Thursday, October 15, 2009

தீபாவளி யாருக்கு?

ஒவ்வொரு முறை தீபாவளி பண்டிகை வரும் போதும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை பல குடும்பங்களில் காண முடிகிறது. காலத்தால் அதில் மாற்றங்கள் பல கண்டு வருவது யாரும் மறுக்க முடியாதது. பால்ய வயதில் கிடைத்த அதே மகிழ்ச்சி இப்போதும் கிடைக்கிறதா என சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்றே சொல்வேன்.

ஒரு மாதத்திற்கு முன்பே பறக்கவிடும் தீபாவளி அட்டைகள் இப்போது முடங்கி கிடக்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் இரவு குறுஞ்செய்திகள் தொலைபேசிகளின் வழி சடுதியில் வேண்டியவரை அடைந்துவிடுகிறது. இது சிக்கன வழி என்றாலும் ஒரு நல்லினக்க தொடர்பு தளர்ந்து போவதை அறிய முடிகிறது. இருப்பினும் அதில் ஆர்வம் துளியும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் வெறுப்புணர்ச்சியா, சோம்பேறித்தனமா இல்லை கண்டுகொள்ளாமல் இருக்கும் செயலா என்று தெரியவில்லை.

தீபாவளிக்கு காலையிலேயே எழுந்துவிடுவார்கள். எண்ணெய் குளியல், சாமிக்கு படையல், புது துணி மணி என்பது போக தாய்மார்கள் அடுப்படியில் அளவுக்கு அதிகமாகவே கண்ணைக் கசக்கிக் கொண்டு இருப்பார்கள். இந்த அவசர வேலைகளில் சிலருக்கு சினம் உண்டாவதையும் காண முடியும். ஏன் இப்படி?

நன்னாள் என்றால் மகிழ்சியாக இருப்பது இல்லாமல் எதற்கான நம்மை நாமே வருத்திக் கொள்ள வேண்டும் எனும் கேள்வி எழுகிறது.

வழக்கத்தை விட அளவுக்கு அதிகமான சாப்பாடு. நம் வீட்டில் தான் அப்படி என்றால் போகும் இடங்களிலும் அதே நிலை. உணவை பார்த்ததும் சலிப்பு தட்டும் நிலை. கோழியும் ஆட்டிறைச்சியும் மிதக்கும் குழம்புகள்.

தீபாவளியை குதுகலமாக கொண்டாட நினைக்கும் பலரில் அந்நாளை சட்டை செய்யாமல் இருப்பவரும் இருக்கவே செய்கிறார்கள். காரணம் அறியாமல் சிறு பிராயத்தில் தீபத் திருநாளை எதிர்பார்த்து காத்திருந்து கொண்டாடும் மகிழ்ச்சி பலரது வாழ்வில் காணாமல் போய்விட்டது என்பதே உண்மை. சிறுவர்களுக்கு தான் தீபாவளி என்பது பலரின் கருத்தாக நாம் செவி மடுக்கிறோம்.

தீபாவளியின் இன்பத் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில குடும்பங்களில் தீபாவளி கொண்டாடப்படாமல் இருக்கலாம், வேலை பளு, வயது வரம்பு அல்லது சிலரது சிந்தனையில் தீபாவளி வந்தால் என்ன வராவிட்டால் என்ன போன்ற பல எண்ணங்களின் தாக்கமாகவும் இருக்கலாம்.

முன்பு என் ஆசிரியர் கூறி இருக்கிறார் தீபாவளி தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட பெருநாள் என்று. இக்கூற்று வாதிக்கப்பட்டால் அதற்கு முடிவு காண்பதற்குள் பல தீபாவளிகள் கடந்துவிடும். எது எப்படியாகினும் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும் நிகழ்வுகள் வரம்பு மீறாமல் இருந்தால் அதில் தவறில்லை என்றே உணர்கிறேன்.

சிலர் தீபாவளிக்கு எந்த ஏற்பாடுகளும் செய்திருக்கமாட்டார்கள். அந்நாளில் இவர்களின் பொழுது தொலைக்காட்ச்சி பெட்டியை இரசித்தபடியே ஓடிவிடும். சில வீட்டினர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவிடுவார்கள். திட்டமிட்டபடி தீபாவளியை கழிக்க நினைக்கும் இவர்கள் ஒருவிதம்.

தீபாவளி போன்ற பொது விடுமுறை நாட்களில் வேலை செய்வதால் மூன்று மடங்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என்பதால் அந்நாளில் வேலைக்குச் சென்று பணம் ஈட்டும் எண்ணமும் பலருக்கு உண்டு என்றே சொல்லலாம்.

