Saturday, August 02, 2008

குசேலன் ஒரு *** படம்- ‘ச்சே’ ரகம்

முதல் காட்சியை முடித்துக் கொண்டு வெளியேறியவர்கள் முகத்தில் மன நிறைவின் அறிகுறி ஏதும் காணவில்லை. கொஞ்சம் விட்டால் திரையரங்கையே கொழுத்திவிடும் வெறித்தனமான அனல் ஒன்று அவர்கள் கண்களில் எரிவதைக் கண்டேன்.

50 வயதை கடந்த பெரியவர் ஒருவர் அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்தார். அடுத்தக் காட்சிக்குத் தயாரகிக் கொண்டிருந்த நபர் அவரது நண்பர் போல. சந்தோஷமாக அவரிடம் கேட்கிறார்.

“படம் எப்படிய்யா?”

“என்னா *** படம் எடுத்து வச்சிருக்கானுங்க ****ங்க. கடுப்பு *** தான் இருக்கு.”

என்னடா மனுசன் இப்படி பேசுகிறாரே என முகம் சுழிக்கச் செய்தது. அவர் தலையைப் பார்த்தேன். அவர் சொல்லியது நன்றாகவே பழுத்திருந்தது. படத்தையும் அதிகமாகவே பழுக்கவிட்டு விட்டார்கள் போல. சரி அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள் என பார்ப்பதற்காக உள்ளே நுழைந்தேன்.

நட்பை மையமாக வைத்துப் பல படங்கள் வெளியாகி இருந்தும். இதை கொஞ்சம் மாறுபட்ட கோனத்தில் கொடுக்க வேண்டும் என்ற அக்கரையை யாரும் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ரஜினி என்ற சொல் மட்டும் போதும் மக்களை மயக்கிவிடலாம் என்ற மமதையில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

1) படத்தின் ஆரம்பத்தில் இசைக்கும் குழலோசை நட்பின் இலக்கனத்தை சொல்கிறது. காற்று எங்கிருந்தாலும் குழல் அதை மறப்பதில்லை. அது வீசும் போதெல்லாம் அழகிய நாதத்தை எழுப்பிவிடும். இரு நண்பர்களும் ஒருவருக்கொருவர் மறக்காமல் இருக்கிறார்கள். சூழ்நிலை அவர்கள் சந்திக்கத் தடுக்கிறது.

2) சிகை திருத்தக் கடையில் ஒட்டிய முடிகளுடன் உள்ள சீப்பையும், ஒரு நடிகனின் அலங்கார பொருட்களையும் மாறி மாறி காண்பித்து நண்பர்கள் இருவருக்கும் இருக்கும் தூர அளவை சித்தரிக்க முயற்ச்சித்திருக்கிறார்கள்.

3) சில காட்சியமைப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன. ஆனால் தேவையற்றதாகவும் இருக்கிறது.

4) வடிவேலுவின் நகைச்சுவை ‘உவ்வேக்க்க்’ ரகம். சிரமப்பட்டு சிரிக்க வைக்கிறார். இந்திரலோக பாதிப்பு இன்னும் விட்டொழியவில்லை போல.

5) எல்லோரும் சொல்கிறார்கள் கடைசி பதினைந்து நிமிடம் படம் சூப்பராக அமைந்திருக்கிறதென்று. ‘செண்டிமெண்ட்’ காட்சிகளை மட்டும் வைத்து காலத்தை கடத்துவது வேதனைக்குறியது.

6) பசுபதியின் நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது. வெயில் திரையில் கொடுத்த அதே ரசம் என்பதால் கொஞ்சம் மாறுதல் படைக்க முயற்சி செய்திருக்கலாம். “அவரை தெரியும்னு சொன்னதுக்கே என்ன இந்த நிலமைக்கு கொண்டு வந்துட்டிங்க” எனும் காட்சி அனுதாபத்தோடு சிரிக்க வைக்கிறது.

