Thursday, July 02, 2009

பேய் வீட்டுக்குப் போனேன் - கேலிஸ் அரண்மனை

கேலிஸ் அரண்மனையை பற்றிக் கோள்விப்பட்டதுண்டா? ஈப்போ நகரிலிருந்து 20 நிமிட பயணத்தில் ‘பேய் வீடு’ என அழைக்கப்படும் இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

‘ANNA AND THE KING’ படம் மற்றும் பார்த்தாலே பரவசம் படத்தில் வரும் ‘நீதான் என் தேசிய கீதம் பாடல்’ ஆகியவை இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

ஷாஜகான் மும்தாஜுக்குக் கட்டிய தாஜ்மஹாலைப் போன்றது தான் இந்தக் கேலிஸ் அரண்மனையும். தாஜ்மஹாலைப் போல் பிரபலம் இல்லாவிட்டாலும் இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. வில்லியம் கேலிஸ் ஸிமித் எனும் வெள்ளைக்காரர், தன் மனைவிக்காக இந்த அரண்மனையைக் கட்டினார்.

நிறைவு பெறாமல் பாதி நிர்மாணிப்பில் முற்றுப் பெற்றிருக்கும் இந்த அரண்மனையின் கட்டிட வேலைப்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. கேலிஸ் தன் மனைவியான ‘எக்னஸ்’சுக்கு இந்த அரண்மனையைக் காதல் பரிசாகக் கட்டினார். கட்டிட நிறைவு பெறாத கேலிஸ் அரண்மனை கிட்டதட்ட தொன்னூறு ஆண்டுகளுக்கு மேல் எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் ‘பேய் வீடு’ என அடையாளப் படுத்தப்பட்டு மர்மத்தில் மூழ்கிக் கிடந்தது.
1990களில் சாலை நிர்மானிப்பின் போது கேலிஸ் அரண்மனையை ஒட்டி பிரதான சாலை அமையப் பொற்றது. தொல் பொருள் ஆராய்ச்சிகளுக்கு பிறகு இவ்வரண்மனை சுற்றுலாத் தலமாக் அறிவிக்கப்பட்டது.

கேலிஸ் அரண்மனையில் இன்னமும் கண்டறியப்படாத இரகசிய அறைகளும் சுரங்கப் பாதைகளும் உள்ளன. நான் இது வரை மூன்று முறை இவ்விடத்திற்கு சென்று வந்துள்ளேன்.

கேலிஸ் ஸிமித் ஸ்காட்லாந்தில் டாலாஸ் நகரில் பிறந்தார். இவரின் வயதும் பிறந்த வருடமும் கண்டறியப்படவில்லை. ஏறக்குறைய தனது இருபதாவது வயதில் பொருளீட்டும் நோக்கத்தில் மலாயவிற்கு (மலேசியாவில் ஆரம்பப் பெயர்) வந்தார்.

இவரது நிர்வாகத் திறமையின் காரணமாக ‘அல்மா பக்கீர்’ எனும் நிர்வாகத்தினர் தென் பேரா மாநிலத்தின் சாலை நிர்மானிப்புப் பணியை இவரிடம் ஒப்படைத்தனர், நிர்வாகத்திலும் பங்குதாரராக நியமித்தார்கள். இதன் வழி கேலிஸ் நல்ல இலாபத்தை ஈட்டினார்.

இவ்வரும்படியை வைத்துக் கொண்டு ‘கிந்தா கிலாஸ்’ எனும் இடத்தில் கிட்ட தட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கினார். அச்சமயத்தில் இந்த இடம் பெரும் காடாக இருந்தது. தமிழகத்தில் இருந்து சஞ்சிக் கூலிகளாக வேலையாட்களை வரவழைத்து, இரப்பர் தோட்டம் நிறுவி, பால் மரம் சீவும் வேலைக்கு அமர்த்தினார். இரப்பர் தோட்ட முயற்சியில் நல்ல லாபத்தை அடைந்தார்.

அதன் பிறகு 1905-ல் ‘கேலிஸ் இல்லத்தை’ நிறுவி தன் குடும்பத்தினரை அழைத்து வந்து குடியேறினார். அவரது முதல் குழந்தையான ‘அந்தோனி’ பிறந்தவுடன் தன் மனைவிக்குப் பரிசாக ‘கேலிஸ் அரண்மனையை’ கட்டத் திட்டமிட்டார். நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாத கேலிஸ் தம்பதிகள் அவர் அரண்மனைக்கு அருகில் இருக்கும் அம்மன் கேவிலில் வேண்டிக் கொண்ட பிறகு குழந்தைப் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கேலிஸுக்கு இந்துமத நம்பிக்கையும், காலாச்சார ஈடுபாடும் ஏற்பட்டது. அரண்மனையையும், கோவிலையும் பார்வையிட்ட போது அது உண்மையெனப் புலப்பட்டது.

