Saturday, December 06, 2008

மௌனம்!!


மௌனம்!
சில
புரிதல்களின்
பூரண வடிவம்!
சில
புதிர்களின்
புரியாத விடை!

மௌனம்!
சப்தங்களுக்கும்
சலசலப்புகளுக்கும்- போட்ட
சல்லடையால்
சடுதியில்- உயிர்த்த
சாரம்!

மௌனம்!
இருதய இரும்பில்
பிணைக்கப்பட்ட
பிரசவமாகா காதலின்
மறுமொழி!

மௌனம்!
உணர்வுகளின்
உன்னத மொழி!
உதிர்ந்து விழும்- மலரின்
உயிர் வலி!

மௌனம்!
நினைவுகளின் அலைவரிசை!

மௌனம்!
கனவுகளின் முகவரி!

மௌனம்!
காற்றின் ஸ்பரிசம்!

மௌனம்!
இதழ்களின் உறக்கம்!

மௌனம்!
தனிமையின் தலைவன்!

மௌனம்!
வாழ்க்கையின் விடை!

மௌனம்!
வார்த்தைகளின் சிறைச்சாலை!

மௌனம்!
இரகசிய ராகம்!

மௌனம்!
மனிதன்
மனதில் கொண்டு
மதியைச் செறிவு செய்திட உதவும்
மந்திரகோள்!

மௌனத்தை நேசி!
மரணத்தின் பின்
மௌனமே உன் துணை!

19 comments:

VG said...

kavitai super.. athai vida kavitaiyin talaipu innum super.. know why? :)

tc da

கோவி.கண்ணன் said...

//மௌனத்தை நேசி!
மரணத்தின் பின்
மௌனமே உன் துணை!//

அசத்தல் !

நிஜமா நல்லவன் said...

(மௌனமா இருக்கேன்...)

நாடி பார்க்கிறேன் said...

மௌனம் பேசாது....ஆனால் மௌனம் கவிதையாக வடித்தால்....வாழ்க விக்னேஷ்...உங்களின் மௌனத்தை கலைத்தமைக்கு....

சி தயாளன் said...

ம்...இதுக்கு நா மெளனத்தை பதிலாக அளிக்கிறேன்
மெளனம் - வாழ்த்துகள்

geevanathy said...

///மௌனம்!
உணர்வுகளின்
உன்னத மொழி!//

அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்..

சென்ஷி said...

ம்ம்.. சரி.. ரொம்ப பிடிச்சிருக்குது கவிதை!

அன்புடன் அருணா said...

//மௌனம்!
சில
புரிதல்களின்
பூரண வடிவம்!
சில
புதிர்களின்
புரியாத விடை!//

உண்மையான வார்த்தைகள்.
அன்புடன் அருணா

ஹேமா said...

விக்கி அருமை...அருமை.
மௌனத்திற்குள் இவ்வளவா!

மௌனம்
பூட்டிய எண்ணப்
பெட்டகத்தின் திறவுகோல்.
மௌனம்
சம்மதத்தின் சமிக்ஜை விளக்கு.

இப்படியும் ....!

Anonymous said...

//மௌனம்!
வாழ்க்கையின் விடை!//

...வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு மௌனமே சிறந்த விடையாக அமைகிறது...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு விக்கி. வாழ்த்துக்கள்...

A N A N T H E N said...

மவுனத்துக்கு இத்தனை அர்த்தங்களா? அருமை. என்சைக்லோபீடியாவைப் புரட்டியதாய் ஞாபகம்

வியா (Viyaa) said...

kavithai romba naalla irukku..

தமிழ் said...

/மௌனம்!
சில
புரிதல்களின்
பூரண வடிவம்!
சில
புதிர்களின்
புரியாத விடை!

மௌனம்!
சப்தங்களுக்கும்
சலசலப்புகளுக்கும்- போட்ட
சல்லடையால்
சடுதியில்- உயிர்த்த
சாரம்!

மௌனம்!
இருதய இரும்பில்
பிணைக்கப்பட்ட
பிரசவமாகா காதலின்
மறுமொழி!





மௌனம்!
வார்த்தைகளின் சிறைச்சாலை!

மௌனம்!
இரகசிய ராகம்!

மௌனம்!
மனிதன்
மனதில் கொண்டு
மதியைச் செறிவு செய்திட உதவும்
மந்திரகோள்!

மௌனத்தை நேசி!
மரணத்தின் பின்
மௌனமே உன் துணை!/

அருமையான வரிகள்

Anonymous said...

எனக்கு மௌனம் பிடிக்கும்...அதனால் உங்க கவிதையும் பிடிச்சிருக்கு...அருமையா இருக்கு :-)

R. பெஞ்சமின் பொன்னையா said...

அருமை, அருமை, அருமை.

மௌனம் ஒரு பேசப்படாத உன்னத மொழி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

@ கோவி.கண்ணன்

நன்றி...

@ நிஜமா நல்லவன்

எதற்காக மௌனம்...

@ அகஸ்தியர்

ஏதோ சொல்லவரிங்க... ஆனா புரியலை... வருகைக்கு நன்றி...

@ டொன் லீ

நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தங்கராசா ஜீவராஜ்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மருத்துவர் அவர்களே... உங்கள் தளம் கண்டேன்... மேலும் பல நல்ல விடயங்களை எழுதுங்கள்...

@ சென்ஷி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தலைவா!!

@ அன்புடன் அருணா

முதல் வருகைக்கு நன்றி... வரிகளை இரசித்தமைக்கும் இன்னொரு நன்றி...

@ ஹேமா...

நீங்கள் சொல்லி வரிகளும் நச்... வருகைக்கு நன்றி...

@ உஷா

உங்கள் கருத்து உண்மையே... எதையும் நிதாநித்து யோசித்து செயல்படுதல் என்பது நல்ல விடயம்.. அதற்கு மௌனம் துணையாகும்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆனந்தன்...

ஏன் இந்த நக்கல்... ஹி ஹி ஹி... வருகைக்கு நன்றி...

@ வியா

வருகைக்கு நன்றி...

@ திகமிளிர்

நன்றி... மீண்டும் வருக...

@ புனிதா

நன்றி...

@ பெஞ்சமின் பொன்னையா

நீங்கள் சொல்லிய வரிகளும் அருமை... வருகைக்கு நன்றி...

து. பவனேஸ்வரி said...

மெளனம்....
உடைந்து துகள்களாய் போன
இதயத்தின் புலம்பல்!

இப்படியும் கூறலாமா?