Thursday, April 24, 2008

மனித நேயம்- குட்டிக் கதை!!!

மார்கழி மாத கடும் குளிர் நாட்டு மக்களை ஆழ்ந்த தூக்கத்தில் தாளாட்டிக் கொண்டிருந்தது. தம் உடலை கனத்த ஆடைகளில் புகுத்திக் கொண்டு நகர்வலத்திற்கு ஆயத்தமானார் வாமனபுரி ராஜா (சும்மா-அர்புதத் தீவு மகா ராசாவ நினைச்சுக்குங்க). அரண்மனை வாயில் தனக்கென (special-ஆக Benz) நிருத்திவைக்கப் பட்டிருந்த வண்டியில் ஏரி பயணிக்கலானார்.
வண்டிப் போகும் வழியில் பாதையோரமாக ஸ்ரீ விஜயன் என்ற துறவி கோவணம் மட்டுமே அணிந்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டார் மகாராஜா (feelings) மனதில் கருணை கசியவே வண்டியை நிறுத்தி விட்டு(parking) கிழே இறங்கினார். தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை அமைதியாக துறவியின் மீது போர்த்தினார்.
ஸ்ரீ விஜயன் யாரிடமும் எதையும் கைநீட்டிப் பெற மாட்டார் என்பது ராஜாவுக்குத் நன்றாவே தெரியும். எனவே அவர் தூக்கம் தெளிந்து எழுவதற்குள் அங்கிருந்து புரப்பட்டார்.
சற்று நேரத்தில் கண் விழித்தத் துறவி தன் மீது போர்வை போர்த்தியிருந்ததை பார்த்துத் திடுக்கிட்டார்.
“எனக்கு இந்தக் கோவணம் போதாது என்று யாரோ போர்வையைப் போர்த்திவிட்டு போயிருக்கிறார்களே! துறவியான எனக்கு எதற்கு இந்த சுகமெல்லாம்”, என்று கூறியவாரு நாலா புறமும் பார்வையை ஓட்டினார். சற்று தூரத்தில் ஒரு நாய் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்.
“எனக்காவது கோவணம் இருக்கிறது. இதனிடம் எதுவும் இல்லை. தன் துன்பத்தை யாரிடமாவது சொல்லித் தீர்க்கலாம் என்றாலும் முடியாது. பாவம் வாயில்லா ஜீவன்”. என்று கூறியபடியே நாய் மீது அந்தப் போர்வையை போர்த்தினார் ஸ்ரீ விஜயன்.


(இது அந்த காலம். இரக்க குணம் அனைவரிடமும் மேலோங்கி இருந்தது. இக்காலத்தில் அந்த துறவி பாதையோரத்தில் தூங்கியிருந்தால் அக்கோவணமும் இருந்திருக்குமா என்பது கேள்விக் குறிதான். இரக்க குணத்தை நீர் ஊற்றி வளர்ப்போம்.)
(ஆரம்பப் பாட சாலையில் என் ஆசான் கூறிய கதையிது. கதா பாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டும்).

No comments: