Thursday, December 11, 2008

மலேசியாவில் வலைபதிவர்கள் சந்திப்பு


எதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) திசம்பர் மாதம், முதன்முறையாக தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி / நாள் : 14 திசம்பர் 2008
(ஞாயிற்றுக் கிழமை)

சந்திப்பிடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல்
( செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)

நேரம் : பிற்பகல் மணி 2.00

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள் :
விக்னேஸ்வரன் - 012 5578 257
மூர்த்தி(இவர் அவர் இல்லை) - 017 3581 555


சந்திப்பின் நோக்கம்:

1) தமிழ் வலைபதிவர்களை ஒருங்கினைப்பது.
2) பதிவர்களிடையே நட்புறவை வளர்ப்பது
3) பதிவுகள் சம்பந்தமான விடயங்களை ஆளோசிப்பது.
4) கணினியில் தமிழ் அறிமுகம் இல்லாதவர்களுக்கு அறிமுகம் செய்வது.

விருப்பமுள்ளவர்கள்
நண்பர்களோடு கலந்து கொண்டு பயன்பெறவும்.

* சந்திப்பில் கலந்துக் கொள்பவர்கள் அரசியல் சம்பந்தமான விடயங்களை பேச வேண்டாம்.

* தனி மனிதர்களை பற்றிய விவாதங்களை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* தமிழ் தட்டச்சு மென்பொருள் கையேட்டு உதவியோடு இலவசமாக வழங்கப்படும். தேவைபடுவோர் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். இலவச சேவை பதிவர் சந்திப்பிற்காக மட்டுமே. நன்கொடை கொடுப்பவர்கள் கொடுக்கலாம்.

* வியாபார நோக்கம் எதையும் சந்திப்பின் போது ஆதிக்கப்படுத்த வேண்டாம்.

* இச்சந்திப்பு எல்லோருக்கும் பொதுவானதே, சாதாரண கலந்துரையாடலாக அமையட்டும்.

* பழம்பதிவர்கள் இடர் பாராது கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

18 comments:

கோவி.கண்ணன் said...

மலேசியா சந்திப்புக்கு வாழ்த்துகள் !

//அகஸ்தியா @ மூர்த்தி(இவர் அவர் இல்லை) - 017 3581 555//

கேட்டதாகச் சொல்லவும் !

:)

சென்ஷி said...

மலேசிய பதிவர் சந்திப்பு இனிமையாக நடைபெற வாழ்த்துக்கள்!

Athisha said...

இனிதே நடைபெற வாழ்த்துக்கள்...

ரொம்ப சீரியஸான பதிவர் சந்திப்பு போலருக்கே..

Thamiz Priyan said...

மலேசிய பதிவர் சந்திப்பு இனிமையாக நடைபெற வாழ்த்துக்கள்!

கிரி said...

கலக்குங்க :-)

//சந்திப்பில் கலந்துக் கொள்பவர்கள் அரசியல் சம்பந்தமான விடயங்களை பேச வேண்டாம்//

பதிவுலக அரசியலா! தமிழ்நாடு அரசியலா!! ;-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நடத்துங்கள்!
இளம் புலி விக்னேசுவரனுக்கு வாழ்த்துக்கள்!!
தங்கள் தமிழ்ப் பணி சிறக்கட்டும்!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

அட... என்ன இது... பின்னூட்டங்கள் அனைத்தும் மலேசிய பதிவர்களிடம் இருந்து வந்திருக்கிறதே.... மெத்த மகிழ்ச்சியாக இருக்கிறது...

வலைபதிவர் சந்திப்பு பதிவுக்கே இப்படி ஒரு பேராதரவு என்றால் சந்திப்பின் போது பேரலையென திரண்டு வர போகிறவர்கள் எவ்வளவோ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//VIKNESHWARAN said...
அட... என்ன இது... பின்னூட்டங்கள் அனைத்தும் மலேசிய பதிவர்களிடம் இருந்து வந்திருக்கிறதே.... மெத்த மகிழ்ச்சியாக இருக்கிறது...

