 ”டாக்டர், இஞ்சினியர், லாயர்னு படிச்சவனுங்களே 60000 ரூபா ஜெயிக்க மூக்கால அழுவுறானுங்க. எச்சி கிளாஸ் எடுக்கிற சேரி நாய் உனக்கு எல்லா பதிலும் தெரியுதா? யார் உனக்கு விடை சொல்லி கொடுத்தது சொல்லு?” என பின்னி பெடல் எடுக்கிறார்கள் அவனை.
”டாக்டர், இஞ்சினியர், லாயர்னு படிச்சவனுங்களே 60000 ரூபா ஜெயிக்க மூக்கால அழுவுறானுங்க. எச்சி கிளாஸ் எடுக்கிற சேரி நாய் உனக்கு எல்லா பதிலும் தெரியுதா? யார் உனக்கு விடை சொல்லி கொடுத்தது சொல்லு?” என பின்னி பெடல் எடுக்கிறார்கள் அவனை.மொத்த வாழ்க்கையும் ஆரம்பம் முதல் அடிபட்டு வாழ்ந்து வரும் அவனுக்கு போலிஸின் அடியும் உதையும் ஒன்றும் பெரிதில்லை என்பதைப் போல் அசால்டாக அமர்ந்திருக்கிறான். எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் சொல்கிறான். எனக்கு அந்த கேள்விகளுக்கு விடை தெரியும் என்கிறான். அது எப்படி என்பதாக ‘ஃபிளாஷ்பேக்’, இன்றய நிலை என கதை சுழல்கிறது.
படிப்பறிவு இல்லாத நாயகன். ”இந்த 1000ரூபா நோட்டில் இருக்கிறது யாருனு தெரியுமா?” போலிஸ்காரன் கேட்க. காந்தி என அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மில்லியனர் போட்டியில் அமேரிக்க டாலரில் இருப்பது பெஞ்சமின் ஃப்ராங்களின் என்பதை நினைவு கூர்ந்து பதில் சொல்கிறான்.
எல்லாம் அனுபவத்தில் தெரிந்துக் கொண்டது தான். மதி நுட்பம் கொண்ட சிறுவன். எந்த நேரத்தில் போன் போட்டால் மில்லியனர் நிகழ்ச்சிக்கு சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என்பது முதல் பிஞ்சு மரத்தில் அடித்த ஆணியைப் போல சின்ன வயதில் மனதில் பதிந்த காதலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்.
“உனக்கு ஒன்னு தெரியுமா... வாழ்க்கையில வரும் பிரச்சனைக்குக் காரணம் ரெண்டு தான் இருக்கு, ஒன்னு பணம் இன்னொன்னு பொண்ணுங்க” என போலிஸ்காரன் ஞான உபதேசம் செய்கிறான். உண்மையில் அவன் வாழ்க்கையில் இரண்டு தேடல்கள் இருந்தன. ஒன்று பணம் மற்றொன்று தொலைந்து போன காதலி.
தன் காதலி தன்னை பார்க்கக் கூடும் என்பதற்காக மில்லியனர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறான். ”எல்லோருக்கும் ஏன் இந்த நிகழ்ச்சி பிடிக்கிறது?” என இடையில் சந்திக்கும் தன் காதலியை கேட்கிறான். ”எல்லோரும் எதில் இருந்தோ விடுபட்டு, புதிய ஒன்றை நோக்கி போக பாக்குறாங்க” என்கிறாள் அவள்.
வாழ்க்கை நினைத்தபடி அமைந்துவிடுவதில்லை. சிறு வயதில் ஏற்படும் கலவரத்தில் தாயை பரி கொடுக்கிறான் ஜமால். ஜமால் மற்றும் அவனது அண்ணன் இருவரும் உயிருக்கு தப்பி ஓடுகிறார்கள். அச்சமயம் நாயகியை சந்திக்கிறார்கள்.
 எங்கிருந்தாலும் தம் காதலி தம்மைப் பார்க்கக் கூடும் எனும் நம்பிக்கையில் மில்லியனர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறான். இன்றய நிலையில் இந்தியாவில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் எப்படி இருக்கிறார்கள், ஒரு பெண் எப்படி எல்லாம் அடிமையாக்கப்படுகிறாள் எனும் செய்திகளை கன்னத்தில் அறையாதக் குறையாக படம் பிடித்துள்ளார்கள்.
எங்கிருந்தாலும் தம் காதலி தம்மைப் பார்க்கக் கூடும் எனும் நம்பிக்கையில் மில்லியனர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறான். இன்றய நிலையில் இந்தியாவில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் எப்படி இருக்கிறார்கள், ஒரு பெண் எப்படி எல்லாம் அடிமையாக்கப்படுகிறாள் எனும் செய்திகளை கன்னத்தில் அறையாதக் குறையாக படம் பிடித்துள்ளார்கள்.படத்தின் மையக் கருத்து தன்னம்பிக்கை. மற்றபடி அதிகமாகக் காண்பிக்கப்படுவன நெகட்டிவ் சமாசரங்கள் தான். நெகட்டிவ் கேரக்டர்கள் அதிகபடியாகவும் இருக்கிறது. நாயகன் சிறுவனாக இருக்கும் சமயம் அவனை சிலர் அடிக்க வருகிறார்கள். அப்போது ஓர் அமேரிக்க தம்பதியினர் அவனைக் காப்பாற்றுகிறார்கள். (அவர்கள் நல்லவர்களாம்... என்னா ஒரு வில்லத்தனம்...)
இப்போதெல்லாம் அதிகான தமிழ் படங்களில் பாலிஷ் போட்ட இயற்கைக் காட்சிகளுக்காக வெளிநாடுகளில் சென்று படபிடிப்பு நடத்துகிறார்கள். எல்லா வழங்கள் இருந்தும் இன்னமும் மிதிபட்டுக் கிடக்கும் இந்திய நாட்டின் நிலையை தைரியமாக எடுத்துச் சொன்னப் படங்கள் குறைவு தான். அப்படி இருந்தாலும் அவை அரசியல் நெருக்கடிகளுக்குள்ளாகலாம். இல்லை என்றால் கோர்ட் கேஸ் என நீதிமன்றத்தில் இழுக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படலாம்.
ஏ.ஆர் ரகுமானின் இசையில் குறை ஒன்றும் சொல்லிவிட முடியாது. தமது பணியை செம்மையாகவே செய்திருக்கிறார். இசை மிக சிறப்பாக இருக்கிறது. தமிழில் இதைவிட சிறப்பாகவும் அவர் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதே உண்மை. ஆனால் ஆங்கில திரைப்படம் என்பதால் என்னவோ ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படிருக்கிறதாக கருதுகிறேன். எல்லோரும் வாழ்த்து சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் சொல்லாமல் இருந்தால் என்னாவது. இசைப் புயல் ஏ.ஆர்.குமானுக்கு எனது வாழ்த்துகள்.
ஸ்லாம் டாக் என்றும் பசுமையான காதலாய் மனதில் நிறைகிறது. அதில் ஒரு வசம் வருகிறது. அதை மிகவும் இரசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.
“நான் எந்த தப்பும் பண்ணலை. எனக்கு ஏன் தண்டனை”, என்கிறான் நாயகன்.
”நீ தப்பு பண்ணலை, ரொம்ப நல்லவனா இருக்கிறே. அது தான் தப்பு” என போலிஸ்காரன் சொல்வான். நிஜம்தானே?
 
 















