Wednesday, September 02, 2009

செம்புலப் பெயல் நீர் போல...


முதல் முறையாக

உனை சந்திக்கப் போகிறேன்

எப்படி இருப்பாய்

என்ன பேசுவாய்- எனும்

எண்ணற்ற ஆசைகளோடு

ச்சே... என்ன இது புது கவிதையா. இல்லை... கொலை மிரட்டல் வரும். வாக்கியத்தை மடக்கி போட்ட வரிகள் என வைத்துக் கொள்கிறேன். வேண்டாம் இதற்கு மேல் எழுத வேண்டாம்... சிந்தனை நிலையாக இல்லை. எங்கெங்கொ பறக்கிறது.

ஆம் முதல் முறையாக அவளை சந்திக்கப் போகிறேன். கழுத்தளவு ஆசைகள். ம்ம்ம்... பேசிவிட வேண்டும். எப்படி ஆரம்பிப்பது. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது... இல்லை இது பயமில்லை... பதற்றம்...

காலையில் கிளம்பிவிட்டேன். ஒரு வார தாடியை சேமித்து வைத்து நேற்றிரவு தான் 'கிளீன் ஷேவ்' செய்தேன். ஹம்ம்ம்... இந்த முகம் அவளை கவருமா... பெருமூச்சு ஒன்று விடுதலையாகி சென்றது. இந்த சட்டை, இந்த 'பேண்ட்' எனக்கு எடுப்பாக இருக்குமா என்று நினைத்து வாங்கவில்லை. வாங்க வேண்டும் என்று நினைத்து வாங்கிவிட்டேன். இதை அணிந்து சென்றால் நன்றாக இருக்குமா? இவன் உடை கூட சரி இல்லை என்று ஆரம்பத்திலேயே கோட்டை விட்டுவிடுவேனோ என்ற எண்ணம் ஒரு பக்கம்.

இந்த வாசனை திரவியம் வேண்டாம். ஒரு வேளை அவளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். முகம் சுளித்துவிட்டால்.... ம்ம்ம்... இல்லை கொஞ்சமாக போட்டுக் கொள்ளலாம்... நெடுந்தூரம் போகிறோம்... மக்கள் நலனும் முக்கியம்.

சில மணி நேர பயணம். பேருந்தில் அமர்ந்திருந்த சமயம் எதுவும் கவரவில்லை. சாலையோர காட்சிகள் சூன்யமாக மறைந்து போனது. அவளை சந்திக்கும் தருணத்திற்காக உள் மனம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. எப்படி ஆரம்பிப்பது.... எனது கைப்பேசியில் இருந்து சில எஸ்.எம்.எஸ்கள் அவளுக்காக பறந்தது. அவ்விடம் சென்றடையும் வரை இந்த நேரம் கரைய வேண்டும். உள்மனம் அவசரப்படுத்தியது. காதில் எம்.பி.3யை மாட்டிக் கொண்டேன். ஒரு சில காதல் வரிகளை இரசித்தேன். தூங்கிப் போனேன்.

ஒரு வழியாக வந்துவிட்டேன். பயண தூரம் மறைந்து போனது. அவள் தொடர்பு கொண்டாள். காத்திருக்கும் இடத்தை சொன்னாள். அவள் குரலில் பயம் கலந்திருந்தது. சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டாள். போகட்டும்... பாதகமில்லை....

நான் அவ்விடம் விரைந்தேன். தூரத்தில் அவளைக் கண்டேன். அவளும் என்னை பார்த்துவிட்டாள். அடையாளம் கண்டு கொண்டாள். பிடிக்குமா... பேசுவாளா...

என்னை மகிழ்ச்சியாகவே வரவேற்றாள். நிம்மதி என்னுள் மலர்ந்தது. 'பர்ஸ்ட் இன்ப்ரேஷன்' ஒவ்வொரு மனிதனுக்கும் அது முக்கியமான தருணம் இல்லையா.

"யூ ஆர் லுக்கிங் ஹண்ட்சம்" ஹம்ம்ம் இது வரை யாரும் சொல்லாத ஒன்று. இவள் ஏன் இப்படி சொல்ல வேண்டும். இது உண்மை தானா? இல்லை எனக்காக சொன்னாளா... இன்றுவரை குழம்புகிறேன். பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை... அவள் சொன்னது பிடித்திருந்தது...

