Wednesday, January 13, 2010

கொசுறு 13/01/2010

சில தினங்களுக்கு முன் நண்பரோடு காலை சிற்றுண்டிக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்ட பிறகு நண்பர் சப்பாத்தி பொட்டலம்கட்ட ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார். கடையில் வேலை செய்யும் சர்வர் இவரது ஆடரை கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. மறுமுறை சொன்னபோதும் தலையை தலையை ஆட்டிக் கொண்டு சென்றார்.

பணம் செலுத்த வந்த போது, “அண்ணே ரெண்டு சப்பாத்தியா போட்டாச்சு எடுத்துக்கிறிங்களா?” என்றார்.

என் நண்பர் வேண்டாம் என மறுத்துவிட்டு ஒன்றுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு வந்தார்.

நமது வியாபார தளத்துக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள். நமக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள். அவர்களை நம்பிதான் நாம் வாழ வேண்டும்- இக்கூற்று மாகாத்மா காந்தியால் சொல்லப்பட்டது. பலவிடங்களிலும் இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள்.

வியாபாரத்தின் அடைவு நிலை என்பது கிடைக்கும் இலாபத்தால் மட்டும் கணக்கிட்டு முடிப்பதில்லை. அதிக இலாபம் திருட்டுக்குச் சமம் என்பார்கள். தயாரிப்புக்கும் பொருள் அல்லது கொடுக்கப்படும் சேவை எந்த அளவுக்கு அதை பெற்றுக் கொண்ட பயனீட்டாளரை திருப்திபடுத்தியது என்பதே அடைவு நிலையின் உச்சம்.

தொழில் துறை , விவசாய துறை , சுற்றுலா துறை , சேவை துறை என வியாபரங்களின் விரிவாக்கம் நாளொரு வண்ணமும் செழிப்படைந்து வருகிறது. வியாபாரத்தின் வழியே கொள்ளை பணத்தை ஈட்டுவது சாத்தியம் எனும் எண்ணம் பலரும் உண்டு. ஏற்புடைய கருத்தாயினும் பணம் கிடைத்தால் போதும் எனும் நோக்கில் எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாமா?
*****

சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி எனும் புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்திருக்கிறேன். நீல நிற அட்டையுடனான புத்தகம். இதற்கு கூட புத்தகமா என அதை புரட்டி பார்க்க கூட எத்தனிக்கவில்லை.

அன்று புத்தக கடையில் புதிய வடிவ அட்டையில் இருக்கக் கண்டதும் எடுத்துப் பார்த்தேன். சிறுகதை எழுதுவது எப்படி என்பது சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு நூல். தலைப்பின் காரணத்திற்காகவே இப்புத்தகம் சிறுகதை எழுதுவதை சொல்லிக் கொடுக்கும் புத்தகம் என நம்பி பலராலும் வாங்கப்பட்டிருக்கிறது.

உணரபட்டவை: சாணியடி சித்தர் சொன்னதை போல் முகப்பை பார்த்து புத்தகத்தை எடை போட கூடாது. வடிவமைப்பும் முக்கியமான ஒன்று என்பதை அறியமுடிகிறது. சமீப கால புத்தக முகப்புகள் சிறப்பாகவே வடிமைக்கப்பட்டு வெளியாகின்றன.
************எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. எப்போதாவது கவிதை அல்லது செய்திகளை எழுதி வைப்பதுண்டு. கடந்த ஆண்டு செய்தி சேகரிப்பதும் கவிதை எழுதுவதும் பலமாக குறைந்து போனது. டைரிகளும் புத்தம் புதிதாகவே இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் கிடைத்ததை போல 2010-ஆம் ஆண்டுக்கான டைரி ஒன்று கூட கிடைக்கவில்லை. இதைத் தான் எண்ணம் போல் வாழ்கை என்பார்களோ? ;-)

**************

சீனி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம் நமக்கு புதிதில்லை. பயனிட்டாளர் பொது இயக்கத்திடையே இதைச் சொல்வோமானால், மக்கள் மத்தியில் இனிப்பு நீர் வியாதி அதிகரிப்பதை தடுக்க இதுவே சிறந்த வழி என்பார்கள். ஏற்கனவே சொன்ன காரணம் தானே.