வலைபதிவர் சந்திப்பு பதிவுக்கே இப்படி ஒரு பேராதரவு என்றால் சந்திப்பின் போது பேரலையென திரண்டு வர போகிறவர்கள் எவ்வளவோ...//





ஆம்! அந்தகாலத்து மலாயா(சிங்கப்பூரையும் உள்ளடக்கியது) நாட்டுப் பதிவர்களிடமிருந்து வந்திருக்கிறது.

ஜெகதீசன் said...

///
VIKNESHWARAN said...

அட... என்ன இது... பின்னூட்டங்கள் அனைத்தும் மலேசிய பதிவர்களிடம் இருந்து வந்திருக்கிறதே.... மெத்த மகிழ்ச்சியாக இருக்கிறது...

வலைபதிவர் சந்திப்பு பதிவுக்கே இப்படி ஒரு பேராதரவு என்றால் சந்திப்பின் போது பேரலையென திரண்டு வர போகிறவர்கள் எவ்வளவோ...

///

:)))

Anonymous said...

//அட... என்ன இது... பின்னூட்டங்கள் அனைத்தும் மலேசிய பதிவர்களிடம் இருந்து வந்திருக்கிறதே.... மெத்த மகிழ்ச்சியாக இருக்கிறது...

வலைபதிவர் சந்திப்பு பதிவுக்கே இப்படி ஒரு பேராதரவு என்றால் சந்திப்பின் போது பேரலையென திரண்டு வர போகிறவர்கள் எவ்வளவோ//

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை ஐயா :D

வாழ்த்துக்கள் :)

Anonymous said...

இப்போதைக்கு தங்களை வாழ்த்த மட்டுமே முடிகிறது :-)

சுப.நற்குணன்,மலேசியா. said...

நல்லதொரு முயற்சியை முன்னெடுத்துள்ள உங்களுக்குப் பாராட்டுகள்.

தொடக்கத்தில் இதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தீடீரென முக்கிய அலுவல் வந்துவிட்டது.

ஞாயிறு அன்று தலைநகர் வருவதாக இருந்த எனது பயணத்தைத் திங்களுக்குத் தள்ளவேண்டிய சூழ்நிலை.

பெருத்த வருத்தமும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன்.

எனினும், இந்த முதல் சந்திப்பு வெற்றியாக அமைய என்னுடைய வாழ்த்துகள்.

சந்திப்பில் கலந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவிக்கவும்.

அகரம் அமுதா said...

மலேசியா சந்திப்புக்கு வாழ்த்துகள் !

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோவி.கண்ணன்

சொல்லிவிட்டேன்... நேற்று யாரோ மீண்டும் அந்த போலியா எனக் கேட்டிருந்தார்கள் பாவம் இவர்... இவரை அவரென கருத வேண்டாம்... கொபம் கொண்டு நிஜ மூர்த்தியாகிவிட்டால் பதிவுலகிற்கு சிரமம்.

@ சென்ஷி

நன்றி...

@ அதிஷா

ரீரியஸா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே... வாங்க அதிஷா வருகைக்கு நன்றி...

@ தமிழ் பிரியன்

நன்றி...

@ கிரி

நீங்க சொன்ன இரண்டு அரசியலும் இல்லைங்க... மலேசிய அரசியல் பேசாமல் இருக்கட்டும்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோதிபாரதி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா. புலியா? ஹா ஹா ஹா பிடித்துக் கொண்டுவிட போகிறார்கள்...

@ விஜய் ஆனந்த்

நன்றி தலைவரே...

@ ஜெகதீசன்

நன்றி

@ துர்கா

நன்றி

@ சுப.நற்குணன்

நன்றி...

@அகரம் அமுதா

நன்றி...

VG said...

nalla muyarchi.. vettri pera vazhtukkal. santippil nadanthathai pativu seiyavum. :))

கோவி.மதிவரன் said...

வணக்கம. வாழ்க

மலேசிய வலைப்பதிவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள்.

தமிழால் ஒன்றுபடுவோம்.

வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் விக்கி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

@ கோவி.மதிவரன்

அடுத்த பதிவர் சந்திப்பில் உங்களை காண முடியுமென பெரிதும் நம்புகிறோம்...