Tuesday, August 05, 2008

பெர்மூடா முக்கோணமும் புரியாத புதிர்களும்

1492ஆம் ஆண்டு அமேரிக்க கண்டத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கிருஸ்டப்பர் கொலம்பசும் அவர் மாழுமிகளும் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த மகிழ்ச்சியானது சூரியனைக் கண்ட பனி போல அதிக நாள் நீடிக்காமல்போனது அவர்களின் துர்ரதிஷ்டம் தான்.

நடு சமுத்திரத்தில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த சமயம் கொலம்பசின் திசை காட்டும் கருவி நிலை இல்லாமல் சுழன்றது. கொலம்பஸ் கப்பலின் வெளியே வந்து பார்த்தார். வான்நிலை மிக சீராக இருந்த்து. இந்நிகழ்வு கொலம்பஸுக்கு குழப்பத்தைக் கொடுத்த்து. எதனால் திசை காட்டும் கருவி அப்படிச் சுழல்கிறது எனும் கேள்வி அவரை துளைத்தது.

சில நாட்களுக்கு பின் நெருப்பு பிண்டங்கள் கடலில் குதித்தெழுவதை கொலம்பசின் குழுவினர் கண் கூட கண்டிருக்கிறார்கள். இந்நிகழ்வு அவர்களின் கப்பலில் இருந்து சற்று தூரத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது. அதன் பின் ஒரு மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்துவிட்டது.

இவை அனைத்தும் கொலம்பஸ் தனது அமேரிக்க கண்ட பயண குறிப்பேட்டில் வரைத்து வைத்த தகவல்கள். தாம் வந்திருக்கும் இடம் சாதாரண பூமி இல்லை என்பதை கொலம்பஸ் உணர்ந்தார். அவ்விடம் மர்மம் நிறைந்த நிலம் என்பதை அறிந்தார்கள்.

கொலம்பஸுக்கு பல வினோத பரிட்சயங்களை அளித்த அவ்விடம் இன்னமும் தனது மர்ம முடிச்சுகளை கட்டவிழ்காமல் தான் இருக்கிறது. அமேரிக்காவின் மயாமி, ஜமைக்காவின் பொயெர்டோ மற்றும் பெர்மூடா என இணைபடும் இம்முக்கோன இடத்தின் இரகசிய சித்தாந்தங்கள் இன்னமும் பலரின் ஆரய்ச்சிக்குட்பட்டு தான் கிடக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்து இன்றளவில் பெர்மூடா முக்கோணம் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் மர்மங்களை அறிவார் இல்லை.




கொலம்பஸின் பொர்மூடா முக்கோண குறிப்பை வைத்துப் பார்க்கையில் அவர் பெரும் பாக்கியசாலி. ஏன் என்று கோட்கின்றீர்களா? அதன் பின் அவ்விடத்தை கடல் மார்கமாகவும், ஆகாய மார்க மாகவும் கடந்த பல கப்பல்களும் வானூர்திகளும் தடம் தெரியாமல் மறைந்து போனது.

1880ஆம் ஆண்டு அட்லாண்டா எனப்படும் அமேரிக்க போர்க்கப்பல் மாயமாய் மறைந்த நிகழ்வு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. பெர்மூடா கடலருகே 300 இராணுவ வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த அட்லாண்டா திடீரென எவ்வித தடயமும் இல்லாமல் காணாமற் போனது.

இதனை தொடந்து 1.2லட்சம் பரப்பளவைக் கொண்ட பெர்மூட பகுதில் செல்லும் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும் மாயமாய் மறைந்து போவதை அறிந்தார்கள்.

