Tuesday, October 21, 2008

குசும்பனின் கொடுமைகள்- சினிமா கேள்வி பதில்

குசும்பன் அவர்களே உங்கள் குசும்பு தனம் அனைவரும் அறிந்ததே, ஆனால் தாங்களின் குசும்பு கடந்த சில காலமாக என்னை மட்டும் இன்றி பலரையும் கஷ்டப்படுத்தும் விதமாக இருக்கிறது.

தாங்கள் செய்த தவறுகள் லிஸ்ட் இதோ!!!
1) தாங்கள் செய்யும் குசும்புத்தனத்தால் பலர் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
2) உங்கள் குசும்பு தனத்திற்கு பல பதிவர்களை ஊறுகாயாக தொட்டுக் கொள்வது.
3) உண்மைத் தமிழன் அண்ணனை மன உளைச்சலுக்குள்ளாக்கியது. அதனால் அவர் ஒரு பதிவெழுதி அழுதது.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

இந்த வயதில் தான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. சிறுவனாக இருந்த சமயம் இது தான் சிறுவர்கள் பார்க்க தகுந்த படம் என பேபி ஷாலினி நடித்த (சாமி?) படங்களையும், குரங்கும் நாயும் கூத்து காட்டும் படங்களையும் போட்டுவிட்டு அம்மா வேலைகளை கவனிக்கச் சென்றுவிடுவார். அந்தப் படங்களையும் சலிப்பு இல்லாமல் இரண்டு மூன்று முறை போட்டுக் காட்டும்படி கேட்டிருக்கிறேன். நினைவு தெரிந்து நான் பார்த்த சினிமா அதுதான்.

அப்படங்களை பார்த்த சமயம் அர்த்தமற்ற மூட பக்தியை உணர்ந்தேன் பின்னாட்களில் மக்கு மனிதர்கள் இருக்கும் வரை இம்மாதிரியான படங்கள் வெளியாவதை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியாக அரங்கில் பார்த்த தமிழ் சினிமா தாம் தூம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்த 'இந்தியானா ஜோன்ஸ்' எனும் ஆங்கில படத்தை டி.வீ.டியில் பார்த்தேன். நல்ல நகைச்சுவையாக இருந்தது. மாயன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை காண முடிந்தது.

கடைசியாக அந்த உருவத்தின் மண்டை ஓட்டை அதன் உடல் ஓட்டோடு சேர்த்தவுடன் அது உயிர் பெற்று ஏனைய 7 ஓடுகளையும் உள்வாங்கி உருவம் கொள்கிறது. இது அட்டமா சித்தியை பற்றி சொல்கிறார்கள் போல என எனது நண்பர் ஜவஹர் சொன்னார். ஆனால் எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். (அடப்பாவி நீ பார்த்தது இல்லாம மத்தவங்களையும் மண்ட காய வைக்கிறியே என வையாதீர்கள்).

ஆம் மிக முக்கியமாக இப்படத்தில் உணர்ந்தது ஒரு கட்டத்தில் அட்டாமிக் பாம் வெடிக்கும். அப்போது கதாநாயகன் ஒரு குளிர் சாதன பெட்டிக்குள் நுழைந்துக் கொள்வார். பாம் வெடித்து அந்த இடமே நாசமாக போக அந்த குளிர் சாதன பெட்டி மட்டும் தூரத்துக்கு தூக்கியெறியப்பட்டு அவர் தப்பிவிடுவார். இதில் நான் உணர்ந்தது பாம் வெடிக்கும் சமயங்களில் குளிர்சாதன பெட்டிக்குள் புகுந்துக் கொண்டால் தப்பிவிடலாம் என்பது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தேவர் மகன் படத்தை சொல்லலாம். பல முறை பார்த்திருக்கிறேன். சிறப்பான வசனங்கள். திறமையான நடிப்பும் கூட. ஒரு கட்டத்தில் சிவாஜி இறந்தவுடன் 'என்னாச்சி' என கமல் ஓடி வருவார். மிகவும் இரசித்தேன்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
முதல்வன் திரைப்படம். ஒரு நாள் என் இடத்தில் உட்கார்ந்து பார் என ரகுவரன் சொன்னது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஷங்கர் படங்களில் சில பிடிக்கும். இது போக தசாவதாரம் திரையின் தொழில்நுட்பம் சிறப்பாக இருந்தது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
முன்பு சினிமா பற்றி வாசிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது சில விமர்சனங்களை படிப்பதோடு சரி.