தனது கனவு மாளிகையான ‘கேலிஸ் அரண்மனையை’ நிர்மானிப்பதற்கு முன் அந்த அம்மன் கோவிலை சிறப்பான முறையில் கட்டினார். அரண்மனையிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் அம்மன் கோவிலும், கேலிஸ் அரண்மனையும் ஒரே மாதிரியான கட்டிட வேலைபாடுகளுடன் இருப்பதைக் காண முடியும். கேவிலின் கோபுரத்தில் கேலிஸின் சிலையும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது. கோவிலினுள் கேலிஸின் மகனான அந்தோனியின் புகைப்படமும் ஓர் ஓரமாக மாட்டி வைக்கப்பட்டுள்ளது.

கேலிஸ் அரண்மனை மற்றும் கோவில் வேலைபாடுகளுக்காக தமிழ் நாட்டிலிருந்து வேலையாட்களும், சாதாரண மற்றும் பளிங்குக் கற்களும் வரவழைக்கப்பட்டன. கோவிலில் இரு முதியவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் திரட்டிய தகவலின் படி வேலைக்கு கொண்டுவரப்பட்ட பலர் கேலிஸீன் கொடுமைகளால் இறந்து போனதும் உண்டாம். இராப் பகலாக வேலை நடந்து கொண்டு தான் இருக்குமாம்.



சற்று லேசான மேட்டின் மேல் இருக்கும் இந்த அரண்மனை தாழ்வாரத்தில் வளைந்து நெளிந்து ஒரு ஆறு ஓடுகிறது. முன் வாசலில் இருந்து இக்காட்சியைப் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கிறது. கேலிஸ் அரண்மனையின் நிலவறையில் இருந்து மொட்டை மாடி வரை மின்-தூக்கி அமைக்க முயற்சித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அரண்மனையின் முன் இருக்கும் ஆற்றிற்கு அடியில் இரு சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆற்றைக் கடக்காமல் ஆற்றிற்கு அடியில் சென்று அரண்மனையை அடைந்துவிடலாம். மற்றுமொரு சுரங்கப்பாதையானது அரண்மனையின் பிரதான அறையிலிருந்து ஐந்நூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவிலை அடைவதற்கு ஏதுவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாவது மாடியில் ஒரு டென்னிஸ் மைதானத்தை அமைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நவீன யோசனையோடு செயற்பட்டிருக்கும் நம் இந்தியக் கட்டிடக்கலை வல்லுனர்களின் திறமையை நினைத்து வியந்து போனேன்.

மேலும் மொட்டை மாடியை விருந்துபசரிப்பு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் அமைத்து இருக்கிறார்கள். மொட்டை மாடியில் இருக்கும் போது சில்லேன்று வீசும் காற்றும் கட்டிட அமைப்பும், ரம்மியமான காட்சிகளும் ஒரு வித மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கிறது.

முதலாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் ஸ்பானிஷ் ப்ளூ எனப்படும் மிகக் கொடுமையான விஷக் காய்ச்சல் ஐரோப்பாவில் பரவிவந்தது. அதன் பின் ஆசியக் கண்டமும் இந்நோய்க்கு இலக்காகியது. கேலிஸ் தோட்டத்தில் பணிபுரிந்த பலரும் இந்நோய்க்கு பலியாயினர். இதனால் அவர் வியாபாரம் பாதிப்படைந்தது. அதுமட்டுமள்ளாமல் கிட்டதட்ட எழுபதுக்கும் மேற்பட்ட கேலிஸ் அரண்மனைக் கட்டிட வேலையாட்களும் இறந்தார்கள். மேலும் சிலர் நோய் பாதிப்புக்குள்ளானார்கள்.

கேலிஸ் தனது சம்பாத்தியத்தில் முக்கால்வாசியை இவ்வரண்மனைக்காகவே செலவு செய்துவிட்டார். 1926 ஆம் வருடம் தனது போர்ச்சுகல் பயணத்தின் போது ‘pneumonia’ எனும் நோய்வாய்பட்டு இறந்தார்.