"உங்கள் விரல்களில் நடுக்கம் தெரிகிறது", குளிர்பாக கோப்பைக்கு அருகில் இருந்த என் கரத்தை பார்த்து சொன்னாள். மை காட்... கன்ரோல் யுவர் செல்ப்...

எவ்வளவு அழகாக இருக்கிறாள். கோர்த்து வைத்திருந்த வார்த்தைகள் நெஞ்சுக்குள் சுக்குநூறாக உடைந்து போனது. அதை அடுக்க முற்படவில்லை. பேசுவோம்... போவதற்குள் சொல்லிவிட வேண்டும் எனும் தீர்மானம் மட்டும் மாறவில்லை.

என்னைக் களவாடும்

விழிகளின் வலிமைக்கு

என்ன பதில் சொல்வேன்

உன் இமைகள் மீது

பொறாமை வருகிறது

எவ்வளவு அழகாக

அதை பத்திரப்படுத்துகிறது

உன் விழிகளை சிறைபடுத்த

என் இமைகள் துடிப்பதை

அது அறியவில்லை

கொடுமைக்காரியே...

ஐய்யய்யோ என்ன இது... கவிதை எனும் பெயரில் ஒரு வஸ்து... வேண்டாம்... வேண்டாம்... மீண்டும் கதைக்கு வருவோம். கோவம் வேண்டாம் கண்மணியே பொதுவில் எழுதுவதால் என் வர்ணனைகளை தவிர்த்துக் கொள்வது நலம் என ஒரு அசரிரீ குரல் கேட்பது நன்றாகவே விளங்குகிறது. எனை கொலை செய்துவிடாதே.

அப்பப்பா என்ன ஒரு கண்கள். கொஞ்சமாக பழுப்பு நிறம் கலந்த சின்ன கண்கள். கொலை செய்யும் கண்கள் இதை பார்த்து தான் சொல்ல வேண்டுமா? ம்ம்ம்.... பதற்றம்... பதற்றம்... பதற்றம்... இல்லை நிச்சயமாக சொல்லிவிடுவேன். என் குரல் சிக்கிக் கொள்ளாமல் இருக்கட்டும்...

என் பரிசுகளை அவள் இரசித்தால். "இதை மட்டும் பிரிக்க வேண்டாம்", அறைக்கு சென்ற பின் பார்த்துக் கொள்ள சொன்னேன். எனது வருகையால் அவள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறாள். புரிந்துக் கொள்ள முடிந்தது.

அவளோடு பேசிக் கொண்டிருக்கும் இந்தத் தருணம் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது உங்களுக்காக என அவள் கொடுத்த சாக்லேட் கூட ஒரு சின்னமாக என் முன் இப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறது. சாக்லேட்டே.... உனக்கு ஆயுசு கெட்டி... அவள் கொடுத்த காரணத்தினால் நீ உயிரோடு இருக்கிறாய்.... அவள் கரம்பட்ட நீயாவது என்னுடன் இருக்கிறாயே... நீ நல்ல சாக்லெட் தான்... ச்சே ச்சே என்ன இது எனக்கு பைத்தியம் முற்றிவிட்டது... ஆம் அவள் நினைவின் பைத்தியம்....

எல்லாவற்றையும் இங்கு எழுதிவிட வேண்டுமா? இல்லை வேண்டாம்.... சில நினைவுகள் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கட்டும்...

சில மணி நேரங்கள் சடுதியில் சட்டென காலத்தில் கரைந்தோடியது. மீண்டும் இந்த தருணம் என் வாழ்வில் ஏற்பட காத்திருக்கிறேன். உன் நினைவாக எதையாவது எழுதி கொடு என்றேன். நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை திருப்பி சுபம் என குறிப்பிட்டப்பட்டிருந்த பகுதிக்கு கீழிருந்த வேற்றிடத்தில் எதையோ எழுதினாய். பார்க்காதே என கண்டிப்பாக சொன்னாய். எழுதிவிட்டு இப்போது பார்க்க வேண்டாம். பேருந்தில் போகும் போது பார்த்துக் கொள்ளுங்கள் என்றாய்.

