Monday, October 12, 2009

கொசுறு 12/10/2009

சில காலமாக எதையும் எழுத தோன்றவில்லை. ஏதோ ஒரு குழப்ப நிலை என்று கூட சொல்லலாம். சில வேளைகளில் எழுதுவதற்கான சிந்தனைகள் பெருக்கெடுப்பதும், சில வேலைகளில் தடைபடுவதும் கால இடைவெளிகளில் இயல்பாகவே இருக்கின்றது. ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணமும், எழுதி முடித்தப் பின் கிடைக்கும் நிறைவும் கூட தீர்க்கமான முடிவுகளை எடுக்க தடையாக இருக்கிறது. இது எல்லோருக்கும் ஏற்படுவது தானோ?
***********

சனி பெயர்ச்சியின் பலன்கள் தினசரிகளை இன்று வரையினும் நிரப்பி வருகின்றன. சென்ற வாரம் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அமர்ந்திருக்கையில் அம்மாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைகாட்சியில் இராசி பலன் பார்த்தேன். இதை எல்லாம் சொன்னார்கள். பார்த்து கவனமாக இருந்துக் கொள் என்றார். நான் நிம்மதியாக இருந்தாலும் இப்படி பீதியை கிளப்பிவிட பல ‘நம்புங்கள் நாராயணன்கள்’ கிளம்பிவிடுகிறார்கள். இப்படி நிம்மதி கெடச் செய்யும் ராசி பலன் அவசியம் தானா?
******

ம.இ.காவின் தேர்தல் ‘போராட்டம்’ முடிந்த பின்பும் கட்சியின் சடுகுடுகள் முடிந்தபாடில்லை. நாளிகைகளில் தலையங்கம் தினமும் வெறுபேற்றித் தொலைக்கிறது. ஒரு செய்திக்கான தகவல் படித்தவுடன் இதற்கான மறுப்பறிக்கை நாளை இப்படி தான் இருக்கும் என பட்சி சொல்கிறது. எங்கே நானும் அரசியல் ஜோதிடனாகிவிடுவேனோ என பீதி பிசிறி அடிக்கிறது.

கட்சி மக்களுக்கு நன்மை செய்யும் எனும் எண்ணம் எல்லாம் எப்பொழுதும் எட்டாக்கனி தான் என்பதை இப்படி அதி தீவிரமாக சொல்லியாக வேண்டுமோ?
*****

இயக்குனர் ஷங்கரின் படங்கள் (ஜீன்ஸ் & காதலன் தவிர்த்து) ஒரே டெம்ப்ளேட்டை பல முறை எடிட் செய்து கொடுப்பதை போல் இருப்பது பக்கத்து வீட்டு பத்து வயசு பாப்பாவுக்கும் தெரிந்த செய்தி தான். இருப்பினும் அவரின் தயாரிப்புகளில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ஈரம் திரைப்படத்தை காணும் வாய்ப்புக் கிட்டியது. வழக்கமாக பார்த்து பழக்கப்பட்ட பேய் கதை என்றாலும் கதை நகர்வு சுவாரசியம் கொடுத்திருக்கிறது. அழகான இசை அமைப்பு. படம் கொஞ்சமாக ’ஃபைனல் டெஸ்டினேஷன்’ எனும் ஆங்கில படத்தையும் நினைவுபடுத்த வைக்கிறது.
******

எனக்கு சில அடிமைகள் வேண்டும் எனும் என் சிறுகதைக்கு வந்த மின்கடிதங்களுக்கு நன்றி. அதில் சில கடிதங்களில் சொல்லப்பட்ட ஒரு விடயம், விக்கி எனக்கு கதை புரியவில்லை. சுஜாதா பாணியா? என்ன சொல்ல வருகிறீர்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். இப்படியாக தான் இருந்தது.

நான் எழுதிய கதைக்கு நானே விளக்கம் கொடுப்பதை விட நான் அதை எழுதாமலே இருந்திருக்கலாம் என்றிருக்கிறது. படிப்பவர் புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மட்டரகமாக கதைகளை எழுதாமல் இருக்க முயற்சிக்கிறேன்.

இதை எழுதி முடித்த சமயத்தில் எனக்குள் எழுந்த கேள்வி ஒன்று:

அதீத கற்பனையில் சொல்லப்படும் ஒரு கதையை அறிவியல் பாணியில் சேர்ப்பது சரிதானா?