கிரெடிட் காட்டின் நிலை இன்று வரை புரியாமலே இருக்கிறது. இது போக தனிபட்ட சேவை வரிகள் இணைக்கப்படுமென ஊடகங்கள் வெளியிடும் தகவல்களால் தலை சுற்றுகிறது.
**********

பேஸ்புக் (முகரை புத்தகம்னு சொல்லலாமா?) வலைபக்கம் சுவாரசியமாக இருக்கிறது. வேடிக்கை, விளையாட்டுகள் என நேரம் நாசமாய் போகிறது. புத்திக்கு உறைத்தாலும் எண்ணத்தை கட்டுபடுத்த முடியவில்லை. இணையப்பக்கம் வரும் போதெல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருக்கச் சொல்கிறது.

மலேசிய மாணவர்களிடையே தேர்ச்சி விகிதமும், படிப்பில் ஆர்வக் குறைவு ஏற்பட்டுள்ளதற்கும் பேஸ்புக் போதை முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக மலாய் நாளேடு ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. பயனிட்டாளர்களிடையே அதீத போதையை கொடுக்கும் இவ்வலைப்பக்கத்திற்கு எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பது சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய பொருட்களிடையே இருக்கும் மோகம் நாளடைவில் குறைந்துப் போகும் தானே?
**************

இயக்குநர் அமிர் நடித்திருக்கும் யோகி மற்றும் ரேனிகுண்டா போன்ற படங்கள் யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்திருக்கின்றன. வன்முறையின் உச்சம் என சிலர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. வேட்டைகாரன் படத்தில் விஜயின் அலம்பல்களை கைதட்டி இரசிப்போருக்கு இப்படங்கள் வன்முறையாகத் தான் தெரியும் போல.
******************

தமிழ் நாட்டில் புத்தக திருவிழா களைகட்டி இருப்பதை அறிய முடிகிறது. சென்ற வருடத்தைப் போலவே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா எனும் அதே பெயர் வரிசைகளே இவ்வருடமும் அதிகபடியாக பேசப்படுகிறது.


கடந்த ஆண்டின் புத்தக சந்தையின் போது ஆடர் கொடுத்த மாயவலை இரண்டு மாதங்களுக்கு
முன் தான் என் கைக்கு கிடைத்தது. படித்து முடிப்பதற்குள் தொண்டை தண்ணி வற்றிப் போய்விடும் போல.

மாயவலை ஆறு வருட ஆய்வின் பதிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வேற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் விதமாகவே செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை புரிதலுக்கு மாயவலை சிறந்த புத்தகம் என்றே கூற முடியும். பா.ராவின் எழுத்து நடை கவரும் வகையில் அமைந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

*****************
அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துகள்.

17 comments:

Athisha said...

நல்லாருக்கு மச்சி!

Anbu said...

கொசுறு செய்திகள் அருமை அண்ணா..

Anbu said...

\\\வேட்டைகாரன் படத்தில் விஜயின் அலம்பல்களை கைதட்டி இரசிப்போருக்கு இப்படங்கள் வன்முறையாகத் தான் தெரியும் போல.\\\

:-)))

நட்புடன் ஜமால் said...

பணம் செலுத்த வந்த போது, “அண்ணே ரெண்டு சப்பாத்தியா போட்டாச்சு எடுத்துக்கிறிங்களா?” என்றார்.
என் நண்பர் வேண்டாம் என மறுத்துவிட்டு ஒன்றுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு வந்தார்.]]

இப்படி பல இடங்களில் மாட்டி வேண்டாம் என்று சொல்லத்தெரியாதவானகவே இன்றும்

Xavier said...

Great Thambi... :)

sathishsangkavi.blogspot.com said...