1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பகல் வேலையில் பெர்மூட கடல் பகுதியை ரோந்து வந்த 5 விமானங்களின் ராடார் தொடர்பு திடீரென துண்டிப்புக் கண்டது. இந்நிகழ்வின் விசாரனையின் போது படை கேப்டன் ‘பிரச்சனை ஏற்பட்டுவிட்ட்து’ எனக் கடைசியாக கூறியுள்ளார். அதன் பின் அவ்விமானங்களின் நிலை அறிவார் இல்லை.இந்த 5 கப்பல்களையும் கண்டுபிடிக்கும் பொருட்டு Martin PBM-3 Mariner எனும் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்விமானமும் தனது 30 படைவீர்ர்களோடு காணாமல் போனது.

இம்மர்மங்கள் தொடர்பாக 1973ஆம் ஆண்டு UFO எனப்படும் பறக்கும் தட்டுகளின் ஆய்வாளர் ஒருவர் வெளியிட்ட தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென மறைந்து போகும் இவ்வகை சம்பவங்களுக்கும் வேற்றுக் கிரக வாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், வேற்றுக் கிரக வாசிகள் பெர்மூடா முக்கோன பகுதியை தங்களின் பூமி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இத்தகவல் உலக மக்களின் கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிபிட தக்கது.

பெர்மூட முக்கோனப் பகுதியின் மர்ம முடிச்சுகள் பல விதமான வர்ணனைகளோடு உலக மக்களின் பார்வைக்குள்ளானது. அவ்விடத்தை பூமியின் சிறந்த புவியீர்பு பகுதி எனக் கூறினார்கள், கடலடியில் ஏற்றபடக் கூடிய அதிர்வுகளின் தாக்கம் நிறைந்த பகுதி எனவும், அமேரிக்க இராணுவம் ஆவ்விடத்தை தனது அனுவாயுத சேதனை பகுதியாக பயன்படுத்தியதில் இப்பாதிப்புகள் ஏற்படுகிறது எனவும் கருத்துக் கொண்டுள்ளார்கள்.

இதை தவிர்த்து, வெற்றுக் கிரக வாசிகளின் பூமி ஆராய்ச்சி தளம், கடற் கன்னிகளின் நகரப் பகுதியெனவும் கூறுவது மக்களிடையே இப்பகுதி தொடர்பாக அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. மக்களின் கவனத்தை ஈர்க்கவும், பீதியை கிழப்பவும் ஏற்படுத்தப்பட்ட புரட்டு எனக் கருதினார்கள்.

பெர்மூட முக்கோனத்தை பற்றிய பல கருத்துக் கணிப்புகள் இருந்தாலும், இன்றளவில் எந்தத் தகவலும் திருப்திகரமாக அமையவில்லை. கெலம்பஸின் குறிப்போடு 500 ஆண்டுகளுக்கு மேல் கடந்தாகிவிட்டது. ஆராய்ச்சிகள் முழுமையடைய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால் பெர்மூடா முக்கோணம் இருமாப்புடன் தனது மர்மத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அண்மைய தகவலாக தேசிய பூகோலவியலின் கூற்றின் படி பெர்மூடா பகுதியில் எந்த அபாயமும் இல்லை என்றும் மேற்சொன்னவை புரட்டு என்றும் குறிபிடுகிறார்கள். கடலில் மறையும் கப்பல்களை சுற்றினும் ஒரு தகதகப்பை போன்ற ஆவியை பரவவிட்டு கண்களுக்கு புலப்படாமல் சொய்யும் நூதனம் தான் அது என்கிறார்கள். இது அமேரிக்க இராணுவத்தினர் கையாண்ட முறை.

அப்படி என்றால் கொலம்பஸ் தனது குறிப்பேட்டில் குறித்ததும் பொய்யான தகவலா? அல்லது அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படும் பொய்யா? பெர்மூடாவைச் சுற்றிப் பார்க்க நீங்கள் தயாரா?

பி.கு: இப்பதிவு நீண்ட நாட்களுக்கு முன் எழுதியது. மன நிறைவு இல்லாத காரணத்தால் பதிப்பிக்கவில்லை. நேரமின்மை காரணமாக புதியதாக எதுவும் எழுதவில்லை. இக்கட்டுரையை பதிப்பித்துவிட்டேன்.