நரேஸ் அவர்களின் மடல் நயமாக இருக்கக் கண்டேன்.

அன்பின் விக்னேஷ்,

இது ஒரு நல்ல, பெரிய முயற்சி....அதற்காக எனது வாழ்த்துக்கள்

வலைப்பதிவு அலுவலகத்தில் தடா... எனக்கு வந்த மடலில் உங்கள் கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய எந்த பின்னூட்டத்திலாவது அல்லது யாராவது சுஜாதா நடை வருகிறது என்று சொல்லியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை....காரணம் அறிவியல் சார்ந்த நாவல் எழுத்துக்களில் அவரது ஆளுமை அதிகம் என்பது மட்டுமே!!! ஆனால், இந்த கதையின் பிண்ணனியில் இருக்கும் உங்களது மெனக்கெடலை, சுயசிந்தனையை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது....

முதல் பாதியை விட இரண்டாம் பாகம் சற்றே தொய்வடைந்தாற் போன்று உள்ளது...சில இடங்கள் முழுமையாக இல்லாத உணர்வை, எளிதில் புரிந்து கொள்ள முடியாத படியாக இருக்கிறது...

உதாரணம், இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்று எண்ணி திடீரென்று உலக வளர்ச்சியாளர்களின் சதி என்று ஒரு புதிய விஷயத்தை கொண்டு வருகிறீர்கள், அது கொஞ்சம் நெருடுகிறது...முடிவில் அந்தப் பெண் சொல்லும் விளக்கங்கள் என்று சில....இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாமோ....

என்னடா குறைகளை அதிகம் சொல்கிறேனே என்று எண்ணாதீர்கள்...இது கதையை மெருகூட்ட மட்டுமே....மற்றபடி கதையில் சிலாகிக்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன, உங்கள் முயற்சியையும் சேர்த்து...
--
நரேஷ்
meetnnk1@gmail.com
*****

கவிதை பற்றிய எனது புரிதல்கள் பிசகி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதை உணர முடிகிறது. வசனத்தை மடக்கி போடுவது. சிரமப்பட்டு தமிழ்ச் சொற்களை பொறுக்கி போடுவது. ரௌத்திரமாக ஒரு செய்தியை சொல்வது. இப்படியாக இருப்பது தான் கவிதையா? சில அறிவு ஜீவிகள் புதுக் கவிதைக்கும் மரபுகளை வகுத்து வருவதாக அறிய முடிகிறது. எப்படியோ... இது கால காலமாக தீராத ஒன்று தான்.

நண்பர் அமுதனின் ஈற்றடி வெண்பா இரசிக்க வைத்தது. கல்லூரி மாணவர்களின் இன்றய அவல நிலையை ஆங்கில கலப்பில் மரபுடன் படைத்திருப்பது இரசிக்க வைக்கிறது.

பிக்கப்பும் ஆவதொடு டேட்டிங்கும் போய்வந்து
செக்கப்பும் செய்வாள் சிலை!
******

எழுதாமல் இருந்த இக்காலகட்டத்தில் நலம் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி. நான் எழுத்தாளன் கிடையாது. நண்பர் வால் அடிக்கடி ஒன்று சொல்வார். நான் அவ்வளோ ‘வெர்த்’ இல்லை என. அது போல் நான் ’வெர்த்’ உள்ள ஆசாமியும் இல்லை. இது என் பொழுதுபோக்கு மட்டுமே. எண்ணம் இருக்கும் வரை எழுதலாமே... :-)
**********

நீண்ட நாட்களுக்கு பின் சாண்டில்யனின் புத்தகம் ஒன்றை படிக்க முற்பட்டேன். சில பக்கங்களில் திகட்ட ஆரம்பித்துவிட்டது. சரித்திர விடயங்களை மேம்போக்காக அறிந்துக் கொள்ள சாண்டில்யனின் நாவல்கள் துணை புரிவது மறுக்க இயலாது. பெண்களை அபரிமிதமாக வர்ணிப்பது. உலக அழகிகளை அவர் கதையில் மட்டுமே காண முடியும் என்பதைப் போன்ற சிருங்காரங்களையும் அகற்றினால் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் மிஞ்சும் என யோசிக்க வைக்கிறது.
*******

பார்க்க முடியாத கடவுள் மேல் அன்பு வைக்கிறது நெகடிவ் அப்ரோச், பார்க்க முடிந்த மனிதர்கள் மேல் அன்பு வைக்கிறது பாசிடிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.