மனமுடைந்து போன கேலிஸின் மனைவி தனது தாயகமான ஸ்காட்லாந்து திரும்ப முடிவு செய்தார். கிந்தா கிலாஸ் என அழைக்கப்படும் கேலிஸின் தோட்டத்தை Harrisons and Crosfield எனும் பிரிடிஸ் நிர்வாகத்திடம் விற்றுவிட்டு சென்றார்.

இரண்டாம் உலகப் போரின் சமயம் இந்த அரண்மனை ஜப்பானியர்களில் கைவசம் இருந்தது. அவர்களின் அராஜக செயல்களாலும் பலர் இவ்வரண்மனையில் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இங்கு போய் மற்றும் ஆவிகளின் நடமாட்டம் உள்ளதாக இத்தோட்டத்து மக்களிடம் நம்பிக்கை இருந்து வருகிறது. சில சமயங்களில் மனிதர்களின் அழுகுரல் கேட்குமாம். மேலும் இங்கு கிடைத்த தகவலின் படி இரவு வேளையில் ஆவிகள் இவ்வரண்மனையின் நிர்மாணிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது அவர்களுக்கே வாய் வழி வந்த தகவல்தான். இன்னமும் அதை நம்பி வருகின்றனர்.

இந்த அரண்மனைக்கு நான்கு சுரங்கப் பாதைகள் உள்ளன. அதில் இரண்டு ஆரம்பத்தில் குறிப்பிட்டவை. மேலும் ஒன்று தென் பக்கமாய் இருக்கும் சாலையை இணைக்கும் சுரங்கம் என கூறுகிறார்கள். முக்கிய சுரங்கங்கப் பாதைகள் மூடி வைக்கப்பட்டுள்ளதால் சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

நான்காவதாக கூறப்படும் சுரங்கப் பாதை இன்னமும் கண்டறியப்படவில்லை. ஜப்பானியர்கள் மற்றும் 1950/60 களில் சின் பெங் (கம்யூனிஸ்ட் தலைவர்) போன்றவர்களால் இப்பாதை இரகசிய வழியாக பயன்படுத்தப்பட்டு பின்னாட்களில் சுவரெழுப்பி மூடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கேலிஸின் கார் ஒன்று சுரங்கத்தினுள் இன்னமும் கேட்பாரற்றுக் கிடப்பதாக அறியப்படுகிறது. அரம்பத்தில சுரங்க வழிகளை காண்பதற்கு அனுமதித்த சமயம் பார்த்து வந்த சிலர் கூறியுள்ளனர்.

மேலும் ஒரு சுவாரசியமான விஷயம், பாதள அறை. இந்த அறையில் ஒரு துளி வெளிச்சம் கூட இருக்காது. மெழுகுவர்த்தி அல்லது கை-விளக்குடன் தான் செல்ல வேண்டும். நான் எனது லைட்டர் கருவியை பயன்படுத்திச் சென்றேன். இந்த அரையின் சுவர் முழுக்க பொற்காசுகளால் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வரை உருவாக்கியதன் நோக்கம் அறியப்படவில்லை. விளக்கின் வெளிச்சத்தில் பொற்காசுகளால் ஆன இவ்வறையைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

மக்களின் பாதுகாப்பிற்காக முடப்பட்டிருப்பதை விட, மக்களின் பார்வைக்காக இந்த அரண்மனையை பாதுகாப்பான இடமாக மாற்றி அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ளவும் வழிவகுக்கும் என்று எண்ணியவாறே கணத்த இதயத்துடன் அங்கிருந்து புறப்பட்டேன்.

(பி.கு: தமிழ் ஓசை பத்திரிக்கையில் வெளிவந்த எமது படைப்பு)

32 comments:

Anonymous said...

தாங்கள் பயன்படுத்தியுள்ள படங்கள் அருமையாக இருக்கின்றன. எழுத்து நடையும் அருமை. தங்களுக்குப் பயணக் கட்டுரைகள் அருமையாக எழுத வருகிறது.

கிரி said...

அருமையான விளக்கமான பதிவு..

நான் பொறுமையாக படித்து விட்டு வந்து திரும்ப பின்னூட்டம் போடுகிறேன் .:-)

VIKNESHWARAN ADAKKALAM said...