உன்னை வழியனுப்பிவிட்டு பேருந்துக்கு காத்திருக்கும் சயமம் அதை பிரித்து படித்தேன். உன்னை போலவே நீ எழுதிய தமிழ் எழுத்துகளும் அழகாகவே இருக்கின்றன. ஒன்னும் இல்லை சும்மா ரெண்டு வரி எழுதினேன் என்றாய். எனக்கு அது கவிதை தான்.

உன் அன்பை

வர்ணிக்க

நான் இன்னும்

வார்த்தைகளை

தேடுகிறேன்...

மன்னித்திடு...

என் தாய்மொழி

இன்னும்

தவித்துக் கொண்டிருக்கிறது

மீண்டும் மீண்டும் எனக்கான உனது இவ்வரிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். என்னவளே உனக்காக காத்திருப்பேன்.

18 comments:

கோவி.கண்ணன் said...

//மீண்டும் மீண்டும் எனக்கான உனது இவ்வரிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். என்னவளே உனக்காக காத்திருப்பேன்.//

தம்பி மூன்று பேரை தேர்தெடுத்து அதில் இருவரை காதலித்து, அந்த இருவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

பார்த்து செய் பார்த்து செய் !

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

விக்கி, கலக்கலா இருக்கு!

எழுத்தோட்டமே சில இடங்களில் கவி நயமூட்டுகிறது.

வேகமாக இழுத்துச்செல்லும் பாங்கும் அருமை!

அப்பாவி முரு said...

முடியலை...

என்னால முடியல...

Unknown said...

//முடியலை...

என்னால முடியல...//

சொல்லுங்க முரு . நான் வேணா try 2 பண்ணுறேன்

விஜய் ஆனந்த் said...

அடடே...அடடடடடே!!!

புவனேஸ்வரி said...

நான் இந்த வலைபதிவுக்கு புதியவள். உங்களுடைய வலைப்பதிவு முகவரியை தேடி அலைந்த ரசிகை. படிக்க மட்டுமே வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்தேன் அனால் உங்கள் முதல் பதிவே என்னை எழுதவும் விட்டது.
நான் படித்து வியந்த ஒரு அற்புதமான ம்ம்ம்ம்ம்....காதல் அனுபவம். கண்ணியமான அதே சமயம் காதலுடன் கூடிய வித்தியாசமான அனுபவம்.
அந்த சாக்லெட்டை பற்றி உங்கள் வரிகள் பிரமாதம்...
"சாக்லேட்டே.... உனக்கு ஆயுசு கெட்டி... அவள் கொடுத்த காரணத்தினால் நீ உயிரோடு இருக்கிறாய்.... அவள் கரம்பட்ட நீயாவது என்னுடன் இருக்கிறாயே... "
சாதரண வரிகளே கவிதை போல இனிக்கிறது..
அந்த கொடுமைக்காரி கொடுத்து வைத்தவள்..
உங்கள் காதல் நிறைவேற தினமும் இறைவனை பிரார்த்திக்கும் முதல் ரசிகை நான்..
நன்றி

சிவக்குமரன் said...

/// கோவி.கண்ணன் said...
//மீண்டும் மீண்டும் எனக்கான உனது இவ்வரிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். என்னவளே உனக்காக காத்திருப்பேன்.//

தம்பி மூன்று பேரை தேர்தெடுத்து அதில் இருவரை காதலித்து, அந்த இருவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

பார்த்து செய் பார்த்து செய் !
///

repeateeeeey

தராசு said...

கலக்கல் விக்கி,

வாழ்த்துக்கள். சொந்த அனுபவம் நிறைய தெரியுது. ஆமா, ஒரு சந்தேகம், அவௌங்களும் புத்தகம் படிக்கறவங்க தானா, நல்லா சேர்ந்திருக்காய்ங்கையா கூட்டு.

Anonymous said...