21 comments:

sivanes said...

//பார்க்க முடியாத கடவுள் மேல் அன்பு வைக்கிறது நெகடிவ் அப்ரோச், பார்க்க முடிந்த மனிதர்கள் மேல் அன்பு வைக்கிறது பாசிடிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.//

அருமை அருமை, லேட்டாக‌ வ‌ந்தாலும், லேட்ட‌ஸ்டான‌ விக்ஷ‌ய‌ங்க‌ளோடு அச‌த்துரீங்க‌ பாஸ்...! தொடர்க... பாராட்டுக்க‌ள்...!

கோவி.கண்ணன் said...

//பார்க்க முடியாத கடவுள் மேல் அன்பு வைக்கிறது நெகடிவ் அப்ரோச், பார்க்க முடிந்த மனிதர்கள் மேல் அன்பு வைக்கிறது பாசிடிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.//

:)

இந்த பாசிடிவ் அப்ரோச்சுடன் அன்போடு பூவும் அல்வாவும் வாங்கிக் கொடுத்தேன் வரமாட்டேன்கிறார்கள் அண்ணேன்னு செந்தில் கவுண்டமணியிடம் வைதேகி காத்திருந்தாள் படத்தில் சொல்லுவார்.

அப்பாவி முரு said...

//பார்க்க முடியாத கடவுள் மேல் அன்பு வைக்கிறது நெகடிவ் அப்ரோச், பார்க்க முடிந்த மனிதர்கள் மேல் அன்பு வைக்கிறது பாசிடிவ் அப்ரோச் என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.//

எல்லாவற்றிர்க்கும் மேலே சிரேயாவின் படத்தை வைத்ததும் இதே காரணத்தால் தானோ?

முரளிகண்ணன் said...

நல் பகிர்வு

தராசு said...

யோவ்,

ஈ மெயில் அனுப்புனா, பதில் போடுங்கைய்யா, இனி இதுக்கெல்லாம் "என்னவோ தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் கொஞ்ச நாளாக, மெயில் பாக்ஸை திறக்கவே தோன்றுவதில்லை" ன்னெல்லாம் ப்திவு போடக் கூடாது.

ஆயில்யன் said...

//இது எல்லோருக்கும் ஏற்படுவது தானோ?//

எல்லாருக்குமல்ல! எதேனும் தோணிவிட்டால் இப்படி தோணும் :) லைக் நீங்க ஸ்ரேயா மாதிரி யாரையாச்சும் ரசிக்க ஆரம்பித்திருந்தால்.....! :)))))))

RAHAWAJ said...

பார்க்க முடியாத கடவுள் என்று ஒன்றும் இல்லை,நீங்கள் முயற்ச்சிக்கவில்லை என சொல்வது தான் சரி,முயற்ச்சி செய்யுங்கள் கடவுளை காணலாம்

மனோவியம் said...

நண்பரே என்ன வருத்தம்?சாதனைகளை படைக்க முற்ப்படும் போது சோதனை கண்டு வருத்தப்படலாமா? நீங்கள் நல்ல படைப்பாளார் என்பது உலகம் அறிந்த விஷயம் ஆயிற்றே!குறை நிறைகளை கூறத்தான் செய்வார்கள்.அது உங்களுக்கு தடைக்கற்கள் அல்ல,படிக்கற்கள்.பழுத்த் பழம் கல்லடி படத்தானே செய்யும்? மற்றவர் பாராட்ட வேண்டு என்பதற்காகவா நீங்கள் எழுதுகின்றீர்கள்? பாராட்டு இன்று வரும் நாளை போகும் .உங்களின் நல்ல கருத்து காலம் பூராவும் இருக்கும்.தொடந்து எழுதுங்கள்.காலம் நமது எழுத்தின் தரத்தை சொல்லும். யாருடைய் பாணி என்று எதை வைத்து சொல்கிறார்கள்? எந்த ஒரு எழுத்தாளானுக்கும் மற்றவர்களுடைய ஆளுமை இருக்கதானே செய்யும்.எழுத்தும் கருத்தும் பொதுவானது.நீங்கள் என்ன பிரம்மாவா புது இலக்கணம் படைப்பதற்கு? தளாராமல் நல் படைப்பை தாருங்கள்.

RAHAWAJ said...

சாணியடி சித்தன் அருள் புரிவானாக

கவி அழகன் said...