சமத்துவம் பேசிக் கொள்ளும் இக்காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி தான் பெருநாட்களை கொண்டாடுகிறார்களா என்றால் அதிலும் சில கருத்து முரண்பாடுகளே நிலவுகிறது. ஆண்கள் பெருநாட்களை கொண்டாடுவதில் அதிக முனைப்பு காட்டுவதில்லை என சொன்னால் மிகை இல்லை. பெண்கள் அதில் அதிக ஆர்வம் கொள்வதில் காரணம் என்னவாக இருக்கும்? நமது குமுகாயத்தில் ஒட்டிக்கிடக்கும் சிந்தனைகளா? இல்லை பெருநாள்களை சிறப்பாக கொண்டாட வேண்டியது நம் கடமை எனும் அவர்களது எண்ணமா?

தீபாவளி என்றதும் இந்த ஊடகங்களின் தொல்லையும் சொல்லியாகதான் வேண்டும் என்று நினைக்கிறேன். விளம்பரம் செய்யும் அவர்களா அளவாக செலவிடுங்கள் என்றும் விளம்பரம் போடுகிறார்கள். கையில் மது கிண்ணத்தை வைத்துக் கொண்டு குடி பழக்கத்தை எதிர்தால் அது சரியாகுமா என்பதை இவர்கள் நினைத்துப் பார்க்காமல் தான் இருக்கிறார்களா என்றே கேட்கத் தொன்றுகிறது.

சூழ்நிலையை அறிந்து மிகை இல்லாமல் கொண்டாடப்பட்டால் அது தவறில்லை. சிந்தித்து செயல்படுவோம். தீபத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

25 comments:

கோவி.கண்ணன் said...

விக்கி,

தீபாவளிக்கு உங்கள் ஊரில் பட்டாசு வெடிக்க அனுமதி உண்டா ?

RAHAWAJ said...

அருமையான பதிவு விக்னேஷ்,நாம் தான் நம் சுயசிந்தனையை அடகு வைத்துவிட்டோமே,பிறகு எப்படி சிந்தித்து செயல்படுவது,செலவு செய்வது.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோவி.கண்ணன்

பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை... ஆனால் வெடிக்கவும் செய்கிறார்கள். சிறுவர்களுக்கு அது தானே கொண்டாட்டம்.

@திரு.ஜவஹர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. சிந்தனையை ஏன் அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்? சிலர் கடன் வாங்கி தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இது அவசியம் இல்லாதது இல்லையா?

raja said...

நல்ல சிந்தனை !
வித்தியாசமா இருக்கு !

MADURAI NETBIRD said...

வெடிக்காத பட்டாசுகளை எல்லாம் ஒன்றாய் திரட்டி போட்டு கொளுத்தி அதில் ஓன்று டப் டப் என்று மேல் பட்டு சிதறிய சின்ன வயது நினைவுகள்

மு.வேலன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு; சிந்திப்போம்.
தீபாவளி வாழ்த்துக்கள்!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ராஜா முகமது

வருக்கைக்கு நன்றி...

@ மதுரை நண்பன்

உங்கள் பின்னூட்டம் கவிதையை போல் உள்ளது. நன்றி...

@ மு.வேலன்

வருகைக்கு நன்றி... உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

தமிழ் ஓவியா said...

தீபாவளி தமிழர் விழாவா? சிந்தியுங்கள்!


தீபாவளி

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மானஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

---------------தந்தைபெரியார் "விடுதலை" பிறந்தநாள் விழா மலர் -94 - நூல்: இந்துமதப்பண்டிகைகள்" பக்கம் 26 - 31

சின்னப் பையன் said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

தம்பி நாமெல்லாம் தீபாவளி கொண்டாட கூடாது. நீ கிளம்பி சிங்கப்பூருக்கு வந்துரு. நாம கோவியார் வீட்டுக்கு சாப்பிட போவோம்.

Anonymous said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள் விக்கி.

ஹேமா said...

விக்கி,என்னதான் திணிக்கப்பட்ட திருநாளாக இருந்தாலும்,அந்த நாளைக் கொண்டாடக் கூடிய சூழ்நிலையை இழந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் "இன்று தீபாவளியாம்" என்று சொல்லிப் பழகிவிட்டோமே!தொடர்கின்ற காலங்கள் அத்தனையும் வெளிச்சமாய் அமைய இனிய வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ் ஓவியா

வருகைக்கு நன்றி... உங்க பதிவ இங்க காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கிங்களே இது நியாயமா? என் பதிவ விட உங்க பின்னூட்டம் நீளம் அதிகம்...