//vijaygopalswami said...
தாங்கள் பயன்படுத்தியுள்ள படங்கள் அருமையாக இருக்கின்றன. எழுத்து நடையும் அருமை. தங்களுக்குப் பயணக் கட்டுரைகள் அருமையாக எழுத வருகிறது.//

அவ்வ்வ்... ரொம்ப புகழாதிங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

//கிரி said...
அருமையான விளக்கமான பதிவு..

நான் பொறுமையாக படித்து விட்டு வந்து திரும்ப பின்னூட்டம் போடுகிறேன் .:-)//

எப்பொழுது..

மருதநாயகம் said...

படங்கள் சூப்பர் லா, பதிவு நல்ல இருக்கு லா

Unknown said...

அருமையான பயண கட்டுரை. நீங்களா இது. நம்ப முடியலை

கிரி said...

//அவர்களிடம் திரட்டிய தகவலின் படி வேலைக்கு கொண்டுவரப்பட்ட பலர் கேலிஸீன் கொடுமைகளால் இறந்து போனதும் உண்டாம். இராப் பகலாக வேலை நடந்து கொண்டு தான் இருக்குமாம்//

கொடுமை தான். ஒரு சில ராஜாக்கள் தங்கள் விரும்பும் கட்டிடம் கட்டிய பிறகு கட்டிட நிபுணர்களின் விரல்களை அல்லது அவர்களையே வெட்டி விடுவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், மறுபடியும் அவர்கள் இந்த சிறப்பை வேறு எங்கும் செய்ய முடியாதபடி.

//சற்று லேசான மேட்டின் மேல் இருக்கும் இந்த அரண்மனை தாழ்வாரத்தில் வளைந்து நெளிந்து ஒரு ஆறு ஓடுகிறது. முன் வாசலில் இருந்து இக்காட்சியைப் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கிறது.//

நீங்கள் சொல்வதை கேட்டாலே பார்க்க வேண்டும் போல உள்ளது.

//அது மட்டுமல்லாமல் அரண்மனையின் முன் இருக்கும் ஆற்றிற்கு அடியில் இரு சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆற்றைக் கடக்காமல் ஆற்றிற்கு அடியில் சென்று அரண்மனையை அடைந்துவிடலாம். மற்றுமொரு சுரங்கப்பாதையானது அரண்மனையின் பிரதான அறையிலிருந்து ஐந்நூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவிலை அடைவதற்கு ஏதுவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.//

சிறப்பாக அப்போதே வடிவமைத்து இருக்கிறார்கள்.

//இரண்டாவது மாடியில் ஒரு டென்னிஸ் மைதானத்தை அமைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நவீன யோசனையோடு செயற்பட்டிருக்கும் நம் இந்தியக் கட்டிடக்கலை வல்லுனர்களின் திறமையை நினைத்து வியந்து போனேன்.//

தொண்ணூறு ஆண்டுகள் தான் இருக்குமா? நான் அதிகம் என்று எண்ணி இருந்தேன்

//1926 ஆம் வருடம் தனது போர்ச்சுகல் பயணத்தின் போது ‘pneumonia’ எனும் நோய்வாய்பட்டு இறந்தார்.//

எங்கேங்க இதை எல்லாம் பிடித்தீங்க...

//மேலும் ஒரு சுவாரசியமான விஷயம், பாதள அறை. இந்த அறையில் ஒரு துளி வெளிச்சம் கூட இருக்காது. மெழுகுவர்த்தி அல்லது கை-விளக்குடன் தான் செல்ல வேண்டும். நான் எனது லைட்டர் கருவியை பயன்படுத்திச் சென்றேன்.//

சுவாரசியமாக இருக்கிறது

//இந்த அரையின் சுவர் முழுக்க பொற்காசுகளால் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வரை உருவாக்கியதன் நோக்கம் அறியப்படவில்லை. விளக்கின் வெளிச்சத்தில் பொற்காசுகளால் ஆன இவ்வறையைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.//

இதை யாரும் திருடவில்லையா?

விக்னேஸ்வரன் உங்கள் பதிவு அருமை. சிறப்பாகவும் விவரமாகவும் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் கதை எழுதும் வேளையிலே இதை போலவும் எழுதுங்கள். உங்கள் எழுத்து நடை அழகாக இருந்தது.

வாழ்த்துக்கள். உங்கள் மற்ற பதிவுகளை விட இது தான் டாப். எனக்கு கவிதை கதை போன்றவற்றில் அதிக ஆர்வம் இல்லை, அதனால் கூட இருக்கலாம்.