அருமை அருமை அருமை

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சிவனேசு

நன்றிங்க சிவனேஸ்... அசத்தல் ஏதும் இல்லை... ஜஸ்ட் லைக் தட்... ;-)

@ கோவி.கண்ணன்

அண்ணே நீங்க ஏதும் :))))

@ முரு

எதே காரணத்தால்... அண்ணே என் லெவலுக்கு என்னைத் தெரியாத ஸ்ரேயா தான் லாயக்கு படும்... :) டைரக்ட் டீலிங் டிபிகல்ட்

@ முரளி கண்ணன்

நன்றி ;-)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தராசு

சாரி பாஸ்... சம் டிலேய்ஸ்... ஓடோடி வருகிறேன்...

@ ஆயில்யன்

நீங்க என்ன சொல்லவரிங்க... சின்ன பையன்கிட்ட இப்படியா அசிங்கமா பேசுறது...

@ ஜவஹர்

ஏன் இந்த கொலை வெறி பாஸ்... உடம்புக்கு சரி இல்லையா...

@ மனோகரன் கிருஷ்ணன்

:-) ஐம் ஓகே பாஸ்... நலம் நலமரிய ஆவல்

@ கவிக்கிழவன்

நன்றி...

ரவி said...

சாண்டில்யனை பத்து வருடத்துக்கு முன் படித்திருந்தால் அதன் ருசியே தனி. என்ன செய்ய, காலமாற்றங்கள் !!!

உங்களோட எழுத்து நடையின் மெருகு கூடிருச்சு விக்கி...!!!

இந்த பதிவுக்கு ஓட்டு போட்டேன்..

goma said...

எனக்கும் அதே மனநிலைதான்.
ஹாஸ்ய ரசமும் கொதிக்க வில்லை,வள்ளுவமும் ஓரடி கூட எழுதப் படாமல் நிற்கிறது.....
எப்படிக் கடந்து வந்தீர்கள் அதையும் சொல்லுங்களேன்

A N A N T H E N said...

படிச்சேன், பாதி... கொமேன்ட்ஸ் நாளைக்கு

A N A N T H E N said...

அந்த அண்டி யாரு... போட்டோல... இன்னுமா இவங்களுக்கு ரசிகர் இருக்காங்க?

வால்பையன் said...

தல நீங்களும் பிரபல எழுத்தாளார் ஆகிட்டிங்க!

பாருங்க மெயில்லாம் வருது!

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

குழப்ப நிலை எல்லோருக்கும் ஏற்படுவது தான் - இயல்பான ஒன்று தான் - சரியாய் விடும்

நம்புங்கள் நாராயணனை - தவிர்க்க இயலாது

ஈற்றடி வெண்பா அருமை -

சாணியடிச் சித்தர் கூறியதும் அருமை

நல்வாழ்த்துகள் விக்கி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ செந்தழல் ரவி

சாண்டில்யனின் கடல் புறா, மன்னன் மகள், விலை ராணி போன்றவை இரசிக்க வைத்தவை. மேலும் படிக்க படிக்க ஒத்த சயலையே கொடுக்கிறது. நன்றி அண்ணா ;-)

@ கோமா

என்ன ஆனது. ஏதும் பிரச்சனையா?

@ அனந்தன்

யோவ்... யார பார்த்து என்ன பேசுற... ஸ்ரேயா மை டார்லிங்...

@ வால்பையன்

ஹா ஹா ஹா... அப்படியா ;-)

@ சீனா

நன்றி ஐயா...

Tamilvanan said...

//கட்சி மக்களுக்கு நன்மை செய்யும் எனும் எண்ணம் எல்லாம் எப்பொழுதும் எட்டாக்கனி தான் என்பதை இப்படி அதி தீவிரமாக சொல்லியாக வேண்டுமோ?//

ந‌ல்ல‌ அர‌சிய‌ல் கணிப்பு,க‌வ‌னிப்பு.

//பார்க்க முடிந்த மனிதர்கள் மேல் அன்பு வைக்கிறது பாசிடிவ் அப்ரோச்//

தின‌மும் எதெச்சையாக‌ எதிர் வீட்டு பொண்ணை,ப‌க்க‌த்து வீட்டு கார‌ரின் ம‌னைவியை பார்க்கிறேன்.அன்பு வைக‌க‌லாமா!!!!!!!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

ம்ம்ம்.... ஆகட்டும் ஆகட்டும்...