7) பிரபு- என்ன கொடுமை வாசு இது. காவல் அதிகாரியாக வருகிறார். உடை தைப்பதற்கு துணி போதவில்லை போலும். ஒரு காட்சியில் காவல் உடையில் பிதுங்கி போய் நிற்கிறார். ஜப்பானிய காட்டூனில் ‘டோரேமோன்’ இப்படிதான் இருக்கும்.

8) நயந்தாரா நமிதா இடத்தை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். கூச்சப்படாமல் மார்பகங்களையும் தொடையையும் காட்டி விருந்து படைத்திருக்கிறார். குடுபத்தோடு வந்திருந்தவர்களுக்கு நல்ல சூடு. குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது அவர்களுக்கு கேடு.

9) இசையமைப்பாளரின் முயற்சி பாராட்டிற்குறியது. ஆனல் எடுபடாமல் போனது வேதனைக்குறியது. முதல் பாடல் ‘வெயிலோடு விளையாடி’ எனும் வெயில் திரை பாடலை நினைவுகூறச் செய்கிறது.

10) படத்தில் மீனா, கீதா, சுந்தராஜன், லிவிங்ஸ்டன் வரும் காட்சிகள் மிக மிக எரிச்சல்.

பாதி படத்தில் என் பின்னால் அமர்ந்திருந்த நண்பர்களுக்குள் பேச்சு.

“என்னடா மச்சான் தூங்குற”. சிரித்துக் கொண்டே கேட்கிறான் ஒருவன்.

“டேய் ஏன் டா ரஜினி படம்னு சொல்லி கூட்டிட்டு வந்து உயிர வாங்குறிங்க, என்னால முடியல, படம் முடிந்த்தும் எழுப்பிவிடு”.

இடைவேளையின் போது சரோஜா பட ‘சப்போர்டிங்’ திரைகண்டது. பின்னாலிருந்து “ஏய் படத்த முடிங்கடா” என்ற சவுண்டு.

படம் முடிந்த போது எல்லோர் முகத்திலும் இலவு வீட்டிற்கு போய் வந்த உணர்ச்சி. குசேலன் திரைபட இருக்கை, மரணப் படுக்கை.

மகாகாவி காளிதாஸ் படத்தை ‘எடிட்’ செய்து கொடுத்திருப்பதை போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் குசேலன் ஒரு ‘குஜிலி’ படம் ச்ச்சே… குப்பை படம்.

பி.கு: *** என்பது சூப்பர் ஸ்டார் என அர்த்தம். நீங்கள் கெட்ட வார்த்தையை போட்டு படித்திருந்தால் நான் பொறுபல்ல.

23 comments:

Sathis Kumar said...

//குசேலன் திரைபட இருக்கை, மரணப் படுக்கை.//

ஒரு வாசகமா இருந்தாலும், இது திருவாசகம்..

நாளைக்கு போகலான்னு இருந்தேன், என்னை காப்பாத்தீட்டே தலைவா.. :)

Athisha said...

\\
என்னா *** படம் எடுத்து வச்சிருக்கானுங்க ****ங்க. கடுப்பு *** தான் இருக்கு.”


\\

அந்த ஸ்டார்க்குலாம் என்ன அர்த்தம்ணு தனிமடலில் தெரிவிக்கவும்

\\ குசேலன் ஒரு ‘குஜிலி’ படம் \\

இந்த வரிகள் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது

உங்களுக்கு படத்தில் சுரேயா நடிக்கவில்லை என்கிற ஆதங்கம் இருந்திருக்குமே அதைபற்றி ஏன் குறிப்பிடவில்லை

விமர்சனம் அருமை... படத்தவிட நல்லாருக்கு

வெண்பூ said...

ஏன் தலை. அதுதான் நம்ம வலையுலக பெருந்தலைகள் எல்லாம் படம் மொக்கைன்னு சொல்லியிருக்காங்க. அதையும் மீறி ரிஸ்க் எடுத்த உங்களை என்ன பண்றது???? ஒரே உபயோகம்,, இந்த வார இறுதிக்கான உங்கள் இடுகைக்கு மேட்டர் கிடைச்சது :)

TBCD said...