சின்னப் பையன் said...

சூப்பர் இடத்தை பற்றிய ஒரு சூப்பர் பதிவு...படங்களும் நன்றாக இருந்தது..

சின்னப் பையன் said...

//தமிழ் நாட்டிலிருந்து வேலையாட்களும், சாதாரண மற்றும் பளிங்குக் கற்களும் வரவழைக்கப்பட்டன.//
//இந்த அரையின் சுவர் முழுக்க பொற்காசுகளால் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வரை உருவாக்கியதன் நோக்கம் அறியப்படவில்லை//
// முக்கிய சுரங்கங்கப் பாதைகள் மூடி வைக்கப்பட்டுள்ளதால் //

அங்கங்கே சிறுசிறு பிழைகள் இருந்தாலும், ஒரு ஃப்ளோவில் படிக்க முடிகிறது.

Anonymous said...

மிகவும் நல்ல பயணக்கட்டுரை விக்கி!

ஒவ்வொரு படங்களுக்கும் கீழே என்ன இடமென்று குறித்தால், அடையாளங் கண்டு கொள்ள ஏதுவாயிருக்கும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//மருதநாயகம் said...
படங்கள் சூப்பர் லா, பதிவு நல்ல இருக்கு லா//

எதுக்கு அத்தன லா

VIKNESHWARAN ADAKKALAM said...

//jaisankar jaganathan said...
அருமையான பயண கட்டுரை. நீங்களா இது. நம்ப முடியலை//

என்ன நம்ப முடியல...

VIKNESHWARAN ADAKKALAM said...

//நீங்கள் சொல்வதை கேட்டாலே பார்க்க வேண்டும் போல உள்ளது.//

கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்தான்..

//சிறப்பாக அப்போதே வடிவமைத்து இருக்கிறார்கள். //

மிக சிறப்பாக..

//இதை யாரும் திருடவில்லையா? //

சுவரில் பதிக்கப்பட்டிருக்கும்

VIKNESHWARAN ADAKKALAM said...

//வெயிலான் said...
மிகவும் நல்ல பயணக்கட்டுரை விக்கி!ஒவ்வொரு படங்களுக்கும் கீழே என்ன இடமென்று குறித்தால், அடையாளங் கண்டு கொள்ள ஏதுவாயிருக்கும்.//

மிக்க நன்றி அடுத்த முறை பன்னிடலாம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

///ச்சின்னப் பையன் said...
சூப்பர் இடத்தை பற்றிய ஒரு சூப்பர் பதிவு...படங்களும் நன்றாக இருந்தது..///

அவ்வ்வ்வ் ரொம்ப நன்றி... அவ்வ்வ்வ் முடிந்த அளவில் பிழை வராமல் பார்த்துக் கொள்கிறேன்...

Unknown said...

//என்ன நம்ப முடியல...//

நீங்க பயணக்கட்டுரை எழுதி நான் படிச்சதில்லை(இது தான் first). ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அதான் நம்ப முடியல

Anonymous said...

இன்னொரு விசயம் .... இந்த சுரங்கப்பாதையின் வழியின் ஊடே சென்றால் அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல முடியும் என்று சொல்லப் படுகிறது. கேலி ஸ்மித்தின் மகள் அம்மையின் விழுந்த போது இந்த அம்மனை இரகசியமாக தரிசிப்பதற்காக இப்பாதை அமைக்கப் பட்டிருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. அதற்கு இன்னுமொரு சான்று அக்கோவிலில் உள்ள கேலி ஸ்மித்தின் உருவ சிலை.

Anonymous said...

விக்ணேஷ், உங்கள் பயணக் கட்டுரை மிகவும் சூப்பர். ஒரு சின்ன கேள்வி. நீங்கள் அங்கு சென்றிருந்த போது பேயைப் பார்த்தீர்களா? உபசரிப்புக்கள் எப்படி?

VIKNESHWARAN ADAKKALAM said...

//இனியவள் புனிதா said...
இன்னொரு விசயம் .... இந்த சுரங்கப்பாதையின் வழியின் ஊடே சென்றால் அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல முடியும் என்று சொல்லப் படுகிறது. கேலி ஸ்மித்தின் மகள் அம்மையின் விழுந்த போது இந்த அம்மனை இரகசியமாக தரிசிப்பதற்காக இப்பாதை அமைக்கப் பட்டிருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. அதற்கு இன்னுமொரு சான்று அக்கோவிலில் உள்ள கேலி ஸ்மித்தின் உருவ சிலை.//

வருகைக்கு நன்றி புனிதா.