32 comments:

Anonymous said...

இதுப் பற்றி அக்கினி எழுதிய பழைய கட்டுரை நினைவு வருகிறது...
இதுவும் நன்றாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

Me, the first

குசும்பன் said...

ரொம்ப வருடமாகவே சொல்லபடும் திகில் கதை இது! எங்கு எங்கோ ராக்கெட் அனுப்பி ஆராயும் ஆட்கள் இதை விட்டு வைத்து இருப்பார்களா என்பது சந்தேகமே!!!

குசும்பன் said...

//இப்பதிவு நீண்ட நாட்களுக்கு முன் எழுதியது. மன நிறைவு இல்லாத காரணத்தால் பதிப்பிக்கவில்லை.//

நன்றாக தான் இருக்கிறது, வேண்டும் என்றால் ஒரு தபா அங்கே போய் பார்த்துவிட்டு வந்து மனநிறைவோடு எழுத வாழ்த்துக்கள்:)))))

வெங்கட்ராமன் said...


ரொம்ப வருடமாகவே சொல்லபடும் திகில் கதை இது! எங்கு எங்கோ ராக்கெட் அனுப்பி ஆராயும் ஆட்கள் இதை விட்டு வைத்து இருப்பார்களா என்பது சந்தேகமே!!!


எனக்கும் அதே சந்தேகம் தான். சரி வாங்க நாம Google Earth ல ஆராச்சி பண்ணி பார்ப்போம்.

நல்ல பதிவு விக்னேஷ்

ராஜ நடராஜன் said...

பெர்முடா முக்கோணம் பற்றி வாசித்தது நினைவுக்கு வருகிறது.ஆனால் நீங்கள் திகில் கதையல்லவா சொல்கிறீர்கள்?

MyFriend said...

"The Devil's Triangle" என அழைக்கப்படும் பெர்முடா முக்கோணம் இன்னமும் ஒரு அவிழ்க்க முடியாத ரகசியமாகவே இருக்கு. flight 19 சம்பவத்துக்கு பிறகுதான் நம்ம ஆராய்ச்சியாளர்கள் இதனின் சீரியஸ் தன்மையை உணர்ந்திருக்கார்கள். இத்தனை காலமாகியும் யாராலும் என்னத்தான் நடக்குதுன்னு சொல்ல முடியலையே. ஏனென்றால், ஆராய்ச்சிக்கு போனவங்களும் காணாமல் போயிட்டாங்க. வானில் ஒரு கருப்பு ஓட்டை (Black Hole) போல கடலில் ஒரு பெர்முடா முக்கோணம் இன்னொரு உலகிற்கு வாயிலாக இருக்குமோ என்னும் ஒரு கருத்தோடவே நாமெல்லாம் திருப்தி அடைய மட்டுமே முடியும். அதற்கு மேல் ஒன்றுமே அறிய முடியாத விஞ்ஞானம் மட்டுமே இருக்கின்றது நம்மிடம். அவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கலாம் என்ற யூகமும்; போனவங்க இன்னொரு உலகத்தில் UFO & alien-களாக கருதப்பட்டு கொல்ல அல்லது ஆராய்ச்சி பொருளாக கூட ஆக்கப்பட்டிருக்கலாம். என்னென்னவோ நடக்க வாய்ப்புகள் இருக்கு.

நாம் ஒரு வேலை செய்வோமா? விக்னேஷ்வரன் தலமையில் நம்ம வலைப்பதிவர்கள் சிலரை இந்த ஆராய்ச்சியில் ஈடுபட செய்யலாம். நம்ம வலைப்பதிவாளர்கள் கண்டுபிடித்தால் நமக்கும் பெருமைதானே. ;-)

Anonymous said...

