடசடவென வளர்ந்து கொண்டே இருக்கிறது.//

எத்தனை யதார்த்தமான உவமை...

கட்டுரையும்... மன்னிக்க, கடிதமும் நல்லாத்தான் இருக்கு.. கடவுளுக்கு இதைப் படிக்க நேரம் இருந்துச்சா?

நட்புடன் ஜமால் said...

\\பேச எவ்வளவோ தோன்றுகிறது. இப்போதைக்கு இது போதும். தவறுகள் நேரும் போது இன்னும் கடிதங்கள் எழுதுவேன். உன்பேரில் என்னை நான் கேள்விகள் கேட்டுக் கொள்ள.\\

இது மிக அருமை நண்பரே

R. பெஞ்சமின் பொன்னையா said...

கடவுளை ஏனப்பா தொந்தரவு செய்கிறீர்கள், அவராவது நிம்மதியா இருக்கட்டும் விடுங்கப்பா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அன்பின் விக்கி,
இந்த கடிதத்தை எந்த தபால் பெட்டியில் போட்டீர்கள்? காற்றலைகளிலே கலந்து விட்டீரா? உங்கள் ஆதங்கம் சரியே!

Iyappan Krishnan said...

மனிதனைப் படைத்தவன் நீதான் என்றால்
உன்னைப் படைத்தவன் யாரெனெக் கேட்டேன்
கடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை
சுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்
கடவுளை படைத்த மனிதனைப் பார்த்து
கடவுள் என்பது யாரெனக் கேட்டேன்
கடவுளைப் படைத்தது நானே அதனால்
கடவுள் என்பதும் நானே என்றான்

ஆணவ நெஞ்சில் கடவுளைத் தேடி
அழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி
கடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ?
உடனே வந்து சாட்சி சொல்லாரோ?

ஹேமா said...

விக்கி கடவுள்மேல இவ்ளோ....கோவம?அப்பிடியில்ல விக்கி.மனுஷனுக்கு ஏதாவது துன்பம் வரும்போது திருப்பி பேசாத முரண்படாத ஒரு பொருள் தேவை.அதுதான் கடவுள்.

விக்கி உலகத்தில நடக்கிற அக்கிரமங்களைப் பார்க்க முடியாத கடவுள் இப்போ எல்லாம் கண்ணே திறப்பதில்லையாம்.பிறகு எப்படி உங்கள் கடிதம்!

kanagambiga said...

anbe kadavul.anbai erupom.andavan arulvar .enna nan solvathu sarithana.

Anonymous said...

ஒவ்வொரு முறை தொ(ல்)லைகாட்சியில் துயர நிகழ்வுகளை பார்த்து விட்டு இறைவனிடம் கேட்ட கேள்விகளை கட்டுரையாக்கி விட்டீர்கள் அன்பரே!
எல்லா உயிரும் உயிரே என்று மத போதனையில் சொல்லிக்கொடுங்களேன்.துப்பாக்கியும்,குண்டுகளையும் தூக்கி எறிந்து விட்டு மனித நேயத்தை படியுங்களேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோவி கண்ணன்

வருகைக்கு நன்றி.. ஓவியாவின் பதிவின் சுட்டி கொடுக்கலாமே?

@ ட்ரிம் கேச்சர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ ஜவஹர்

இறைவன் கடிதம் போடுவார்....

@ வடகரை வேலன்

வருகைக்கு நன்றி

@ பவனேஸ்வரி

வருகைக்கு நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆனந்தன்

நன்றி...

@ ஜமால்

முதல் வருகைக்கு நன்றி

@ பெஞ்சமின் பொன்னையா

வருகைக்கு நன்றி... அவரின் பொருமை மக்களுக்கு தொந்தரவு...

@ ஜோதிபாரதி

வருகைக்கு நன்றி அண்ணா. கடிதத்தை இணயத்தில் கலந்துவிட்டேன்... பல இறைவன்கள் படிக்கட்டும் என்று...

@ ஜீவ்ஸ்

உங்கள் கவிதைக்கான விளக்கம் சொல்விங்களா? கடினாமாக இருக்கு... வருகைக்கு நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஹேமா...

வருகைக்கு நன்றி... கடவுள் என தனியாக ஏதும் உண்டா என்ன?

@ கனகாம்பிகா

என்ன சொல்லவரிங்கனு புரியலை... வருகைக்கு நன்றி...

@ மனிதன்

வருகைக்கு நன்றி...

வியா (Viyaa) said...

kadavulukku oru kaditham miga arputamana thalaippu..
unggalukku en ivvalavu kovam kadavulin mithu..
kadavul pattil kaditham elutinal solla marakkathingga...

கணேஷ் said...

நல்ல பதிவு...அருமையான மற்றும் அழமான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...

goma said...

கடவுளிடமிருந்து பதில் வந்ததும் அதையும் வாசித்தபின் என் பின்னூட்டம் பின்னே வரும்.
அதுவரை விக்கியின் கருத்தும் என் கருத்தும் கொஞ்சம் ஒத்துப் போகிறது.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வியா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ கணேஷ்

நன்றி

@ கோமா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா!