நீ
முத்தமிட்ட தடங்களை
எனது தாடியில்
புதைத்து வைத்தேன்.
அதைக் கடித்து
காயப்படுத்தியது ஒரு
இரத்தப் பேராசை பேன்.
நீ
கொடுத்தக் கடிதங்களை
மரப் பெட்டியின்
காவலில் விட்டு வைத்திருந்தேன்.
அது
களவாட
கடந்துச் சென்ற
கறையான்களின்
ராஜியத்திற்குற்பட்டுவிட்டது.
நீ
தூது சொல்லியனுப்பிய
தோழியும் கடல்
கடந்துச் சென்றுவிட்டாள்
கல்யாணம் செய்து கொண்டு.
நாம்
அமர்ந்துப் பேசிய
குளக்கரையில்
மணல் மட்டுமே
மிச்சப்பட்டுப் போய்
இருக்கிறது.
எல்லாமும்
தேய்ந்து
ஓய்ந்த பின்னும்,
இன்னமும் வளர்கிறது
உன் வானவில்
சேலையில்
பிழியப்பட்ட
கருமை நிற
காதல் முத்துகள்.
13 comments:
மீத பஸ்ட்டு
நல்லாருக்குங்க கவிதை :)
அருமை !!!!
விக்கி! எனக்கு ஒன்னும் புரியலை...
சரியா தாடியைப் பராமரிக்காததால் பேன் தாடி வரை வந்துள்ளது.
பெட்டியில் பூச்சி வர்ர வரை என்ன பண்ணுனீங்க?
கடலில் அந்த பெண் ஏன் இறங்கிச் செல்ல வேண்டும்... அச்சச்சோ பாவம்?
குளக்கரையில் எப்படிய்யா மணல் வரும்? புரியவில்லை.. தயவு செய்து விளக்கவும்.
///சேலையில்
பிழியப்பட்ட
கருமை நிற
காதல் முத்துகள்.///
நீங்க வாங்கிக் கொடுத்த சேலையோட தரம் அவ்வளவு தான் போல... இம்புட்டு மோசமா வாங்கிக் கொடுத்தா எந்த பெண் தான் ஓட மாட்டாள்.. ;)
///சென்ஷி said...
நல்லாருக்குங்க கவிதை :)/*//
அண்ணே! எனக்கு புரியவே இல்லை
நல்ல கவிதை
@அதிஷா
நன்றி
@சென்ஷி
வருகைக்கு நன்றி... நிஜமாக சொல்கிறீர்களா?
@சேவியர்
நன்றி அண்ணா
@தமிழ் பிரியன்
வருகைக்கு நன்றி. அந்தக் காதலைப் போல இந்தக் கவிதையும் ஒரு கானலே அதனால் தான் உங்களுக்கு புரியலவில்லை என நினைக்கிறேன்.
@கயல்விழி
வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி கயல்விழி. நிஜமா நல்ல கவிதையா?
நண்பரே,
அது என்ன 'மயிர்த் தாடியில்'?
மயிரில்லா தாடியும் உண்டா என்ன?
@மு.வேலன்
வருகைக்கு நன்றி. ஐயம் தெளிவித்தீர். சற்றே மாற்றியுள்ளேன்...
Post a Comment