Saturday, October 25, 2008

களவாடி பசங்க திருந்தட்டும்!!

சில முக்கிய பொக்கிஷங்கள் மனித குலத்தின் பார்வையில் இருந்து மறைத்தே வைக்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக இப்படி செய்கிறார்கள் என்றாலும் நாம் அறிய வேண்டிய பல விடயங்கள் மண்ணோடு புதைந்துவிடுகிறது.

இரண்டாம் சர்கான் மன்னர் கி.மு 722 முதல் 702 வரை ஆஷிரியன் நாட்டை ஆட்சி செய்தவர். இவரது சிற்பங்கள் ஈராக்கின் தேசிய பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது மக்களின் பார்வைக்கு இல்லாமல் இன்னமும் மூடி வைக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குறியது.

சில வருடங்களுக்கு முன் நடந்த அமேரிக்கப் படையெடுப்பின் போது இப் பொருட்காட்சிசாலைகளில் இருந்த பல பொருட்கள் திருடப்பட்டிருக்கிறது. அப்படி காணாமல் போனவை பல நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்ட காண்பதற்கரிய பொருட்கள். உலக அமைதிக்காக படையெடுக்கிறோம் எனக் கூறிய அமேரிக்காவின் பாதகச் செயல்களுள் இதுவும் அடங்கும். காணாமல் போன பொருட்களை மீட்பது சுலபமன்று. அது உள்ளூர் ஆட்களால் திருடப்பட்டதா இல்லை வெளியூர்காரர்களால் செய்யப்பட்டதா என்பதும் சொல்ல முடியாத நிலைக்குட்பட்டுவிட்டது.

இன்றய தேதிக்கு ஈராக்கின் நிலை சுமூகமாகிவிட்டிருப்பினும் பொருட்காட்சி சாலையை திறக்கும் முடிவை அவர்கள் ஒத்திவைத்திருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்புத் தன்மை நன்முறையில் உறுதி செய்யப்பட்ட பின்னரே பொருட்காட்சியகம் திறக்கப்படும் என்பதை பொருட்காட்சி சாலையின் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
பக்தாத்திலும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் பாதுகாப்பு முழுமையடைந்ததை நிச்சயப்படுத்தும் வரை எங்களால் பொருட்காட்சி சாலையை பொது மக்களின் பார்வைக்கு விடமுடியாது என இக்காட்சியகத்தின் தொல் பொருள் பாதுகாப்பு இயக்குனரான அமிரா எய்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானிய நாடு மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் ஆரம்ப காலம் தொட்டே முக்கிய பங்கை வகித்து வந்துள்ளது. டைகிரீஸ் மற்றும் யூப்ரடிஸ் நதிகரைகளின் ஏற்பட்ட மனித நாகரீகத்தின் முக்கிய அங்கமும் கூட. பல சாம்ராஜியங்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஆயிரம்மாயிரம் காலமாக மையமாக விளங்கியுள்ளது.

மெசபடோமியா மக்கள் விட்டுச் சென்ற பழம் பொருட்களும் புதையல்களும் இப்பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருந்தது. போர் காலத்தில் இதன் பாதுகாப்பிற்கு பங்கம் உண்டானதை தொடந்து மக்களால் அது களவாடப்பட்டது. பொது மக்கள் தாங்கள் இஷ்டப்பட்டதை எடுத்துக் கொண்டு போகும் நிலையை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டதை நாம் கண்டிருப்போம்.
நவீன சரித்திரத்தில் மறுக்கப்படாத கண்டிக்கத்தக்க கொடூரச் செயல் இது என எய்டன் மேலும் கூறுகிறார். ஈராக்கின் அமைதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அனுப்பப்பட்ட அமேரிக்க இராணுவத்தினர் அந்நாட்டின் எரிபொருள் விளைச்சலுக்கு கொடுத்த பாதுகாப்பின் சிறு பங்கினையும் மற்றவற்றிற்கு கொடுக்கவில்லை என்பது அவர் கருத்து.
2003-ஆம் ஆண்டு ஈராக் முழுமையாக அமேரிக்காவின் கைக்குற்பட்ட போது அங்குள்ள பல சரித்திர புகழ் வாய்ந்த இடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதன் வழி வருங்காலத்திற்கு தேவையான சரித்திர தடயங்கள் இல்லாமல் போய்விட்டது என்பதை மறுப்பார் இல்லை.

கெட்டதிலும் ஒரு நல்லது அமையும் என்பதற்கொப்ப தற்சமயம் அப்பொருட்காட்சி சாலை மிகவும் பாதுகாப்பாக கண்கானிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வரும் சில முக்கிய நபர்களுக்கும் சோதனைகள் பலப்படுத்தப்படுள்ளது.

பொருட்காட்சி சாலையின் வெளியே பழமை வாய்ந்த பீரங்கியும் அதைச் சுற்றினும் அரேபிய எழுத்துக்களிலான வடிவமைப்பில் தூண்கள் உள்ளன. இதன் முகப்பு வாசல் பேபிலேனின் வேளியை போல் அமைக்கப்பட்டுள்ளது.