பல குழப்பங்களையும் திகில்களையும் கொண்ட பெர்மூடா முக்கோணத்தைப் பற்றி நன்றாகவே சொல்லியுள்ளீர்கள்!
நன்றி...தொடர்க!

MyFriend said...

விக்னேஷ்,

பெர்முடா முக்கோணம் தொடர்ச்சியாக அட்லாண்டிஸ் மற்றும் அதன் மர்மமும் பற்றியும் எழுதுங்க. அட்லாண்டிஸ் மர்மம் இந்த பெர்முடாவுக்கு கணேக்ஷன் இருக்கிறதா முன்னர் படித்திருக்கிறேன். ;-)

Athisha said...

அவ்வ்வ் பெர்முடா முக்கோணம்னா இவ்ளோ இருக்கா

நல்ல பதிவு ..

அது சரி பெர்முடா முக்கோணத்துக்கும் பெர்முடா டவுசருக்கும் என்ன தொடர்பு

ஜோசப் பால்ராஜ் said...

தமிழகத்தில் நீதிகட்சியில் இருந்தவரும், திருவாரூரை சேர்ந்தவருமான பன்னீர்செல்வம் அவர்கள் இந்தியாவில் இருந்து ஒரு ராணுவ விமானத்தில் இங்கிலாந்து சென்ற போது பெர்முட கடற்பரப்பில் விமானத்தோடு மறைந்துவிட்டதாகவும் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். இது இன்னும் புரியாத புதிராக இருப்பது வியப்பளிக்கிறது.

சின்னப் பையன் said...

நல்ல பதிவு. பின்னூட்டங்களும் சூப்பர்....

Thamiz Priyan said...

வித்தியாசமான தகவல். இதுவரை கேள்விப்பட்டதில்லை... செயற்கைக் கோள்கள் எல்லாம் இருக்கும் இக்காலத்தில் அங்கு செல்லாமலேயே ஆராய முடியும் என்று நினைக்கிறென்,.... ஆராய்ந்தால் மர்மங்கள் வெளிப்ப்டலாம்... :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ இனியவள் புனிதா
நன்றி... மீண்டும் வருக

@ லூசு பையன்
வருகைக்கு நன்றி. நீங்கள் இரண்டாம் ஆள் :(.

@குசும்பன்
எப்படி விட்டுவைத்து இருப்பார்கள். அமேரிக்கர்களின் தந்திரமாக இருக்குமோ?
வாங்களேன் போய் வரலாம்..

@வெங்கட்ராமன்
நானும் கூகில் உலகில் தேடினேன். சரியாக தெரியவில்லை, புரியவில்லை. நீங்கள் ஏதும் கண்டீரா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ராஜ நடராஜன்
உங்கள் வருகைக்கு நன்றி.. கதையா? அவ்வ்வ்... தவறான தகவல் ஏதும் எழுதிவிட்டேனோ?

@மை பிரண்டு
தலைமை நானு கூட யாரு வரா? வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
கண்டிப்பாக எழுத முயற்சிக்கிறேன்.

@மலர்விழி
தகவலுக்கு நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@அதிஷா
டவுசரா? உங்கள் கேள்விக்கு இரண்டு மூன்று கொச்சை வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஜி0அரட்டையில் சொல்லவா?

@ஜோசப் பால்ராஜ்
உங்கள் தகவலுக்கும் வருகைக்கும் நன்றி. புதிய தகவலாக சொல்லி இருக்கிறீர்கள். மேலும் சில தகவல்கள் திரட்டி பதிவு போடுங்களேன். சிறப்பாக இருக்கும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@சின்ன பையன்
அட கமெடி அடிக்காமல் பின்னூட்டம் போட்டிருக்கிங்களே?

@தமிழ் பிரியன்
இவ்வளவு நாள் அதை செய்யாமல் இருந்திருப்பார்களா? எனக்கும் விளங்கவில்லை...

கயல்விழி said...

ரொம்ப நல்ல பதிவு விக்னேஷ். very informative.