7. தமிழ்ச்சினிமா இசை?
ஒரு சில நல்ல பாடல்களும் வருகின்றன. இருந்தாலும் அதிக ஆர்வம் ஏற்பட்டதில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்தி, ஜப்பானிய மற்றும் சில இந்தோனேசிய படங்களை பார்த்திருக்கிறேன். தமிழில் எடுக்கப்படும் சில கார்டுன் வகை மாயாஜால படங்களை விட அவை எவ்வளவோ மேல் என்றே அறிகிறேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எதுவும் இல்லை. தமிழ்ச்சினிமா மக்களின் மேம்பாட்டுக்கு உதவி இருக்கிறதா என்பதே கேள்வியாக இருக்கிறது. குசேலன் திரைபட முதல் நாள் காட்சியில் ஒருவர் ரஜினியின் காலை நக்குவதை படம் எடுத்திருந்தார்கள். இந்தக் கேவலமான செயல்களை தடுக்க வழி இருப்பின் மகிழ்வேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கலாச்சார மாற்றங்கள் பல நடந்துள்ளது. சிந்தனைகளிலும், உடைகளிலும். பேச்சு வழக்கிலும் அதன் தாக்கங்கள் காணப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்காக காணாமல் வாழ்க்கை முறைகளில் அதனை ஏற்றுக் கொள்வது நல்லதல்ல என்றே கருதுகிறேன். சினிமாவை தாண்டியும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது பல இருக்கிறது. இந்த பத்து கேள்விகளும் புத்தக சம்பந்தமான கேள்விகளாக இருந்திருப்பின் பலருக்கும் நன்மை பயத்திருக்கும்.

11. அடுத்த ஓராண்டுக்கு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த நடிகர்களின் அட்டகாசம் அடங்கும் என நினைக்கிறேன். சினிமாவின் வழி வருமானம் பார்ப்பவர்கள் பாதிப்படைவார்கள். இருந்தாலும் நம் மக்களை நம்ப முடியாது. பழைய படங்களை போட்டு தேய்த்தெடுக்கவா தெரியாது அவர்களுக்கு. சினிமாவால் நம்மினத்திற்கு அதிக பாதிப்புகளே என்று சொல்வேன்.

இதுபோல் எழுத நான் அழைக்கப்போகும் 5 பேர்:
1) திரு.சேவியர்- அலசல்/கவிதைச் சாலை
2) திரு. வேலன் - அரங்கேற்றம்( புதிய பதிவர்)
3) விஜய்கோபால்சாமி
4) ஹேமா- குழந்தை நிலா
5) அ.நம்பி ஐயா அவர்கள்- நனவுகள்

8 comments:

MADURAI NETBIRD said...

//தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்த 'இந்தியானா ஜோன்ஸ்' எனும் ஆங்கில படத்தை டி.வீ.டியில் பார்த்தேன். நல்ல நகைச்சுவையாக இருந்தது.//


தமிழில் இவர்கள் மொழிபெயர்ப்பு செய்யும் ஆங்கில படங்கள் அனைத்தும் நகைசுவையாக தான் இருக்கிறது. சில சமயங்களில் திகில் படங்களை கூட நகைசுவையாக மொழிபெயர்த்து விடுகிறார்கள் நான் பின்னூட்டம் இடுவது போல் என்ன செய்வது.............

VIKNESHWARAN ADAKKALAM said...

@வாங்க மதுரை நண்பன்... முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

வெண்பூ said...

விக்கி,

ரொம்ப நாள் கழிச்சி (ஆராய்ச்சியெல்லாம் இல்லாம) ஒரு நார்மல் பதிவு.. நல்லா இருக்கு..

//
திரைபட முதல் நாள் காட்சியில் ஒருவர் ரஜினியின் காலை நக்குவதை படம் எடுத்திருந்தார்கள்
//
கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு.. :(

Anonymous said...

//இந்த பத்து கேள்விகளும் புத்தக சம்பந்தமான கேள்விகளாக இருந்திருப்பின் பலருக்கும் நன்மை பயத்திருக்கும்.//

மிகச் சரியான கருத்து விக்கி.

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க... மலேசிய திரைப்படங்களைப் பற்றியும் சில விடயங்கள் சொல்லி இருக்கலாம்.

சின்னப் பையன் said...

// குசேலன் திரைபட முதல் நாள் காட்சியில் ஒருவர் ரஜினியின் காலை நக்குவதை படம் எடுத்திருந்தார்கள். //

அப்படியா????? கொடுமைடா சாமி!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@வெண்பூ

கருத்திற்கு நன்றி வெண்பூ. நான் நார்மலாகதான் எழுதுகிறேன் எல்லோரும் ஆராய்ச்சி என்ரு ஓரம்கட்டிவிடுகிறார்கள் :(

@ வடகரை வேலன்

மிக்க நன்றி.

@ தமிழ் பிரியன்

வாங்க தமிழ் பிரியன் கருத்துக்கு நன்றி... மலாய் திரையை பற்றி தனி பதிவு எழுதுகிறேன்.

@ச்சின்னப் பையன்

நீங்க பார்க்கலயா? ஜெகதீசன் பதிவில் போட்டிருந்தார். வருகைக்கு நன்றி...

ஹேமா, said...

விக்கி...விக்கி தயவு செய்து மன்னிச்சுக்கோங்க.உண்மையாவே நான் கவனிக்கவே இல்லை.நீங்களும் சொல்லவில்லை.திரும்பவும் மன்னிச்சுக்கோங்க.