கையயைக் கொடுங்க விக்கி...

கலக்கல் நடை..

ஒரு குப்பையின் வழியாக குண்டுமணி வெளிச்சத்திற்கு வருகிறது...

Anonymous said...

"We know Rajini belongs to Karnataka and we are sure that he had been pressurised to make anti-Kannada statements. But now with this apology he has proved to be a golden hearted personality who is prepared to accept his mistake. Being an icon in the film industry, he has proved that he is also a great human being who can assuage the hurt feelings of people by a simple apology. He has really risen in our esteem," Gowda, president of Karnataka Rakshana Vedike said.

Senthil Alagu Perumal said...

என்ன நண்பரே தலைவர் படத்தைப் போட்டு இப்படி தாக்கியிருக்கீங்க? நல்லா இருக்குதுனு கேள்விப் பட்டேன் இப்படி சொல்லுரீங்க? ஆனா உங்க விமர்சனம் சூப்பருங்கோ!

குடுபத்தோடு வந்திருந்தவர்களுக்கு நல்ல சூடு.
குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது அவர்களுக்கு கேடு.

எதுகை மோனை சூப்பர்.அப்ப நம்மளுக்கு (இளைஞர்) நல்ல வேட்டைனு சொல்லுங்க!!

Anonymous said...

இந்த விமர்சனத்துக்காகவே உனக்கு ஒரு புது பட்டம் குடுக்கனும்னு தோனுது. ”வலையுலக மைனர்*ஞ்சு”.

*, இதுக்கு என்ன எழுத்து வரனும்னு நீயே தேர்ந்தெடுத்துக்கோ:

ம, ந, கு, அ

பரிசல்காரன் said...

ச்சே படமில்ல!

ச்சேச்சே படம்!

Thamiz Priyan said...

செம விமர்சனம் விக்கி! தமிழ்மண ஜோதியில் கலந்தாச்சு போல இருக்கு... ;)

A N A N T H E N said...

ஹாஹாஹா

இப்படி எல்லாம் மிரட்டினா... படத்தை பார்க்காம போயிடுவோமா?

நாங்கல்லாம் ரொம்ப தைரியசாலியாக்கும்

_________________________________

விமர்சனம் அருமை நண்பரே

Thamira said...

லக்கி மற்றும் பரிசலின் அனுபவங்களை படித்தபிறகும் போனீர்கள் என்றால் உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இல்லை என்றால் உங்களைப் பார்த்து பரிதாபம்தான் படமுடியும்.

Anonymous said...

அடுத்த இரஜினியின் படம் உங்களின் இந்த ஏமாற்றத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று அந்த இலச்சிமில ஆத்தாவை மனதார வேண்டிக்கொள்வோம்!
கவலைப்படாதீர்கள் விக்ணேஷ்.

Anonymous said...

நயந்தாராவை மட்டும் குறை பட்டுக் கொள்றிங்க? நம்ப ஸ்ரேயா மட்டும் என்னவாம்? அவரும் இப்படித்தானே அறைகுறையாக உடை அணிந்து நடிக்கிறார்? நீங்கள் கவனிக்க வில்லையாக்கும்?...இதில் என்ன உங்களுக்கு ஓரவஞ்ஞனை?

VIKNESHWARAN ADAKKALAM said...

அனானி 1: என்னை புண்ணாக்கு டுபுக்கு என வாழ்த்தியதற்கு நன்றி. ஏன் பொத்திக் கொள்ள வேண்டும். அதான் குசேலன பத்தி ஊரே சிரிப்பா சிரிக்குதே..

அனானி2: ஐயய்யே!! என்னங்க பழக்கம் இது. அதையெல்லாமா பிதுக்குவாங்க... அப்படி என்னங்க கொலை வெறி என் மேல..