கனவுகளில் சிக்குண்டு
கவிதைகளின் கரம் கொண்டு
நீ காதலை வரித்திருக்கிறாய்..
அவள் கொடுத்து வைத்தவள் தான்..
ஆனால் கொடுமைக்காரி அல்லவா..
இதயத்தை கொடுத்து விடாதே..
கொலை செய்திட போகிறாள்...

hahaha jz kiddin..:)
nyway ol de best..

~டீபா~

Anonymous said...

//அவள் குரலில் பயம் கலந்திருந்தது. சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டாள். போகட்டும்... பாதகமில்லை....// :)

//ச்சே ச்சே என்ன இது எனக்கு பைத்தியம் முற்றிவிட்டது... ஆம் அவள் நினைவின் பைத்தியம்....//
தெரியுமே..

//எல்லாவற்றையும் இங்கு எழுதிவிட வேண்டுமா? இல்லை வேண்டாம்.... சில நினைவுகள் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கட்டும்...// sooo sweet..


ரொம்பவும் ரசித்தேன்..
வார்த்தைகளை விட உங்கள்
அன்பு அழகாக இருக்கிறது..
கவித்துவமான காதல்..
வாழ்த்துக்கள்..

மனோவியம் said...

ம்ம்ம்ம்ம்ம்......சங்க காலத்து வார்த்தைகளை அப்ப்டியே அள்ளிக்கொண்டு வந்து உங்கள் சட்டை பையில் தினித்து,ஒவ்வொன்றாக எடுத்து,நாரினிலே பூக்களை சொருகி மணமாலைகளை கட்டுவது போன்று,வார்த்தை கோர்வைகளை நன்முத்து மாலையாய் கோர்த்து வைத்து யாரை எதிர்ப்பார்த்து காத்திருக்கீர்கள் என்று எனக்கு தெரியவில்லை விக்கி? ...கனவில் வந்த தேவதையா?...இல்லை கடைக்கண் பார்த்த காதலியா?
வரிக்கு வரி வார்த்தை ஜாலாங்கள் தெரிகிறது.அதிலே கவிதை நடை மிளிர்கிற்து.கவிஞன் நெஞ்சம்,கவிதை கொஞ்சும் என்பதை உங்கள் எழுத்து நடை சுட்டுகினறன.
வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நண்பரே....

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோவி.கண்ணன்

அண்ணா இதை அனுபவத்தின் பேரில் சொல்கிறீர்களா??? அண்ணிக்கு தெரியுமா... :)))

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா...

@ அப்பாடி முரு

என்னாச்சு பாஸ்.... வயிற்று வலி... :)

@ ஜெய்சங்கர்

உங்கள் திருமண வாழ்க்கை எப்படி போகிறது... :)

@ விஜய் ஆனந்த்

பிம்பலக்கி பிலாக்கி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ புவனேஸ்வரி

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... பிரார்த்தனையா... அது சரி... உங்கள் இறைவனை வரச் சொல்லுங்கள் ஒரு கோப்பை தேனீர் அருந்த வேண்டும்.

@ சிவக்குமரன்

நன்றி...

@ தராசு

:) நோ கமெண்ட்ஸ்... வாழ்த்துக்கு நன்றி...


@ டீபா

ஓ... சரி கொடுமைக்காரி... :)

@ அனானி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ மனோகரன்

நோரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால் சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி...

Tamilvanan said...

//என்னவளே உனக்காக காத்திருப்பேன்.//

காத்திருப்பது சுகம். உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவது நலம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

அது சரி :)

A N A N T H E N said...

அழகான மொழி, விருவிருப்பா எழுதப்பட்டிருக்கு
தாய்மொழி தவித்தது போதும், தவிப்பை நிருத்த அம்மாட்ட சொல்லி கால்ல ஒரு கட்டு போட்டுக்கோங்க :P

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனந்தன்

போயாங்....

malar said...

மிக மிக அருமை விக்னேஷ்..
இத்தனை நாட்கள் படிக்காமல் மிஸ் பண்ணிட்டேனே!!!

கவிநயமான காதல் கதை...சூப்பர் பா..

காதல் கை கூடி, கால் கட்டு விரைவில் அணிந்துக் கொள்ள வாழ்த்துகள் பல :)
************************************