VIKNESHWARAN ADAKKALAM said...

//கு.உஷாதேவி said...
விக்ணேஷ், உங்கள் பயணக் கட்டுரை மிகவும் சூப்பர். ஒரு சின்ன கேள்வி. நீங்கள் அங்கு சென்றிருந்த போது பேயைப் பார்த்தீர்களா? உபசரிப்புக்கள் எப்படி?//

அவ்வ்வ் என்ன வச்சி கமேடி பன்னிடுச்சுங்க... உங்கள மாறி... ஹி ஹி ஹி... உங்கள பேய் என்று சொல்ல வரவில்லை

வந்தியத்தேவன் said...

அடடே சென்ற முறை மலேசியவிஜயத்தின் போது இதனை மிஸ் பண்ணிவிட்டேன் அடுத்தமுறை சென்றுபார்க்கவேண்டியதுதான்.

கிஷோர் said...

சூப்பர் தல. கலக்கிட்டீங்க. :)

கார்க்கிபவா said...

சகா பத்திரிக்கையில் வந்தது என்கிறீர்கள்.. ஏகப்பட்ட எழுத்துப் பிழை இருக்கிறதே

Joe said...

அருமையான புகைப்படங்கள், அழகான வர்ணிப்பு.

பேய் வீடு என்றதும் திகிலான விஷயங்கள் நிறைய இருக்கும் என்று நினைத்தேன், அப்படி எதுவுமில்லை.

மலேசியா வந்தால் உங்களை ஊர் சுற்றிக் காட்ட சொல்லலாம் போலேருக்கே? ;-)

sivanes said...

விக்னேக்ஷ்வரன், இந்த கட்டுரையை ஏற்கனவே ஓசையில் படித்திருக்கிறேன், கலர் கலர் படங்களோடு அசத்திட்டீங்க, வாழ்த்துக்கள்!

JesusJoseph said...

பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கு

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வந்தியதேவன்

அடுத்த முறை வரும்போது மறக்காமல் சொல்லுங்கள்.

@ கிஷோர்

டெம்பிலட் பின்னூட்டமா? :)

@ கார்க்கி

பத்திரிக்கையில் எடிட் செய்து போட்டிருப்பாங்க... என்ன கேள்வி இது சின்ன புள்ள தனமா :))

@ ஜோ

வாங்க நோ பிரப்பலம்... :)

@ சிவனேசு

நான் சொன்னது தமிழ் நாட்டில் வெளிவரும் தமிழ் ஓசை நாளிகை. பினாங்கில் கிடைக்கிறதா? :)) கோலாலம்பூரில் கிடைப்பதில்லை.

@ ஜோசப்

பிலைட் பிடிச்சு வாங்க பார்க்கலாம்.

கிஷோர் said...

//@ கிஷோர்

டெம்பிலட் பின்னூட்டமா? :)//

ஏ இல்லப்பா, கஷ்டப்பட்டு யோசிச்சது.
நானும் எப்போவும் படிச்சிட்டு போய்டறென். பின்னூட்டமே போட முடியல. அதான் கஷ்டபட்டு யோசிச்சு போட்டென் :)

sivanes said...

விக்னேக்ஷ்வரன், நான் குறிப்பிட்டது, மலேசிய தமிழ் ஓசை இதழையே, அது ஒரு ஞாயிறு பதிப்பு, படமெல்லாம் வெளிவந்திருந்தது, ஒரு புகைப்படத்தில் ஒரு பழமை வாய்ந்த ஆலயமும் அதன் மேல் முகப்பில் தெய்வ சிலைகளோடு ஒரு ஆங்கிலேயர் சிலையும்(கெலிஸ்) வெளியிடப்பட்டிருந்தது.

கலையரசன் said...

அருமையான, அழகான பேய்வீடு! உங்கள் கட்டுரையும் சேர்த்துதான்..

Tamilvanan said...

என்னா பேய் வீட்டுக்கு போய்ட்டு வந்த பிறகு எந்த பதிவையும் காணோம். பேய் அடிச்சிருச்சோ.....

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சிவனேசு

நன்றி...

@ கலையரசன்

நன்றி...


@ தமிழ்வாணன்

நெடுநாட்களாக ஏதும் எழுதலை.. இது கூட மீள் பதிவு தான்...