காட்சிசாலையினுள் இருக்கும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளால் மூடி வைக்கப்பட்டுள்ளன. அங்கு 4400 வருடங்கள் பழமை பெற்ற ஒரு பொற்சிலை நிற்க வைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் ஒட்டியுள்ள அறைகளின் கதவு சிற்பங்கள் மூடி வைக்கப்படிருப்பினும் அவற்றில் இருக்கும் பழம் புதையல்களின் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஈராக்கின் வடக்கு பகுதியின் கண்டெடுக்கப்பட்ட நம்ரூட் மன்னனின் தங்க அணிகலன்களும் பூட்டி வைத்தபடியே உள்ளன. மேலும் 20-ஆம் நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பான டூட்டன்காமுன் எனும் பாரோ மன்னனின் கல்லறையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் அண்டை நாடுகள் உதவி புரிய மனமுவந்து இருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இதுவரை காணாமல் சுமேரியன் மேனா லிசா எனப்படும் 5000 ஆண்டுகள் பழமை வைந்த ஒரு பெண் சிற்பத்தை கண்டு பிடித்துள்ளார்கள். அது பக்தாத்தின் சுற்றுவட்டாரத்தின் ஓரிடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இச்சிற்பம் மீண்டும் கிடைத்தது பொருமகிழ்ச்சிக்குள்ளானது.

அப்பொருட்காட்சியகம் தற்சமயம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் 17 மண்டபங்களும் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. புதுப் பொழிவுடனும் பலத்த பாதுகாப்புடனும் அதனை அமைக்க நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்கான நிதியுதவியில் அமேரிக்காவும் பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

16 comments:

Sathis Kumar said...

நல்ல கட்டுரை விக்கி.. நம் கடாரத்திலுள்ள பூசாங்கு பள்ளத்தாக்கிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறைந்துக் காணப்படுவதால் பல தொல்பொருட்கள் காணாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.. :(

ஜோசப் பால்ராஜ் said...

தம்பி விக்கி,
மிக அருமையா எழுதியிருக்கப்பா.
பல துறைகளையும் சேர்ந்த மிக அதிகமான நூல்களை ஆழமா வாசிக்கிறன்னு இதுல இருந்து தெளிவாத் தெரியுது. மிக நல்லப் பதிவு. வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

விக்கி அரிய தகவல்கள், விரைவில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு அனைவருக்கும் பயனளிக்கட்டும்.

பல மாறுபட்ட பதிவுகளைத் தருவது உங்களின் தனித்தன்மையாக இருக்கிறது. பாராட்டுக்கள் !

வெண்பூ said...

நல்ல கட்டுரை விக்கி.. ஈராக்கில் மட்டும் இல்லை, உலகெங்குமே பெரும்பாலான இடங்களில் பழம்பொருட்களுக்கு இதுதான் நிலை. ஈராக்கில் இவ்வளவு நாசம் செய்த அமெரிக்கா மட்டும் தன் வரலாறு என்று எல்லா பொருட்களையும் பாதுகாப்பது ரொம்ப டூ மச்(அதுவும் வெறும் 200 வருட வரலாறை வைத்துக்கொண்டு)..

VIKNESHWARAN ADAKKALAM said...

@சதீசு குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே... அங்கே கடுமையான காவல் இருந்தும் காணாமல் போகிறது.. ஆனால் இங்கே காணாமல் போடுட்டும் எனம் மொத்தன போக்கில் இருக்கிறார்களோ என்னவோ...

சென்ஷி said...

பயனுள்ள மிக அருமையான கட்டுரை நண்பா!

கோவிஜி சொன்னதுக்கு ரிப்பீட்டே :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஜோசப் பால்ராஜ்

வருகைக்கும். வாழ்த்துக்கும் நன்றி அண்ணா.

@கோவி.கண்ணன்

நன்றி...

@வெண்பூ

வெண்பூ கருத்துக்கு நன்றி... பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு வசனம் சொல்வார். வெள்ளைக்காரன் தன்னை பெருமையா நினைக்கலனா செத்துடுவான் என. அப்படி பெருமை கொள்ள வேண்டும் என்றால் மற்றவர் பெருமைபடாதிருக்கச் செய்ய வேண்டும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சென்ஷி

மிக்க நன்றி...

Anonymous said...

அரிய தகவல்கள்; அரிய படங்கள்; கட்டுரை நன்று.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அ.நம்பி

வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி...

ஆட்காட்டி said...

என்னப்பா இப்படி சொல்லீட்டிங்க. மு. க வின் கோவணம். காந்தி பரம்பரை தொப்பி எல்லாம் காட்சிக்கு வரப் போகுது. பணம் பத்தும், பலதும் செய்யும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஆட்காட்டி

//காந்தி பரம்பரை தொப்பி//

இது புரிகிறது...

//மு. க வின் கோவணம்//

அப்படி என்றாக்? கோவணம் புரிகிறது... மு.க???

ஆட்காட்டி said...

நம்ம டாக்டரு.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஆட்காட்டி

கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் :(((

ஆட்காட்டி said...

கலைஞர். தொல்காப்பியத்துக்கு உரை தந்தவர். நெஞ்சுக்கு நீதி என்று புழுகியவர். குறளோவியம், பாயும் புலி பண்டார வன்னியன்களை படைத்த்வர். கேள்வியும் பதிலும் தானே ஆனவர். மத்தவங்களை திட்டுவதற்கு கவிதை எழுதுபவர். தமிழை தனக்காக உபயோகிப்பவர்.

தெரியலையா?

ஆட்காட்டி said...

இன்னுமொன்று உலகத் தமிழர்களின் தலைவன்.(எனக்கல்ல)