மரியாதை குறைவான வார்த்தையை சொல்லியதாலும். 2ஆம் அனானி கெட்ட வார்த்தை எழுதியதாலும் உங்கள் இருவரின் பின்னூட்டமும் அழிக்கப்படுகிறது.

நான் ரஜினியை பற்றி குறை கூறி எழுதவில்லை. மற்றவர்களில் பதிவை படித்த தாக்கத்தில் என்னை நொங்க வருவது சரியில்லை..

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சதீசு குமார்
உங்களை மரணத்தின் வேதனையில் இருந்து காப்பாற்றியதற்காக மகிழ்ச்சி கொள்கிறேன்.

@ அதிஷா
ஸ்டார்க்கு அர்த்தம் சொல்லிட்டேன். இந்நேரம் படம் பார்த்திருப்பிங்க.. அதன் தாக்கம் என்னனு புரிஞ்சிருக்கும்.

நல்ல வேளை ஸ்ரேயா நடிக்கல.. நடிச்சிருந்தா அவ்ர் ஒரு நல்ல ரசிகனை இழந்திருப்பார்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@வெண்பூ

எல்லோரும் சொல்வார்கள் புகை பிடிக்காதே அது உடலுக்கு தீங்கு என. அப்படி சொல்லியும் பரிசோதித்து பார்ப்பதில்லையா... இதும் அப்படி தான்...

@ஜெகதீசன்

நானும் :))

@ TBCD

மிக்க நன்றி. மீண்டும் வருக..

@NDTV

வருகைக்கு நன்றி

@செந்தில் அழகு பெருமாள்

படம் நல்லா இருக்குனு கேள்விமட்டும் தான் படமுடியும். பார்த்துட்டு வந்தவங்க சந்தோஷ பட முடியாதுங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜயகோபால்சாமி

ஏன் உங்களுக்கு இப்படி ஒரு விவகாரமான எண்ணம்.

@ பரிசல்காரன்

உங்களுக்கு பாதிப்பு ஒரு மடங்கு அதிகம் தான் போல..

@ தமிழ் பிரியன்

நானும் எழுத வேண்டாம் எனதான் நினைத்தேன். இருந்தாலும் இதை படிச்சாவது நாலு பேரு தப்பிக்கட்டும்னு தான் ஜோதியில் கலந்தாச்சு.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆனந்தன்

விதி வழியது...

@ தாமிரா

என்ன செய்வது கல்லை தூக்கி காலில் போட்ட கதை தான்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ உஷா.

அது சரி... அடுத்த படமா... முதலில் பார்ப்பேனா என முடிவு செய்ய வேண்டுமே...

@ ரசிகன்

நீங்க வாழ்க...

Anonymous said...

மிகச்சரியான விமர்சனம். கொஞ்சம் அவசரப்பட்டு ரஜினி துதி பாடி எனது தளத்தில் விமர்சனம் எழுதிவிட்டேன். சரி சரி அதற்கு பதிலாகத்தான் பதிவர்கள் அனைவரும் வெளுத்து வாங்குகிறீர்களே...

Anonymous said...

மொத்தத்தில் குசேலன் ஒரு ‘குஜிலி’ படம் ச்ச்சே… குப்பை படம்'}}}}

வேறென்ன சொல்ல? இப்படி ஆயிடுச்சு ரசினி ரசிகனுங்க பொழப்பு...

முகுந்தன் said...

அட்டகாசமான விமர்சனம்...

சின்னப் பையன் said...

விக்னேஸ்வரன் -> எனக்கு மட்டும் சொல்லிடுங்க, மண்டபத்துலே யார் எழுதிக்கொடுத்து இந்த மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கீங்க?... அருமையான நடை, நக்கல்.... நீங்க இந்த மாதிரி சூப்பரா எழுதணும்னா, *** மாதிரி படம் வந்தாத்தான் போல....வாழ்த்துக்கள்...