கொசுறு நல்லா இருக்கு...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

கலையரசன் said...

கடைசியா அந்த ஸ்ரேயா படத்தை பெருசா போட்டுயிருந்திருக்கலாம்..

இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

PPattian said...

நன்று விக்கி..

//பணம் கிடைத்தால் போதும் எனும் நோக்கில் எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாமா?
//

இதுதான் சாதாரண வாடிக்கையாளனாக நாம் எதிர்கொள்ளும் இன்றைய பெரிய பிரச்சினை

வால்பையன் said...

நல்ல கொசுறு!

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!

மனோவியம் said...

அருமை பொங்கல் வாழ்த்துக்கள் விக்கி....வாழ்க வளமுடன்

Anonymous said...

இன்னமும் வெளியில வர நிறைய இருக்கு.

தராசு said...

ஹலோ,

பொங்கல் வாழ்த்துக்கும் அந்த ஃபிகருக்கும் என்ன சம்பந்தம்??

Unknown said...

//எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. எப்போதாவது கவிதை அல்லது செய்திகளை எழுதி வைப்பதுண்டு. கடந்த ஆண்டு செய்தி சேகரிப்பதும் கவிதை எழுதுவதும் பலமாக குறைந்து போனது. டைரிகளும் புத்தம் புதிதாகவே இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் கிடைத்ததை போல 2010-ஆம் ஆண்டுக்கான டைரி ஒன்று கூட கிடைக்கவில்லை. இதைத் தான் எண்ணம் போல் வாழ்கை என்பார்களோ? ;-)//

why blood . same blood

cheena (சீனா) said...

கொசுறு நல்லாவே இருக்கு - சிந்தனைகள் சூப்பர் - ஆமா அதென்ன பொங்கள் ( பொங்குகிற கள்ளா ) வாழ்த்து - உடனே பொங்கல் வாழ்த்துன்னு மாத்து தம்பி

அன்பின் விக்கி

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Tamilvanan said...

//சேவை வரிகள் இணைக்கப்படுமென ஊடகங்கள் வெளியிடும் தகவல்களால் தலை சுற்றுகிறது.//

போக‌ போக‌ தெரியும் ந‌ம‌து அர‌சாங்க‌த்தின் வேச‌ம் புரியும்.

இன‌ம், ச‌ம‌ய‌ம்,ம‌தம் பேத‌ங்க‌ளை க‌ட‌ந்து த‌மிழ் பேசும் அனைவ‌ரும் ஒன்றினைந்து த‌மிழ‌ர் திருநாளை த‌மிழ்ப் புத்தாண்டை வ‌ர‌வேற்றுக் கொண்டாடிடுவோம்.

RAHAWAJ said...

கடைசியில் பொங்கல் வாழ்த்துக்கு வேறு படம் கிடைகிலையோ? வாழ்த்துக்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அதிஷா

நன்றி.

@ அன்பு

நன்றி

@ஜமால்

அண்ணே நீங்க நல்லவரு.

@ சேவியர்

நன்றி அண்ணா

@ சங்கவி

நன்றி சார்

@ கலையரசன்

நன்றி.

@ புபட்டியன்

நன்றி

@ வால்பையன்

நன்றி

@ மனோகரன்

நன்றி

@ புகழினி

ஆமா பாஸ், காலையில சரியா வரல...

@ தராசு

போங்க அண்ணாச்சி இப்படிலாம் கேட்டுக்கிட்டு. எனக்கு வெட்கமா இருக்கு.

@ ஜெய்சங்கர்.

என் சர்விசுல என தமிழ்ப்படங்களில் வருவதை போல் பதிவுலக டயலாக். கொஞ்சம் மாற்றினால் பெட்டர் ;-)

@ சீனா

நன்றி சீனா ஐயா...

@ தமிழ்வாணன்

நன்றி...

@ ஜவஹர்.

அது யூத்துகளுக்கு, நீங்க எதுக்கு அந்த படத்தை பார்த்திங்க?