@ச்சின்னப் பையன்

உங்களுக்கும் வாழ்த்துகள்...

@ ஜோசப் பால்ராஜ்

வந்துடுறேன்...

@ வடகரை வேலன்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... உங்களுக்கும் வாழ்துகள்..

@ஹேமா

வருகைக்கு நன்றி... சரியான கருத்து...

Anonymous said...

//பால்ய வயதில் கிடைத்த அதே மகிழ்ச்சி இப்போதும் கிடைக்கிறதா //

ஆனால் இப்போ பால்ய வயதில் இருப்பவருகளுக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமல்லவா.

அவர்கள மகிழ்ச்சி பெரியவர்கள் கையில் தானே இருக்கிறது.
நம் முன்னோரும் நம் மகிழ்ச்சிக்காகத் தான் இவற்றையெல்லாம் செய்தார்கள்.

இப்போ நம் குழந்தகளின் மகிழ்ச்சிக்காக நாமும் செய்யத்தான் வேண்டும்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தானே குழந்தைககளுக்கு குதூகலம்.

தீபாவளி நல் வாழ்த்துகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@அனானி அவர்கட்கு

உங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்துகள். பிள்ளைகளின் மகிழ்சி நிச்சயம் அவசியம். அவர்களின் கொண்டாட்டம் இல்லாத தீபாவளி நிச்சயம் சுவாரசியம் குறைந்து காணப்படும். அதே வேளையில் நாமும் தீபாவளி சமயத்தில் அர்த்தமற்ற சாங்கிய சடங்குகளை பிள்ளைகள் மீது தினிக்காமல் இருக்க வேண்டும்.

Hindu Marriages In India said...

நல்ல விளக்கமான தீபாவளிக்கான காரணங்கள்

சுகாந்தினி said...

விக்கி,
நன்று.
இன்னும் ஆழமாகத் தொட்டு எழுதியிருக்கலாம்.

மேலோட்ட கருத்துக்களகாவே சில தென்படுகின்றன.

இன்னும் தைரியம் தேவை.தொடர்க.

வரதராஜலு .பூ said...

//பால்ய வயதில் கிடைத்த அதே மகிழ்ச்சி இப்போதும் கிடைக்கிறதா என சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்றே சொல்வேன்.//

உண்மை. இது பற்றி நானும் ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். நேரமின்மையால் முடியவில்லை. நான் சொல்லவந்த பல எண்ணங்களை நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

அப்பாவி முரு said...

பதிவை விட பின்னூட்டம் பெரிதாக உள்ளது...

அப்பாவி முரு said...

//ஜோசப் பால்ராஜ் said...
தம்பி நாமெல்லாம் தீபாவளி கொண்டாட கூடாது. நீ கிளம்பி சிங்கப்பூருக்கு வந்துரு. நாம கோவியார் வீட்டுக்கு சாப்பிட போவோம்.//

விக்கி, ஜோசப் பேச்சைக் கேக்காதீங்க.

நாம, அங்க சந்திக்கலாம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுகாந்தினி

சரி எழுதிடறேன்... :-)

@ வரதராஜா

நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... மீண்டும் வருக...

@ முரு

சரி சந்திக்கலாம் பாஸ்... :-)

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

இது எப்பொழுது எழுதப்பட்ட இடுகை தெரியவில்லை

இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் சரியான இடுகையாகத்தான் தோன்றுகிறது - தவறில்லை

ஒரு விழாவினை மகிழ்வாகவும் கொண்டாடலாம் - ஏனோ தானோ என்றும் செய்யலாம் - கண்டு கொள்ளாமலும் இருக்கலாம் - அன்றைய மன நிலை அது

பொதுவில் இன்றைய நிலையில் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்

நல்வாழ்த்துகள் விக்கி

Unknown said...

tamil oviya

repeataiii

வால்பையன் said...

ஆரியர் இறக்குமதி தீபாவளி
ஆங்கிலேயன் இறக்குமதி காதலர் தினம்!

நமக்கு எது சரின்னு படுதோ அதை செய்ய வேண்டியது தான்! அதுக்காக காலங்காத்தால எந்திரிச்சி எண்ணை தேச்சு குளிக்கிறதெல்லாம் டூ மச்

VASANTARAO APPALASAMY said...

தீபாவளி வாழ்த்துக்கள்