VIKNESHWARAN ADAKKALAM said...

@கயழ்விழி

மிக்க நன்றி.. மீண்டும் வருக...

CVR said...

நல்ல எழுதியிருக்கீங்க!!
தொடர்ந்து நீங்கள் இப்படி அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான தலைப்புகளில் எழுதி வருவது பாராட்டுக்குரியது...

//நாம் ஒரு வேலை செய்வோமா? விக்னேஷ்வரன் தலமையில் நம்ம வலைப்பதிவர்கள் சிலரை இந்த ஆராய்ச்சியில் ஈடுபட செய்யலாம்.////
ஸ்பான்சர் பண்ணுவதாக இருந்தால் நான் ரெடி...
;)

முரளிகண்ணன் said...

\\நன்றாக தான் இருக்கிறது, வேண்டும் என்றால் ஒரு தபா அங்கே போய் பார்த்துவிட்டு வந்து மனநிறைவோடு எழுத வாழ்த்துக்கள்\\

ha ha ha ha ha ha ha

VIKNESHWARAN ADAKKALAM said...

@சீ.வி.ஆர்
மிக்க நன்றி... நீண்ட இடைவெளிக்கு பிறகு பின்னூட்டறிங்க.. உற்சாகம் கொடுத்திருக்கிங்க... ஸ்பான்சர் பண்ற ஆள கடலில் தள்ளிவிடுவதா நேந்துக்கிட்டேன்... உங்களுக்கு ஓகேவா? கொலை செய்ய கூட்டு வைத்துக் கொள்ளலாம்..

@முரளிகண்ணன்

ஏங்க இப்படி ஒரு சிரிப்பு...

Anonymous said...

சுவாரஸ்யமான கட்டுரை.

பெர்மூடா போல இன்னும் உலகில் பல்வேறு மர்மங்களும், திகில்களும், வியப்புகளும் நிறைய இருக்கின்றன.

VIKNESHWARAN ADAKKALAM said...

@சேவியர்
உண்மைதான் அண்ணா எழுதலாம்...

கிரி said...

படிக்கும் போதே கொஞ்சம் பீதியாக தான் இருக்கிறது. 300 பேரு காணாம போயிட்டாங்கன்னா ..என்னன்னு சொல்றது.... ஒரு விபத்துன்னா பரவாயில்லா.. நீங்க சொல்றத பார்த்தா ..அங்கே போய் கப்பல்ல சங்கு ஊதுனா (ஹார்ன்) அது உள்ள இருக்கிறவங்களுக்கு சேர்த்து தான் போல இருக்கே...

நல்ல சுவாராசியமா இருக்கு :-) கூடவே பயமாகவும்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ நன்றி கிரி

எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கெலம்பஸ் எழுதியதாக கூறும் பொய் என நினைக்கிறேன்...

மங்களூர் சிவா said...

ம். அருமையான பதிவு. ஒரு திகில் படம் பார்த்த எஃபக்ட்.

Sanjai Gandhi said...

பெருமுடா மர்மங்கள் பற்றிய புத்தகம் ஒன்றை நேற்று தான் வாங்கி இருக்கேன் விக்கி. உங்கள் கட்டுரை அதை விரைவில் படித்து முடிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

Darren said...

இதனைப் பற்றி முன்பே அறிந்திருந்தாலும் உங்கள் பதிவினை படித்தபிறகு மீண்டும் அறியத்தூண்டியது..

இதனை RESEARCH Documentary படமாக youtube ல் பார்த்தேன். நீங்களும் பார்க்கலாம் இங்கே.

http://manamay.blogspot.com/2008/08/explore-bermuda-triangle-video-part-1.html

RAHAWAJ said...

நமது உடல் அமைப்பே ஒரு புதிர் இதில் பெர்மூடா புதிர்?

scifiarun said...

pala puthirakal ulagathil irukku

scifiarun said...

very intersting